Advertisment

பெண்கள் வாழ்வில் பெருந்துன்பம் தரும் பெயர்கள்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/great-names-womens-lives-siddharthasan-sunderji

பெண்களில் சிலர் தங்கள் ஆயுள்வரை சுகத்தை அனுபவித்து வாழ்கிறார்கள். சில பெண்கள் கஷ்டத் தையே அனுபவித்து வாழ்கின்றனர். இந்த நன்மை- தீமைகளுக்கு அவர்களின் பெயரும் ஒரு காரணம்.

Advertisment

பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் வினைப் பதிவையறிந்து, வினைதீர்க்கும் சக்தி யுடைய பெயர்களைச் சூட்டவேண்டும். பெயரின் குணம், சக்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதுமுண்டு; உண்டாக்குவதும் உண்டு.

பெண்களுக்கு நன்மை தராத- வைக்கக் கூடாத பெயர்கள் எவையென்று அறிவோம்.

nn

மலையரசி, பார்வதி, பருவதம், கிரிஜா (கிரி- மலை) போன்று மலை, குன்றுகள், பாறைகளைக் குறிப்பிடும் பெயர்களை வைக்கக்கூடாது. மலை களின் தன்மை, நிலை ஆகியவற்றை ஆராய்ந்து பெயர்ப்பலனை அறிய வேண்டும்.

கங்கை, யமுனை, நர்மதா, காவேரி, பவானி போன்ற ஆறுகள், நீர்நிலைகள், சமுத்திரங்களின் பெயர்களை வைக்கக்கூடாது. ஆறுகளில் நீர் வறண்டும், பெருகியும் நிலையற்ற தன்மையுடன் இருக்கும். வான் மழையை எதிர்பார்த்தே மலையும், ஆறும், நீர்நிலைகளும் இருக்கும்.

ஆறுகளில் பலர்வந்து குளிப்பார்கள்; தங்கள் தாகத்தைத் தீர்த்துக்

பெண்களில் சிலர் தங்கள் ஆயுள்வரை சுகத்தை அனுபவித்து வாழ்கிறார்கள். சில பெண்கள் கஷ்டத் தையே அனுபவித்து வாழ்கின்றனர். இந்த நன்மை- தீமைகளுக்கு அவர்களின் பெயரும் ஒரு காரணம்.

Advertisment

பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் வினைப் பதிவையறிந்து, வினைதீர்க்கும் சக்தி யுடைய பெயர்களைச் சூட்டவேண்டும். பெயரின் குணம், சக்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதுமுண்டு; உண்டாக்குவதும் உண்டு.

பெண்களுக்கு நன்மை தராத- வைக்கக் கூடாத பெயர்கள் எவையென்று அறிவோம்.

nn

மலையரசி, பார்வதி, பருவதம், கிரிஜா (கிரி- மலை) போன்று மலை, குன்றுகள், பாறைகளைக் குறிப்பிடும் பெயர்களை வைக்கக்கூடாது. மலை களின் தன்மை, நிலை ஆகியவற்றை ஆராய்ந்து பெயர்ப்பலனை அறிய வேண்டும்.

கங்கை, யமுனை, நர்மதா, காவேரி, பவானி போன்ற ஆறுகள், நீர்நிலைகள், சமுத்திரங்களின் பெயர்களை வைக்கக்கூடாது. ஆறுகளில் நீர் வறண்டும், பெருகியும் நிலையற்ற தன்மையுடன் இருக்கும். வான் மழையை எதிர்பார்த்தே மலையும், ஆறும், நீர்நிலைகளும் இருக்கும்.

ஆறுகளில் பலர்வந்து குளிப்பார்கள்; தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள் வார்கள். இதனால் ஆற்றுக்கும் நீருக்கும் எந்த நன்மையும் கிடையாது. இந்தப் பெயர்களையுடைய பெண்களின் வாழ்வின் பலனே இதைப்போன்றது தான். யாரையாவது எதிர்பார்த்தே வாழவேண்டும். வாழ்க்கையை ஓட்ட எதையாவது செய்து ஓடிக்கொண்டே இருக்கநேரும்.

குயில், மயில், அன்னம், கிளி போன்று பறவைகளைக் குறிப்பிடும் பெயர்களையும் வைக்கக்கூடாது. இவர்கள் பறவைகளைப்போல, வாழ் வாதாரத்திற்குப் பணம், பொருள் குறைவாகி அவற்றைத்தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். தேவைகள் தீராது. பிறரிடம் அடைக்கலமாக வேண்டிய நிலை உண்டாகிவிடும். மலர்க்கொடி, மணிமலர், மலர்விழி, பூங்கொடி, மல்லிகா, ரோஜா, முல்லை, தாமரை போன்ற பூக்களின் பெயர்களையும்; கொடி, மரம், புதர் போன்றவற்றைக் குறிப்பிடும் பெயர்களையும் வைக்கக்கூடாது.

மலர்கள் காலையில் பூத்து, மாலையில் வாடிவிடும். மரம், செடி, புல், புதர்கள் மழைக்காலத்தில் செழிப்பும், வெயில் காலத்தில் காய்ந்தும் நிலையற்ற வாழ்வையு டையவை. இவை தரும்பலன்களை மற்றவர்களே அனுபவிப்பார்கள்.

