ரு ஜாதகத்தில் கிரகப் பலன் களைப் பார்க்கும்போது ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம், தாராபலம், திதி சூன்யம், அஸ் தங்கம், மறைவு ஸ்தானம் என பல ஆய்வுகள் உள்ளன. இதில் வக்ரம் என்பதும் கிரகங் களுக்கு ஒரு பலத்தைக் குறிப்பிடுவது. இது ஷட்பலத்தில் 5-ஆவது பலமான சேஷ்ட்டா பலம் (Retrocrate Motion). வக்ரம் ஒளி கிரகங்களாகிய சூரிய- சந்திரர்களுக்கு இல்லை. அதேபோல அப்பிரதட்சிணமாக (Anti clockwice) செல்லும் ராகு- கேதுக் களுக்கும் வக்ர நிலை இல்லை. மற்ற ஐந்து கிரகங்களுக்கு வக்ர பலம் உண்டு.

குரு, சனீஸ்வரர், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரக சஞ்சாரங்களில், இரண்டரை வருடம் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனீஸ்வரர் சுமார் ஐந்து மாதங்கள் இரண்டுமுறை வக்ரமாகும். குருபகவான் ஒரு வருட சஞ்சாரத்தில் சுமார் நான்கு மாதங்கள் வக்ரமாக இருப்பார். செவ்வாய் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் இரண்டு மாதங்கள் வக்ரமாகும். சுக்கிரன் 18 மாதங்களுக்கு ஒருமுறை வக்ரமாவார். புதன் வருடத்தில் மூன்று அல்லது நான்குமுறை வக்ரமாகும். இந்த வக்ர கிரகங்களின் பலத்தை பிருகத் ஜாதகம், ஜாதக கணிதா, மிருத ஜாதகம் இன்னும் பல மூல நூல்கள் வகைப்படுத்துகின்றன.

ss

வக்ர கிரகங்கள் உச்ச ராசியிலிருந்தால் மத்திமப் பலன். ஆட்சி வீட்டி-ருந்தால் பலமில்லை. நீச ராசியிலிருந்தால் அதிக பலமே. சனி, செவ்வாய் வக்ரம் பெற்று நீசம், பகை வீடுகளில் இருந்தால் அதிக பலம்; இவர்களின் நற்பலன்களைத் தருவார்கள். பாவ கிரகங்கள் வக்ரம் பெற்றால் சுபப் பலன்களை அதிகம் தந்து, கடைசியில் பயனற்ற நிலைகளையும், புகழோடு கண்டம், ஆயுள் பங்கங்களையும் ஏற்படுத்தும். சுப கிரங்கள் வக்ரம் பெற்றால் பல சோதனைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் தந்து பின் நல்ல வாய்ப்பைத் தருகின்றன.

Advertisment

சனியின் வக்ரநிலை உலகப் பற்றுகளிலிருந்து விடுவித்து, மக்கள் செல்வாக்கைப் பெறும் நிலையை அமைத்துத் தரும். சுபர்கள் பார்த்தால், தொடர்புகொண்டால் ஆயுள் பலம் இருக்கும். குருவின் வக்ரநிலை ஏதேனுமொரு துறையில் பிரபல்யமாவார்கள். இவர்களுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பிருக்கும். லக்னத்திற்கோ, ராசிக்கோ திரிகோணத்திலிருந்து வக்ரமானால் மிகப்பெரிய சிறப்பு களை ஏற்படுத்துவார். பெரும் பண வசதி உள்ள வராகவும், தனது வாரிசுகளால் புகழும், ஆன்மிக நாட்டமும், ஏதேனுமொரு துறையில் சாதனைகளும் சரித்திரங்களும் இருக்கும். நுண்கலைகள் கொண்டவர்.

சனி வக்ரநிலையில் உபஜெய வீடுகளில் இருந்தால் அல்லது யோகாதிபதியாக 4, 7-ல் இருந்தால், கடினமாக உழைத்து, பல போராட்டங்களை சந்தித்து, வழக்குகள், விவகாரங்களை எதிர்கொண்டு, பின்னர் புராதன சொத்துகள், திடீர் அதிர்ஷ்டம் மூலம் உயர்வார். பெரிய தொழில் நிறுவனங் களை வைத்து நடத்தக்கூடியவர். ஆள்பலம் கொண்டவர். அரசியல், சமூகம், கலை, பொது வாழ்வில் பேசப்படுவார். சுக்கிரன் வக்ரநிலை பெற்றால் ஆரம்ப காலங்களில் வாழ்க்கையில் சில சிரமங்கள் இருக்கும். ஆனால் பெண் அல்லது தாய்வழி அல்லது தனது இரவு- பகல் பாராத உழைப்பால் கலை, அரசியல், தொழில்மூலம் வாழ்வில் முன்னேறுவார். இல்லற வாழ்வில் அவ்வளவு சிறப்புகள் இல்லை.

செவ்வாயின் வக்ரநிலை பலவிதமான போராட்டங்களைத் தரும். ஆரம்பகால வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். சிலசமயம் திடீர் லாபம் உண்டு; இழப்பும் உண்டு. எதிர்பாராத கண்டம், பிறரால் உயிருக்கு ஆபத்து, கால்நடை, வாகனங் களாலும் பாதகங்கள் இருக்கும். புதனின் வக்ரநிலையால் தனது தொழி-ல் பல நூதனங் களை அறிவார்கள். வக்ரம்பெற்ற இந்த கிரகத்திற்கு ஏதேனும் கிரகத் தொடர்புகள் இருந்தால் யோகமே. கலை, உணவு, ரெவின்யூ, கல்வி நிறுவனம், விளையாட்டு, ஜோதிடம், மக்களோடு தொடர்புடைய தொழிலில் பயன்பெறுவார்கள். சிலர் காதல் வயப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பிறரின் நிலைமையறிந்து அதற்கு ஏற்றாற்போல் சமயோசிதமாக செயல்படுவர்.

Advertisment

இயற்கை சுபர்களாகிய சுக்கிரன், புதன் வக்ரநிலை 1, 2, 4, 5, 9, 11 ஆகிய பாவங்களில் இருக்கும்பட்சத்தில் இவர்களுக்கு யோகம். வக்ர கிரகங்கள் அவர்களுக்குரிய ஸ்தானங் களில்- பாவர்கள் என்றால் உபஜெய வீடுகளில், சுபர்கள் என்றால் திரிகோண, தன லாப ஸ்தானங்களில் இருப்பின், ஆண்- பெண் யாராக இருந்தாலும் அவர்கள் சாதனையாளர்களே. படிப்பு, தகுதி, வருவாய், வாழ்க்கை, வீடு, வாகனங்கள், குடும்பம் என எல்லாமே வெகு சிறப்பாக அமையும். இவர்கள் இப்புவியில் பிறர் போற்றும் வகையில் வாழக்கூடும். இயற்கை பாவர்கள் (சனி, செவ்வாய்) ஒருவருக்கொருவர் பார்த் துக்கொண்டால், இதில் யாரேனும் ஒருவர் வக்ரமாக இருந்தால் சாதகமே. வாழ்வில் போராடி வந்துவிடுவர். இருவரும் வக்ரமாக இருந்து பார்த்துக்கொண்டால் வாழ்வில் பலவிதமான சோதனை, கோர்ட், கேஸ், எதிரி களால் பலவீனம், கண்டம் உண்டாகும். வாழ்க்கையே போராட்டமாக இருந்திடலாம். இந்த இருவருக்குள் இயற்கை சுபர் இருப்பின் அல்லது பார்ப்பின் எப்படியாவரது வாழ்வில் பிறர் உதவி, உபாயம், பக்தி, தர்மம்மூலம் முன்னேறலாம்.

ஒரு மனிதர் சாதனை செய்வதற்கு ஏதேனுமொரு வகையில் வக்ர கிரகங்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு இந்த உலகில் பிறந்ததன் பலனை அனுபவித்து, தன்னை யாரென்று பதிவு செய்யமுடியும். பிறப்பு- இறப்புக்குப் பிறகும் பேசப்படுவார்கள். ஐந்து கிரகங்களில் இரண்டு கிரகங்கள் வக்ரமாகாலம் அல்லது மூன்று கிரகங்கள் வக்ரமானாலும் அனுகூலமே. நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் வக்ரமானல் ஜாதகம் பலவீனமாகிவிடும். அது வாழ்க்கையைப் போராட் டமாக்கி விடலாம். இந்த வக்ர கிரகங்களில் ஒரு இயற்கை சுபர், ஒரு இயற்கை அசுபர் இணைந் திருந்தால் அவர்கள் சாதனையாளர்கள். அவர்களுக்கு இந்த இரு கிரகங்களில் ஏதேனுமொரு தசை எதிர்பாராத நல்ல திருப்பத்தை ஏற்படுத்தித் தரும்.

