Advertisment

குபேர வாழ்வு தரும் அரசு இலை தீபா வழிபாடு! - பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/govt-leaf-deepa-worship-gives-life-kubera-b-balajiganesh

16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டுமென்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை.

Advertisment

அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெறவேண்டிய இந்தப் பலனை இந்த ஒரு தீபமேற்றும்போது நம்மால் பெறமுடியும் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்றவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

பதினாறுவகை செல்வங் களும் பெற்று குபேர வாழ்க்கை வாழ ஏற்றவேண்டிய அரச இலை தீபம்.

dd

இந்த தீபத்தை நாம் சனிக்கிழமையில்தான் ஏற்றவேண்டும். சனிக்கிழமை காலைமுதல் மாலைவரை எப்போது வேண்டுமானா

16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டுமென்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை.

Advertisment

அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெறவேண்டிய இந்தப் பலனை இந்த ஒரு தீபமேற்றும்போது நம்மால் பெறமுடியும் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்றவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

பதினாறுவகை செல்வங் களும் பெற்று குபேர வாழ்க்கை வாழ ஏற்றவேண்டிய அரச இலை தீபம்.

dd

இந்த தீபத்தை நாம் சனிக்கிழமையில்தான் ஏற்றவேண்டும். சனிக்கிழமை காலைமுதல் மாலைவரை எப்போது வேண்டுமானா லும் ஏற்றலாம். இந்த விளக்கை அரச மரத்தின் இலைமீது வைத்துதான் ஏற்றவேண்டும். அந்த இலையை நாம் சனிக்கிழமையில்தான் பறிக்கவேண்டும் முதல் நாளே பறித்து வைக்கக்கூடாது. அது மட்டுமின்றி மாலை ஆறு மணிக்குமேல் மரத்தில் இருந்து இலைகளை பறிக்கக் கூடாது.

சனிக்கிழமையன்று காலை எழுந்து குளித்து முடித்தபிறகு அரச மர இலை ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு சில்வர் தவிர வேறு எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த தட்டில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்தபிறகு இந்த இலைக்கும் மஞ்சள், குங்குமம் பொட்டுவைத்து தட்டில் வைத்து விடுங்கள்.

இப்போது தட்டில் இருக்கும் இலையின்மீது ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். விளக்கிற்க்கும் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துவிடுங்கள். அதில் இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்துபோட்டு இலுப்பை எண்ணெய் ஊற்றி வீட்டில் சிவன், விஷ்ணு, பிரம்மா, மகாலட்சுமி தாயார் இவர்களில் யாரேனும் ஒருவர் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிடுங்கள்.

இந்த தீபத்தை நீங்கள் அரச மரத்தின் அடியில் வைத்து ஏற்றினால் இன்னும் விசேஷம். முடியாதவர்கள் மட்டும் வீட்டில் பூஜையறையில் இதைச் செய்யலாம். இந்த தீபத்தை சனிக்கிழமையன்று ஏற்ற தொடங்கி தொடர்ச்சியாக 16 சனிக்கிழமை ஏற்றவேண்டும். இப்படி ஏற்றிவரும் நாளில் உங்கள் துன்பமெல்லாம் விலகி நீங்கள் எதிர்பாக்காத வகையில் உங்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை யில் வாழ்வீர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த அரசமரமானது இருக்கும் விருச்சகங்களின் எல்லாம் தலையாய விருச்சகமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த மரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. உலகத்தில் அனைத்திற்கும் மூலகாரணம் இவர்கள் மூவரும்தான் இவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் வணங்கும்பொழுது இவர்களின் ஆசிபெற்ற குபேரர், மகாலட்சுமி தாயார், சரஸ்வதிதேவி, தேவர்கள், கிரங்கள் என அனைவருமே உங்களுக்கு அருள்புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது.

சனிக்கிழமைகளில் ஏற்றப்படும் இந்த ஒரு தீபம் உங்கள் வாழ்க்கையில் 16 வகை செல்வங் களையும் பெற்று வாழ்க்கையில் மேன் மேலும் உயர்ந்து குபேரர் போன்ற பெரும் வாழ்க்கை வாழ துணைசெய்யும். இந்த தீபத்தை நம்பிக்கையுடன் ஏற்றி வாழ்க்கையின் சகல சம்பத்துகளையும் பெற்று நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

செல்: 98425 50844

bala100524
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe