Advertisment

மீன லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு!

/idhalgal/balajothidam/guru-12-sins-meena-lagna

க்ன கேந்திரத்தில், சுயராசியான மீன ராசியில் குரு இருந்தால் ஜாதகர் அழகாக இருப்பார். அவரிடம் ஈர்ப்புசக்தி இருக்கும். பெயர், புகழ் கிட்டும்.தந்தையால் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஜாதகர் பெரிய அளவிலான வர்த்தகத்தில் ஈடுபடுவார். பணக்காரராக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் தர்மத்தைக் கடைப்பிடிப்பார்.நாளுக்கு நாள் உயர்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குரு இருந்தால் ஜாதகர் பணத்தைச் சேமிப்பார். நன்கு குடும்பத்தைக் காப்பாற்றுவார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல்நலத்தில் சிறிய குறையிருக்கும். ஜாதகர் தன் பணத்தால் பகைவர்களை வெல்வார். சண்டை, சச்சரவில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் தன் வேலைகளை தைரியமாக முடிப்பார். பூர்வீக சொத்து கிடைக்கும்.தந்தையால் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஜாதகர் பெயர், புகழ், பண வசதியுடன் வாழ்வார்.

dd

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு இருந்தால் உடன்பிறந் தோருடன

க்ன கேந்திரத்தில், சுயராசியான மீன ராசியில் குரு இருந்தால் ஜாதகர் அழகாக இருப்பார். அவரிடம் ஈர்ப்புசக்தி இருக்கும். பெயர், புகழ் கிட்டும்.தந்தையால் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஜாதகர் பெரிய அளவிலான வர்த்தகத்தில் ஈடுபடுவார். பணக்காரராக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் தர்மத்தைக் கடைப்பிடிப்பார்.நாளுக்கு நாள் உயர்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குரு இருந்தால் ஜாதகர் பணத்தைச் சேமிப்பார். நன்கு குடும்பத்தைக் காப்பாற்றுவார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல்நலத்தில் சிறிய குறையிருக்கும். ஜாதகர் தன் பணத்தால் பகைவர்களை வெல்வார். சண்டை, சச்சரவில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் தன் வேலைகளை தைரியமாக முடிப்பார். பூர்வீக சொத்து கிடைக்கும்.தந்தையால் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஜாதகர் பெயர், புகழ், பண வசதியுடன் வாழ்வார்.

dd

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு இருந்தால் உடன்பிறந் தோருடன் கருத்து வேறுபாடு இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அதிகமாக பயணம் செய்வார். தந்தையுடன் சிறிய கருத்து வேறுபாடு இருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

Advertisment

4-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குரு இருந்தால் பூமி, வீடு வாங்கலாம். ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப் பார். அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். பெயர், புகழ் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். அதன்காரணமாக மன கஷ்டம் இருக்கும். வெளித் தொடர்பில் பிரச்சினை இருக்கும். அதில் அதிக ஈடுபாடு ஜாதகருக்கு இருக்காது.

5-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் குரு உச்சமடை கிறது. அதனால், ஜாதகருக்கு வாரிசுகள் இருப்பார்கள். ஜாதகர் பெரிய அறிவாளியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் சிறந்த பேச்சாளராக இருப்பார். தந்தையால் மகிழ்ச்சி கிடைக்கும். ஜாதகர் அழகாக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் குரு இருந்தால் ஜாதகர் பகைவர்களை வெல்வார். உடல்நலத்தில் சிறிய பிரச்சினை இருக்கும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். வர்த்தகத்தில் லாபம் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். வெளித் தொடர்பில் பிரச்சினை இருக்கும். அதில் பணம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெயர், புகழ் இருக்கும்.

7-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் குரு இருந்தால் அழகான மனைவி இருப்பாள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். புகழ் இருக்கும். ஜாதகர் சுயமரியாதையுடன் வாழ்வார். உடன்பிறந் தோரால் மன கவலை உண்டாகும். துணிச்சலுடன் தன் காரியங்களை ஜாதகர் முடிப்பார்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் சிறிய தடைகள் இருக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் இருக்கும். தந்தையுடன் பிரச்சினை இருக்கும். உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். வெளித் தொடர்புகளில் பணச் செலவு உண்டாகும். அதன்காரணமாக மன கவலை ஏற்படும். வீடு, மனை இருக்கும்.

9-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் குரு இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பணக்காரராக இருப்பார். வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். பெயர், புகழ், சந்தோஷம் இருக்கும். ஜாதகர் அழகாக இருப்பார். சுயமரியாதையுடன் வாழ்வார். படிப்பு நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகருக்கு சிறந்த பேச்சாற்றல் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஏதாவதொரு கலையில் அவர் நிபுணராக இருப்பார்.

10-ஆம் பாவத்தில் தன் சுயராசியான தனுசு ராசியில் குரு இருந்தால் தந்தையின் ஆதரவு ஜாதகருக்கு இருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். வீடு, மனை இருக்கும். எதிரிகள் ஜாதகரைப் பார்த்து பயப்படுவார்கள். பகைவர்களை அவர் வெல்வார். தைரியசாலியாக இருப்பார். அதிர்ஷ்டம் இருக்கும். பலரை ஆட்சி செய்யக்கூடிய மனிதராக அவர் இருப்பார்.

11-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் குரு நீசமடைகிறது. அதன் காரணமாக லாபத்தில் குறை இருக்கும். தந்தையால் சிறிய பிரச்சினை இருக்கும். வியாபாரத்தில் சிறிய தடங்கல்கள் இருக்கும். செய்யும் தொழிலில் பிரச்சினைகள் இருக்கும். உடன்பிறந்தோரால் சிறிய சந்தோஷம் இருக்கும். ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் சுயமுயற்சியால் பணம் சம்பாதிப்பார். அழகான மனைவி இருப்பாள்.மனைவி வந்தபிறகு, வியாபாரத்தில் லாபம், சந்தோஷம் கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் குரு இருந்தால், அதிக செலவுகள் உண்டாகும்.

அதன்காரணமாக பல பிரச்சினைகள் ஏற்படும். வெளித் தொடர்புகளில் மன கஷ்டம் உண்டாகும். உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும்.தாயால் சந்தோஷம் கிடைக்கும். தந்தையுடன் உள்ள உறவில் குறை இருக்கும். வீடு, மனை கிடைக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து, தன் எதிரிகளை வெல்வார்.

கருமியாக இருப்பார்.

அன்றாடச் செலவு களை மிகுந்த கவனத் துடன் செய்வார்.

செல்: 98401 11534

bala230623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe