வான்வெளியில் நவகிரகங்கள் தத்தம் நீள்வட்டப்பாதையில் ஒரு வினாடிகூட பிசகாமல் சுற்றிச் சுழன்றுகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், மின்காந்த அலைகள் நம் பூமியைச் சுற்றிவருவதுடன், பூமியில் வாழ் வோரிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்து கின்றன என்பது உலக நாகரிகங்கள் ஒப்புக் கொண்ட உண்மையாகும். மேற்கூறிய கிரகங் களின் தாக்கம் சாதகமாக அமையும்போது நற்பலன்களும், பாதகமாக அமையும்போது தீய பலன்களும் உண்டாகின்றன.
இவற்றை ஒருவரது ஜாதக அமைப் பிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மேலும் பலாபலன்கள் அவரவர் தசாபுக்தி மற்றும் க
வான்வெளியில் நவகிரகங்கள் தத்தம் நீள்வட்டப்பாதையில் ஒரு வினாடிகூட பிசகாமல் சுற்றிச் சுழன்றுகொண்டுதான் இருக்கின்றன. அவற்றிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், மின்காந்த அலைகள் நம் பூமியைச் சுற்றிவருவதுடன், பூமியில் வாழ் வோரிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்து கின்றன என்பது உலக நாகரிகங்கள் ஒப்புக் கொண்ட உண்மையாகும். மேற்கூறிய கிரகங் களின் தாக்கம் சாதகமாக அமையும்போது நற்பலன்களும், பாதகமாக அமையும்போது தீய பலன்களும் உண்டாகின்றன.
இவற்றை ஒருவரது ஜாதக அமைப் பிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மேலும் பலாபலன்கள் அவரவர் தசாபுக்தி மற்றும் கோட்சார நிலைகளுக்கேற்ப அமைகின்றன.
பாதகமாக அமையும்போது ஏற்படும் தீயபலன்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் தக்க பரிகார முறைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பரிகார முறைகளில் ஒன்றாக அற்புத நவகிரகச் சக்கரத்தைக் கருதலாம். இதுபோன்ற சக்கரத்தை அறிவுச்சுடர் என்று போற்றிப் புகழப்பட்ட மாமன்னர் சாலமன் தனது ராஜமுத் திரையாக (Royal seal) பயன்படுத்தி வந்தார் என்பதும் சிறப்பம்சம் எனலாம்.
நவகிரகச் சக்கர தத்துவ விளக்கம்
உலகில் உயிர்கள் தோன்றி, பிறப்புக்குக் காரணமாக அமைவது சூரியன். அந்த உயிருக்கு உருவமாகிய உடலைத் தருவது சந்திரன்.
உயிரும் உடலும் சேர்ந்து பிறந்த குழந்தை வளர்ச்சி பெற உடவறுதியும் பலமும் தருவது செவ்வாய்.
வளர்ந்த குழந்தைக்கு கல்வியறிவு, தொழில் ஆகியவற்றை அளிப்பது புதன்.
பருவத்தில் வரும் காதல், காமம், துணை, இல்லறவாழ்வு, இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளிப்பது சுக்கிரன்.
தொடர்ந்து மக்கட் செல்வம், தனம், உயர்வு, முன்னேற்றம், புகழ் ஆகியவற்றைத் தருவது குரு.
பின்னர் வயது முதிர்வு காரணமாக வரும் இறப்புக்குக் காரணமாக அமைவது சனி.
இறந்த உயிர் மீண்டும் சூரியனை அடைந்து மறுபடியும் உயிர் பெறுகிறது.
இந்த பிறப்பு- இறப்பு- பிறப்பு என்னும் நிகழ்ச்சி சங்கிலித் தொடர்போல நிகழும் காலத்தின் கட்டாயம்- காலத்தின் சுழற்சி என்றே கருதலாம். இதன்மூலம் உலக உயிர்கள் மற்றும் கிரகங்களுக்கிடையேயான பிணைப்பு நன்கு புலனாகிறது. இதில் நிழல் கிரகமான ராகுவை சனி கிரகத்துடனும், கேதுவை செவ்வாய் கிரகத்துடனும் ஒப்பிடலாம்.
நவகிரகச் சக்கரப் பயன்பாடு
மேற்கூறிய நவகிரகச் சக்கரம் பொதுவாக கடைகளில் நேரிடையாகக் (ரெடிமேட்) கிடைக்காது என்றே கூறலாம். இந்த சக்கரத்தை தூய வெள்ளிக்கம்பிகள் இணைப்பு கொண்டு நட்சத்திர வடிவில் தயாரித்துக் கொள்வதே சாலச் சிறந்தது. இவ்வாறு தயாரித்த நவகிரகச் சக்கரத்தை நல்ல நாள், நேரத்தில் மார்பில் படும்படி அணிந்துகொள்ளும் முன்னர் கீழ்க்காணும் நவகிரக மந்திரத்தை உச்சரித்து (அனுதினமும்) பிறகு அணிந்துகொள்ளலாம்.
"ஓம் ஹ்ரீம் ஆதித்யாய சோமாய
மங்களாய புதாய ச குரு சுக்ர
சனிப்யச்ச ராகு கேதவே நமோ நம:'
நவகிரகச் சக்கரம் மார்பில் படும்படி மஞ்சள் கயிறு அல்லது வெள்ளிக்கம்பி கொண்டு இணைத்து அணிந்து கொள்ளலாம்.
ஆன்மிக அன்பர்கள் பலர் இப்படிப் பட்ட நவகிரக சக்கரத்தைத் தயாரித்து அணிந்து வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டனர் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.
இறைவன் அருள்பெறுவோம் என்ற முழுநம்பிக்கையுடன் இவற்றைச் செயல்படுத் தினால் பலப்பல நன்மைகள் வருவது உறுதி.
செல்: 74485 89115