ருவர் ஜாதகத்தில் சுப கிரகங்களில் தலையாய கிரகமான குருபகவான் வலுவாக இருப்பது மிகமிக அவசியமாகும். ஒரு தனிப்பட்ட நபருக்கு- அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி- குரு வலுவாக இருப்பது மிகச்சிறப்பு. ஒருவருக்கு பணப்புழக்கம், பெரியோர்களுடைய ஆசி, குழந்தை பாக்கியம், இருக்கக்கூடிய இடத்தில் கௌரவத்தை தரக்கூடிய கிரகமாக குருபகவான் இருக்கிறார். குரு ஒரு ஜாதகத்தில் பலமாக இருந்தால் பணவரவு சிறப் பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக அனு கூலங்கள் உண்டாகும். சிறப் பான குழந்தை பாக்கியம் ஏற்படும். சமுதாயத்தில் கௌரவ மான நிலையுண்டாகும்.

Advertisment

அதுவே ஒரு ஜாதகத்தில் குரு வக்ரம் பெற்றிருந்தாலும், சர்ப்ப கிரகங்களுக்கு மிக அருகில் அமையப்பெற்றிருந்தாலும், சூரியனுக்கு 1 அல்லது 2 டிகிரிக்குள் அமையபெற்று அஸ்தங்கம் பெற்றிருந் தாலும் குரு பலவீனமடைகிறார்.

Advertisment

guru

அதுபோல குரு தனித்து ஒரு பாவத்தில் இருந்தால், இருக்கும் பாவத்தை சற்று பாதிக்கிறார். அது போல சந்திரனுக்கு 6, 8, 12-ல் குரு அமையப்பெற்றிருந்து சகடை தோஷம் ஏற்பட்டாலும் வாழ்வில் ஏற்றத்தாழ்வான நிலை, எவ்வளவு உழைத்தாலும் முன்னேறமுடியாத அமைப்பு உண்டாகி றது. குரு பலவீனமாக இருந்தால் செரிமானப் பிரச்சினை, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சரியாக சாப்பிடமுடியாத அமைப்பு, கொடுக்கல்- வாங்கல்ரீதியாக பிரச்சினை, குழந்தை பாக்கியம் ஏற்படு வதில் இடையூறுகள், ஜாதகருக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய மதிப்பு, மரியாதை சமுதாயத்தில் கிடைக்க இடையூறுகள் ஏற்படுகிறது.

குரு பலவீனமாக இருப்ப வர்கள் முடிந்தவரை கொடுக் கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. அதுபோல குரு எந்த பாவத்தில் தனித்திருக்கிறாரோ அது தொடர்பான விஷயங் களை சற்று கவனத்தோடு கையாண்டால் வாழ்வில் ஏற்றங் களை அடையமுடியும்.

குறிப்பாக 7-ல் தனித்து குரு அமையப் பெற்றால் திருமணம் அமைவதில் இடையூறுகள் ஏற்படு கிறது. சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்து, பொருந்துகிற நட்சத்திரமாகப் பார்த்துத் திருமணம் செய்யும்பொழுது வாழ்க்கை நன்றாக இருக்கும். அதுபோல குரு பலவீனமாக இருப்பவர்கள் காலம் தாழ்த்தாமல், திருமணமானவுடனே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்வது சிறப்பு. குரு பலவீன மாக இருப்பவர்கள் குருவுக்குப் பரி காரங்கள் செய்வதன் மூலமாக பாதிப்பு கள் சற்று குறைந்து ஒருசில ஆதாயங் களை அடையமுடியும்.

குருவுக்குரிய எளிய பரிகாரங்கள்

வியாழக்கிழமைதோறும் குரு தட்சிணாமூர்த்திற்கு அல்லது நவகிரகத் தலத்தில் இருக்கும் குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரமும், மஞ்சள்நிற மலர்களும் சாற்றி, நெய் தீபமேற்றுவது, கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து குருவுக்கு சாற்றுவது நல்லது.