இதைப்போன்றுதான் இந்தப் பெயர் களை உடையவர்கள் பிறர் உயர்வடைய உழைப்பார்கள். இவர்கள்மூலம் குடும்பத் தினர், நண்பர்கள் நன்மைகளையும் சந்தோஷத் தையும் அடைவார்கள். இறுதிக் காலத்தில், தங்கள் தேவைகள் முடிந்தபின்பு இவர்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யமாட்டார்கள். இவர்கள் ஈடுபடும் காரியம் முடியும்வரை எந்த எல்லைக்கும் சென்று செயல்படுவார்கள்.

ஆனால் சுயநன்மை இராது. சுயநலமும், ஏமாற்றும் குணமும் இருக்கும். இவர்கள் யாரை யெல்லாம் "நம்மவர்' என்று நம்புகிறார்களோ, அவர்கள் இறுதியில் மலரைப்போல் இவர்களைக் கசச்கி எறிந்துவிடுவார்கள்.

அஸ்வினி, ரோகிணி, கார்த்திகை போன்ற நட்சத்திரங்கள் இரவில் மெலிதாகப் பிரகாசிக்கும்; பகலில் அதுவும் தெரியாது. இதுபோன்று பெசயர்களைக் கொண்ட பெண்களின் வாழ்க்கை கொஞ்சகாலமே பிரகாசமாக இருக்கும். அதன்பின் மற்றவர்களால் மறக்கப்படுவார்கள். கற்பனையும், கனவுமே வாழ்க்கையாவிடும்.

சந்திரா, நிலா, வான்மதி, சந்திரகலா, சசிகலா (சசி- சந்திரன்) என சந்திரனைக் குறிக் கும் பெயர்களையுடைய பெண்களின் வாழ்வு வளர்ந்து, தேய்ந்து, மறையும் சந்திரனைப் போன்றே உயர்வு, தாழ்வு என அமைந்து விடும். சூரிய ஒளியின் துணையால் சந்திரன் பிரகாசிப்பதுபோல, இவர்கள் யாராவது ஒருவர் துணையைக்கொண்டே வாழநேரும்.

வாழ்வில் பெருமையடைவார்கள்.

கிரகங்களிலேயே அதிகமான பாவங் களைச் செய்து, அளவற்ற சாபங்களைப் பெற்ற கிரகமாக புராணக்கதைகளில் சந்திரனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பெயர் கொண்டவர்களின் இல்வாழ்வில் கணவன்- மனைவி உறவு, புத்திரநிலை சரியாக அமை யாது. சுயகட்டுப்பாடு இருக்காது. தன் காரியம் செயல்பட எதனையும் துணிந்து செய்வார்கள். பொருளாதாரம் இருந்தாலும் அதனை இவர்களால் நன்றாக அனுபவிக்கமுடியாது. இவர்களின் முற்பிறவி அல்லது வம்சத்தில் உண்டான பெண்சாபம் இவர்களை அதிகமாகத் தாக்கி அனுபவிக்கச் செய்யும். நன்றி மறத்தல், நய வஞ்சகம், தங்கள் காரியத்திற்காக அடிக்கடி நண்பர்களை மாற்றிக்கொள்தல், ஏமாற்றுதல் போன்றவையே குணமாக இருக்கும். இந்த குணமே இவர்களை வீழ்த்திவிடும். பொதுவாக ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் பெயர்களை பெண் குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது.

புராண, இதிகாசக் கதைகளில் கூறப்படும் பாஞ்சாலி, திரௌபதி, சீதா, ஜானகி, சாவித்திரி, நளாயினி, கண்ணகி, மண்டோதரி போன்று பத்தினி பெண்கள் என கூறப்படுபவர்களின் பெயர்களை வைக்கக்கூடாது. புராணக்கதைகளைப் படித்து, இவர்கள் கட்டிய கணவனால், பிற ஆண்களால் பாதிக்கப்பட்ட அவமான வாழ்க்கையை அறிந்துகொள்ளலாம்.

இந்திராணி, மகாராணி, ராணி, அரசி போன்ற பெயரையுடைய பெண்களின் வாழ்வில் நிம்மதி இராது. தற்பெருமை அதிகமிருக்கும். கர்வம், அகங்காரம், ஆணவ குணமிருக்கும். ஆளுமைத்திறன் இருந்தபோதும் வாழ்க்கை அல்லல் நிறைந்த தாகவே இருக்கும். இல்லற வாழ்க்கை இனிமை குறைந்தே இருக்கும்.

தேவதைகள், நட்சத்திரங்கள், பஞ்சபூதங் களைக் குறிப்பிடும் பெயர்களை வைக்கக் கூடாது.

இதுபோன்ற பெயர்களை வைத்தால் உயர்ந்த நிலையில் இருந்தாலும் ஏதாவது ஒரு குறையுடனேயே வாழ்வார்கள். உயர்வும் தாழ்வும் மாறிமாறி ஏற்பட்டு அனுபவிக்கச் செய்யும். தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர்களும், நமது முன்னோர்களும் அனுபவரீதியாக அறிந்துகூறிய உண்மைகளே இவை.

இதுபோன்று பெயர்களையுடைய பெண்கள் தங்கள் இளம்வயதிலோ, நடுவய திலோ அல்லது முதுமையிலோ இப்பலன் களை அனுபவித்துக் கொண்டிருப்பதை பரிசோதனை செய்து பார்த்தால் உண்மை புரியும்.

செல்: 99441 13267

bala060320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe