இளையதாரத்தால் அதிர்ஷ்டம்! -க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/good-luck-junior-ka-gandhi-murugeshwar

11-ஆம் இடமென்பது இளைய தாரத்தையும் குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் தனி நபர், தனக்குத் தேவையானதை சம்பாதித்து வாழவே போராட்டமாக இருக்கிறது. இந்நிலையில் முதல் திருமணத்திற்குப் பெண்தரவே பல்வேறு விதிமுறைகளை விதிக்கிறார் கள். அழகான, படித்த, அரசு அல்லது நிலையான வேலையிலுள்ள, தாய்- தந்தை அருகிலில்லாத, உடன்பிறப் பற்ற, சொந்த பந்தமில்லாதவராக, மாநகராட்சிப் பகுதியில் பங்களா, கார் வைத்திருக்கும் மாப்பிள்ளைக்கு மட்டுமே பெண்கொடுக்க விரும்பும் பெற்றோர் மிகுந்துவரும் நம் ஊரில், திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் அலைந்துகொண்டிருக்கிறார் கள். ஒரு மனைவியைக் கட்டியே அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இளையதாரம் என்பது இயலாத காரியம் என நினைக்கும் வேளையில், இளையதாரம் அமைவது, இளையதாரத்தால் லாபமென்பது ஆச்சரிய, அதிசயமாகவே தெரியும். இரண்டு மனைவிகட்டி சந்தோஷமாக வாழும் சிலரைப் பார்த்துப் பொறாமை கொண்ட ஆண்கள் அதிகம்.

பிடிக்காமல் திருமணம் செய்தவர்கள் அல்லது நிர்பந்தத்தின் காரணமாகத் திருமணம் செய்தவர்களில் பலர், திருமணத்திற்குப்பிறகு ஒருவரையொருவர் நன்கு புரிந்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு, "எனக்கு நீ, உனக்கு நான்' என காதல்மொழி பேசி திருமணம் செய்தவர்கள் சிலர், 'உன்னைப்போய் கல்யாணம் பண்ணினேன் பார்' என தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து பிரிந்திருக்கிறார்கள். முறையாக செய்த முதல் திருமணத்தில் ஏதாவதொரு வகையில் ஏமாற்றம் அடைந்தவர்கள் பிரிவை சந்திக்க நேர்கிறது. எந்த குறையுமின்றி, நிம்மதியாக, சந்தோஷமாக வாழும்போது சிலருக்கு திடீரென்று விபத்து அல்லது நோய் ஏற்பட்டு துணைவரை இழந்துவிடுகிறார்கள். அத னால் இளையதாரம் ஏற்படுத்தவேண்டிய கட்டாயம்ஏற்படுகிறது.

பெரும்பாலான ஆண்கள் சபலத்தால் இளைய தாரத்திற்கு ஏங்குவார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்டபடி எல்லாம்இளையதாரம் கிடைப்பதில்லை.சிலருக்கு மட்டும் கணவன்- மனைவி இருக

11-ஆம் இடமென்பது இளைய தாரத்தையும் குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் தனி நபர், தனக்குத் தேவையானதை சம்பாதித்து வாழவே போராட்டமாக இருக்கிறது. இந்நிலையில் முதல் திருமணத்திற்குப் பெண்தரவே பல்வேறு விதிமுறைகளை விதிக்கிறார் கள். அழகான, படித்த, அரசு அல்லது நிலையான வேலையிலுள்ள, தாய்- தந்தை அருகிலில்லாத, உடன்பிறப் பற்ற, சொந்த பந்தமில்லாதவராக, மாநகராட்சிப் பகுதியில் பங்களா, கார் வைத்திருக்கும் மாப்பிள்ளைக்கு மட்டுமே பெண்கொடுக்க விரும்பும் பெற்றோர் மிகுந்துவரும் நம் ஊரில், திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் அலைந்துகொண்டிருக்கிறார் கள். ஒரு மனைவியைக் கட்டியே அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் இளையதாரம் என்பது இயலாத காரியம் என நினைக்கும் வேளையில், இளையதாரம் அமைவது, இளையதாரத்தால் லாபமென்பது ஆச்சரிய, அதிசயமாகவே தெரியும். இரண்டு மனைவிகட்டி சந்தோஷமாக வாழும் சிலரைப் பார்த்துப் பொறாமை கொண்ட ஆண்கள் அதிகம்.

பிடிக்காமல் திருமணம் செய்தவர்கள் அல்லது நிர்பந்தத்தின் காரணமாகத் திருமணம் செய்தவர்களில் பலர், திருமணத்திற்குப்பிறகு ஒருவரையொருவர் நன்கு புரிந்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு, "எனக்கு நீ, உனக்கு நான்' என காதல்மொழி பேசி திருமணம் செய்தவர்கள் சிலர், 'உன்னைப்போய் கல்யாணம் பண்ணினேன் பார்' என தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து பிரிந்திருக்கிறார்கள். முறையாக செய்த முதல் திருமணத்தில் ஏதாவதொரு வகையில் ஏமாற்றம் அடைந்தவர்கள் பிரிவை சந்திக்க நேர்கிறது. எந்த குறையுமின்றி, நிம்மதியாக, சந்தோஷமாக வாழும்போது சிலருக்கு திடீரென்று விபத்து அல்லது நோய் ஏற்பட்டு துணைவரை இழந்துவிடுகிறார்கள். அத னால் இளையதாரம் ஏற்படுத்தவேண்டிய கட்டாயம்ஏற்படுகிறது.

பெரும்பாலான ஆண்கள் சபலத்தால் இளைய தாரத்திற்கு ஏங்குவார்கள். ஆனால் அவர்கள் ஆசைப்பட்டபடி எல்லாம்இளையதாரம் கிடைப்பதில்லை.சிலருக்கு மட்டும் கணவன்- மனைவி இருக்கும்போதே இன்னொருவர் தொடர்புஅல்லது திருமணம் நடந்துவிடுகி றது.முதல் திருமணத்தால் தொல்லை அனுபவித்த சிலர், இளையதாரம் கட்டிக்கொண்டபின் திடீர் வளர்ச்சி பெற்று புகழ், முன்னேற்றம் பெறுகிறார் கள். இளைய தாரத்தால் யோகம் யாருக்கு?

முதல் தாரம்

"ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்தல் நன்று' என்பதைவிட, முதல் திருமண வாழ்க்கை சிறப் பாக இருந்தால் யாரும் மறுமணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். ஏழாமிடம் சுபவலுப் பெற்று சுபகிரகத் தொடர்புடன் அமைந்து சுபகிரகப் பார்வை பெற்றால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஏழாமிடம் என்னும் களத்திர ஸ்தானம் கெட்டவர்கள்- அதாவது ஏழில் நின்ற,ஏழாமிடத்தைப் பார்த்த கிரகங்கள் வலுவற்று பாவகிரகத்தால் பாதிக்கப்பட்டிருத்தல், ஏழாமதிபதி நின்ற இடத்தால் கெட்டு, ஏழாமதிபதியுடன் தொடர்புகொண்ட கிரகங்களால் ஏழாமிடம் பாதித்திருந்தால், முதல் திருமண வாழ்க்கை ஏதாவதொரு வகையில் கெட்டுப்போய்விடும். முதல் தாரம் முடிந்துவிடும்.

இளைய தாரம்

பதினொன்றாமிடம் இளைய தாரப் பலன்களைத் தரக்கூடிய இடம். ஏழாமிடத்தைவிட பதினொன்றாமிடம் வலுத்தால் இளைய தாரத்தைத் தந்துவிடும். ஏழாமிடத்தைவிட பதினொன்றாமிடம் சுபவலுப் பெற்றால் இளையதாரத்தால் லாபத்தையும், அசுபவலுப் பெற்றால் இரண்டாம் திருமண வாழ்வும் பாதிப்பைக் கொடுத்துவிடும். பதினொன்றாமிடத்தில் நிற்கும் சுப கிரகமும், பதினொன்றாமிடத்துடன் சுபகிரகத் தொடர்பும் இளைய தாரத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்.

yogam

முதல் திருமண முறிவு

முதல் திருமண வாழ்க்கையில் பல சோதனையும் வேதனையும் இருக்கும். ஆனா லும் பிரிவென்பது சிலருக்கு மட்டும் ஏற்பட்டுவிடுகிறது. ஏழாமிடத்தில் செவ்வாய், சனி, ராகு- கேது போன்ற பாவகிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறுதல் அல்லது இணைதல்,பார்த்தல், ஏழாமதிபதி 6, 8, 12-ல் இருத்தல், களத்திர ஸ்தானாதிபதி பகை, நீசம் பெறுதல் திருமண முறிவைத் தருகின்றன. 4, 13, 22 தேதிகளில் திருமணம் செய்தல் விவாகரத்தைத் தருகிறது. 8, 17, 26 தேதிகளில் மணம்செய்தவர்கள் மணமுறிவு அல்லது துணைவர் இழப்பை சந்திக்கிறார்கள். குரு, சுபகிரகப் பார்வைகள் விவாகரத்தைத் தவிர்க்கின்றன. மற்றபடி சந்தோஷமான- மனநிறைவான திருமண வாழ்க்கை இருக்காது.

