Advertisment

கூட்டுத்தொழிலால் அதிர்ஷ்டம் யோகம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/good-luck-partnership-yoga-prasanna-astrologer-i-anandi

ரு மனிதனுக்கு சமுதாய அங்கீ காரத்தைத் தரக்கூடியது தொழில். தன் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் தொழில் செய்யவேண்டும் என்பது உலகநியதி.

Advertisment

ஒருவருக்குப் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றைக் கொடுப்பதில் வேலையைவிட தொழிலே முன்னிலை வகிக்கிறது.

சொந்தத் தொழில்மூலமாக பணம் ஈட்டுவதில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, முதலீட்டை மூலதனமாகக் கொண்ட தொழில்; இரண்டாவது வகை மூளையை மூலதனமாகக் கொண்ட தொழிலாகும். இரண்டாவது வகைத் தொழிலில் இடர்கள் குறைவு. குறைந்த உழைப்பில், நிறைந்த வருமானம் கிடைக்கும். ஆனால் முதலீட்டை மூலதனமாகக் கொண்ட தொழிலில் இடர்கள் அதிகம். கடினமாக உழைக்கவேண்டும். முதலீடு அதிகமாகத் தேவைப்படும். தொழில் இடர்களைக் குறைக்கவும் மூல தனத்தை அதிகரிக்கவும் பலர் கூட்டுத் தொழிலை விரும்புகிறார்கள். சுயதொழிலில் முதலாளியாக கொடிகட்டிப் பறந்த சிலர் கூட்டுத்தொழிலில் உலக அளவில் பிரபல மடைகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட காலம் கூட்டுத்தொழிலில் சம்பாதிக்கிறார்கள். பிறகு இருந்த இடம் தெரியாமல் போகிறார் கள். கூட்டுத் தொழில் யாருக்கு சிறப்பான யோகத்தைத் தரும் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

ஒருவர் தொழில் ஸ்தானம் எனப்படும் 10-ஆம் பாவகத்தின் மூலம் பொருளாதாரம் பெற, அவருடைய ஜாதகம் கீழே குறிப்பிட் டுள்ள நிலைகளில் உதவி புரியவேண்டும்.

லக்னம்

Advertisment

ஜாதகரைக் குறிக்கும் லக்னம், லக்னாதிபதி வலுவாக இருந்தால் ஜாதகரின் செயல் பாடுகள் சிறப்பாக இருக்கும். எந்தவொரு யோகமும் லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும்போது மட்டுமே அந்த யோகம் முழு யோகத்தைத் தரும். லக்னம் எவ்வளவுக்கு வலுத்திருக்கிறதோ அவ்வளவுக்கு ஜாதகரது உயர்விருக்கும்.

லக்னத்திற்கான காரக கிரகம் சூரியன். சூரியன் ஆத்ம காரகன். எனவே ஜாதகத்தில் சூரியன் பலம்பெற வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம்பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன்- சுயமாக முடிவெடுக்கக்கூடிய நபராக இருப்பார் .அதேபோன்று லக்னம் பலமாக அமைந்தால்தான் நீண்ட ஆயுள், ஆரோக்யம் கிடைக்கும்.

தன ஸ்தானம்

இரண்டாம் பாவகம் எனும் தனம், வாக்கு ஸ்தானம் பலம்பெற்ற ஒர

இரண்டாம் பாவகம் எனும் தனம், வாக்கு ஸ்தானம் பலம்பெற்ற ஒருவரே தனது சாமர்த்தியமான- இனிமையான பேச்சால் அனைவரையும் கவரமுடியும். வாக்கு சாதுர்யம் இல்லாத ஒருவரால் தொழில்செய்ய முடியாது. தன ஸ்தானத்திற்கு லக்ன தொடர்பிருந்தால் தொடர் தனவரவு இருந்துகொண்டே இருக்கும். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாக்கவேண்டும் என்ற அறிவும், பணம் மேன்மேலும் வரக்கூடிய வழிகளைப் பெருக்கக்கூடிய சுயசிந்தனையும் இருக்கும். இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் பேச்சுத் திறமை இருக்காது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாது. பொருள்வரவில் ஏற்ற- இறக்கம் நிலவும்.

உபஜெய ஸ்தானம் (3, 6, 11)

லக்ன பாவத்தின் பாவாத் பாவம் 3-ஆம் பாவகம். ஒருவர் தான் எடுத்த முயற்சியில் வெற்றிபெற விடாமுயற்சி வேண்டும். "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பது பழமொழி. "முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர்' என்பது புதுமொழி. முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவுமில்லை. தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்தவேண்டும்.

