jathagam

ஒரு ஜாதகருக்கு குரு தசாபுக்தி காலங்களில் ஏற்பட போகிற பலன்களை இக்கட்டுரையில் காண்போம்.

Advertisment

இந்த கிரக தசா காலத்தில் பொன் ஆபரணங்கள் சேரும். நவீன ஆடைகளை அணிவார்கள். வீடு, நிலம், வாங்குவார்கள். கீர்த்தி பிரதாபங்கள் ஓங்கும். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து உறவுகளாலும் கொண்டாடப்படுவார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவை ஏற்படும். குடும்ப விருத்தி, பசு, தானிய விருத்தி, அதிக லாபங்களும் உண்டாகும். இவையெல்லாம் குரு தசையின் பொதுப் பலன்கள் ஆகும்.

குரு தசையில் கிராமத்திற்கு அதிகாரியாகுதல், பூமியை ஆளும் அரசன் அல்லது தற்காலத்தில் மந்திரி போன்ற உயர் பதவிகளை அடைவார்கள். அரசால்அனுகூலம் பெறுதல், கௌரவிக்கப்படும் நிலை ஆகியவை ஏற்படும்.

Advertisment

நல்ல உடற்கட்டுடன் திகழ்வார். மிகச் சிறந்த மேதையாக, அறிவாளியாகவும் விளங்குவார். வாதிடு வதில் வல்லமை பெற்றநீதிபதி ஆவார். அறிவியல் மற்றும் வேத விவாதங்களில் பங்குபெற்று அதில் நல்ல தேர்ச்சியும்அடைவார். பெயரும், புகழும் அடைவார்.

குரு தனது உச்ச ராசியான கடகத்தில் இருந்து தசை நடத்தினால் ஜாதகருக்கு வண்டி வாகனங்கள் சேரும். ஆடை, ஆபரணங்கள், நவரத்தினங்கள் ஆகியவை சேரும். அதிக சுக சௌக்கியங்கள், உறவுகளால் போற்றப்படுதல் ஆகியவையும் ஏற்படும். அரசின் பிரதிநிதியாக, அரசாங்க முத்திரையிடும் தகுதியை அடைவார். பூஜை, கும்பாபிஷேகம் நடத்துவது, யாகாதி காரியங்கள் ஆகியவற்றால் கீர்த்தியும்அடைவார். குழந்தை பாக்கியம் உண்டு. கிராம, நகர உயர் பதவிகளை அடைவார்.

குரு தனது உச்ச நவாம்சத்தில் நின்று தசை நடத்தும்போது, பாக்கிய விருத்தி,

அரசாள்பவர் உதவி பெறுதல், பெரிய பதவி கிடைத்தல், தங்கம், ரத்தின ஆபரணங்கள் கிடைத்தல் ஆகியவை ஏற்படும். மேலும், பொதுமக்களிடையே முக்கியத்துவம் பெற்றிருப்பது, எப்போதும் உடல் நலத்துடன் இருப்பது ஆகியவை

ஏற்படும்.

குரு உச்ச கிரக தொடர்புடன் இருக்கும்போது (இணைவு, பார்வை) அந்த தசா காலத்தில் விசேஷ சுகங்கள், பொதுமக்களுக்கு சேவை செய்தல், தர்மாதிகாரி ஆகுதல், தர்மம் செய்தல்,

அரசரை, மந்திரிகளை பேட்டி காணல் ஆகிய பலன்கள் ஏற்படும்.

குரு நீச கிரகங்களுடன்கூடி தசை நடந்தால் மனதில் துக்கம், பிறரிடம் உதவிகேட்கும் நிலை, அடிமைத் தொழில், பொய் சொல்லி பிழைத்தல், தன் மனைவி, குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் நிலைக்கும் தள்ளப்படுவார். புகழ் அழியும். புத்திர சோகம், உறவுகள் பகை, மனக்கவலைகள் அதிகரித்தல், விவசாயத்தில் நஷ்டம் ஆகியவை ஏற்படும். சிலர் சிறை செல்ல நேரலாம். கீழோர் நட்பும், தரமற்ற உணவு கிடைக்கும்.

குரு நீச நிலையில் இருந்தால், இருந்த இடம் நாசமாகும். ராஜ கோபத்திற்கு ஆளாவார். நெருங்கிய உறவுகளில் மரணம் நிகழும். வாழ்க்கையில் அதிகம் கஷ்டங்களுக்கு ஆளாவார். மனைவிக்கு துன்பம், தன விரயம் ஆகியவையும் ஏற்படும். சிலர் மதம் மாறுவது அல்லது வேறு மத பெண்ணை- ஆணை மணப்பர். தேவையற்ற வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். சிலர் தாளாத கஷ்டத்தால் தற்கொலை செய்துகொள்ள முற்படுவர்.

குரு ராசியில் உச்சத்தில் இருந்து,அம்சத்தில் நீசமானால் குருவால் ஏற்படும் எல்லா சுக யோகங்களும் பலமற்று போகும். கஷ்டம் அதிகரிக்கும். இதற்கு மாறுபட்ட நிலையில் இருந்தால் தசை ஆரம்பத்தில் பாக்கியம் குறைவு பட்டுஇருந்தாலும், எப்போதும் பாக்கிய விருத்தி அதிகரிக்கும் குரு அதிநட்பு ராசியில் இருந்து தசை நடத்த- ராஜ அதிகாரம் செய்வார்.

அரசர்களால் போற்றப்படுவார். பூமி வாங்குவார். தன தானியங்கள் அதிகம் கிடைக்கும். குடும்பம் சுபிட்சம் அடையும். புகழும், லாபம் கூடும். (குரு- அதிநட்பு- செவ்வாய், நட்பு- சூரியன், சந்திரன். அதிக பகை- சுக்கிரன், பகை - புதன், சனி- சமமானவன் ஆவார்).

குரு நட்பு வீட்டில் இருந்து தசை நடத்த ராஜ அதிகாரம், உயர்ந்த வஸ்துகள் லாபம், புராணங்கள், கதாகாலúக்ஷபம் ஆகியவற்றை விரும்பி கேட்பார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார். தான்ய அபிவிருத்தி, பசு, கன்று காலி, வாகனங்கள் ஆகியவை கிடைக்கும்.

ஆட்சி வீட்டில் இருந்தால் தேர்வு களில் வெற்றி, படிப்பில் முன்னேற்றம், ஆபரணங்கள் வாங்குவது, மண், மனை, வீடு, பூமி குறைந்த விலைக்கு வாங்குதல். பரிசாக, தானமாகவோ கிடைக்கும். ராஜ அதிகாரம் கிடைக்கும். தானிய உற்பத்தி அதிகரிக்கும். சம கிரக ராசியில் இருந்து தசை நடத்தினால் ஓரளவு மேன்மையும், வங்கி உதவிகளும், சொந்த பந்தங்களால் அனுகூலம் உண்டாகும். தீர்த்த யாத்திரை மேற்கொள்வர்.

பகை வீட்டில் இருந்து தசை நடத்தினால்வீண் பணம் செலவு, அசிங்க, அவமானங் களும் ஏற்படும். சொத்துகள் நாசமாகும். மனோ விகாரம், உடல் உபாதைகள், பூமி விரயம், பதவி பறி போதல் ஆகியவையும் உண்டாகும்..

அதிக பகை வீட்டில் இருந்து தசை நடத்த அதிக பயமும், மனைவி, மக்கள் மற்றும் உறவுகள் நாசமும், உடல் உபாதைகளும் ஏற்படும்.

செல்: 97891 01742.