கணவன்- மனைவி இழப்பு

நன்கு புரிந்துகொண்டு அனுசரித்து வாழ்ந்துவரும் தம்பதிகளுக்கு திடீர் மரணம் நிலைகுலையச் செய்யும். இளம் விதவையாய் வாழ்வதில் பல சிக்கல் இருப்பதைத் தவிர்க்க மறுமணம் செய்துகொள்வது உத்தமமென முடிவெடுப்பவர்கள் மிகச்சிலரே. ஏழாமிடத்தில் செவ்வாய், சனி இணைவு, இரண்டு, ஏழு, ஒன்பதாம் அதிபதிகள் கெட்டு செவ்வாய், சூரியனுடன் வலுப்பெற்றால் விதவை யோகத்தைத் தந்துவிடும். ஐந்தாமிடத்தில் சூரியன், செவ்வாய் வலுப்பெற்று குரு பார்வை பெற்றால் விதவையாக்கி மறுமணத்தைத் தரும். எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானம் கெடுதல், அஷ்டமாதிபதி நீசம், ஆறு, ஒன்பதாமதிபதி தசையானது கணவர் உயிரைப் பறிக்கும். சிலருக்கு மறைவிட அதிபதி தசை ஆரம்பிப்பதற்கு முன்புவரும் தசை முடிவில் துணைவரை இழக்கச்செய்யும். பொதுவாக, பதினொன் றாமிடம் 2, 5, 7, 9-ல் வலுப்பெற்றால் இளையதாரம் அமைகிறது. துணைவர் மறைவுக்குப்பின் சிலர் மறைமுகமாக வேறு பெண் தொடர்பை வைத்துக்கொள்கிறார் கள்.

முதல் மனைவி இருக்கும்போதே...

"கிளிமாதிரி மனைவி இருக்க குரங்கு மாதிரி வைப்பாட்டி' வைத்திருப்பதாக சிலர் சொல்வதுண்டு. அடுத்தவனைப் பார்த்து, "அவனுக்கு வந்த வாழ்க்கைய பாரு; ரெண்டு மனைவியோட ஜாலியா இருக்கான்பா,' "ரெண்டு பொண்டாட்டியும் சம்பாதிச்சுப் போடவும் முன்னேறிட்டான்,' '"இவன் இளைய தாரம் கட்டியபிறகு பணம் கொட்டுதய்யா' என விதவிதமாக ஆண்கள் பொறாமை கலந்து புலம்புவதைப் பார்த்திருக்கிறோம். ஏழாமதிபதி ஆறு, எட்டு, பன்னிரண்டில் இருந்து குருவின் பார்வை இருந்தால், மனைவியால் தொல்லை இருந்தாலும் பிரியமுடியாது. ஏழாமதிபதியைவிட பதினொன்றாமதிபதி பலம்பெற்று, இரண்டு, ஏழு, ஒன்பதாம் அதிபதிகள் வலுத்தாலும், ஐந்து, பதினொன் றாமதிபதி தொடர்பிருந்தால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் மனைவி வருவார்.

நான்காமிடம்

பெண்ணுக்கு நான்காமிடம் முக்கிய மான இடம். ஏனென்றால் கணவரின் இளைய தாரத்தைக் குறிக்குமிடம். நான்காமிடம் கெட்டால், பாவகிரகப் பார்வை, சேர்க்கை, தொடர்பேற்பட்டால் கணவருக்கு இன்னொரு பெண்மீது ஈடுபாடு உண்டாகும். நான்கா மிடத்தை சூரியன், சனி, ராகு பார்த்தால் சக்களத்தியால் தொல்லை உண்டாகும். ஏழாமிடத்திற்கு ஆறாமிடமான பன்னிரண்டா மிடத்தைக் கொண்டு கணவருக்கு இன்னொரு பெண்ணோடு உண்டாகும் தொடர்பைக் கண்டறியலாம். பன்னிரண்டாமிடம் பலம் பெற்று பன்னிரண்டாமதிபதி நான்கு, ஏழில் இருந்தால் அல்லது நான்கு ஏழாமதிபதியுடன் சேர்க்கை பெற்றால் வேறு பெண்ணால் நிம்மதி போகும். பன்னிரண்டாமிடம் பாவகிரகங்களால் பார்க்கப்பெற்று கெட்டால் கணவருக்கு இரண்டாம் மனைவிமேல்தான் ஈடுபாடு அதிகம் இருக்கும். சந்திரன், புதன், சுக்கிரனுடன் தொடர்புபெறுதல் கணவருக்கு வேறு பெண்ணோடு தொடர்பை உண்டாக்கும். சுபர் பார்வையற்று நான்கில் செவ்வாய், கேது இருந்தால்காதலித்து ஏமாந்து, இரண்டாம் தாரமாய் திருமணம் செய்துகொள்வர். சொல்லமுடியாத பிரச்சினைகளை சந்தித்து, மறைமுகமாய் முதல்தாரம் இழந்து இளையதாரத்தை மணப்பர்.

