நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் வழி நடத்தும் கிரகங்களில் வலிமையானவரும், முழு சுபரானவரும் குரு பகவான் தான். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் குருவாக இருந்து அவர் களை வழிநடத்திடக்கூடியவராக இருப்பவ ரும் பிரகஸ்பதியான தேவகுருதான். இவருக்கு தனுசும் மீனமும் ஆட்சி வீடு களாகவும், கடகம் உச்ச வீடாகவும், மகரம் நீச வீடாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
குரு பகவானின் நட்சத்திரங்கள்
மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமன் பிறந்த புனர்பூச நட்சத்திரமும், குமரக்கடவுள் பிறந்த விசாக நட்சத்திரமும், செல்வத்திற்கு அதிபதியான குபேரன் பிறந்த பூரட்டாதி நட்சத்திரமும் குரு பகவானுக்குரிய நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறப் பவர்களுக்கு முதல் தசையாக குரு தசையே வரும்.
குருவின் காரகங்கள்...
புத்திரர்களுக்கும் தனத்திற்கும் தொழிலுக்கும் காரகம் பெற்றவர் குரு பகவான் என்று கூறப்பட்டாலும், பித்ரு ஸ்தானமான ஒன்பதிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றிற்கும் காரகமாகிறார் குரு பகவான். நம்முடைய ஜாதகத்தில் மற்ற எட்டு கிரகங்கள் கெட்டிருந்தாலும் குரு பகவானின் பார்வை நமக்கிருந்தால் போதும் என்று சொல்லலாம். அதனால்தான் குரு பார்க்க கோடி நன்மையென்று சொல்கிறோம்.
உடல் நலமுடன் திகழவும், நல்லறிவினை நாம் பெறவும், நினைவாற்றலும், மந்திர சித்தியும், ராஜ தந்திரங்களும், ஆயகலைகள் அனைத்தும் கைவரப்பெறவும், பதினாறு வகை செல்வங்களை நாம் அடையவும், சமூகத் தின் போற்றலுக்கும், செல்வாக்கிற்கும், உயர்ந்த நிலைக்கும், வாக்கு பலிதத்திற்கும் காரணமாக அமைவது குரு பகவானின் அருள் மட்டுமே.
இத்தனை சிறப்பையும் நமக்கு வழங்கிடக்கூடிய குரு பகவான் நம்முடைய ஜாதகத்தில் அமரும் இடங்களின் காரகத்திற்கேற்ப சங்கடங்களையும் வழங்கிடக்கூடியவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
குருவின் ஸ்தான பலன்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் ஐந்தாமிடத்தில் வீற்றிருந்தால் அவரு டைய வாழ்க்கை சங்கடங்களால் அமையும் என்பதும், ஏழில் அமர்ந்திருந் தால் களத்திர தோஷத்திற்கு ஜாதகர் ஆளாவார் என்பதும், பத்தாமிடத்தில் அமரும் நிலையில் தொழிலில் சங்கடங் களை அடைவார் என்பதும் ஒரு விதியாக இருக்கிறது.
எந்தவொரு காரகரும் அவருக்குரிய காரகத்தில் அமரும்பொழுது அந்த காரகத்திற்குரிய நன்மைகளை அடைய முடியாமல் செய்துவிடுவார் என்று கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். அந்த ரீதியில் குரு பகவான் லக்னங்களில் அமர்ந்துள்ள நிலைகளை வைத்தும், ராசிகளில் அமர்ந்துள்ள நிலைகளை வைத்தும், பாவங்களில் நின்ற நிலை களை வைத்தும், கோட்சார சஞ்சாரங் களை வைத்தும் பலன்களை வழங்கிடக் கூடியவராக இருக்கிறார்.
நம்முடைய ஜாதகத்தில் லக்னம் எதுவோ அதற்கு இரண்டாவது வீடு தான் தனஸ்தானம், குடும்பஸ்தானம், வாக்குஸ்தானமாகும். இந்த இடத்திற் குக் காரகம் பெறுபவர் குரு பகவானா வார். இவ்விடத்தில் குரு அமர்வதை விட பார்ப்பாரேயானால், பதினாறு வகை செல்வங்களும் ஜாதகருக்கு அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இந்த நிலையில் புத்திர காரகனான குரு பகவான், புத்திர ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தில் அமரும் போது அந்த காரகம் பாதிப்படையும் என்பது பொது விதியாகிறது. அதேநேரத்தில், குரு பகவான் தனது ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகளில் ஏதேனுமொரு பார்வையினால் அந்த இடத்தைப் பார்க்கும் நிலையில், பூர்வபுண்ணியப் பலன்கள் கிடைக்கப்பெறுவதுடன் புத்திர பாக்கியத்தையும் ஜாதகருக்கு குரு பகவான் வழங்குவார்.
