வசரகதியான இந்த உலகில் டென்ஷன், மன அழுத்தம் தீர்க்கமுடியாத ஒரு வியாதியாக சமுதாயத்தில் உலா வருகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரால், தனக்கு என்ன பிரச்சினை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த முடியாது. மன அழுத்தத்தை ஸ்லோ பாய்சனுடன் ஒப்பிடலாம். தீராத மன அழுத்தம் மனிதனை சிறிதுசிறிதாக அழித்துவிடும்.

ஒருவரின் எண்ணங்கள் ஈடேறும்போது அவர்கள் அடையும் சந்தோஷம், மன நிம்மதிக்கு அளவே கிடையாது. நிறைவேறாத எண்ணங்கள் கனவாக- கானல் நீராக ஆழ்மனதில் பதிந்துவிடும். மனவலிமை உள்ளவர்கள், நிறைவேறாத எண்ணங்களை கனவாக நினைத்து மறந்து, அடுத்த முயற்சியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள். மனவலிமை குறைந்தவர்கள், தனிமையில் யோசித்து, தன்மனதைத் தானே கெடுத்துக்கொண்டு, மற்றவர்களையும் படாதபாடு படுத்திவிடுகிறார்கள்.

ஜனன ஜாதகத்தில் லக்னம், 3-ஆம் இடம், சந்திரன், சூரியன் நல்லநிலையில் இருந்தால் ஜாதகரின் எண்ணங்கள் 100 சதவிகிதம் பலிதமாகும். ஜாதகர், நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை படைத்தவராக இருப்பார்; ஜாதகரின் எண்ணங்கள் வலிமையுடையதாக இருக்கும்.

இனி, சிறியவர்முதல் பெரியவர்வரை அனைவரையும் படாதபாடு படுத்தும் மன உளைச்சல் ஏற்படுவதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

Advertisment

கோட்சாரத்தில் காலபுருஷ 9-ஆம் இடமான தனுசில் இணைவுபெற்ற சனி, கேதுவால் ஏற்படும் மன அழுத்தம் தொடர் பான பிரச்சினைகள் தொழில், உத்தியோகம் தொடர்பான மன உளைச்சலைத் தருகிறது. பெரும் முதலீட்டாளர்கள்முதல் சிறிய பெட்டிக்கடைக்காரர்வரை யாரையும் விட்டுவைக்காமல், இந்த கோட்சார கிரகங்கள் அனைவரையும் தலைசுற்ற வைக்கின்றன.

d

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் அல்லது மெமோ அல்லது இடைக்காலப் பணி நிறுத்தம் போன்றவற்றால் ஏற்படும் மனவருத்தம்.

Advertisment

பணவீக்கத்தால் வங்கிகளுக்கு வாராக்கடன் அதிகமாகிவிட்டது. வாராக்கடனை வசூல்செய்யும் பணியில் வங்கி ஊழியர்கள் ஈடுபடுத் தப்படுவதால், 12 மணி நேரம் வேலைசெய்ய வேண்டிய கட்டா யத்தால் ஏற்படும் மனவருத்தம் போன்றவற்றால், பல வங்கி ஊழியர்கள் வி.ஆர்.எஸ். வாங்கினால் எதிர்காலம் சிறப்பாக இருக் குமா என்ற கேள்வியுடன் ஜோதிடரை அணுகுகிறார்கள்.

குருப்பெயர்ச்சியின்மூலம் ஒவ்வோராண்டும் மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற- இறக் கத்தை ஏற்படுத்தி, உலகப் பொருளாதாரத்தையே முழுக் கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். தனுசிற்குச் சென்று ஆட்சிபலம் பெற்று நாட்டிற்கு சுபிட்சத்தைத் தருவார் என மகிழ்ச்சியில் இருக் கிறோம். ஒன்பது மாதங் களே ஆட்சிபலம் பெறு கிறார். ஏறக்குறைய மூன்று மாதங்கள் மகரத்தில் சென்று நீசம் அடைகிறார்.

2021-ல் குரு பகவான் நீசம் அடை கிறார். 2009-ல் குரு பகவான் தன் பலமிழந்து நீச வீட்டில், மகரத்தில் இருந்தபோது கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

சரியாக 12 வருடங்களுக்குமுன் குரு பகவான் நீசநிலையில் இருந்தபோதுதான் பல வங்கிகள் திவாலாகின.