அரசமரக் கன்று, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள்நிற ஆடைகள், மலர்கள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை தானம் கொடுப்பது நல்லது. வெண் முல்லைப் பூக்களால் குருவுக்கு அர்ச்சனை செய்து வருவதும் நல்லது.

சிவனை வணங்கி ருத்ரம் ஜெபிப்பதும், ருத்ராபிஷேகம் செய்வதும் நற்பலனைத் தரும். குருவுக்குரிய பரிகாரக் கல்லான புஷ்பராகத்தை மோதிரத்தில் பதித்து அணிந்துகொள்வது நல்லது. வஸ்திர தானம் செய்வது, உணவுப் பொருட்கள் வழங்குவது, மஞ்சள்நிற ஆடைகளை வழங்குவது தோஷத்தை நீக்கும்.

மாணவ- மாணவியருக்கு முடிந்த உதவி களைச் செய்துவருவதன் மூலம் குருவின் திருவருளைப் பெறமுடியும் என்பது ஐதீகம்.

குருபகவானுக்குப் பரிகாரமாக நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே யிருக்கும் ஆலங்குடிக்குச் சென்று உங்கள் பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்லி குருவுக்கு அர்ச்சனை செய்துவருவது மிகவும் நல்லது.

_____________

சனியனே என்று திட்டாதீர்கள்! கவிதா பாலாஜிகணேஷ்

ல வீடுகளில் தாய்மார்கள் பிள்ளைகளை "சனியனே' என திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக பிள்ளைகள் பெற்றோருக்குப் பிடிக்காதச் செயல்களை செய்யும்பொழுதும், அதிகம் பிடிவாதம் பிடிக்கும்பொழுதும், சொல்வதைக் கேட்காதபொழுதும் பெற்றோர் இப்படி சனியனே என திட்டுவார்கள். ஆனால் பிள்ளைகளை இப்படி சனியனே என திட்டினால், ஒருவருக்கு மிகப்பெரிய கோபம் வந்து அவர் உங்களை வாட்டி வதைத்து விடுவார். யாரவர்? உங்கள் குழந்தைகளை சனியனே என திட்டும்பொழுது, நீங்கள் சனிபகவானை கேலி செய்வதாக நினைத்து சனிபகவான் உங்கள்மீது அவருடைய முழு பார்வையையும் செலுத்திவிடுவார் என்பது ஐதீகம்.

Advertisment

சனிபகவானை மந்தமானவர் என சொல்வார்கள்.

அவருக்கு மந்தன் என்ற பெயருமுண்டு. சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களைவிட சூரியனை மெதுவாக சுற்றிவருகிறது.

ஒருவருடைய எண்ணத்தில் சனியன் என்று வந்து விட்டால் அவருடைய வார்த்தையிலும் சனியனே என்ற சொல் வரும். இது மிகவும் ஆபத்தானது. ஒருவரின் நாவிலிருந்து அந்த வார்த்தை வந்துவிட்டால் சனி அவர்களின் செயல்களில் சேர்ந்துவிடுவார். அதனால் வாழ்க்கையில் அதிக சோதனைகளை சந்திக்க நேரிடும்.

சனிபகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது- கெட்டதுக்குத் தகுந்தாற்படி பலன்கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக்கும் நன்மையால் மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது. மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினைத்துத் தவமிருந்தார். சிவன் தரிசனம் தந்து, சனீஸ்வரரை பொங்குசனியாக மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கிறார்.

மந்தகதி உள்ளவர்களுக்காக சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனியனே என திட்டக் கூடாது. இவ்வாறு திட்டினால் யார் திட்டுகிறாரோ, அவர் தன்னை கேலி செய்ததாகக் கருதி, சனிபகவான் அவர் மீது தன் பார்வையை செலுத்திவிடுவார். மந்தகதி உடையவர் களிடம் பக்குவமாகப் பேசித் திருத்துபவர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும்.

செல்: 98425 50844