துலாம் லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு!

/idhalgal/balajothidam/guru-12-sins-libra

க்னத்தில்... சுக்கிரனின் துலாம் ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். கடுமையாக உழைப்பார். பெயர், புகழ் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் துணிச்சலாக செயல்பட்டு தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார்.

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகர் பண வசதியுடன் இருப்பார். தைரிய குணம் கொண்டவர். உடன்பிறந்தோருடன் கொண்டிருக்கும் உறவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும்.

3-ஆம் பாவத்தில் சுய ராசியான தனுசு ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகர் துணிச்சலுடன் செயல்படுவார். உடன்பிறப்பு களுடனான உறவில் பிரச்சினை இருக

க்னத்தில்... சுக்கிரனின் துலாம் ராசியில் குரு பகவான் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாகவும் பலசாலியாகவும் இருப்பார். கடுமையாக உழைப்பார். பெயர், புகழ் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். ஜாதகர் துணிச்சலாக செயல்பட்டு தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார்.

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகர் பண வசதியுடன் இருப்பார். தைரிய குணம் கொண்டவர். உடன்பிறந்தோருடன் கொண்டிருக்கும் உறவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும்.

3-ஆம் பாவத்தில் சுய ராசியான தனுசு ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகர் துணிச்சலுடன் செயல்படுவார். உடன்பிறப்பு களுடனான உறவில் பிரச்சினை இருக்கும்.

ஜாதகரைப் பார்த்து பகைவர்கள் பயப்படுவார் கள். வாழ்க்கையின் முற்பகுதியில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் கடுமை யாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார்.

4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் குருபகவான் நீசமடைகிறார்.

அதனால் பூமி, வீடு வாங்குவதில் பிரச்சினை இருக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜாதகருக்கு அன்னையுடன் சுமாரான உறவே இருக்கும். உடன்பிறப்புகளுடன் உள்ள உறவில் குறையிருக்கும். எதிரிகளால் அதிக பிரச்சினைகள் உண்டாகும்.

guru

5-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு படிப்பில் இடையூறுகள் ஏற்படும். அதைத் தாண்டி அவர்கள் வெற்றிபெறுவார்கள். ஜாதகர் பகைவர்களைத் துணிச்சலாக சந்திப்பார். அவருக்கு உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடிருக்கும்.

6-ஆம் பாவத்தில் தன் மீன ராசியில் குருபகவான் இருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் ஜாதகர் தைரியமாக சந்திப்பார். உடன்பிறந்தோருடன் உள்ள உறவில் குறையிருக்கும். சிலர் உழைக்காமல் சோம்பேறி யாக இருப்பார்கள். சிலருக்கு காலில் நோய் அல்லது காயம் இருக்கும்.

7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் குருபகவான் இருந்தால் வர்த்தகத்தில் நல்ல லாபம் இருக்கும். மனைவியின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஆனால், குருபகவான் 6-ஆம் பாவத்தின் அதிபதியாக இருப்பதால், ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடிருக்கும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

8-ஆம் பாவத்தில் தன் எதிரியான சுக்கிரனின் ரிஷப ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். உடன்பிறந்தோருடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். பகைவர்களால் அதிக பிரச்சினைகள் உண்டாகும். சிலருக்கு அஜீரணப் பிரச்சினை இருக்கும்.

9-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில் புதனின் மிதுன ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகர் தர்ம செயல்களில் ஈடுபடுவார். பெயர், புகழுடன் இருப்பார். பகைவர்களால் புகழுக்குப் பிரச்சினைகள் ஏற்படும். ஜாதகருக்குப் பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடிருக்கும்.

ஜாதகர் கடுமையாக உழைப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். அறிவாளியாக இருப்பார். கம்பீரமாக நடப்பார்.

10-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் புதன் உச்சமடைகிறார். ஜாதகருக்கு தந்தையால், தாத்தாவால் நன்மை இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பெயர், புகழ் இருக்கும். உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். சிலர் பிறருக்கு அறிவுரை கூறக் கூடியவகையில் இருப்பார்கள்.

11-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் குருபகவான் இருந்தால் ஜாதகர் செல்வச் செழிப்புடன் வாழ்வார். கடுமையாக உழைப்பார். பகைவர்களை வெல்வார். உடன்பிறப்புகளுடனான உறவில் பிரச்சினை இருக்கும். சில நேரங்களில் வியாபாரத்தில் தடை உண்டாகி, வெற்றி கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குருபகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் வெளியே சென்று பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் கிடைக்கும். உடன்பிறந்தோருடனான உறவில் குறையிருக்கும். சிலரின் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை கொள் வார்கள்.

செல்: 98401 11534

bala120822
இதையும் படியுங்கள்
Subscribe