ஒருகாலத்தில் ‘"ஒயிட்காலர் ஜாப்'‘ ஆக இருந்த வங்கிப் பணியைப் பார்த்து தற்போது பலர் பயமடைகிறார்கள். ஒரு வருடத்தில் சர்வீஸ் முடிந்து ரிட்டயராகி வீட்டுக்குச் செல்லவேண்டிய வயதில் இருப்பவர்கள்கூட வி.ஆர்.எஸ். வாங்கினால், மன உளைச்சல் நீங்கி, உடல்நலம் சீரடைந்துவிடுமா என்னும் கேள்வியுடன் வருகிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம், விரும்பிய வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையைச் செய்யவேண்டிய தால் உருவாகும் மன விரக்தி, திருமணத்தடையால் மனத்தடுமாற்றம், தற்போது உலகமெங்கும் அதிகரித்து வரும் மிகமுக்கிய பிரச்சினையான குழந்தையின்மையால் ஏற்படும் மனக்கசப்பு, உறவினர்கள், நண்பர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு போன்றவையும் மன அழுத்தத்திற்கு காரணமாகின்றன.

உளவியல்ரீதியாக பண அழுத்தமே மன அழுத் தத்திற்கு காரணமாகிறது. கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தம் ஒற்றைத் தலை வலிமுதல் மாரடைப்புவரையான பல்வேறு நோய் களை மனிதனுக்குத் தருகிறது.

பல குழந்தைகள் செல்போனில் விளையாடு வதையே பழக்கமாக வைத்துள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள்கூட செல்போன் கொடுத்தால்தான் சாப்பிடுகிறது. 10-ஆவது கிரக மான செல்போன் குழந்தைகளின் செயல்திறன், சிந்தனை சக்தியைக் குறைத்து மனநோயாளியாக மாற்றுகிறது.

ஜோதிடரீதியாக மனநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான கிரக அமைப்புகள் ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதைக் குறிக்கும் கிரகம் காலபுருஷ 5-ஆம் அதிபதியான சூரியன். சூரியன் ராகு- கேது, சனியுடன் இணைவு, சூரியன் நீசம் பெற்றவர்கள், 6, 8, 12-ல் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சம்பந்தம் பெற்றவர்கள் மனவிரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள்.

ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் மனோரீதியான பாதிப்பு மிகும்.

லக்னரீதியாக, லக்னத்திற்கோ லக்னாதி பதிக்கோ 8-ல் சந்திரன் மறைந்தால் கடுமை யான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சந்தி ரனுடன் சனி, ராகு, கேது, அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் கடுமையான மன உளைச்சல் ஏற்படுத்தும்.

ராசியின் அடிப்படையில் பார்க்கும்போது மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திரனால் மனோரீதியான பாதிப்புகள் இருக்கும்.

நட்சத்திரரீதியாகப் பார்க்கும்போது சனி, புதன், ராகு, கேது ஆகிய நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கும் மன அழுத்தம் மிகுதியாக இருக்கும். மிகக்குறிப்பாக சனி, புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு மிகுதியாக இருக்கும். புதன், சந்திரன், சனி நீசம் அடைந்தாலும் கடுமையான மன அழுத்தம் நிச்சயம் ஏற்படும்.

ராகு, சனி, புதன், கேது, பாதகாதிபதி, அட்டமாதிபதியின் தசை, புக்திக் காலங்களில் மன அழுத்தம் உண்டு.

கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறை யும்போது அல்லது பிறப்பு ராகு, கேது, சனியைக் கோட்சாரச் சந்திரன் தொடும் போது மனோரீதியாக பாதிப்பு நிச்சயம் உண்டு.

கோட்சார ராகு, கேது, சனி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போதும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்ட கச்சனி, ஜென்ம ராகு, கேது ஆகிய காலகட்டங் களில் மனோரீதியான பாதிப்பு அதிகம் உருவாகும்.

லக்னத்தில் சனி, ராகு, கேது, அஷ்டமா திபதி இருந்தாலோ பார்வை, சேர்க்கை பெற் றாலோ அல்லது லக்னாதிபதியுடன் சனி, ராகு, கேது இணைந்தாலோ அல்லது 6, 8, 12-ஆம் அதிபதியுடன் அமர்ந்தாலோ மனோ ரீதியான நோய் பாதிப்பு ஏற்படும்.

ஜனனகால ஜாதகத்தில் அதிக வக்ர கிரகம் இருந்தால் மன அழுத்தம் உண்டாகும்.

இனி, மனிதனைக் கொல்வது நோயா? பயமா என ஆய்வுசெய்யலாம்.

நமது முன்னோர்கள் செயல்பாடுகளில் விவேகத்தையும் நிதானத்தையும் கடைப் பிடித்ததால், பயமும் நோயும் இல்லாமல் 100 வருடங்களுக்குமேல் நிம்மதியாக வாழ்ந் தார்கள்.

அவசர உலகத்தில் சகமனிதர்களிடம் போட்டி, பொறாமை, யாரைக் கெடுத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற வஞ்சக எண்ணம், காசு, காமம், சொத்ததால் விரக்தி, ஆரோக்கியமற்ற உணவான பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவை மன வியாதியைப் பொன்னாடை போர்த்தி வரவேற்கின்றன.

யாருடைய திறமையையும் யாரும் விலைகொடுத்து வாங்கமுடியாது. ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் ஜீவிக்கத் தேவையான ஞானத்தோடு பிரபஞ்சம் படைக்கிறது. அப்படியிருக்க பிரபஞ்சத்திற்கு எதிரான செயல்களில் மனிதன் ஈடுபடும்போது இனம்புரியாத- பெயரிட முடியாத வியாதி, மனக்கவலை அவனை சிறைப்படுத்துகிறது. எனவே பிரபஞ்சத்தோடு ஒன்றி நல்ல எண்ணங் களோடு, பயபக்தியோடு வாழ்பவர்களுக்கு மன உளைச்சல் வராது. லக்னம், 3-ஆம் இடம், சந்திரன் மூன்றும் நல்லநிலையில் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே ஜாதகரால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.

எந்த நோயும் மனிதனைக் கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனைக் கொல் கிறது.

உடலை ஆன்மாவின் போக்கில் பயணிக்க அனுமதித்தால் அது எதற்காக வடிவமைப் பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

இயற்கையோடு ஒன்றி மனமும், உடலும் இணைந்து செயல்பட அனுமதிப்பவர்களுக்கு மனநோய் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடும்.

ஜனன ஜாதகத்தில் லக்னம் வலிமையானவர்களுக்கும். ஆழ்மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும் எப்போதும் எந்த பாதிப்பும்இருக்காது.

பரிகாரம்

வெயில், மழை, குளிர் என அனைத்து பருவ சீதோஷனத்தையும் உடலுக்கு பரிச்சயப் படுத்தவேண்டும்.

சிறிய உடல் உபாதைகளுக்கு அலோபதி மருந்தைப் பயன்படுத்தாமல் எளிய வீட்டு வைத்தியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

மன அழுத்ததால் விரக்தியில் இருப் பவரை குடும்பத்தாரின் அன்பான வார்த்தை களாலும், ஆதரவாலும் மட்டுமே இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும்.

பூமியில் ஜனனமாகும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வினைப் பதிவு உண்டு. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பிற உயிர்களின் கர்மா, நோயை சேர்த்து சுமக்க வேண்டும். எனவே முடிந்த வரைகாய்கறி ,பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

யோகா, தியானம் போன்றவற்றைபயிற்சி செய்ய வேண்டும்.

சித்தர்கள், ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.

அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய துவி தியை திதியில் இருந்து பௌர்ணமி திதி வரை மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடு வது நல்ல பலன் தரும்.

திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் இருந்தால் மன விரக்தி நீங்கி சந்தோஷமான வாழ்வு அமையும். திருவோண விரதத்தால் மனநிம்மதியுடன் அனைத்து செல்வ வளங்களையும் பெற்றிடலாம்.

கட்டுக்கு அடங்காத வகையில் மனநோய் தாக்கம் மிகுந்தவர்கள்திருச்சிஅருகிலுள்ள குணசீலம் ஸ்ரீ பிரசன்னவெங்கடாசலபதி கோவில் சென்று வரலாம். மனக்குழப்பம் , மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம். காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது தீர்த்தம் வழங்கப்படும்.

மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச்செய்து பூஜை செய் கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை முகத்தில் தெளிக்கிறார்கள். இங்கு சென்று வந்தால் மன நோயின் சுவடே இல்லாது போகும்.மனக்குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

செல்: 98652 20406