விரும்பியவற்றை விரைந்து தரும் குப்த கங்கை! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/gupta-ganga-speed-desires-ke-kumara-sivacharya

தாங்கள் செய்த பாவங்களைத் தொலைக்க மனிதர்கள் திருத்தலங்களையும் புனித நதி தீரங் களையும் தேடிச்செல்கிறார்கள். அவற்றுள் தமிழ் மண்ணின் நடுநாயகமாய் விளங்கும் திருவாரூர் மாவட்டத்தின் மேற்கு பாகமான ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய அம்சங் களால் புகழ்பெற்றது இத்தலம். நால்வர் பெருமக் களும்; அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோராலும் பாடல் பெற்ற முக்தித் தலமாக விளங்குகிறது.

காசிக்கு வீசம் கூட...

பாவங்களைக் கழித்து விட்டுப் புண்ணியம் சேர்ந்திட காசிக்குச் செல்லும் பக்தர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். காசி தலத்தைவிட ஒருபடி மேலாக அருளும் தன்மை வாய்ந்ததுதான் ஸ்ரீவாஞ்சியம் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தல வரிசையில் பெருமையோடு பாடப்பட்டுள்ளது திருவாஞ்சியம். அகத்திய முனிவர்தன்வாக்கால்- "பிரளய காலத்திலும் அழிவில்லாதது. பஞ்சமா பாதங்களையும் தீர்க்கவல்ல தீர்த்த முடையது. மகா காசியிலும் சிறந்த க்ஷேத்திரம். பூலோகக் கயிலாயம். ஒரு நிமிடம் இதனை நினைப்பவனும் சிவபதம் அடைகிறான்' என்று இதன் பெருமையை விளக்குகிறார்.

பிரம்மாண்ட புராணம் இத்தல மூர்த்தி யான ஸ்ரீவாஞ்சிநாதரின் சக்தியைப் பற்றி மிகப்பிரம்மாண்டமாய்க் கூறுவதை கவனித்து நாமும் அதைக் கூறுவோம்.

"க்ரீங்கர பீஜமித்யுக்தம்

ஸ்வாஹவ சக்திரத: பரம்

ஓம் நமோபகவதே மந்திரம் ச

சிவாயச தத பரம் வாஞ்ச்ய நாதாய ச

ததோமேதாம் ப்ரக்ஞாம ததைதவய

ப்ரியம் மேத்ய ப்ரயச் சேதி;'

இதன் தமிழ் வடிவம்-

"பகவானும் வாஞ்சியத் தலைவனாகவு முள்ள சிவபிரானுக்கு வந்தனம்! எனக்கு மேன்மையில் தோன்றும் அறிவு, விரும்பும் பொருள் ஆகியவற்றை இப்பொழுது கொடுக்க வேண்டும்.'

இதனை பத்தாயிரம் முறை ஜெபித்தால் லட்சும

தாங்கள் செய்த பாவங்களைத் தொலைக்க மனிதர்கள் திருத்தலங்களையும் புனித நதி தீரங் களையும் தேடிச்செல்கிறார்கள். அவற்றுள் தமிழ் மண்ணின் நடுநாயகமாய் விளங்கும் திருவாரூர் மாவட்டத்தின் மேற்கு பாகமான ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய அம்சங் களால் புகழ்பெற்றது இத்தலம். நால்வர் பெருமக் களும்; அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோராலும் பாடல் பெற்ற முக்தித் தலமாக விளங்குகிறது.

காசிக்கு வீசம் கூட...

பாவங்களைக் கழித்து விட்டுப் புண்ணியம் சேர்ந்திட காசிக்குச் செல்லும் பக்தர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். காசி தலத்தைவிட ஒருபடி மேலாக அருளும் தன்மை வாய்ந்ததுதான் ஸ்ரீவாஞ்சியம் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தல வரிசையில் பெருமையோடு பாடப்பட்டுள்ளது திருவாஞ்சியம். அகத்திய முனிவர்தன்வாக்கால்- "பிரளய காலத்திலும் அழிவில்லாதது. பஞ்சமா பாதங்களையும் தீர்க்கவல்ல தீர்த்த முடையது. மகா காசியிலும் சிறந்த க்ஷேத்திரம். பூலோகக் கயிலாயம். ஒரு நிமிடம் இதனை நினைப்பவனும் சிவபதம் அடைகிறான்' என்று இதன் பெருமையை விளக்குகிறார்.

பிரம்மாண்ட புராணம் இத்தல மூர்த்தி யான ஸ்ரீவாஞ்சிநாதரின் சக்தியைப் பற்றி மிகப்பிரம்மாண்டமாய்க் கூறுவதை கவனித்து நாமும் அதைக் கூறுவோம்.

"க்ரீங்கர பீஜமித்யுக்தம்

ஸ்வாஹவ சக்திரத: பரம்

ஓம் நமோபகவதே மந்திரம் ச

சிவாயச தத பரம் வாஞ்ச்ய நாதாய ச

ததோமேதாம் ப்ரக்ஞாம ததைதவய

ப்ரியம் மேத்ய ப்ரயச் சேதி;'

இதன் தமிழ் வடிவம்-

"பகவானும் வாஞ்சியத் தலைவனாகவு முள்ள சிவபிரானுக்கு வந்தனம்! எனக்கு மேன்மையில் தோன்றும் அறிவு, விரும்பும் பொருள் ஆகியவற்றை இப்பொழுது கொடுக்க வேண்டும்.'

இதனை பத்தாயிரம் முறை ஜெபித்தால் லட்சுமிதேவி ஜெபிப்பவரைப் பார்ப்பாள். கவிகளின் தலைவனாவார். பத்து லட்சம் முறை ஜெபித்தால் நினைத்த செயல் கைகூடும். கலி யுகத்தில் இதற்குச் சமமான மந்திரமில்லை என்பது விஷ்ணுவின் வாக்கு. ஸ்ரீவாஞ்சிய தல புராணத்தின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இம்மந்திரங்களை கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில், ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் நீராடி சொல்லத் தொடங் குவது பிறவிப்பயன் என்றே சொல்லலாம்.

குப்த கங்கையின் மகிமை

வசிஷ்ட முனிவர் தன் சக முனிவர்களுக்குக் கூறுகையில், கார்த்திகை மாத முதல் ஞாயிறன்று குப்த கங்கையில் நீராடுவோர்க்கு பிரம்மஹத்தி முதலிலிய கடும் தோஷங்கள் விலகும். இரண்டாம் ஞாயிறு நீராடினால் சிவனின் அருட்பார் வைக்கு நேரடியாக ஆளாவர். மூன்றாம் ஞாயிறு நீராட ஈஸ்வரனது திருவருளால் சௌபாக்கிய நிலையடைவார்கள். நான்காம் ஞாயிறு நீராட- பிறன்மனை நாடல் பாவம் அழிந்து, ஸ்ரீவாஞ்சிநாதரின் அருளால் சாயுஜ்யப் பதவி அடைவர். ஐந்தாம் ஞாயிறு நீராடினால் சம்சர்க்க பாவங்களிலிருந்து விடுபட்டு, இந்த உலகில் நான்குவித புருஷார்த் தங்களை அடையலாம். இத்தலத்தில் ஒரு அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் பித்ருக்கள் பத்து வருடகாலம் பிரீதி அடைகின்றனர்.

ஒருசமயம் கங்கை நதியானவள் ஈசனை வணங்கி, "கலியுகத்தில் மக்கள் பாவங்களை என்னிடத்தில் நீராடி விட்டுச்செல்கின்றனர்.

அந்தச் சுமையை அகற்ற நல்லதொரு தீர்த்தத்தைக் காட்டியருளவேண்டும்' என்று கேட்டாள்.

அதற்கு ஈசன், "திருவாஞ்சியம் என்னும் தலமிருக்கிறது. கிருதயுகத்தில் பொன்மய மாகவும், திரேதாயுகத்தில் வெள்ளிமயமாகவும், துவாபர யுகத்தில் தாமிரமயமாகவும், கலியுகத்தில் கலிதோஷத்தால் மண்மயமாகவும் விளங்குவது. இக்கோவிலுக்குள் பல யோகங் களையருளும் அதிசயமான தீர்த்தங்கள் உண்டு. அவற்றுள் காலத்தால் உருவாக்கப்பட்ட ஆறாயிரம் கோடி தீர்த்தங்கள் ஒரேநேரத்தில் சேருகின்ற குப்த கங்கா என்ற தீர்த்தம் உள்ளது. அங்கே புனித நீராடி உன் பாவச்சுமையைக் கழித்துக்கொள்' என்றார். இதைக்கேட்ட சப்த கன்னியர்களும் இங்கேவந்து நிரந்தரமாகத் தங்கினர்.

ஸ்ரீவாஞ்சியத் திருத்தல கோவில் வரைபட அமைப்பின்படி, கிழக்கில் பிரம்ம தீர்த்தமும், அக்னி திக்கில் நாரத தீர்த்தமும், தெற்கில் விஸ்வாமித்திர தீர்த்தமும், நிருதி திக்கில் சர்வ தீர்த்தமும், பரத்வாஜ தீர்த்தமும், மேற்கில் மனவிருப்பங்களையருளும் சேஷ தீர்த்தமும் நாராயண தீர்த்தமும், வாயு திக்கில் ராம தீர்த்தமும், ஈசான்யத் திக்கில் இந்திர தீர்த்தமும், கோவிலுக்குள் ஆனந்தக் கிணறும் அமைந்துள்ளன.

ss

ஸ்காந்த புராணத்தின் இரண்டு வரிகளில் குப்த கங்கை தீர்த்தத்தின் மகிமையை அறிந்துகொள்ளலாம்.

கிருதயுகத்தில் மிகத்தூய புஷ்கரணி என்றும், திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்றும், துவாபரயுகத்தில் பராசர தீர்த்தம் என்றும், கலியுகத்தில் முனி தீர்த்தம் எனவும் போற்றப்படுவது.

திருஞானசம்பந்த சுவாமிகள் ஸ்ரீவாஞ்சியத் தலத்தின் சிறப்பை-

"மேவிலொன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்

நாவின் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர்

தேவில் எட்டர் திருவாஞ்சிய மேவிய செல்வனார்

பாவந்தீர்ப்பர் வழிபோக்குவர் தம் அடியார்கட்கே'

என்று பாடிப் பரவுகிறார்.

ஸ்ரீ வாஞ்சியத் தலச் சிறப்பு

தன்னைப் பிரிந்திருந்த திருமகளை மீண்டுமடைய விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற இடம் என்பதால் திருவாஞ்சியம் எனப் பெயர்பெற்றது. அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் தத்தாத்ரேயர் பிறப்பதற்கு அருளிய இடமும் இதுவே. எமதர்மராஜனை வாகனமாகக்கொண்டு இறைவன் எழுந்தருளும் இத்தலத்தில் அகலிகைமீது கொண்ட மோகத் தால் தான் பெற்ற சாபத்தைத் தீர்த்துக் கொண்டான் இந்திரன். முன்பொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது வெள்ளத்தில் மூழ்காமலிருந்த இத்தலத்தைக் கண்ட சிவபெருமான் இங்கேயே வசித்திட விரும்பி, அம்பிகை உமையவளோடு இணைந்து ஜோதிர்லிங்கமாக அமர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. உலகமெல்லாம் உணர்ந்து ஓதற் கரிய எம்பெருமான் இங்கே சுயம்புலிங்கமாக எழுந்தருள்கிறார். சந்தன மரங்கள் அடர்த்தி யாக வளர்ந்திருந்தமையால் இத்தலம் கந்தாரண்யம் என்றழைக்கப்பட்டது. உலகமக் களுக்கு அருள்வதற்காக ஏழு பாதாள உலகத் திலிருந்து தானே தோன்றியது என திருவாஞ்சிய லிங்க மகிமை வருணனைத்துதி, சாம்போப புராணத்தின் 14-ஆம் அத்தியா யத்தில் உரைக்கிறது.

நாரதர் இங்கேவந்து கலைவாணியைப் பிரதிஷ்டைசெய்து பூஜித்துத் தனது வேண்டு கோள் நிறைவேறக்கண்டு, தன் பெயரால் தீர்த்தத்தை உருவாக்கினார்.

பஞ்சமேஸ்வரன் என்ற அசுரன் சிவபெரு மானிடம் வரம்பெற்று தேவர்களைத் துன்புறுத் தினான். இவனது துன்பம் பொறுக்காது தேவர்கள் உண்டாக்கியதே தேவதீர்த்தம்.

வண்டாக வந்த பைரவர்

காசி க்ஷேத்திரத்தில் பக்தர்களின் பாவங் களுக்கேற்றபடி தண்டனை வழங்கும் அதிகாரம் பெற்றவர் காலபைரவர். ஒரு காலத்தில் பரமேஸ் வரனின் மனதுக்குப் பிரியமான ஸ்ரீவாஞ்சியத் தலம் அடைந்து, அங்கே பொன் வண்டின் வடிவில் ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவமிருந்து சிவனைச் சரணடைந்தார். அங்கே காட்சிதந்த ஈசன், "இங்கு வாசம் செய்பவர் களுக்கும், வந்து வழிபடுபவர்களுக்கும் பைரவ உபாதையே கிடையாது; பாவதண்டனையும் இல்லை' என்று ஸ்ரீவாஞ்சீசராய் அருளினார்.

கடைசிக் காலத்தில் இந்த தலத்தில் வந்து பிராயச் சித்த பூஜை செய்பவர்களுக்கு மோட்சநிலை நேரில் கிட்டும் என்பது ஆலய ஏடு கூறும் செய்தி.

எமதர்மனுக்கு தனிச்சந்நிதி

நான்கு யுகங்களிலும், பாரத தேசத்தில் எங்குமே இல்லாத காலதேவனாகிய எமதர்ம ராஜனுக்கு ஸ்ரீவாஞ்சியத்தில் தனிச்சந்நிதி உள்ளது. ஆலயத்தில் நுழைந்ததும் க்ஷேத்திர பாலகராக விளங்கும் எமதர்மனை வணங் கியபிறகே உள்ளே செல்லவேண்டும். ஒருசமயம் எமன் தன்னிடம் சேரும் உயிர்களை வருத்தி யெடுத்த பாவத்தால் கண்கலங்கி நின்றான். மகரிஷிகளின் அறிவுரைப்படி எமகுண்டம் என்னும் தீர்த்தம் அமைத்து நீராடி ஸ்ரீவாஞ்சீ சரை வணங்கினான். இறைவன் அவன்முன் தோன்றி, "வாஞ்சியம் அடைந்து நீராடுவோருக்கு உன்னால் எந்த தண்டனையோ, வாதனையோ கூடாது' என்றார். "அப்படியே' என்று எமன் உறுதிசொல்ல, அவனை ஆட்கொள்ளும் பொருட்டு வாகனமாக ஏற்று அருளிச் செய்தார். குப்த கங்கை புஷ்கரணியில் கார்த் திகை மாத ஞாயிறன்றோ, திங்களன்றோ நீராடி தர்மராஜா சந்நிதியில் எம தீபமேற்றி-

"ஓம் தபஸா கர்ம மாராத்ய புஷ்கரே

பாஸ்கர: புரா தர்ம சூர்ய ப்ரபம்

தர்மராஜம் நமாம்யஹம்

பாபினாம் க்லேசதோ யஸ்தம்

புண்ய மித்ரம் நமாம்யஹம்'

என்று துதிபாடி பிரதட்சணம் வந்து வாஞ்சீசரை தரிசிக்கச் செல்லவேண்டும். சாவித்ரி தேவி அருளிய எமாஷ்டகம் துதி ஐந்து அனுவாகப் பகுதியாகவும் உள்ளது.

இத்தலத்தில் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி, ஒரே மூர்த்தியாக ராகு- கேது, ஸ்ரீமங்களாம்பிகை என்னும் மருவார்குழலி− அம்மை ஆகியோர் தரிசிக்கத்தக்க மூர்த்தங்களாவர். ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருத்தலத்தை அடைய கும்ப கோணம்- நாகப்பட்டினம் வழியில், அச்சுதமங் கலம் இறங்கி தெற்கே ஒன்றரை கிலோமீட்டர் செல்லலாம். திருவாரூரி−ருந்து 16 கிலோ மீட்டர். மயிலாடுதுறை- திருவாரூர் ரயில் வழியில் சன்னாநல்லூரி−ருந்து மேற்கே எட்டு கிலோமீட்டரில் உள்ளது. கார்த்திகை ஞாயிறன்று குப்த கங்கையில் புனித நீராடி வாஞ்சிநாதரை வழிபடுவோர்க்கு வாழ்வில் பாவங்கள் பறந்தோடி நிறைவளம் கூடும்!

செல்: 91765 39026

bala061219
இதையும் படியுங்கள்
Subscribe