குரு பகவான் 16 ஆண்டுகள் தசை நடத்துவார். சந்திரனைப்போல குருவும் 16 ஆண்டுகளும் சிறப்பு செய்வார். ஒருவர் முன்னேறவேண்டுமானால் குரு தசை வரவேண்டும். சகல வல்லமை படைத்த குரு தசை இளமையில் வந்தால் கல்வியில் சிறந்து விளங்க லாம். நடுவயதில் வந்தால் ஜாதகர் வாழ்வில் சிறந்து விளங்குவார். கடைசிக்காலத்தில் வந்தால் சந்ததியர் சிறந்து விளங்குவர்.
தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப்பொருளாக விளங்குபவர் குரு பகவானே. இவரது தசையானது பலம் வாய்ந்தது. ஒருவர் குழந்தைச் செல்வங்களை அடைவதற்கு குருவே காரணம். அந்தணர்களுக்கும் பசுக்களுக்கும் உரியவர். தேர், யானை, குதிரை போன்றவற்றை சித்தரிப்பவர் இவர்தான். தலைவணங்காத தலைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகள் செய்யவைத்து மனிதகுல மா
குரு பகவான் 16 ஆண்டுகள் தசை நடத்துவார். சந்திரனைப்போல குருவும் 16 ஆண்டுகளும் சிறப்பு செய்வார். ஒருவர் முன்னேறவேண்டுமானால் குரு தசை வரவேண்டும். சகல வல்லமை படைத்த குரு தசை இளமையில் வந்தால் கல்வியில் சிறந்து விளங்க லாம். நடுவயதில் வந்தால் ஜாதகர் வாழ்வில் சிறந்து விளங்குவார். கடைசிக்காலத்தில் வந்தால் சந்ததியர் சிறந்து விளங்குவர்.
தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப்பொருளாக விளங்குபவர் குரு பகவானே. இவரது தசையானது பலம் வாய்ந்தது. ஒருவர் குழந்தைச் செல்வங்களை அடைவதற்கு குருவே காரணம். அந்தணர்களுக்கும் பசுக்களுக்கும் உரியவர். தேர், யானை, குதிரை போன்றவற்றை சித்தரிப்பவர் இவர்தான். தலைவணங்காத தலைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகள் செய்யவைத்து மனிதகுல மாணிக் கங்களாகத் திகழவைப்பார். அவரது தசையில் நாட்டை ஆளவைப்பார். நல்லோருடன் சேரவைப் பார். புதுப்புது யுக்திகளைக் காணவைப்பார். மேன்மைக்கும் தன்மைக்கும் வித்தான இவர் விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லவர் ஆக்குவார். அந்தஸ்தையும் ஆற்றலையும் வாரிவழங்குவார். சிம்மக்குரலையும் தந்து பலரையும் பணியவைக்கும் ஆற்றலைத் தருவார். மஞ்சள் நிறத்தவர். மந்தகாச முகத்தவர். இனிப்புப்பிரியர். சாத்விக குணமுள்ளவர். உடலின் சதை இவர். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் கபத்திற்கு மட்டும் உரியவர். பொன்னன் என்ற பெயர் பெற்ற இவரது உலோகம் தங்கம்தான். புஷ்பராகக் கல்லுக்குரியவர். கஜானாவை (வங்கியை) நிரம்பச் செய்பவர். ஆண் கிரகம். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர். இவரது திசை வடகிழக்கு.
தனுசு, மீன ராசிக்குரியவர். கடகம் உச்ச வீடு. மகரம் நீச வீடு. குரு வீட்டில் சனி வந்தாலும், சனி வீட்டில் குரு வந்தாலும், குருவை சனி பார்த்தாலும், சனியை குரு பார்த்தாலும் முன்னோர்கள் செய்த பாவம் உண்டு. இத்தகைய ஜாதக அமைப்பு டையவர்கள் பரிகாரம் செய்து கொண்டால்தான் குரு தசையில் முன்னேறமுடியும். பகலில் பலம்மிகுந்த இவர் தனது பார்வையால் மற்ற கிரகங்களுக்கு பலம் தருவார். குருவுக்கு சந்திரன், செவ்வாய், சூரியன் நண்பர்கள். புதன், சுக்கிரன் பகைவர்கள். புனர் பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத் திரங்களுக்கு தசாபுக்திநாதர். ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலை சற்று ஏறத் தாழ இருந்தாலும்கூட இவர் ஒருவர் மட்டுமே உயர்ந்திருந்தால் போதும்- நாம் உயர்வதற்கு!
சதுரபீடம் இவருடையது. தீட்சிதர், "ப்ருஹஸ்பதே தாராபதே' என்று தொடங் கிப் பாடும் கீர்த்தனையில், "மகத்தான பலமுடையவர்; கற்பகம்போல் அருள் புரியும் வள்ளல்; இரக்கமுள்ளவர்; பரிசுத்தமானவர்; நீதிகளின் நிலைக்களன்' என்று வர்ணிக்கிறார். இவர் நீதிநூல் எழுதியதாகவும், அது இக்காலத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
குருவருள் பெருக கீழுள்ள பரிகாரங் களைச் செய்யலாம்.
பரிகாரம்-1
மகரத்தில் குரு நீசமானவர்களும், சனிக்கு குரு பார்வை- குருவுக்கு சனி பார்வை உள்ளவர்களும் வாழ்வில் உயரத் தடையாக இருப்பது முன்னோர்கள் செய்த பாவமே.
கும்பகோணம் அருகே திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை தோஷ நிவர்த்தி உண்டு. பரிகாரக் கட்டணம் ரு. 900 மட்டும். (ஒருமுறை செய்தால் போதும்.
பரிகாரப் பொருட்கள் முழுவதும் தருவார்கள்). 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் செய்யவேண்டும். நிரம்பாத வர்கள் 18 வயது வந்தவுடன் செய்ய வேண்டும். குழந்தை வரம் வேண்டு பவர்களும் செய்துகொள்ளலாம்.
பரிகாரம்-2
உங்கள் பகுதியிலுள்ள குரு பகவான் சந்நிதியிலும் பரிகாரம் செய்துகொள்ளலாம். வசதியுள்ள வர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துவரலாம்.
பரிகாரம்-3
"வானவர்க்கு ஆசானான வளம் தரும் குருவே! உன்னை தேனான சொல்லெடுத்து செவிகுளிரப் போற்று கின்றோம். மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடாகும். பொன்னிற முல்லை யோடு புஷ்பராகத்தை ஏற்றாய். வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய். எளிதினில் வெற்றி தாராய். மண்ணில் 16 ஆண்டுகளை நீ ஏற்றாய். வருடமொரு ராசி வீதம் வட்டமாய் சுழன்றுவந்தே சுண்டல் நைவேத்தியத்தால் தொல்லை தீர்ப்பவன். கொண்டதோர் யானை உந்தன் மேலான வீடாகும். வந்திடும் பிள்ளைப்பேறும் வழங்குதல் உன் பொறுப்பே' என்று தினசரி மூன்று முறை சொல்லி வணங்கிவர, வியாழ பகவான் நன்மை தருவார்.
செல்: 94871 68174