வக்ர கிரங்களால் சாதித்த சில முக்கிய புள்ளிகள்

நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு மூன்று கிரகங்கள் வக்ரம். முன்னாள் முதல்வர் ஜெயல-தாவுக்கும் மூன்று கிரகங்கள் வக்ரம். தற்போதைய இந்திய பிரதமரான நரேந்திர மோடிக்கு இயற்கை சுபர்கள் குரு, சுக்கிரன் வக்ரம். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சனீஸ்வரர் உச்சத்தில் வக்ரம்- சுபர் பார்வையில் உள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சனி வக்ரம்- சுபர் தொடர்புடன் உள்ளது. அதனால்தான் மக்கள் மத்தியில் இவர்கள் செல்வாக்கு பெற்றார்கள்.

வக்ர கிரகங்களுக்கான பாரிகாரத் தலங்கள்

வக்ர கிரகங்களின் பலவீனத்திற்கு வக்ர காளியம்மன் ஆலயம் (விழுப்புரம்) திண்டி வனம் அருகிலுள்ளது. திருவாரூர் தியாக ராஜர் ஆலயம்- விதிப்பயனை மாற்றும் சிறப்புத்தலம் திருக்கோடிக் காவல் (மாயவரம் அருகில்)- இங்குள்ள கோடீஸ்வரரையும் திரிபுரசுந்தரியையும் வணங்கவேண்டும். நவகிரகங்களின் பலவீனத்தைப் போக்கக் கூடிய திருக்குவளையில் நீராடி சிவசக்தியை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.

நவபாஷாணத்தாலான- கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய இராமர் பூஜித்த தேவிபட்டிணத்தில் (இராமநாதபுரம் அருகில்) வழிபடுவதும் சிறப்பு. ஒன்பது கிரகங்களும் -ங்க வடிவில் வழிபடுவதற்குரிய தலம் திருத்தேங்கூர். (திருவாரூர் அருகில்). நவகிரகங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்த இடைக்காடர் சித்தரின் பலம் கொண்ட இடைக்காட்டூர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் உள்ளது. நெமி- (காஞ்சிபுரம் அருகே) 18 சித்தர்களும் அன்னை பாலாதேவியை வழிபட்ட இடம். இங்குவந்து பூஜிப்பவர்களுக்கு கிரக பலீவனங் கள் நீங்கும். வேண்டுதல்களை நிறைவேற்றும் தலமாகும்.

274 சைவத் தலங்களிலும் தலைமை பீடமாக இருக்கும் சிதம்பரம் நடராஜர், கோவிந்தராஜப்பெருமாள், சொர்ணா கர்ஷண பைரவர், நான்முகி, காளி இவர்களையெல்லாம் ஒருசேர வழிபட வேண்டும். பின்னிரவு அர்த்தஜாம பூஜையில் நடராஜர் பள்ளியறை தரிசனம் கண்டு வணங்கவேண்டும். இனிப்பு, புஷ்பங்கள் படைக்கவும்.

108 வைணவத் தலங்களில் சிறப்புத் தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பக-ல் வழிபடுவது சிறப்பு. பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை, திருவானைக்கா, திருக்காளஹஸ்தி ஆகிய வழிபாடுகளும் உகந்ததே. இந்த ஆலயங்களுக்குச் செல்லும் போது சூரிய- சந்திரர்களில் யாரேனும் ஒருவர் பலம், தாராபலம் பார்த்துச் செல்லவேண்டும். ஹோரை, கௌரி பஞ்சாங்க நேரங்களையும் தரிசிக்கப் பயன்படுத்தலாம். இன்னும் பஞ்சபட்சி சாஸ்திரம் பார்த்து அரசு, ஊண், அதிகாரம் ஆகிய நாளையறிந்து அர்ச்சனை, ஆராதனை, புஷ்பம், தீபம், வஸ்திரம், தானம் கொண்டு பூஜித்தல் நல்லது. இந்த ஆலய வழிபாடுகளைச் செய்வதற்குமுன் குலதெய்வங்களையும் வணங்கி மேற்கொண்டால், பாதிப்படைந்த கிரகங்களால் பாதிப்புகள் வராமல், தப்பித்து, எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளலாம்.

வீழ்ச்சிகள் இருந்தாலும் சரியான உபாயமான பக்தி, பாராயணம், தர்மம் இதன்மூலம் வளர்ச்சிகளை இறையருளால் அடைந்திடமுடியும்.

செல்: 94431 37989