ஆறாம் பாவகமென்றால் அனைவருக்கும் கடன், நோய், எதிரி மட்டுமே ஞாபகம் வரும். அதாவது ஆறாம் பாவகம் எனும் பொருள்கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3-ஆம் பாவகம்) தொழில் செய்து (10-ஆம் பாவகம்) லாபம் (11-ஆம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

இதையே வேறுவிதமாகச் சொன்னால் பொருள்கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட, உழைக்க முயற்சிசெய்து லாபமீட்டுவார். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத் தருவது ஆறாம் பாவகமே. அப்படியென்றால் ஆறாம் பாவகம் நன்மைசெய்யும் பாவகம்தானே. அது அசுப பாவகம், நோய், கடனென்று சிலர் பயப்படுகிறார்கள். வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தினால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம்தான். வாங்கிய கடனைத் திரும்ப அடைக்க முடியாதவர் களுக்கு ஆறாம் பாவகம் சாபம்தான் என்பதிலும் ஐயமில்லை. தொழிலில் வெற்றி பெறவேண்டும் என்றால் ஜாதகருக்கு போட்டி மனப்பான்மையும், எதிரிகளை வீழ்த்தி வெற்றிபெறக்கூடிய அமைப்பும், கடன்மூலம் பொருளாதாரம் ஈட்டக்கூடிய தன்மையும் மற்றும் பணம் கொடுத்தல்- வாங்களில் புத்திசாலித்தனமும் அமையவேண்டும்.

எதிர்பார்த்த லாபத்தை அடைய லக்னத்திற்கு 11-ஆம் பாவகமும், அதன் அதிபதிகளும் பலம்பெறுவதன்மூலம் பணவரவு சிறப்பாக இருக்கும். 6, 11-ஆம் பாவகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தொழிலுக்குத் தேவையான முதலீட்டைத் திரட்டமுடியும்.

cc

தொழில் ஸ்தானம் (10-ஆம் பாவகம்)

10-ஆமிடம், 10-ஆமதிபதி, 10-ஆமதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10-ஆமிடம், சனிக்குத் திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்கிறது.

பத்தாமிடம் பலம்பெற்று, பத்தாமதிபதிக்கு கேந்திர திரிகோண சம்பந்தம் இருந்தால் சொந்தத் தொழில் செய்யலாம்.

பத்தாமிடத்தை குரு போன்ற சுபகிரகம் பார்க்கவேண்டும் அல்லது பத்தாமதிபதியை குரு பார்க்கவேண்டும்.

பத்தாமதிபதி உச்சம்பெற்று சுப கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், பத்தாமிடத்தில் உச்சம்பெற்ற சுப கிரகங்கள் இருந்தாலும் தொழிலால் செல்வாக்கு, புகழ் பெறுவார்கள். தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

2, 11-ஆமதிபதிகள் பலம்பெற்றால் சொந்தத் தொழில் செய்யலாம்; பெரும் லாபம் கிடைக்கும்.

10-ஆமதிபதியானவர் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று, நட்பு கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைந்தால் தொழில் ஸ்தானம் வலுப்பெறும். தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம்பெற்று நிற்கின்றதோ, அத்தனைத் தொழில்கள் செய்யக்கூடிய வாய்ப்பமையும். அதுபோல 10-ஆமதிபதி எத்தனை கிரக சேர்க்கைபெற்று பலம்பெற்றிருக்கிறதோ அத்தனைவிதமான தொழில்கள் செய்யக்கூடிய யோகமும் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திரம்

ஜனனகால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும், ஒருவர் தன் தொழிலைத் திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுபவலிமை பெற்றவர்கள் சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற- இறக் கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே தொழிலில் வெற்றிபெற முடியும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத்திற்கு இணையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

சனிபகவான்

பத்தாமதிபதியை மட்டும் வைத்து ஒருவரின் தொழிலை நிர்ணயிக்கமுடியாது. அதற்கு வலுசேர்ப்பது தொழில் காரக கிரகம் சனி. ஒருவருடைய ஜாதகத்தில் சனி பலம்பெற்றால் தொழில் நன்றாக இருக்கும். சனியோடு சம்பந்தம்பெறும் கிரகங்களின் காரகத்துவத் தொழிலே ஜாதகருக்கு அமையும். சனியோடு ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சம்பந்தம் பெற்றால், எந்த கிரகத்தின் தொழிலை ஜாதகர் செய்தால் மேன்மையடையமுடியும் என்ற சந்தேகம் தோன்றும். ஷட்பல நிர்ணயத்தில் எந்த கிரகம் வலிமைபெறுகிறது என்பதை நிர்ணயம் செய்யவேண்டும். வலுவான கிரகத்தின் காரகத்துவத் தொழில் ஜாதகரை இயக்கும். வலுவற்ற கிரகங்களின் காரகத்துவத் தொழில் உப தொழிலாக அமையலாம்.

கூட்டுத் தொழில்

மேலே கூறியுள்ள அனைத்தும் ஓரளவுக்கு சாதகமாக இருந்தால் சுயதொழில் புரியமுடியும். முதலீட்டையும், லாபத்தையும் அதிகரிக்க சிலர் கூட்டுத்தொழில் செய்ய விரும்பலாம்.

