மானிட வாழ்வில் நவகோள்கள் தங்களின் ஆதிக்கத்தை எவ்வாறு பிரதிபலிக் கின்றன என கணிப்பதே ஜோதிட சித்தாந்தம். பல அடுக்கு கண்ணாடி மாளிகையில் சிலரும், சாலையோர கூடாரங்களில் பலரும் வாழ நேரிடுவதற்குக் காரணம் ஜாதக கிரகப் பலனேதான். உங்களின் ராஜயோக ஜாதகப்படி யாருக்கு நல்ல அந்தஸ்தான வாழ்கை, அதிகார உயர்பதவி அமையும் என்பதை விளக்கவே இங்கு சில வரிகள்- குரு அருளால்!
ஏழை- பணக்காரர் என யாருக்குமே உயர்பதவியில் இருந்தால் மட்டுமே மரியாதை, மதிப்பு, செல்வாக்கு ஏற்படும். நல்ல பதவி யோகத்தைத் தரும் கிரக அமைப்புகளில், சிம்மம் சுபத்துவமாகி, சிம்மாதிபதி சூரியனும் திக்பலம் பெறவேண்டும் என்பது அடிப்படை ஜோதிடம்.
மேஷ ராசி, மேஷ லக்ன ஜாதகர்களுக்கு குரு உச்சமாகி, சுக்கிரன் மேஷத்தில் நின்று, சூரியனும் சிம்மத்தைக் காண அரசாளும் பதவி நிச்சயம். சுபருடன் கூடிய சுக்கிரனும் சனியும் கேந்திர கோணங்களில் அமைய, பொதுப்பணித்துறை- நிதித்துறைகளில் அதிகார பதவியுடன் மேல்வருமானமும் அந்தஸ்தும் தரத்தான் செய்யும்.
எப்போதென்றால், 11- 10, 2- 6-ஆம் வீட்டிற்குரிய கிரக தசையில், ரிஷப லக்ன 10-ல் சனி ஆட்சிபெற்ற நபர்களுக்கு உயர்பதவி, அந்தஸ்து, குலதெய்வ அருள் கிட்டும். மாவட்ட கலெக்டர், மந்திரிகளின் உதவியாளர்கள் (டஉஞ/ ஊஊ), தாசில்தார்கள் பலரது ஜாதககத்தில் மிதுன லக்னமாகி கன்னியில் புதன் உச்சம்பெற்ற அமைப்பில், இவர்களுக்கு பதவி, பணம் தந்திருப்பது வெள்ளிடை மலை.
நிர்வாகத் திறமையினால் உயர்வடையும் ஜாதகநிலை இது. தலைமைப் பதவியிலுள்ள சிம்ம லக்னப் பெண்களின் (ள்ங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ஹ் & ள்ங்ஸ்ரீற்ண்ர்ய் ட்ங்ஹக்) செவ்வாய் மகரத்திலும், புதன் கன்னியிலும் பலம்பெறுவதைக் காணமுடிகிறது.
குரு, செவ்வாய் இணைந்து வேறொரு சுபரும் சம்பந்தமாக, கடக லக்ன ஜாதகர் களுக்கு திடீர் அரசாங்கப் பதவி, குலதெய்வ அருள், பேச்சுத்திறமை, வாய்ஜாலங்களால் வள வாழ்வு கட்டாயம் அடைவார்கள்.
கன்னி லக்ன வாசகர்களுக்கு, சந்திரனோடு சுக்கிரன் கூடிநின்று, தனுசுவில் குரு ஆட்சிபெற, நல்ல பதவி யோகம் தரும்.
புதனுடன் குரு இணைந்து 4, 7, 10-ல் நின்றால் சொகுசான வாகனம், பங்களா வசதிகளுடன் அந்தஸ்தான வாழ்வேதான்.
மீன லக்ன ஜாதகர்களுக்கு சுபருடன் இணைந்த செவ்வாயும் குருவும், கும்ப லக்னத் தாருக்கு செவ்வாயும் சுக்கிரனும் ஒரே ராசியில் சுபத்துவமானால், பொறுப்புள்ள பெரிய பதவிகளில் செல்வாக்காக வலம்வருவார்கள்.
சிம்மம் மற்றும் சிம்மாதிபதி சூரியன் பலம்பெற்ற இருபாலருக் குமே 9, 10-ஆமதிபதிகள் இணைந்து, வேறொரு சுபரும் பார்த்தவர்களுக்கு, 10, 9, 6, 3-ஆம் அதிபதிகளின் கிரக தசா நடப்பில், தனுசு, விருச்சிகம், துலா ராசி- லக்னதாருக்கு அரசாங்க உயர்பதவி,
அந்தஸ்தான வாழ்க்கை அமைந்திருப்பது என்றும் மாறாத ஜோதிட நியதி.
முடிவுரையாக, சூரிய- சந்திரர்கள் தமக்குள் கேந்திரமாகி குருவால் பார்க்கப் பட்ட ஒரு சிம்ம ராசி- லக்ன ஜாதகருக்கு, லக்னாதிபதிக்கு வீடுகொடுத்த சனியும் உச்சமான நிலையில், நாட்டின் உயர்பதவி கிடைத்திருப்பதை தமிழகம் நன்கறியும்... அறியவேண்டியது ஆயிரம் இருக்கிறது இந்த வேத சாஸ்திரத்தில்.
10-ஆமதிபதி சிம்மத்தில் நின்றவருக்கும், 5-ஆமதிபதி 11, 10-ல் ஆட்சி, உச்சம் பெற்றவர்களுக்கும் நிச்சயமாக அந்தஸ்தான பதவி யோகம் உண்டு. சிம்மம், கடகம், மிதுனம் லக்னப் பெண்களைத் தவிர்த்து மற்ற லக்னத்தாருக்கு 2-ல் சுக்கிரன் (லட்சுமீகரம்) அந்தஸ்து தருவார். இவர்களின் 3-ஆமதிபதியும் 11-ல் நின்றால் மறைமுக மேல்வருமானம் உண்டு. சிரமமின்றி பணம் குவிப் பார்கள்.
வாசக நெஞ்சங்களுக்கு வருங் காலம் வளமானதாக அமைய முக்கண் முதல்வன் அருளட்டும்...
செல்: 94431 33565