தனத்திற்கும், புத்திரத்திற்கும் காரகனான குரு பகவான்தான் தொழிலுக்கும் காரகனாகிறார்.
ஜென்ம ஜாதகத்தில் குரு பகவான் பத்தாம் வீட்டில் அமரும்போது, குறிப்பாக தனித்து அமரும்போது அந்த ஜாதகரின் தொழில் நிலையில் எல்லையற்ற சங்கடங்களையும், பிரச்சினைகளையும், தோல்விகளையும் வழங்குவார் என்று கூறும் ஜோதிட சாஸ்திரம், பத்தாமிடத்தில் வேறு கிரகத்துடன் சம்பந்தம் பெறும்போது தொழில் ஸ்தானம் சிறப்படை யும் என்றும் கூறுகிறது. அதே நேரத்தில் பத்தாமிடத்தைத் தனது பார்வைகளில் ஏதேனும் ஒன்றினால் குரு பகவான் பார்த்தா ரேயானால் அந்த ஜாதகரின் தொழில்நிலை சிறப்படையும் என்பதும் ஜோதிட விதியாகிறது.
குரு பகவான் எந்த இடங்களைப் பார்க்கி றாரோ அந்த இடங்களின் எதிர்மறை வீரியம் குறைந்து, அந்த இடங்களுக்கெல்லாம் நன்மையை வழங்கிடக்கூடியவராகிறார்.
குரு பகவான் அமருமிடம்...
குருவைப்பற்றிப் பார்க்கும்போது, ஜென்ம ஜாதகத்தில் அவர் இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டாம் வீடுகளில் மறைவது கிரக தோஷத்தை உண்டாக்கும் என்பதும், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேதுவுடன் சம்பந்தம் பெறுவதும் தோஷமாகும்.
குரு அமரும் இடத்தினால் அந்த இடத்திற்குரிய பலன்கள் எதிர்மறையாகும் என்பதால், குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திலும், சுக ஸ்தானமான நான்காம் இடத்திலும், சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்திலும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத் திலும், தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திலும், அயன சயன ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்திலும் குரு பகவான் அமராமல் இருக்கும் ஜாதகமே நன்மைகளை அடையக்கூடிய ஜாதகமாகக் கூறப்படுகிறது.
நம்முடைய ஜெனன ஜாதகத்தில் குரு பகவான் எத்தகைய நிலையில் இருந்தாலும், கோட்சாரரீதியாக நமக்கு குரு பலம் வந்து விட்டால் திருமணம் கைகூடி வரும்; குழந்தை பாக்கியம் ஏற்படும்; வேலைவாய்ப்பு உண்டா கும்; தொழில் விருத்தியாகும்; பொன், பொருள் சேரும்; புகழும் சேரும்; வீடு, மனை, வாகனம் என்று வாழ்க்கைக்கு அடிப்படையான ஒவ்வொன்றும் அமையும்.
குரு பலம்...
நம்முடைய ஜாதகத் தில் குரு பலமானவராக இருந்துவிட்டால் நமக்கு குரு பலமுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம், இத்தகைய பலமுள்ள ஜாதகரின் வாழ்க்கை நிலை உயர்விற்குமேல் உயர்வாகவே இருக்கும். இதை யாராலும் தடுத்துவிடமுடியாது.
பொதுவாக, குரு பகவானின் பார்வைதான் நமக்கு நன்மை செய்திடக்கூடியதாக இருக்கி றது. நம்முடைய பிறப்பு ஜாதகத்தில் பிற கிரகங் களுடன் குரு பகவான் இணைந்திருக்கும் நிலை யிலும், பாவ கிரகங்களின் நட்சத்திர சாரத்தில் இருக்கும் நிலையிலும் அந்த இடத்தின் சுபப் பலன்கள்கூட எதிர்மறையாகிப் போகிறது.
இப்படி, குரு பகவானின் ஸ்தான நிலையை வைத்தும், சஞ்சார நிலையை வைத்தும் நிறையவே பலன்கள் கூறப்படுகிறது. என்றாலும், நாம் அனைவரும் ஆண்டுதோறும் நடை பெறும் குருப்பெயர்ச்சியை மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். அதற்குக் காரணம் குரு பகவான் சஞ்சரிக்கும் இடத்திலிருந்து அவருடைய பார்வைகள் பதியும் இடங்களை வைத்து நம் ஒவ்வொருவருக்கும் உண்டாகப் போகும் நற்பலன்களுக்காகத்தான்.
குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களின்மீது தனது பார்வையை செலுத்துவதன்மூலம், அந்த மூன்று ராசியினருக்கும் பலனை வழங்கு கிறார் என்பதுடன், மற்ற ராசியினருக்கும் அவர் களுடைய ராசியிலிருந்து தனது பார்வைகளைப் பெறக்கூடிய இடங்களை வைத்துப் பலன்கள் வழங்கிடக்கூடியவராக உள்ளார். அது மட்டுமல்ல; தனது சஞ்சாரத்தில் இரண்டு ராசியினருக்கு ஸ்தானப் பலன்களை வழங்கி டக் கூடியவராகவும் குரு பகவான் உள்ளார்.
ஒரு ராசியினருக்கு இரண்டாம் வீடு மற்றும் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது ஸ்தானப் பலன்களை வழங்கிடக்கூடியவராக உள்ளார் குரு பகவான்.
இவ்வாண்டு நவம்பர் 13 அன்று நடைபெறவிருக்கும் குருப்பெயர்ச்சியை வைத்து, குரு பகவான் வழங்கிடும் பலன்களை சிறு முன்னோட் டமாகப் பார்ப்போம்.
குரு பகவானின் பார்வைப் பலனும் ஸ்தானப் பலனும்... நவம்பர் 13 அன்று கும்பத்திற்குப் பெயர்ச்சி யாகும் குரு பகவான், அங்கிருந்து அவருடைய ஐந்தாம் பார்வையை மிதுன ராசியினருக்கும், ஏழாம் பார்வையை சிம்ம ராசியினருக்கும், ஒன்பதாம் பார்வையை துலா ராசியினருக்கும் வழங்குவதுடன், மகர ராசியினருக்கு இரண்டாம் வீட்டிற்குரிய ஸ்தானப் பலனையும், மேஷ ராசியினருக்கு பதினொன்றாம் வீட்டிற்குரிய ஸ்தானப் பலனையும் ஆண்டு முழுவதும், அடுத்த குருப்பெயர்ச்சி வரையில் வழங்குவார் என்று சிலர் நினைக்கலாம்.
ஆனால் அதில் மாறுதலும் உண்டு. குரு பகவான் கும்பத்தில் சஞ்சரிக்கும் நிலையில், மேஷ ராசியினருக்கு, பதினொன் றாம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்வதன் பலனையும், அவர் பார்த்திடவுள்ள மூன்றாமிட மான சகோதர, தைரிய ஸ்தானத்தையும், ஐந்தாமிடமான புத்திர ஸ்தானத்தையும், ஏழா மிடமான களத்திர ஸ்தானத்தையும் இக்காலத் தில் பார்ப்பதால், இவ்விடங்களுக்கெல்லாம் நன்மையான பலன்களாகவே வழங்கிடப் போகிறார்.
ரிஷப ராசியினருக்கு பத்தாம் இடமென்னும் தொழில் ஸ்தானத்தில் பாதகமாக சஞ்சரித்தா லும், இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத் தையும், நான்காமிடமான சுக ஸ்தானத்தையும், ஆறாமிடமான ரோக ஸ்தானத்தையும் பார்க்கும் குரு பகவான், இந்த மூன்று இடங்களுக் கும் இக்காலத்தில் நன்மைகளை வழங்கிடப் போகிறார்.
மிதுன ராசியினருக்கு ஒன்பதாம் இடமென் னும் பிதுர் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், இவர்களுடைய ஜென்ம ராசியைப் பார்ப்பதும், மூன்றாமிடமான தைரிய ஸ்தானத்தையும், ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்த்திட இருப்பதால், இந்த நான்கு இடங்களுக்கும் இக்காலத்தில் நன்மைகளை வழங்கிடக் கூடியவராகிறார்.
கடக ராசியினருக்கு எட்டாமிடத்தில் பாதகமாகவே சஞ்சரித்தாலும், இவர்களுடைய பன்னிரண்டாம் இடமான அயன சயன ஸ்தானத் தையும், இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத் தையும், நான்காமிடமான மாதுர் ஸ்தானத் தையும் பார்ப்பதால், இந்த மூன்று இடங்களுக் கும் நன்மைகளை வழங்கிடப் போகிறார்.
சிம்ம ராசியினருக்கு ஏழாம் இடமென்னும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், இவர்களுடைய பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தையும், ஜென்ம ராசியையும், மூன்றாமிடமான வீரிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்த்திட உள்ளதால், இந்த நான்கு இடங்களுக்கும் இக்காலத்தில் நன்மைகளை வழங்கிடப் போகிறார் குரு பகவான்.
கன்னி ராசியினருக்கு ஆறாம் இடமென்னும் ரோக ஸ்தானத்தில் பாதகமாகவே சஞ்சரித்தா லும், இவர்களுடைய ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தின்மீதும், பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தின்மீதும், இரண்டா மிடமான வாக்கு ஸ்தானத்தின்மீதும் குருவின் பார்வை பதிவதால், இந்த மூன்று இடங்களுக் கும் இக்காலத்தில் நன்மைகளையே வழங்கிடப் போகிறார்.
துலா ராசியினருக்கு ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், இவர்களுடைய ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தையும், பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தையும், ஜென்ம ராசி யையும் பார்க்கப்போவதால், இந்த நான்கு இடங்களுக்கும் நன்மைகளை வழங்கப் போகிறார் குரு பகவான்.
விருச்சிக ராசியினருக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் பாதகமாகவே சஞ்சரித்தாலும், எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும், பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தையும், பன்னிரண்டாம் வீடான படுக்கை ஸ்தானத்தையும் பார்க்கப்போவதால், இந்த மூன்று இடங்களுக்கும் நன்மைகளை வழங்கிடப் போகிறார்.
தனுசு ராசியினருக்கு தைரிய ஸ்தானமெனும் மூன்றாவது வீட்டில் குரு பகவான் பாதகமாகவே சஞ்சரித்தாலும், இவர்களின் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் வீடான பிதுர் ஸ்தானத்தையும், பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத் தையும் குரு பகவான் பார்க்கப் போவதால், இந்த மூன்று இடங்களுக்கும் நன்மைகளை வழங்கிடப் போகிறார்.
மகர ராசியினருக்கு இரண்டாம் வீடென்னும் குடும்ப ஸ்தானத்தில் அமர்வதாலும், அங்கிருந்து ஆறாம் இடமென்னும் சத்ரு ஸ்தானத்தையும், எட்டாம் வீடென்னும் அஷ்டம ஸ்தானத்தையும், பத்தாம் வீடென்னும் தொழில் ஸ்தானத்தையும் குரு பகவான் பார்த்தி டப் போவதால், இந்த நான்கு இடங்களுக்கும் நன்மைகளை வழங்கப் போகிறார்.
கும்ப ராசியினருக்கு ஜென்ம குருவாக பாதகமாகவே சஞ்சரித்தாலும், இவர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத் தையும், ஏழாம் வீடான நட்பு ஸ்தானத்தையும், ஒன்பதாம் வீடான பிதுர் ஸ்தானத்தையும் குரு பகவான் பார்க்கப் போவதால், இந்த மூன்று இடங்களுக்கும் நன்மைகளை வழங்கிடப் போகிறார்.
மீன ராசியினருக்கு பன்னிரண்டாம் வீட்டில் விரய குருவாக பாதகமாகவே சஞ்சரித்தாலும், இவர்களின் நான்காம் வீடான சுக ஸ்தானத் தையும், ஆறாம் வீடான ரோக ஸ்தானத்தையும், எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் குரு பகவான் பார்க்கப் போவதால் இந்த மூன்று இடங்களுக்கும் நன்மைகளை வழங்கிடப் போகிறார்.
(இவற்றையெல்லாம் பற்றி விரைவில் வெளிவரவிருக்கும் குருப்பெயர்ச்சி நூலில் விவரமாகவே தெரிவிக்கிறேன்.)
இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவல் உண்டு.
மாறுபடும் பலன்கள்
குரு பகவான் ஆண்டு முழுவதும் ஒரே ராசியிலேயே, ஒரே நிலையிலேயே சஞ்சரிப்பார்; அவரால் ஒரேமாதிரியான பலன்தான் கிடைக்குமென்று எண்ணவேண்டாம்.
ஒரு ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிக்கும் போது, அஸ்தமனம், வக்ரம் என்னும் இரண்டு நிலைகளுக்கு அந்த ஆண்டில் அவர் உள்ளாக்கப் படுகிறார் என்பதால், அதுபற்றியும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
குரு பகவானின் வக்ரகதி, அதிசாரம் வக்ரகதி என்பது, கிரகங்கள் தமக்குரிய இயல்பான சஞ்சாரப் பாதை யிலிருந்து மாறிப் பின்ன டைந்து, அதன்பின் முன் செல்லும். குரு பகவானும் இத்தகைய வக்ரகதிக்கு ஆளாபவராகவே இருக்கிறார்.
கிரகங்களில் ராகு- கேதுக்களைத் தவிர்த்து மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனின் வெப்பக் கதிர்வீச்சின் காரணமாக பாதிப்பிற் குள்ளாகின்றன. அந்த பாதிப்புகள்தான் கிரகங் களை வக்ரமடைய வைப்பதும், அஸ்தங்க தோஷத்திற்கு ஆளாக்குவதுமாக உள்ளது. அந்தரீதியில் குரு பகவான் எந்த ராசியில் அமர்ந்துள்ளாரோ அந்த ராசிக்கு ஐந்தாம் ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும்போது குரு பகவான் வக்ரகதிக்கு ஆளாகி, அவருக்கு ஒன்பதாம் ராசிக்குள் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரநிவர்த்தியாவார்.
இந்தரீதியில் ஒரு ஆண்டிற்குரிய பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் குரு பகவான் வக்ரமடைவதால், அவர் எந்த எந்த ராசியினருக்கு நற்பலன்களை வழங்கும் நிலையைப் பெற்றிருந்தாரோ, அந்த ராசிகளுக்கும் எதிர்மறையான பலன்களை வழங்கிடக்கூடியவராகிறார். இந்த நேரத்தில் அவரால் சங்கடங்களுக்கு ஆளான ராசியினர் அவற்றிலிருந்து விடுபட்டு ஓரளவிற்கு நன்மை யைக் காணும் நிலையடைவார்கள்.
அதுபோல், குரு பகவான் அஸ்தங்க நிலையை அடையும்போது அவர் வழங்கிடக் கூடிய பலன்களை வழங்கமுடியாத அளவுக்கு தனது சக்தியை இழந்துவிடுகிறார்.
குரு பகவானின் அஸ்தங்கம்
கிரகங்கள் ஒவ்வொன்றும் தமது சஞ்சாரத்தின்போது ஒரு குறிப்பிட்ட எல்லையில் சூரியனை நெருங்கும் சமயத்தில் தங்களது சக்தியை இழந்துவிடுகின்றனர்.
ஆண்டு முழுவதும் ஒரு ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு பகவானை, மாத கிரகமான சூரியன் ஒரு முறையாவது நெருங்கிக் கடந்துசெல்லக்கூடியவராக இருக்கிறார். அந்த நிலையில் குருவுக்கு பதினைந்து டிகிரிக்கு முன்னதாகவும், பின்னதாகவும் சூரியன் இருக்கும் காலத்தில், குரு பகவான் அஸ்தங்க நிலைக்கு ஆளாகி, எந்தவொரு பலனையும் யாருக்கும் வழங்கிடமுடியாத அளவுக்கு தன்னுடைய சக்தியை இழந்துவிடுகிறார்.
இந்த நிலை சுமார் ஒருமாத காலத்திற்கு நீடித்திடும் என்பதால், இக்காலத்திலும் தான் நற்பலன்களை வழங்கிடும் நிலையிலுள்ள ராசியினர் களுக்குக்கூட பலன் வழங்கமுடியாத நிலைக்கு ஆளாகிவிடுகிறார்.
இதுபோல் அதிசாரம் என்ற நிலையும் குரு பகவானுக்கு உண்டு. தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து அதிசாரமாக அடுத்துள்ள ராசிக்குச் சென்று, மீண்டும் தான் சஞ்சரித்த ராசிக்கே குரு பகவான் திரும்புவார். இதையே அதிசாரம் என்கிறோம். இக்காலத்திலும் அவர் வழங்கும் பலன்கள் மாறுபடும்.
எனவே, ஒரு ராசிக்குள் குரு பகவான் பிரவேசித்துவிட்டால் ஆண்டு முழுவதும் அவர் நற்பலன்களை வழங்கும் நிலையிலேயே இருப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். வக்ரகதியால், அஸ்தங்க நிலையால், அதிசாரத்தினால் அவருடைய நிலையில் மாற்றம் நிகழும். அதனால் அவர் வழங்கிடும் பலன்களிலும் மாற்றம் உண்டாகும்.
செல்: 94443 93717