ஏழாம் பாவமென்பது கூட்டுத் தொழிலையும், பொதுஜனத் தொடர்பையும் குறிக்கும். கூட்டுத்தொழில் செய்து பொருள் ஈட்டக்கூடிய அமைப்பு ஜோதிடரீதியாக சிலருக்கு மட்டுமே அமைகிறது. ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10-ஆமிடம் தொழில் ஸ்தானமாகும். 10-க்கு 10-ஆமிடமான 7-ஆம் பாவகம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் கூட்டுத் தொழில் கைகொடுக்கும். 10, 7-ஆமதிபதிகளுக்கு கேந்திர, திரிகோண சம்பந்தம் இருந்தாலும், 10, 7-ஆமதிபதிகள் பரிவர்த்தனை பெற்றா லும் கூட்டுத் தொழில்மூலம் அபரிமிதமான பொருள் சேர்க்கை கிடைக்கும்.

7-ஆமதிபதி கேந்திர திரிகோணாதி பதிகளுடன் சம்பந்தம் பெறுவதுடன், 10-ஆமதிபதியுடன் இணையும் பலம்பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கேற்ற நபர்கள் தொழில்ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு 7-ஆம் பாவகம் வலிமையாக இருக்கும். 10-ஆமிடமான தொழில் ஸ்தானம் பலம் குறைவாக இருக்கும். பணபலம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கும் கூட்டுத்தொழில் சிறக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும் அமைப்பைப் பெற்றிருந்தாலும், ஜாதக ரீதியாக யாருடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யலாம் என்ற கேள்வி இங்கே எழும்.

2, 7, 10-ஆமதிபதிகள் பலம்பெற்றிருந்தால் குடும்பத்திலுள்ள நபர்கள் அல்லது உறவினர் களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

10, 7-ஆமதிபதிக்கு சூரியன் அல்லது 9-ஆமதிபதி சம்பந்தம் பெற்றால் தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளுடனும் தொழிலுக்காக கூட்டு சேர்வார்கள்.

10, 7-ஆமதிபதிக்கு 4-ஆமதிபதி அல்லது சந்திரனுடன் புதன் தொடர்பிருந்தால் தாய் மற்றும் தாய்வழி உறவுகளுடன், தாய்மாமாவுடன் தொழில் இணைவுண்டு.

10, 7-ஆமதிபதிக்கு குரு, செவ்வாய், 3, 11-ஆமதிபதி சேர்க்கை பெற்றால் உடன்பிறந்த சகோதர- சகோதரிகள் அல்லது மாமனா ருடன் இணைந்து கூட்டுத்தொழில் நடத்து வார்கள்.

10, 7-ஆமதிபதிக்கு புதனுடன் கூட்டிருந் தால் நண்பர்களைப் பங்காளிகளாக இணைக்கலாம்.

5, 7, 10-ஆம் பாவகங்கள் மற்றும் குரு சம்பந்தமிருந்தால் பிள்ளைகளுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்வார்கள்.

10, 7-ஆமதிபதிக்கு சுக்கிரன் தொடர்பிருந்தால் தம்பதிகள் இணைந்து தொழில் கூட்டு அமைக்கலாம் அல்லது மனைவிவழி உறவினர்களுடன் இணைந்து தொழில் நடத்தலாம்.

10-ஆமதிபதி மற்றும் சனி பலம்பெற்றால் நம்பிக்கையான, திறமையான வேலை யாட்கள் கிடைக்கப் பெறுவதுடன், வேலை யாட்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, அதன்மூலம் சம்பாதிப்பார்கள்.

யார் கூட்டுத்தொழில் செய்யக் கூடாது?

ஏழாமிடம் கூட்டுத்தொழிலைப் பற்றிக் கூறுமிடம் என்பதால், 7-ஆமதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்து பகை, நீசம் பெற்றிருந்தால், பாதக ஸ்தான சம்பந்தமிருந்தால், அவர்கள் கூட்டுத்தொழிலைத் தவிர்ப்பது நலம்.

உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7-ஆமிடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத்தொழில் பாதகத்தைத் தரும்.

ஒருவருடைய ஜாதகத்தில் 2, 7, 10-ஆம் பாவங்கள் சுபத்துவம் பெற்றால் கூட்டுத்தொழில்மூலம் ஜாதகருக்கு சமுதாய அந்தஸ்து புகழ், கௌரவம் ஆகியவை கிட்டும்.

பரிகாரம்

ஒருவருடைய ஜாதகத்தில் 7-ஆமிடம் பலம் குறைந்து கூட்டுத் தொழிலால் சங்கடங்களை அனுபவிப்பவர்கள் 21 சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலான நித்திய பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.

செல்: 98652 20406

bala110322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe