குரு தசை 16 ஆண்டுகள் நடைபெறும். பொதுவாக, குரு தசை அனைத்து நிலைகளிலும் நன்மை செய்யும். ஆனால் குரு வீட்டில் சனியும், சனி வீட்டில் குருவும் வரக்கூடாது. குரு, சனி இணைவோ, இருவரும் ஒருவரையொருவர் பார்வை செய்வதோ கூடாது. இப்படிப்பட்ட ஜாதகம் அமையப்பெற்றவர்கள் பரிகா ரத்தால் மட்டுமே குரு தசையில் நன்மையடைய முடியும். முதலில் குரு தசையில் வரும் ஒன்பது புக்திகளின் பொதுப் பலன்களைக் காண்போம்.
1. குரு தசையில் குரு புக்தி
பெரும்புகழ், மிக்க பொருள், தானியம், பூமி லாபம், பெண்களின் சேர்க்கையால் இன்பம், அரசாங்கத்தால் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் சனி வீட்டில் குருவோ, குரு வீட்டில் சனியோ இருந் தால் முன்னோர் செய்த பாவத்தைச் சுமப்பவர் களாவார்கள். அதாவது பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தவர்கள். இவர்கள் திருவிடைமருதூர் சென்று பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்து கொண்டால் குரு புக்தியில் நன்மைகள் நடக்கும்.
2. குரு தசையில் சனி புக்தி
வாகனம், பொருள் சேரும். ஆனால் கால், கைகளில் வாயுத் தொல்லை யும், பெண்களுக்குத் துன்பமும், வாழுமிடத்தில் வெற்றி கிட்டாமையும், இடையில் துன்பம் வந்து நீங்குதலும் உண்டாகும். மேற்கண்ட பலன்கள் நன்மையாக மாற பிரம்ம ஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். மேலும், மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள திருவாதவூர் சென்று, அங்குள்ள சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வேண்டிவர வேண்டி யது நடக்கும். இதனை சனிக்கிழமை காலையில் தான் செய்யவேண்டும்.
3. குரு தசையில் புதன் புக்தி
ஆடல், பாடல் கலை களில் சிறக்கலாம். ஞானம் பெருகும். பூஜை செய்து வருவாய் அடையலாம். வளம்பொருந்திய மாதர், மைந்தர்களுக்கு செல்வப் பெருக்கு, பெருமை, புகழ் உண்டாகும்.
4. குரு தசையில் கேது புக்தி
திடமான பெண்களுக்கு கேடு நேரும். தேசமெங்கும் அலைதலும், உற்றார்- சுற்றத்தார் பகையும், மனையாள்மூலம் ஓரிடம்விட்டு வேறிடம் போதலும் நடை பெறும். பிறப்பு ஜாதகத்தில் கேது பகை, நீசத்தில் இருந்தால் மட்டுமே இவ்வாறு நடக்கும். கேது நட்பு, ஆட்சி, உச்சத்திலிலிருந் தால் எதிரிகளை அழிப்பார். தீர்த்த யாத்திரை செல்வார். வர்த்தகத்தில் புகழடைவார். கல்வி, ஞானம், தனம், தானிய சம்பத்து உள்ளவராக இருப்பார்.
5. குரு தசையில் சுக்கிர புக்தி
பசு, வாகனம், பலவிதமான உடைகள், நல்ல நிலைமை, பொருள் சேர்க்கை, புரட்டாசி மாத வளர்பிறையில் பூமி சேர்க்கை, போகம் உண்டாகும். சுற்றத்தாருடன் குணமாக சேர்ந்து வாழ்வார்.
6. குரு தசையில் சூரிய புக்தி
பாதி லாபம் கிட்டும். எடுத்த காரியம் கைகூடும். ஆனால் காற்றினால் பலவித குறையும், பலரது விரோதமும், நோயும், வீட்டில் கலகமும், சூரிய புக்தி முடியும் காலத்தில் நன்மையும் நடைபெறும். பிறப்பு ஜாதகத்தில் சூரியன் பகை, நீசத்தில் இருந்தால் கொள்ளை, மனவருத்தம், தந்தை வர்க்கத்தில் தொல்லை, பித்த ரோகம், மனைவி கர்ப்பம்கலைவது போன்ற துர்பலன்களைக் கொடுக்கும். பிறப்பின்போது சூரியன் நட்பு, ஆட்சி, உச்சத்தில் இருந்தால் வேதங்களைக் கற்க ஆசை கொள்வார். பூமி, பொருள், நட்பு, அதிக உறவினர் உள்ளவராக இருப்பார்.
7. குரு தசையில் சந்திர புக்தி
வாகனம், முத்து, ஆபரணம், நல்ல மனைவி, மக்கள், வித்வான்கள், பொருள் ஆகியவற்றின் சேர்க்கை உண்டாகும். நல்ல காரியங்கள் எல்லாம் தெய்வ சங்கல் பத்தால் நிறைவேறும்.
8. குரு தசையில் செவ்வாய் புக்தி
தீங்கைத் தரும் வினைகளும், திருடர், அக்னியால் துன்பமும், உற்றார் நாசமும், வியாதி உண்டாதலும், இடம்விட்டு விலகிச் செல்லுதலும், நினைத்த காரியம் முடித்திடாமையும் நடக்கும். இந்த நிலை பகை, நீசத்தில் இருந்தால் மட்டுமே நடக்கும். செவ்வாய் பகை, நீசத்தில் இருந்தால் செய்யும் தொழில் கெடும். ஆடு, மாடு, பூமி நஷ்டம், சகோதரர்கள் பீடை, ஜுரம், பலவித வியாதி, தீயினால் உபாதை ஏற்படும். பெற்ற கீர்த்தியும் பறந்தோடும். செவ்வாய் ஆட்சி, நட்பு, உச்சத்திலிலிருந்தால் ஆடு, மாடு, மனை விருத்தி யடையும். ஆடைப் பிரியர். புகழ், மகிழ்ச்சி யுள்ளவர். சகல சம்பத்துகளுடன் வரும் மனை வியை மணம் முடிப்பவராக இருப்பார். நல்ல பிள்ளைகளை அடைவார்.
9. குரு தசையில் ராகு புக்தி
தொடர்ச்சியாக பகையுண்டாகும். சிறு வழக்கும், பொருட்சேதமும், விரோதமும், மனையாளுக்குத் துன்பமும், சூதுகள் மிகுதலும், தொடர்ச்சியாய் குடும்பத்தின் பொருள் நாசமும் உண்டாகும். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளில் ராகு வந்தாலும், ராகு வர்க்கோத்தமம் ஆகியிருந்தாலும், நல்ல பலன்களைத் தரும். எனவே ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காண்பித்து முடிவுக்கு வரவேண்டும்.
பரிகாரம்-1
குரு வீட்டில் சனியும், சனி வீட்டில் குருவும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் இருக்கும். அத்தகையவர்களுக்கு திருவிடைமருதூரில் மகாலிலிங்கேஸ்வரர் கோவிலிலில் எல்லா நாட்களிலும் காலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை பிரம்ம ஹத்தி தோஷ நிவர்த்தி செய்வதுண்டு. பரிகாரக் கட்டணம் ரூ.900. பரிகாரப் பொருட்கள் அனைத்தும் கோவிலில் தருவார்கள். நாம் வாங்கிச் செல்ல வேண்டியதில்லை. இந்தப் பரிகாரத்தை வாழ்வில் ஒருமுறை செய்து கொண்டால் போதும்.
பரிகாரம்-2
குரு தசையில் நன்மை பெறவும், திருமணத் தடை அகலவும், குழந்தைப் பேறு கிட்டவும் கீழுள்ள துதியைச் சொல்லி மனதார குருவை வணங்கினால் நலம்பெறலாம்.
குருபகவான் கவசம்
"வானவர்க்கு அரசனான
வளம் தரும் குருவே உன்னை
தேனான சொல்லெடுத்து
செவிகுளிரப் போற்றுகின்றேன்
காணாத இன்பம் யாவும்
காண நீ வழி வகுப்பாய்
மீனமும் தனுசும் உந்தன்
மேலான வீடாதாகும்
பொன்னிற முல்லையோடு
புஷ்பராகத்தை ஏற்றாய்
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய்
மரத்தினில் அரசு ஏற்றாய்
எண்ணத்தில் நிற்கும் தேவா
எளிதினில் வெற்றி தாராய்
மண்ணினில் 16 ஆண்டாய்
மறவாமல் நீயும் ஏற்றாய்.
சுண்டல் நைவேத்தியத்தால்
தொல்லைகள் தீர்ப்பவன் நீ
கொண்டதோர் யானை உந்தன்
கொண்டாடும் வாகனந்தான்
தந்திடும் பதவி வாய்ப்பும்
தடையில்லாக் காரியச் சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும்
வழங்குதல் உன் பொறுப்பே.
பொருளோடு புகழைத் தந்து
போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும்
செல்வம் வரும்காலம் ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்கவேண்டும்
பேரருள் கூட்ட வேண்டும்
அருள்மிகு குருவே உன்னை
அடிபணிந்து வணங்குகின்றேன்.
வருடம் ஓர் ராசி வீதம்
வட்டமாய்ச் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள்
தங்கமாய் ஏற்றுக் கொள்வோம்
வருகிற நாட்களெல்லாம்
வசந்தமாய் மாறுதற்கே
அருள்தரும் உனது பார்வை
அனுதினமும் எனக்கு வேண்டும்.
குருவே நீ பார்த்தால் போதும்‘
கோடியாய் நன்மை சேரும்
திருவருள் நல் வாழ்வில் வந்தால்
திருமணம் வந்து கூடும்
பொருள் வளம் பெருகும்
நாளும் பொன்னான வாழ்வும் சேரும்
அருள்தர வேண்டி உன்னை
அன்போடு துதிக்கின்றோமே.'
இதனை தினந்தோறும் மூன்றுமுறை படித்து குருவை வழிபட்டுவந் தால் முன்னேற்றம் அதிகரிக்கும்; முத்தான வாழ்வமையும்.
செல்: 94871 68174