Advertisment

குரு சண்டாள யோகம்!

/idhalgal/balajothidam/guru-sandala-yoga

ருவரின் ஜாதகத் தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கு ஜோதிட நூல்களில் பல வழிமுறைகள் உள்ளன. எந்த முறையில் பலன் கூறி னாலும் ஜாதகத்திலுள்ள யோகங்களுக்கான பலனை சரியாக நிர்ணயிப்பது மிக முக்கியம். யோகமென்றால் கிரகச் சேர்க்கையென்று பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருப்பதை ஜோதி டத்தில் யோகமென்று கூறுகிறார்கள். பலவிதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் குரு, ராகு இணைவால் ஏற்படக் கூடிய யோகமான குரு சண்டாள யோகம்பற்றி பலவிதமான சந்தேகங்கள் நிலவிக்கொண்டுள்ளன. சிலர் யோகமென்று கூறும் கிரகச் சேர்க்கையை சிலர் அவயோகமென்று கூறுகிறார்கள்.

Advertisment

இத்தகைய குரு, ராகு சேர்க்கையை யோகமென்ற அடிப்படையில் ஆய்வுசெய்தால், ராகு தசையில் கோடிகோடியாக சம்பாதித்த பலர் ஏன் குரு தசையில் சிங்கிள் டீக்காக தெருக்கோடியில் நிற்கவேண்டும்?

அவயோகமென்று பலன் கூறினால், இந்த கிரகச் சேர்க்கையுள்ள பலர் ஒரு மஞ்சள் பையுடன் சொந்த ஊரைவிட்டுக் கிளம்பி வந்தவர்கள்- தங்கள் திறமைக்கும், தகுதிக்கும் பொருத்தமே இல்லாத தொழில்செய்து கோடிகளில் மிதக்கிறார்கள். இந்தக் கட்டுரையில் குரு சண்டாள யோகம் பற்றிய சில தகவல் களைக் காணலாம்.

guru

Advertisment

குரு

நவகிரகங்களில் முதன்மை சுப கிரகமான குருபகவானுக்கு மனித வாழ்வில் பல்வேறு உன்னதமான சுபப்பலன்களை உண்டாக்கக்கூடிய ஆற்றலுண்டு. குருவின் பார்வைக்கு பல தோஷங்களைப் போக்கும் சக்தி உள்ளது. சுய ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்

ருவரின் ஜாதகத் தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கு ஜோதிட நூல்களில் பல வழிமுறைகள் உள்ளன. எந்த முறையில் பலன் கூறி னாலும் ஜாதகத்திலுள்ள யோகங்களுக்கான பலனை சரியாக நிர்ணயிப்பது மிக முக்கியம். யோகமென்றால் கிரகச் சேர்க்கையென்று பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருப்பதை ஜோதி டத்தில் யோகமென்று கூறுகிறார்கள். பலவிதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் குரு, ராகு இணைவால் ஏற்படக் கூடிய யோகமான குரு சண்டாள யோகம்பற்றி பலவிதமான சந்தேகங்கள் நிலவிக்கொண்டுள்ளன. சிலர் யோகமென்று கூறும் கிரகச் சேர்க்கையை சிலர் அவயோகமென்று கூறுகிறார்கள்.

Advertisment

இத்தகைய குரு, ராகு சேர்க்கையை யோகமென்ற அடிப்படையில் ஆய்வுசெய்தால், ராகு தசையில் கோடிகோடியாக சம்பாதித்த பலர் ஏன் குரு தசையில் சிங்கிள் டீக்காக தெருக்கோடியில் நிற்கவேண்டும்?

அவயோகமென்று பலன் கூறினால், இந்த கிரகச் சேர்க்கையுள்ள பலர் ஒரு மஞ்சள் பையுடன் சொந்த ஊரைவிட்டுக் கிளம்பி வந்தவர்கள்- தங்கள் திறமைக்கும், தகுதிக்கும் பொருத்தமே இல்லாத தொழில்செய்து கோடிகளில் மிதக்கிறார்கள். இந்தக் கட்டுரையில் குரு சண்டாள யோகம் பற்றிய சில தகவல் களைக் காணலாம்.

guru

Advertisment

குரு

நவகிரகங்களில் முதன்மை சுப கிரகமான குருபகவானுக்கு மனித வாழ்வில் பல்வேறு உன்னதமான சுபப்பலன்களை உண்டாக்கக்கூடிய ஆற்றலுண்டு. குருவின் பார்வைக்கு பல தோஷங்களைப் போக்கும் சக்தி உள்ளது. சுய ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தன காரகனாகவும், புத்திர காரகனாகவும் விளங்கும் குரு பகவான் இறைவழிபாட்டிற்கும் ஞானத்திற்கும் காரகனாகிறார்.

அதுமட்டுமின்றி ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறைவழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, மதகுருமார்கள், பெரியோர்கள், கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்டமா சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள் கிட்டுதல், சாந்தமான கபாவம், கண்கள், வாக்கு ப-தம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெறுதல் ஆகியவற்றுக்கெல்லாம் குரு காரகனாவார்.

ராகு

ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்திபடைத்த கிரகம் ராகு.

தான் நின்ற ராசியின் பலன்களை ஒருவரை அனுபவிக்கவிடாமல் தடைசெய்பவர். ராகுவுக்கு சொந்த வீடு இல்லையென்பதால் தான் நின்ற வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொண்டு, தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ராகு ஒரு ஜாதகத்தில் வலுத்தால் ராகுவின் காரகத்துவங்களான நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, மதம் மாறுவது, அந்நிய நாட்டிற்குச் சென்று பிழைக்கவேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்தச் செய்தல், கூட்டுமரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், பிறரைக் கெடுத்தல், அந்நியமொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்புண்டாகும்.

குரு சண்டாள யோகம்

குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகுமென்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த கிரகக் கூட்டணி சுபமாகவோ பலமாகவோ அமைந்துவிட்டால் அங்கு யோகம்தான் அதிகமாக வேலை செய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அசுபமாகாவோ அமைந்துவிட்டால் அங்கு தோஷமே அதிகமாக வேலைசெய்யும் என்பது பொதுவான விதி.

அதாவது தன்னுடன் தொடர்புகொண்ட கிரகங்களை கிரகணப்படுத்தி, அதன் வ-மையைத் தன்னுள் ஈர்த்துக்கொண்டு செயல்படுவது ராகுவின் குணம். இதை மேலும் விவரித்துக் கூறினால், பாம்புகள் புற்றில் வசித்தாலும் அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக்கப்படுவதில்லை. கரையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களை அழிப்பதுவே ராகுவின் வேலை.

பொதுவாக ராகு தனக்கு சொந்த வீடில்லாத காரணத்தால், தான் நின்ற வீட்டின் பலனையும் தன்னுடன் இணைந்த கிரகத்தின் காரகத்துவத்தையும் கலந்து வெளிப்படுத்தும். அதாவது குருவுடன் இணைந்த ராகு, தனது தசையில் குருவின் காரகத்துவங்களைத் தன்னுள் இழுத்துக்கொண்டு, குருவாக செயல்பட்டு தாராள பொருள்வரவு, குழந்தைப்பேறு, வீடு, வாகனயோகம் என அபரிமிதமான யோகங்களை வழங்குவார்.

குரு தசையில் ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைந்தால் குரு தன்னுடைய பார்வை பலத்தையும், காரக, ஆதிபத்திய பலனையும் இழந்து, தான் பார்க்குமிடத்தைப் புனிதப்படுத்தும் தகுதியை இழந்துவிடுவார். அதனால்தான் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தையும் குரு தசையில் இழக்க நேர்கிறது.

