சென்ற இதழ் தொடர்ச்சி...

8-ஆம் பாவகம்

8-ஆம் பாவகம் எண்ணில்லா விஷயங்களை உரைத்தாலும், தம்பதிகளின் நீண்ட ஆயுளுக்கு முக்கியமான காரணத்தை விளக்கும். அதுவும் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம். எனவே இந்த 8-ஆமிடம், 8-ஆம் அதிபதியை நன்கு ஆராய்தல் அவசியம். தம்பதிகளுக்குரிய ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, அதனதன் பலத்துக்குத் தகுந்த பரிகாரம் செய்து கொள்வது அவசியம். மறுமாங் கல்யம் அணிவது, தாலி தானம், தாம்பூலம் அளிப்பது, அம்பாளை அளவில்லாமல் பிரார்த்திப்பது என இவையெல்லாம் திருமண வாழ்வு நீடித்திருக்க உதவும்.

9-ஆம் பாவகம்

Advertisment

9-ஆமிடம் ஜோதிடத்தில் நிறைய காரகங்களைக் கொண்டிருந்தாலும், நீடித்த திருமண பந்தத்திற்கு அதிர்ஷ்டம், நம்பிக்கை, விவேகம், மனத்தெளிவு, பணப்புழக்கம் என ஒரு நிலையான திருமணத்துக்குரிய அம்சங்களை அள்ளித் தருமிடம். 9-ஆம் அதிபதி, 9-ஆமிடம் சுபமாக அமைந்த தம்பதியர்களுக்கு நல்ல மனத்தெளிவும், அதனால் சரியான திட்டமிடலும், அதீத நம்பிக்கையும், அதன்சார் விவேகமும், இவற்றால் ஏற்படும் அதிர்ஷ்டப் பணப்புழக்கமும் உண்டாகும்.

இதுவே 9-ஆமிடம் வலுக்குறைந்த தம்பதிகளுக்கு மனக்குழப்பம் ஏற்படும். அதனால் ஒழுங்காக திட்டமிட இயலாது. இதில் ஏற்படும் மனக் கசப்பில் நம்பிக்கை குறையும்.

இதனால் அதிர்ஷ்டக் குறைவும் ஏற்படும். இவ்வாறு இருப்பின் அத்திரு மணம் எவ்வாறு நீடித்து நிலைக்கும்? எனவே ஜாதகத்தை நன்கு கவனித்து, யாரு டைய ஜாதகத்தில் 9-ஆமிடம் வலுக்குன்றி யுள்ளதோ, அவர்கள் முக்கியமான விஷயங் களில் தங்கள் இல்வாழ்க்கைத்துணையின் வழிகாட்டுதல்படி நடத்தல் வேண்டும். "ஈகோ'வெல்லாம் வேண்டாம். இவ்வாறு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், திருமண வாழ்வு அமோகமாக அமையும்.

9-ஆமிடத்தில் அசுபத் தன்மையோடு அமைந்த கிரகப் பலன்கள்:

சூரியன்- நம்பிக்கையற்றவர், சற்று கோழை.

சந்திரன்- தவறாக திட்டமிடுவார்.

செவ்வாய்- அதிர்ஷ்டமற்றவர், கருமி.

புதன்- மனக்குழப்பம் உடையவர்.

சுக்கிரன்- பணப்புழக்கம் உடையவர்.

குரு- சுய பச்சாதாபம் மிகுந்தவர்.

சனி- எதிலும் விட்டேத்தியான, பற்றற்ற நிலை.

Advertisment

இவர்களுக்குரிய பரிகாரம் செய்யும்போது அதிர்ஷ்டக்குறைவு குறைந்து, திருமணம் நீடித்து நிலைக்கும். மனநிறைவாகவும் இல்லறம் அமையும்.

10-ஆம் பாவகம்

ஜோதிடத்தில் பெரும்பாலும் ஒருவரின் தொழிலைக் குறிக்கும் பாவகம் இது. நிறைவான இல்லற வாழ்வுக்கு தொழிலும் அவசியத் தேவைதானே? இப்போது ஆண்- பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால், இக்காலகட்டத்தில், திருமணச் செழிப்பிற்கு 10-ஆம் பாவகம் இன்றியமையாததாகிவிட்டது. இந்த 10-ஆம் பாவகத்தைக் கொண்டு தொழில் மட்டுமல்ல; தம்பதிகளின் கௌரவம், புகழ், ஆசாரமாக இருப்பது, பொறுப்பாக இருப்பது, பெருந்தன்மையாக இருப்பது, தியாக மனப்பான்மை, சுய மரியாதை, சுய கட்டுப் பாடு, தோரணை போன்ற விஷயங்களையும் அறிய முடியும்.

இதன்படி, தம்பதிகளில் ஒருவர் குலவழக்கப்படி ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற, மற்றவரோ, "அது கிலோ என்ன விலை?' என்றால் மணவாழ்வின் நிலை என்ன? ஒருவர் மட்டும் தியாக மனப்பான்மையுடன்- பெருந்தன்மையாக நடந்துகொள்ள, மற்றவர் பிச்சைக்காரத்தனமாக, சுயநலமாக நடந்துகொண்டால் மணவாழ்வின் கதி என்ன? இதிலும் மனைவி மட்டும் வேலைக்குச் சென்று, கணவன் வேலைக்குச் செல்லாவிட்டால் கணவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். எனவே மணமாகும்போதே ஜாதகங்களை அலசிப்பார்த்து, வாழ்க்கைத்துணை வீண் கௌரவம் பார்ப்பவர் என்றோ, சுயநலமாக இருப்பவர் என்றோ தெரிந்துவிட்டால் அதற்கேற்ப நடவடிக்கைகள் மற்றும் மனத்தயாரிப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். இதனால் திருமணக் கற்பனைகள் ஒரு எல்லைக்குள் வந்துவிடும்.

10-ஆமிடத்தில் அசுபத்தன்மையோடு அமைந்த கிரகப்பலன்கள்:

சூரியன்- தொழில் தடை, அரசு தண்டனை, பாவச் செயல்களில் நாட்டம்.

சந்திரன்- தடைகள் நிறைந்த வாழ்க்கை, வேலையில் சோம்பேறித்தனம்.

செவ்வாய்- திருட்டுபுத்தி, அதிகாரமற்ற வேலை.

புதன்- குறுகிய மனப்பான்மை, மடத்தனம்.

குரு- மதநம்பிக்கை குறைந்தவர். காரியத் தடையுண்டு. மரியாதை தெரியாதவர்.

Advertisment

சுக்கிரன்- குறை சொல்லி, வாழ்வின் மகிழ்ச்சியைக் குறைப்பார். தொழில் மற்றும் வாழ்வில் ஈடுபாடு இருக்காது.

சனி- உறுதியற்றவர். ஏற்றத்தாழ்வான வாழ்க்கை.

வாழ்க்கைத்துணையின் 10-ஆமிடத்தில் மேற்கண்ட கிரகங்கள் அசுபத்தன்மை யுடன் இருப்பின் சிலவற்றுக்குப் பரிகாரமும், சிலவற்றுக்கு புத்திமதியும், சிலவற்றுக்கு சகிப்புத்தன்மையுடனும் வாழ முயற்சித்தால் திருமண வாழ்வு சுகமே.

11-ஆம் பாவகம்

இதனை ஜோதிடம் லாபஸ்தானம் என்று கூறும். நீடித்த, மகிழ்வான திருமண வாழ்வுக்கு நம்பிக்கை, ஆசைகள், ஊக்கம், உறுதியான இணைப்பு, தன் துணையோடு இணக்கமாக மனமொன்றி வாழ்வாரா அல்லது தனிமை விரும்பியா என பல தகவல்களை 11-ஆம் இடம் கூறும். தம்பதிகளில் யாருக்காவது 11-ஆமிடம் பலம்பெற்றிருப்பின், அவர்கள் தாங்கள் நினைத்ததை அடைந்தே தீருவது என லட்சிய வெறியுடன் இருப்பர். இது நல்ல விஷயங்களுக்கென்றால் சரிதான். ஆனால் எல்லா விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்களுக்கும் இத்தகைய மனப்பாடு இருந்தால் கஷ்டம்தான். யோசித்துப் பாருங்கள். வீடு கட்ட வேண்டும்- தொழில் விரிவாக்கம் செய்ய வேண்டும் போன்றவை யெல்லாம் உயர்ந்த லட்சியங்கள்தான்.

shiva

அவற்றை உழைத்துப் பெறுதல் கௌரவம். ஆனால் திருட்டுத்தனம், குறுக்குவழியில் முறைதவறிச் சென்று லட்சியத்தை அடைவது கேவலம் மட்டுமல்ல; பின்னால் தண்டனைக்கும் வழிவகுக்கும். எனவே வாழ்க்கைத்துணையின் 11-ஆமிடம் நன்கு ஆராயப்பட்டு, மேன்மையான குறிக்கோள் நிறைவேற உதவவேண்டும். மட்டமான குறிக்கோளை, சட்டப்புறம்பாக நிறைவேற்றும் நிலையில் வாழ்க்கைத்துணை அமைந்தால், சற்று கடுமையான வழிகளி லாவது திருத்திவிடவேண்டும். மணவாழ்வின் மகிழ்ச்சிக்கு சிலசமயம் கடுமையைப் பயன்படுத்த வேண்டும்.

12-ஆம் பாவகம்

பொதுவாக ஜோதிடம் இதனை அயன, சயன ஸ்தானம் என்கிறது. திருமணத் தைப் பொருத்தவரையில் இது சயன ஸ்தானம்.

மேலும் வெளியூர், வெளிநாட்டுப் பயணத் தையும் குறிக்கும். இந்த 12-ஆம் வீடு சுபத்தன்மை யுடன் இருப்பின், அளவான தூக்கமும், அருமையான- பயனுள்ள பயணங்களும் அமையும். இதே 12-ஆம் வீடு அசுபத்தன்மை யுடன் இருந்தால், ஒன்று தூக்கமே வராது அல்லது எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பார். அதுபோல் வீணாக அலைவார். இந்த 12-ஆம் வீடு, அதன் அதிபதியைக் கொண்டுதான் ஜாதகர் எவ்விதம் செலவு செய்வார்- யாருக்கு செலவு செய்வார்- அது அனுமதிக்கத்தக்க செலவு களா என அறிந்துகொள்ளலாம்.. எனவே திருமணத் தம்பதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையின் 12-ஆமிடத்தைக்கொண்டு போக்குவரத்துகளை அறிந்துகொண்டு, அது தர்மவழி செலவெனில் தகுந்த வழிகாட் டவும், அதர்ம, நெறி தவறிய செலவெனில் அதட்டிக் கேட்கவும் வேண்டும். இவ்வாறு கண்டிப்புடன் இருந்தால் இல்வாழ்வு இனிதாக நீடிக்கும்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்தக் கட்டுரை சின்னஞ்சிறுசுகளுக்கு- புதிதாக மணமானவர்களுக்குரியது. வாழ்க்கை யென்பது மேடு பள்ளங்கள், முட்கள் நிறைந் துள்ள பாதையைப் போன்றது. அதில் எப்போதும் சிரித்துக்கொண்டும், மகிழ் வோடும் செல்ல இயலாது என்பதை நினைவில் கொள்க. பிரச்சினை இல்லாத நாட்களும் இல்லை; மனிதர்களும் இல்லை.

ஒவ்வொரு பாவகமும், ஒவ்வொரு கிரகமும் தினுசு தினுசாகப் பிரச்சினையைக் கொடுக் கத்தான் செய்யும். கூடியமட்டும் கணவன்- மனைவி உட்கார்ந்து பேசி சரிசெய்து கொள்ளவேண்டும். தயவுசெய்து, உங்களை பிரச்சினையில் மூன்றாம் மனிதரை அனுமதிக்காதீர்கள்.

கணவனும் மனைவியும் தனியாக இருக்கும்போது, தனியறையில்தானே இருக்கிறார்கள்? பிறகு சண்டை போடும் போது மட்டும் எதற்கு இன்னொரு ஆள்? கூடலின்போது இருவர் மட்டுமே இருப்பது போல், ஊடலின்போதும் இருவர் மட்டுமே சமாளித்து தீர்வு காணவேண்டும். அடிக்க வேண்டும் என்றாலும் நான்கு சுவருக்குள் அடித்து, பின்னியெடுத்து (யார், யாரை அடித்தாலும் சரி) பிரச்சினையை சரிசெய்து கொள்ள வேண்டும்.

லக்னாதிபதி என்ற ஜாதகரும், 7-ஆம் அதிபதி என்ற வாழ்க்கைத்துணையும் நேரெதிர் பாவங்கள். திருமணமென்பது லக்ன, 7-ஆம் அதிபதிகளின் இணைவு. எதிரெதிர் பாவங்கள் ஒன்றுசேரும்போது, அவ்வப்போது ஏற்படும் உரசல்களை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இனிமையாக, நீண்டநெடிய காலமாக, நிறைவாக, வாழ்வாங்கு வாழ முடியும்.

திருமண வாழ்வு தோஷங்களுக்குரிய பரிகாரத் ஸ்தலங்கள்

சயன தோஷத்திற்கு- தொட்டமள்ளூர்.

கணவன்- மனைவி ஒற்றுமைக்குரிய ஸ்தலங்கள்:

1. திருக்கூடலூர் ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாள்.

2. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்.

3. திருச்சக்தி முற்றம். (கும்பகோணம்).

4. ஸ்ரீரங்கம்.

5. திருச்சாத்த மங்கை.

6. திருமருகல்.

7. திருச்சேறை.

8. ஆச்சாள்புரம்.

திருமணமான தம்பதிகள் அன்புடன், நீண்ட மணவாழ்வு வாழ மேற்கண்ட கோவில்களில் தரிசனம் செய்வதுடன், உங்கள் ஊர்க்கோவில்களில் நடக்கும் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தை யும் தரிசனம் செய்யவும். முக்கியமாக அடுத்த வீட்டு கணவன்- மனைவியை வம்பு பேசி பிரிக்காமல் இருக்கவும். இதுதான் சிறப்பான பரிகாரம்.

செல்: 94449 61845