Advertisment

குரு பெயர்ச்சி.. வேற்றியும், பரிகாரங்களும்!- ஆர் மஹாலட்சுமி

/idhalgal/balajothidam/guru-peirchivetri-and-remedies-r-mahalakshmi

2024 மே 1-ந்தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு மாறி அமர்ந் துள்ளார். அவர் 2025 மே 12-ந்தேதி மிதுன ராசிக்கு மாறுவார். ஆக ஒரு வருடம் ரிஷப ராசியில் குருபகவான் அமர்ந்திருப்பார்.

Advertisment

அர்ஜூனன் வில் வித்தையில் மிகச் சிறந்தவன். ஏனெனில், அவன் எதனை செயல்படுத்தப் போகிறானோ, எதில் வெற்றிபெற போகிறானோ, அதில் மட்டும் குறிவைத்து, செயலாற்றுவான். அவனது வெற்றியில் ஒருமித்த, குவிந்த ஈடுபாடு, கவனம் இருப்பதால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கப் பெற்றான்.

இதுபோல், இந்த குருப்பெயர்ச்சியில் 12 ராசிக்காரர்களும், எந்த செயலில் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்து, அதன் மீது முழுக் கவனத்தையும் குவியுங்கள். அதற் குரிய பரிகாரத்தையும் செய்யுங்கள்.

மேஷ ராசி

உங்கள் ராசிக்கு 2-ஆமிடத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். எனவே இந்த வருடம், நிச்சயமாக பணப்பெருக்கம் நிச்சயம் உண்டு. எனில் அதற்கான வழிவகைகளில் முழுமுயற்சியை குவியுங்கள். அது திருமணமாக இருக்கலாம். வெளிநாட்டு தொடர்பாக இருக்கலாம். வெளியூர் வர்த்தகமாக அமையலாம். வெளிநாட்டில் ஆன்மிக பணி, மேற்கல்வியாக இருக்கலாம். எனவே இந்த விஷயம் நிறைவேற, யார் யாரை சந்திக்க வேண்டுமோ, அவர்களின் சந்திப்புக்களுக்கு முதலிடம் கொடுங்கள். இந்த வருட குருப்பெயர்ச்சியில் பணவரவு, தங்க காசு பெருக, சிவன் சந்நிதிக்கு முடிந்த பணம் காணிக்கை ஆக்கவும். ஆசிரியர்கள் வீட்டு திருமணத்திற்கு உதவவும். அந்தணர்களின் ஆன்மிக பயண செலவுக்கு உதவுங்கள்.

Advertisment

guru

ரிஷப ராசி

உங்கள் ராசியிலேயே குரு வந்து, ஸ்திரமாக உட்கார்ந்து உள்ளார். எனில், இந்த குருப்பெயர்ச்சி எவ்வினங்களில் வெற்றி தரும். ரிஷப ராசி, மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக முயற்சி செய்துகொண்டிருந்தால், இந்த வருடத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது வெளியூர், வெளிநாடு எதுவானாலும் சரி முயன்றால், கண்டிப்பாக வெற்றி உண்டு. அதுபோல், அரசியலில் ஈடுபடவேண்டும் என எண்ணும் ரிஷப ராசியினர் இந்த குரு வருடத்தை, நன்கு பயன்படுத்துங்கள். அரசியலில் நுழைந்து அது சின்ன பதவி என்றெல் லாம் யோசிக்கவேண்டாம். முழுமுயற்சி மட்டுமேவேண்டும். அது வெற்றியைத் தரும். சமையல் போட்டிகளிலும், முழு ஈடுபாட்டுடன் கலந்

2024 மே 1-ந்தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு மாறி அமர்ந் துள்ளார். அவர் 2025 மே 12-ந்தேதி மிதுன ராசிக்கு மாறுவார். ஆக ஒரு வருடம் ரிஷப ராசியில் குருபகவான் அமர்ந்திருப்பார்.

Advertisment

அர்ஜூனன் வில் வித்தையில் மிகச் சிறந்தவன். ஏனெனில், அவன் எதனை செயல்படுத்தப் போகிறானோ, எதில் வெற்றிபெற போகிறானோ, அதில் மட்டும் குறிவைத்து, செயலாற்றுவான். அவனது வெற்றியில் ஒருமித்த, குவிந்த ஈடுபாடு, கவனம் இருப்பதால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கப் பெற்றான்.

இதுபோல், இந்த குருப்பெயர்ச்சியில் 12 ராசிக்காரர்களும், எந்த செயலில் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்து, அதன் மீது முழுக் கவனத்தையும் குவியுங்கள். அதற் குரிய பரிகாரத்தையும் செய்யுங்கள்.

மேஷ ராசி

உங்கள் ராசிக்கு 2-ஆமிடத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். எனவே இந்த வருடம், நிச்சயமாக பணப்பெருக்கம் நிச்சயம் உண்டு. எனில் அதற்கான வழிவகைகளில் முழுமுயற்சியை குவியுங்கள். அது திருமணமாக இருக்கலாம். வெளிநாட்டு தொடர்பாக இருக்கலாம். வெளியூர் வர்த்தகமாக அமையலாம். வெளிநாட்டில் ஆன்மிக பணி, மேற்கல்வியாக இருக்கலாம். எனவே இந்த விஷயம் நிறைவேற, யார் யாரை சந்திக்க வேண்டுமோ, அவர்களின் சந்திப்புக்களுக்கு முதலிடம் கொடுங்கள். இந்த வருட குருப்பெயர்ச்சியில் பணவரவு, தங்க காசு பெருக, சிவன் சந்நிதிக்கு முடிந்த பணம் காணிக்கை ஆக்கவும். ஆசிரியர்கள் வீட்டு திருமணத்திற்கு உதவவும். அந்தணர்களின் ஆன்மிக பயண செலவுக்கு உதவுங்கள்.

Advertisment

guru

ரிஷப ராசி

உங்கள் ராசியிலேயே குரு வந்து, ஸ்திரமாக உட்கார்ந்து உள்ளார். எனில், இந்த குருப்பெயர்ச்சி எவ்வினங்களில் வெற்றி தரும். ரிஷப ராசி, மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக முயற்சி செய்துகொண்டிருந்தால், இந்த வருடத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது வெளியூர், வெளிநாடு எதுவானாலும் சரி முயன்றால், கண்டிப்பாக வெற்றி உண்டு. அதுபோல், அரசியலில் ஈடுபடவேண்டும் என எண்ணும் ரிஷப ராசியினர் இந்த குரு வருடத்தை, நன்கு பயன்படுத்துங்கள். அரசியலில் நுழைந்து அது சின்ன பதவி என்றெல் லாம் யோசிக்கவேண்டாம். முழுமுயற்சி மட்டுமேவேண்டும். அது வெற்றியைத் தரும். சமையல் போட்டிகளிலும், முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டால், புகழோடு வெற்றியும் கிடைக்கும். சிவனுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றவும். மருத்துவத்துறை சார்ந்த பெண்களுக்கு உதவவும். காயம்பட்ட அந்தணருக்கு, சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்ளவும்.

மிதுன ராசி

உங்கள் ராசிக்கு விரயத்தில் குரு நிற்கிறார். மிதுன ராசியினரில், யாருக்கெல்லாம் புது தொழில், வியாபாரம் ஆரம்பிக்க விருப்பம் உள்ளதோ, அதன் பிள்ளையார் சுழிபோட, முழு முயற்சியுடன் ஈடுபடுங்கள். அதன் சார்ந்த அலைச்ச லும், சந்திப்புகளும் முதன்மை பெறட்டும். அதுபோல் தங்களது உற்பத்தி பொருட்களை வெளிநாட்டுக்கு கண்டிப்பாக அனுப்பியே தீரவேண்டும் என மன முரண்டுடன் இருப்பவர்கள், இந்த வருடத்தை பயன்படுத்துங்கள். உங்களின் முழு ஆர்வக் குவிப்பு, நிறைவான வெற்றி தேடித்தரும். சிவன் கோவிலை சுத்தம்செய்யும் உழவாரப் பணியில் ஈடுபடுங்கள். பள்ளி வாகன ஓட்டிகளுக்கு உதவுங்கள். அந்தணர் களின் பஸ்பாஸ், ரயில் பாஸ் செலவுக்கு உதவுங்கள்.

கடக ராசி

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு குடியிருக்கிறார். இந்த வருடம் எந்த கடக ராசி மாணவர்களுக்கு, மருத்துவ கல்வி படிக்க, வெறி உள்ளதோ, அந்த மாணவர்கள், முழு ஈடுபாட்டுடன், ஒருமித்த மனதாக முனையுங்கள். வெற்றி நிச்சயம். அதுபோல, வெளிநாட்டு வேலை, அரசியலில் நல்ல பதவி தேவை என்பதோடு அதே எண்ணமாக செயல்படுங்கள். உறுதியான வெற்றி உங்களைத்தேடி வரும். பதவி உயர்வு வேண்டுவோரும் இப்போது முயற்சி செய்யுங்கள். சிவன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு உதவுங்கள். வயதான பெண்களுக்கு உதவவும். நோய் அவதியுடைய அந்தணருக்கு, மருந்து வாங்கிக் கொடுங்கள்.

சிம்ம ராசி

உங்களுக்கு 10-ஆமிடத்தில் தொழில் குருவாக தொடர்கிறார். எந்த சிம்ம ராசியினருக்கு, சினிமா உலகம், டி.வி. விளையாட்டுத்துறை, பங்கு வர்த்தம் இவற்றில் நுழைந்து வெற்றிபெற்றே தீர வேண்டும் என தீரா ஆவல் உள்ளவர்கள், இந்த குருப்பெயர்ச்சி வருடத் தைப் பயன்படுத்துங்கள். உங்களின் கோணல் மாணலான அணுகுமுறை, விடாமுயற்சி வெற்றி தேடிதரும் என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம். அதுபோல் ஏற்றுமதி- இறக்குமதி துறையில் முதன்மை சிறப்பு அடையவேண்டும் என விரும்புவோரும், தங்களது முழுக் கவனத்தையும் ஒருமித்து உழைத்தால், உறுதியான வெற்றி உங்களுக்கே. பழமையான சிவன் கோவில்களில் தீபம் தொடர்ந்து, தினப்படி ஏற்ற ஆவன செய்யுங்கள். அடிப்பட்ட குழந்தைகளின் நலன் பேணுவும், பூர்வீக இடங்களில் இருந்துகொண்டு, பிழைக்கத் தெரியாமல் அல்லல்படும் அந்தணர்களின் வாழ்வில் ஒளி கிடைக்கவும் உதவுங்கள்.

கன்னி ராசி

உங்கள் ராசிக்கு 9-ல் அதிர்ஷ்டக் குருவாக அமர்ந்துள்ளார். வீடு வாங்கவேண்டும் வெகுநாள் கனவு உடையவர்கள், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில், முழு முயற்சி யுடன் அலைந்து, விசாரித்தால், நிஜமாகவே அழகான, அம்சமான, அதிர்ஷ்டமான வீடு கிடைக்கும். அதுபோல் உங்களில் சிலர் திருமண மண்டபம் அல்லது வியாபார மால்கள். மல்டி பிளக்ஸ் காம்ளெக்ஸ் கள் கட்டவேண்டும் எனும் ஆசை இருப்பின், இக்காலத்தில் சற்று உறுதியாக, வெகு ப்ராயாசையுடன் முயலுங்கள். உங்கள் வெற்றி உங்களை அடையும் என்பதில் சந்தேகமே யில்லை. உங்கள் இலக்கை அடைய முயற்சி வெகுஅதிகமாக தேவைப்படும். சிவன் கோவிலில் நடக்கும் பூஜைக்கு, அங்குள்ள கோலி சாலைக்கு உதவவும். கோலி சாலைக்கு கட்டடம் கட்ட உதவலாம். பூஜை செய்யும் அந்தணர்கள், வீடு கட்டினால், உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

துலா ராசி

குருபகவான் அஷ்ட குருவாக அமர்ந்துள்ளார். இந்த குருப்பெயர்ச்சியில். ஒரேயொரு விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் முயன்றால், வெற்றி உங்களுக்கே. சரி. அதென்ன விஷயம். சற்று கோக்கு மாக்கான விஷயம்தான். டி.வி., பத்திரிகை, யூட்யூப், கைபேசி என வெகுஜன தொடர்புடைய சாதனத் தில் ரகசிய விஷயங்களை அம்பலப் படுத்துகிறேன் பேர்வழி என வண்டை வண்டையா பேசும், எழுதும், பேட்டி கொடுக்கும் விஷயங்களில் முழு முயற்சியுடன் ஈடுபட்டால் மானாவாரி வெற்றி உங்களுக்கே, இதில் வெற்றியோடு புகழ், எதிர்பாராத வரவு எனவும் சேர்ந்தே வரும். சிவன் கோவிலுக்கு மேள- தாள மின்சார மிஷின் வாங்கிக்கொடுக்கலாம். பாதம் வீங்கி, நடக்க நடக்க முடியாதவர்களுக்கு உதவலாம். காது கேட்காத அந்தணருக்கு, காது கேட்கும் கருவி வாங்கிக் கொடுக்கவும்.

விருச்சிக ராசி

குருபகவான் ஏழாமிடத்தில் ஏறி அமர்ந்துள்ளார். இவர் களஸ்த்திர குரு ஆவார். எனவே வருடக்கணக்காக காதலித்து, கல்யாணம் பண்ண முடியவில்லையே என விசனப்பட்டு வருந்துவோர், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில், உங்களின் வாக்கு சாதுர்யத்தால், மிக முயன்று கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம். ஒருமித்த முயற்சி ஓஹோ பலனைத் தரும். அதுபோல் சினிமாவில் பிண்ணணி பாடகியாக அல்லது பாடகர், பாடகராக வேண்டும் என விரும்புவோரும், இந்த பெயர்ச்சியில் முழுக் கவனத்துடனும், நல்ல ஈடுபாட்டுடனும், உழைத்தால் நிச்சயமாக நல்ல சிங்காரக இயலும். சிவன் கோவில் அன்னதானத்திற்கு, பணம், தானியம் கொடுத்து உதவவும். விளையாட்டு துறை குழந்தைகளுக்கு, தேவைக்கேட்டு உதவுங்கள். பேச்சு குறைபாடு உள்ள அந்தணரின் குழந்தைக்கு முடிந்த உதவிச் செய்யுங்கள்.

தனுசு ராசி

உங்களின் 6-ஆமிடத்தில் ருண, ரோக குருவாக அமர்ந்து பரிபாலிக்கிறார். உங்களில் நிறையபேர். வீடு கட்ட கடன் கிடைச்சா உடனே கட்டி விடலாம். ஆனால் நமக்கு எவன் கடன் தருகிறான் என ரொம்ப அல்லாடி கொண்டிருந்தவர்கள், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் வெகு முயற்சியுடன். மனக் கூர்மையுடன், தேடி அலைந்து, முறைப்படி அணுகினால் உடனே கடன் கிடைத்து வீடு கட்ட ஆரம்பித்துவிடுவீர்கள். வெகுநாள் கனவு பலிக்கும். அதுபோல் நிரந்தரமான நல்ல வேலை இல்லை என மனம் மறுருகிறவர் களும் இந்த காலத்தில் அதற்கான தேடலை தொடங்குங்கள். உங்கள் முனைப்பு, நல்ல வேலையை தேடித்தரும். சிவன் கோவிலின் பழுதுகளை நீக்கி சரிபாருங்கள். வயல், தோட்டம் இவற்றில் வேலை செய்வோருக்கு உதவலாம். ரொம்ப கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் அந்தணரின் தேவைபுரிந்து, முடிந்த உதவிச் செய்யலாம்.

மகர ராசி

உங்கள் ராசிக்கு 5-ஆமிடத்தில் பூர்வபுண்ணிய குருவாக புளங்காகிதம் அடைகிறார். உங்களில் சிலர் பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, தற்போதைய வாழும் இடத்தில் ஒரு வீட்டை வாங்கலாம் என வெகு ப்ராயாசைப்பட்டு, நொந்தவர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தை கையப்படுத்துங்கள். இதற்கு நீங்கள் ரொம்ப மெனக்கெட்டு, அலைந்து, செலவழித்து என எல்லாம் வகையிலும் ஒரே நோக்குடன் முயன் றால், கண்டிப்பாக வீடு கிடைத்துவிடும். புதிய வாகனம் வாங்க, முன்பணம் கட்ட தவித்துக்கொண்டிருந்தவர்களும் இப்போது, புது வாகனம் வாங்கிவிடுவீர்கள். சிவன் கோவில் வாகனங்கள் செப்பனிட உதவுங்கள். பள்ளி குழந்தைகள் புத்தகம் என்ற தேவை அறிந்து உதவவும். கோவிலில் பூஜைசெய்யும் அந்தணரின் போக்குவரத்து செலவுக்கு உதவவும்.

கும்ப ராசி

குருபகவான், உங்களின் 4-ஆமிடத்தில், சுகஸ்தான குருவாக சௌக்கியமாக அமர்ந்துள்ளார். இந்த கும்ப ராசியில் எந்த ஜாதகர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கவேண்டும். முதன்மை ஸ்தானத்துக்கு வரவேண்டும். பணம் கோடிகளில் புரள வேண்டுமென பேராவா கொண்டவர்கள், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில், அதற்குண்டான அத்தனை முஸ்திப்புக்களையும், முனை முறியாமல், வெகு சிரத்தையுடன் முயலுங்கள். இந்த கடுமையான தொடர்ச்சியான வெற்றி, உங்களை கிங் ஆஃப் ரியல் எஸ்டேட் எனும் வெற்றி மகுடம் சூட்டும். இதுபோல் பிறந்த இடத்தில் ஒரு அரசியல் பதவி அல்லது பெரிய பதவி உயர்வு கண்டிப்பாக வேண்டும் எனும் நினைப்பு உடையவர்கள், அந்த குறிக்கோளை நோக்கி பயணித்தால் வெற்றி உங்கள் கையில் கிடைக்கும். சிவன் கோவிலுக்கு நிறைய அரிசி போன்ற தானியம் வழங்கவும். சிவன் கோவில் சார்ந்த வீடு, கடையை பயன்படுத்தினால், வாடகைப் பணத்தை கொடுத்துவிடுங்கள். அந்தணர் தனது வீட்டில், மருமகன் புடுங்கலில் மாட்டிக்கொண்டிருந்தால், தேவையறிந்து பணம் கொடுத்து உதவுங்கள்.

மீன ராசி

குருபகவான், உங்களின் 3-ஆமிடத்தில் அமர்ந்து, தைரிய வீர குருவாக பரிபாலிக்கிறார். உங்களில் சிலர் பத்திரிகை ஆரம்பிக்கவேண்டும். யூட்யூப் சேனல் ஆரம்பிக்கவேண்டும். ட்விட்டரில் கலக்கவேண்டும் என இன்னும் பல பொதுஜன தொடர்பு எனும் சோஷியல் மீடியாவில் பங்கெடுத்து பேரும், புகழும், பணமும் அள்ளவேண்டும் என ஆவலாய் இருப்பீர்கள். நீங்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத் தில், இவ்விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன், முழுக் கவனத்துடன், பிற சிந்தனையின்றி, ஒருமித்த சொல், செயலுடன் செயலாற்றினால், உங்களின் ஆசை பலிதமாகும். இந்த ஆசை, உங்களின் தொழிலாக மாறி, வெற்றிக்கொடி நாட்டும். வேலைப்பளுவை சகித்துக்கொள்ளவேண்டும். சிவன் கோவில் பற்றிய தரவுகளை வெளியிட்டு, அனைவரும் அறியச் செய்யுங்கள். கோவிலில் பணிபுரியும் மனிதர்களுக்கு உதவுங்கள். பூஜை செய்யும் அந்தணரின் கைபேசி விஷயமாக உதவி செய்யும். உங்கள் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு தினமும் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். சிவ தரிசனம், சீக்கிர அதிர்ஷ்டத்தை அழைத்து வரும்.

செல்: 94449 61845

bala100524
இதையும் படியுங்கள்
Subscribe