அதேபோல் குரு, ராகு இணைவு 8 டிகிரிக்குள் இருந்து, ராகு, குரு தசை புக்திக் காலங்களில் மட்டுமே யோகத்தையோ அவயோகத்தையோ மிகைப்படுத்துகிறது. மற்ற காலங்களில் பெரிய தோஷத்தைத் தருவதில்லை. நல்ல வசதியான வாழ்க்கையை குருட்டு அதிர்ஷ்டத்தில் அனுபவிக்கி றார்கள். ஆனால் தங்கள் வாழ்நாளில் மிகவும் நேசித்த உறவுகளிடம் "சண்டாளா, சண்டாளி' என்ற அவப்பெயரைப் பெற வைத்துவிடுகிறது. இந்த கிரகச் சேர்க்கை பலருக்கு கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு செயற்கைக் கருத்தரிப்புமூலம் குழந்தை பிறக்கச் செய்கிறது. பெற்றோர்களும் குழந்தைகளும் மனம் ஒன்றாமல் தனித் தீவாகவே வாழ்கிறார்கள்.

ஜோதிடத்தில் ஒரு விதியை வைத்து மட்டும் பலன் சொல்லமுடியாது என்ற அமைப்பில், எந்த லக்னத்திற்கு என்ன ஆதிபத்திய அமைப்பில், குரு, ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது என்பதை டிகிரிப்படி கணித்து, ஜாதகத்தின் மற்ற நிலைகளையும் அறிந்து கூறுவதே சரியான பலனாக அமையும்.

உலகப் பொருளாதாரமும் குரு சண்டாள யோகமும்

ஜோதிடத்தில் குருவுக்கு ஜீவகாரகன் என்று பெயர். ராகு அசுர கிரகமாகும். குரு ஒரு ஆன்மிக கிரகம், தெய்வத்தன்மையுடைய கிரகமாகும். குருவின் காரகத்துவங்களையும், ராகுவின் காரகத்துவங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டும் நேரெதிரான காரகத்தன்மைகளைக் கொண்டது. ஒன்றுக்கொன்று ஒவ்வாத தன்மைகளைக் கொண்ட இரு கிரகங்கள் சேர்க்கைபெற்றால், இவ்விரண்டு கிரகங்கள் குறிக்கும் காரகத்துவங்களும் பாதிக்கப் படும்.

கோட்சாரத்தில் குருபகவான் ராகு வுடன் சம்பந்தம்பெறும் காலங்களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களால் கூட நிர்ணயிக்கமுடியாத வகையில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்ற- இறக்கத்தை ஏற்படுத்தி, உலக வர்த்தகத் தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்து வார்.

கோட்சாரத்தில் குருவும் ராகுவும் இணைந்து எந்த ராசியில் சஞ்சரிக்கி றார்களோ, அந்த ராசி மற்றும் அதற்குத் திரிகோண ராசி குறிக்கும் நாடு, நகரங்களில் மதக் கலவரம் அதிகமாகும். சமூக விரோத சக்திகளின் கை ஓங்கும். நாடுகளுக்கிடையே ஒற்றுமை குறையும். குழந்தைகளுக்கு அநீதி நடக்கும். கூட்டுமரணம் மிகுதியாக இருக்கும். தற்போதைய கோட்சார குரு சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்த காலத்தில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையால் உலகில் மற்றும் இந்தியாவில் பல மாநிலங்கள் முழு ஊரடங்கில் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. உக்ரைன், ரஷ்யா போர் இந்த காலகட்டத்தில்தான் ஆரம்பமானது.

குரு, ராகு சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் தனிமனித வாழ்க்கை மட்டுமல்ல; உலகத்திற்கும் கேடு தரும் சம்பவங்கள் நடக்கும். எனவே இந்த குரு சண்டாள யோகத்தால் பாதிக்கப்படுபவர்கள் வியாழக்கிழமை பகல் 1.30 முதல் 3.00 மணிவரையிலான ராகு வேளையில் வீட்டில் நல்லெண்ணெய் தீபமேற்றி துர்க்கையை வழிபடவும்.

செல்: 98652 20406

bala250322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe