குரு பகவான் மேஷ லக்னத்தில் இருந்தால், அந்த லக்னத்திற்கு இவர் நண்பர். பெயர், புகழை குரு கொடுப்பார். பண வரவு உண்டாக்குவார். குரு தன் 5-ஆவது பார்வையால் 5-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஜாதகரின் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். 7-ஆவது பார்வையால் 7-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், வர்த்தகத்தில் சிறுசிறு தடைகள் இருக்கும். குரு 9-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், தர்மச் செயல்களைச் செய்வதன் காரணமாக ஜாதகருக்கு புகழ் கிடைக்கும்.

2-ஆம் பாவத்தில் குரு இருந்தால், பகைவரான சுக்கிரனின் ராசியில் இருப்ப தால், ஜாதகர் வெளிமாநிலம் அல்லது வெளிநாடு சென்று சம்பாதிப்பார். குரு தன் 5-ஆம் பார்வையால் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், ஜாதகர் எதிலும் மிக கவனமாக இருப்பார். பகைவர்கள் குறைவார்கள்.

gg

குரு 7-ஆம் பார்வையால் 8-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். 9-ஆம் பார்வையால் 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் தடைகள் இருக்கும்.

Advertisment

3-ஆம் பாவத்தில் குரு இருந்தால், ஜாதகருக்கு அவருடைய உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். தைரியசாலியாக இருப்பார். குரு தன் 5-ஆம் பார்வையால் 7-ஆம் பாவத்தைப் பார்ப்பார். அதனால், தொழிலில் பிரச்சினை இருக்கும். 7-ஆம் பார்வையால் 9-ஆம் பாவத்தைப் பார்ப்ப தால், ஜாதகர் தர்மச் செயல் களில் ஈடுபடுவார். 9-ஆம் பார்வையால் 11-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், வருமானத்தில் சில நேரங் களில் தடைகள் இருக்கும்.

4-ஆம் பாவத்தில் குரு இருந்தால், அன்னையால் சந்தோஷம் கிடைக்கும். இந்த இடத்தில் குரு உச்ச மாகிறார். அதனால், பூமி, வாகனம் இருக்கும். வீட்டில் சந்தோஷம் நிலவும். குரு தன் 5-ஆம் பார்வையால் 8-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். 7-ஆம் பார்வையால் 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால், சில நேரங்களில் தந்தையால் சந்தோஷம் இருக்காது. 9-ஆம் பார்வையால் 12-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித்தொடர்பில் புகழ் கிடைக்கும்.

5-ஆம் பாவத்தில் குரு இருந்தால், ஜாதகர் அறிவாளியாக- அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குரு 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால், வருமானம் இருக்கும். குரு லக்னத்தைப் பார்ப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பிறரை ஈர்க்கக் கூடியவராக இருப்பார்.

Advertisment

6-ஆம் பாவத்தில் குரு இருந்தால் செயல்களில் தடைகள் உண்டாகும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். 9-ஆம் பார்வையால் 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். ஜாதகருக்கு பலரும் உதவுவார்கள்.

7-ஆம் பாவத்தில் குரு இருந்தால், திருமண விஷயத்தில் தடை, வர்த்தகத்தில் பிரச்சினை இருக்கும். குரு 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வருமானத்தில் தடைகள் இருக்கும். லக்னத் தைப் பார்ப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். குரு 9-ஆம் பார்வையால், 3-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும்.

8-ஆம் பாவத்தில் குரு இருந்தால், வளர்ச்சியில் தடைகள் இருக்கும்.

ஆனால் சிலருக்கு திடீரென்று பணம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தாயின் உடல்நலம் நன்றாக இருக்கும்.

9-ஆம் பாவத்தில் சுயவீட்டில் குரு இருப்பதால், ஜாதகர் தர்மசிந்தனையுடன் இருப்பார். பூர்வீக சொத்து இருக்கும். குரு லக்னத்தைப் பார்ப்ப தால் தன் தோற்றத்தால் பிறரை ஈர்ப் பார். குரு 3-ஆம் பாவத்தைப் பார்ப்ப தால், தைரியசாலியாக இருப்பார். 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இருக்கும்.

10-ஆம் பாவத்தில் குரு இருந்தால், இந்த இடத்தில் குரு நீசமாவதால் பல தடைகள் இருக்கும். தந்தைக்கு சில பிரச்சினைகள் உண்டாகும். ஆனால் குரு தன் 5-ஆம் பார்வையால் 2-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், சிறிய அளவில் லாபம் கிடைக்கும். குரு 4-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், தாயின் உடல்நலம் நன்றாக இருக்கும். 6-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் பகைவரை வெல்வார்.

11-ஆம் பாவத்தில் குரு இருந்தால், பணவரவு இருக்கும். ஆனால், சிறு சிறு தடைகள் ஏற்படும். 3-ஆம் பாவத் தைப் பார்ப்பதால் தைரியம் குறையும்.

7-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.

12-ஆம் பாவத்தில் குரு இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். 4-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் தாயின் உடல்நலம் நன்றாக இருக்கும். 6-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் எதிரிகள் பயப்படுவார்கள். 8-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும்; திடீரென பணம் வரும்.

செல்: 98401 11534