சுக்கிர தோஷம் தீர்க்கும் ரத்தினம்!

/idhalgal/balajothidam/gotta-gravity-gem

வைரத்திற்கு "வஜ்ரம்' என்ற பெயரும் உண்டு. நவரத்தினங்களி லேயே உறுதித்தன்மை கொண்டது வைரம். உலகத்தின் விலையுயர்ந்த வைரங்களில் ஒன்றான கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் மகாராணியின் கிரீடத்தில் உள்ளது.

su

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அவரின் உடலில் பல பிரச்சினைகள் இருக்கும். காலையில் எழும்போதே, மந்த மாகக் காணப்படுவார். சுறுசுறுப்பே இருக்காது. இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது.

சுக்கிரன் பாவகிரகத்துடன் இருந்தால் வயிற்றுவலியால் பாதிக் கப்படுவார். சிலருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகும்.

சுக்கிரன் நீசமடைந்து, 12-ஆவது பாவத்தில் சூரியனுடன் இருந்தால், அவருக்கு பெண்ணின் சாபம் இருக்கும். வைரத்தை அணிந்தால் பிரச்சினை தீரும். சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் பாவகிரகத்துடன் இருந்தால் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி, பணவசதி இருக்காது. கடன் பிரச்சினை இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர் களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக அல்லது அஸ்

வைரத்திற்கு "வஜ்ரம்' என்ற பெயரும் உண்டு. நவரத்தினங்களி லேயே உறுதித்தன்மை கொண்டது வைரம். உலகத்தின் விலையுயர்ந்த வைரங்களில் ஒன்றான கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் மகாராணியின் கிரீடத்தில் உள்ளது.

su

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அவரின் உடலில் பல பிரச்சினைகள் இருக்கும். காலையில் எழும்போதே, மந்த மாகக் காணப்படுவார். சுறுசுறுப்பே இருக்காது. இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது.

சுக்கிரன் பாவகிரகத்துடன் இருந்தால் வயிற்றுவலியால் பாதிக் கப்படுவார். சிலருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகும்.

சுக்கிரன் நீசமடைந்து, 12-ஆவது பாவத்தில் சூரியனுடன் இருந்தால், அவருக்கு பெண்ணின் சாபம் இருக்கும். வைரத்தை அணிந்தால் பிரச்சினை தீரும். சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் பாவகிரகத்துடன் இருந்தால் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி, பணவசதி இருக்காது. கடன் பிரச்சினை இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர் களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக அல்லது அஸ்தமனமாக அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், அவர்களுக்கு புகழ் இருக்காது.

ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால், கலைத் துறையில் இருப்பவர்கள் புகழுடன் இருப்பார்கள். தொலைக்காட்சி, நாடகம், படத்துறை, இசைத் துறையில் புகழுடன் இருப்பார்கள். நல்ல அரசியல்வாதியாக இருப் பார்கள். ஓவியராக, புகைப்படக் கலைஞராக, நீதிபதியாக, பட்டுத் துணி வர்த்தகராக, விமான ஓட்டி யாக, ஏற்றுமதி- இறக்குமதி செய்பவராக, தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக இருப்பார்கள்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாயுடன் லக்னம் அல்லது 7, 8, 12-ல் இருந்தால், உடலுறவு விஷயத்தில் முழுமையான திருப்தி உண்டாகாது. உயிரணுக்கள் சீக்கிரம் வெளிவந்துவிடும். சிலர் எப்போதும் மந்தமாகக் காணப்படுவார்கள்.

சுக்கிரன், சனி, செவ்வாயுடன் சேர்ந்து லக்னம் அல்லது 4, 7, 8-ல் இருந்தால், கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்காது. வாய்வுத் தொல்லை, கண்ணில் நோய் வரும்.

சூரியன், சுக்கிரன், ராகு லக்னம் அல்லது 2, 8-ல் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. புகழ் குறையும். தந்தை- மகன் உறவு சீராக இருக்காது. சிலருக்கு கண்ணில் நோய் வரும்.

சூரியன் அஸ்தமனமாக அல்லது நீசமாக 3 அல்லது 9-ஆவது பாவத்தில் இருந்தால், பலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். v அண்ணன்- தம்பி உறவு சரியாக இருக் காது. பண வசதி இருக்காது. கெட்ட நண்பர் களுடன் பழகி பெயர் கெடும்.

சுக்கிரன் 4-ல் செவ்வாய், சனியுடன் அல்லது சுக்கிரன், செவ்வாய், ராகுவுடன் இருந்தால், இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. கணவன்- மனைவி உறவில் நிம்மதி இருக்காது. தாயின் உடல்நலம் கெடும். சுக்கிரன், 4-க்கு அதிபதியாக பாவகிரகத்துடன் இருந்தால் உடல்நலம் கெடும்.

சுக்கிரன் 9-க்கு அதிபதியாக இருந்து, அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்காது. பல கஷ்டங்களைச் சந்திப் பார்கள். சிலருக்கு உணவு சரியாக ஜீரண மாகாது.

சுக்கிரன் 6-ல் இருந்தால், அதுவும் சூரியன், சந்திரனுடன் அல்லது சுக்கிரன், செவ்வாய், புதனுடன் இருந்தால், அவர்கள் பெண் மோகம் காரணமாக சொத்தினை இழந்துவிடுவார்கள்.

சுக்கிரன் 7-ல் இருந்தால், அவர்களுக்கு திருமண தோஷம் இருக்கும். சுக்கிரன் பாவகிரகத்துடன் இருந்தால், இல்வாழ்க்கை யில் பிரச்சினை இருக்கும்.

சுக்கிரன் 8-ல் இருந்தால், உணவு ஜீரண மாகாது. வயிற்றில் பிரச்சினை இருக்கும். செவ்வாய், சனியுடன் சுக்கிரன் இருந்தால், பலர் இளம்வயதில் நிறைய தவறுகள் செய்வார்கள். சிலருக்கு தாமதமாகத் திருமணம் நடக்கும். சிலர் விதவை அல்லது விவாகரத்தான பெண்ணைத் திருமணம் செய்வார்கள்.

சுக்கிரன் 9-ல் இருந்தால், வர்த்தகம் நன்கு நடக்கும். சுக்கிரன், குருவுடன் இருந்தால் அல்லது சந்திரனுடன் இருந்தால் புகழ் கிடைக்கும். ஆனால், சனி, ராகுவுடன் சுக்கிரன் இருந்தால் பல சிக்கல்கள் உண்டாகும்.

சுக்கிரன் 10-ல் இருந்தால் அவர் நல்ல வியாபாரியாக இருப்பார். சுக்கிரனை குரு பார்த்தால் புகழ் கிடைக்கும். ஆனால் சுக்கிரன், ராகுவுடன் இருந்தால் தொழிலில் பல தடைகள் உண்டாகும். சுக்கிரன், சனியுடன் இருந்தால், 40 வயதிற்குப் பிறகு புகழ் உண்டாகும்.

சுக்கிரன் 11-ல் இருந்தால், பண வசதி உண்டாகும். சந்தோஷமாக வாழலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

ஆனால், சுக்கிரன், சனி, ராகுவுடன் அல்லது சுக்கிரன், சனி, சூரியனுடன் இருந்தால், பிள்ளை உருவாகும் வேளையில் பிரச்சினை உண்டாகும். பெண்ணுக்கு வயிறு சம்பந்தப் பட்ட நோய் வரும்.

மேற்கண்ட ஜாதக அமைப்புடையவர்கள் வைரத்தை அணிவதன்மூலம் பிரச்சினை களிலிருந்து விடுபடலாம்.

பரிகாரங்கள்

ரிஷப லக்னக்காரர்கள் கஷ்டங் களிலிருந்து விடுபடவும், மிதுன லக்னக் காரர்கள் தோஷங்களிலிருந்து விடுபடவும், கன்னி லக்னக்காரர்கள் மகிழ்வுடன் வாழவும், துலா லக்னக்காரர்கள் சிரமங் களிலிருந்து தப்பிக்கவும், மகர லக்னக் காரர்கள் இல்வாழ்க்கை ஆனந்தம் நிறைந்தாக இருக்கவும் வைரத்தை அணிய வேண்டும்.

செல்: 98401 11534

bala190419
இதையும் படியுங்கள்
Subscribe