பெண்ணின் ஜாதகத்தில் மூன்றாமதிபதி ராகுவுடன் இணைந்து எங்கிருந்தாலும், கணவர் இருக்கும்போதே இன்னொருவர் தொடர்பைத் தரும். ஏழாமிடத்தை சனி, சூரியன் பார்த்தல், செவ்வாய், சனி, சுக்கிரன் இணைவு,ஏழாமதிபதி ஆறில் இருக்க நான்காமதிபதி வலுத்தால் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பை ஏற்படுத்தும். ஏழாமிடத்தில் கேது, நான்கில் செவ்வாய், ராகு, கேது, சனி,பன்னிரண்டாமிடம் கெட்டிருத்தல்,சுக்கிரன் செவ்வாய், சனி இணைவு, சுக்கிரன் கெட்டு சூரியன், செவ்வாய் பார்வை போன்ற கிரக அமைப்புகள் மனைவிக்கு வேற்றுநபரோடு உறவைத் தந்து விடும். குருபோன்ற சுபகிரகப் பார்வை மற்றும் சுபகிரக சம்பந்தம் இருந்தால் வேறு தொடர்புகளை உருவாக்காது. பொதுவாக குழந்தைகளுக்கு ராகு தசை, ஏழரைச்சனி நடந்தால் தாய்- தந்தைக்குள் தொழில், வெளிநாட்டு வேலை, கருத்து வேறுபாடு என ஏதாவதொரு வகையில் பிரிவைத் தந்துவிடும். சிலருக்கு தாய்- தந்தைக்கு மரண கண்டத்தையும் தந்துவிடும். சிலரது தந்தைக்கு இளையதாரம் அமையும் அல்லது வைப்பாட்டி வைத்துக்கொள்வார்கள். இதனால் குடும்பத் தில் திடீர் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுவிடுகிறது.

இளைய தாரத்தால் யோகம்

பதினொன்றாமதிபதி சுபகிரகமாக இருந்து கேந்திர திரிகோணம் பெறுதல், பதினொன்றா மதிபதி ஆட்சி, உச்சம் பெறுதல், ஏழாமதிபதி யுடன் தொடர்பு ஆகியவை இளைய தாரத் தால் யோகத்தைத் தரும். இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாமதிபதி வலுப்பெற்று சுப ஸ்தானத்தில் இருந்தால் இளைய மனைவி யால் பணம், புகழ் கிட்டும். ஏழாமதிபதி பதினொன்றில், பதினொன்றாமதிபதி ஏழில் பலம்பெற்று பரிவர்த்தனை பெற்றால் பல தாரத்தைத் தரும். மனைவி இருக்கும்போதே பதினொன்றாம் அதிபதி தசாபுக்திகளில் இளைய மனைவி அமைந்து பதவி, புகழ், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு பெற்றவர்கள் உண்டு. பொங்குசனி காலத்தில் சிலருக்கு இளைய தாரம் அமைந்து முன்னேற்றம் பெற்றவர் களும் உண்டு.

பரிகாரம்

ஏழாமதிபதி ஏதாவதொரு விதத்தில் பாதிக் கப்பட்டிருந்தாலோ, தோஷங்கள் ஜாதகத்தில் மிகுந்திருந்தாலோ தாமதத் திருமணமே சிறந்த பரிகாரம். களத்திர ஸ்தானம் கெட்டவர்கள்- பெண்கள் இருபத்தேழு வயதிற்குப்பிறகும், ஆண்கள் முப்பத்தோரு வயதிற்குப் பின்பும் திருமணம் செய்துகொள்வது நன்று. சிலர் யாரையாவது நம்பி காதலித்து ஏமாந்து, தாமதமாக இளைய தாரத்தை அடைவர். பதி னொன்றாமிட பலத்தால் நல்வாழ்க்கை உண்டு. ஏழரைச்சனிக் காலம், அஷ்டமச்சனி, ஆறு, ஒன்பதுக்குடையவன் தசை நடக்கும்போது கவனம் தேவை. துணைவரை இழக்காமலிருக்க தக்க பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். தோஷ ஜாதகங்களை சரியாக ஆய்வுசெய்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால், முதல் தாரமே நன்மை தரும். இளைய தாரமாவது இன்புற்றிருக்க பதினொன்றாம் இடத்தின் நிலையறிந்து பரிகாரம் செய்தால் இல்லறம் நல்லறமாகும்.

செல்: 96003 53748

bala191121
இதையும் படியுங்கள்
Subscribe