சென்ற இதழ் தொடர்ச்சி...
பதினொன்றாம் அதிபதி மேஷம் முதலான எட்டு வீடுகளில் நிற்கும் பயன் களைக் கடந்த இதழில் கண்டோம். மற்ற பாவங்கள் இங்கே...
ஒன்பது
பதினொன்றாமதிபதி பாக்கியத்தில் அமர்ந்தால் தந்தையால் லாபம் அல்லது தந்தைக்கு லாபம் உண்டாக்கும். தான் பெற்ற பிள்ளைகளாலும் லாபம் உண்டு.
குடும்பத்தில் சொந்த நிலம், வாகனம் இருக்கும். சாதாரணமாக முயற்சித்தாலே அரசுப்பணி கிடைக்கும். நன்கு உழைத் தால் அரசாங்கத்தால் உயர்பதவி கிடைக்கப் பெற்று புகழுடன் வாழ்வார். நல்ல நண்பர் களால் ஆதாயம் பெறுவார். நல்ல விஷயங் கள் தானாகத் தேடிவரும். குழப்பம், சலனம், சபலமில்லாத புத்தி, செயலால் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார். லாபம் லாபம் என அலையாமல், தானாக செய் தொழிலில் முன்னேற்றம் பெறுவார். எல்லா வகையான ஆனந்தமும் தேடிவரும்.
அதிர்ஷ்டசாலி. கோவில் கும்பாபிஷேகம், ஆன்மிகத்தில் அதிக ஆவல்கொண்டு பல சேவைகளை செய்வார். அறநிலையத் துறையால் லாபமுண்டு. நல்ல எண்ணங்களால் நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடிய வர். ஏதாவதொரு வகை யில் பதினொன்றாமதி பதி கெட்டால் எதிர் பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்படும். ஆசைகளைக் காட்டி மோசம் செய்யும். பாவகிரக பாதிப்பால் பாக்கியக் குறையை உண்டாக்கிவிடும்.
பத்து
பதினொன்றாமதிபதி பத்தில் இருந்தால் கௌரவமான பதவிகள் தேடிவரும்.
அரசாங்கத்தில் வேலை, உயர்பதவி தானாகக் கிடைக்கும்.அரசியலால் நன்மையடைவார். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் லாபத்தை அடைவார். யாரிடம் எப்படி வேலைவாங்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டு காரியத்தை சாதிப்பார். நண்பர்களால் தொழில் மேன்மையுண்டு. தொழில் மற்றும் கர்ம ஸ்தானம் என்பதால், ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.
கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர். எந்த விதமான சுகத்திற்கும் குறை வராது. தான் நினைத்ததை நினைத்தபடி செய்து வாழ்வார். கடவுள்பக்தி பல நேரங்களில் இவரைப் பாதுகாக்கும். எதற்கும் அஞ்சாதவராக இருப்பார். நல்ல காரியங்கள், தெய்வீக சிந்தனையால் மேலும் மேலும் உயர்ந்த இடத் திற்குச் செல்வார். அடுத்தவர் பசிகண்டு உதவிகள் செய்பவர். பிறருக்கு உதவிசெய்ய, அடுத்தவருக்குக் கொடுக்குமளவு உயர்ந்த இடத்தில் இருப்பார். நல்ல காரியங்களில் துணிந்து ஈடுபாடு காட்டக்கூடியவர். லாபாதி பதி கெட்டுப்போனால் தொழில்வகை தொல்லைகள் பல அனுபவிக்கவேண்டி வரும். தொழிலில் பாதிப்பு, தொழிலால் பாதிப்பு ஏற்பட்டு லாபத்தை இழந்து கஷ்டப் படநேரும்.
பதினொன்று
பதினொன்றாமதிபதி பதினொன்றில் தன் வீட்டில் பலம்பெற்றால் லாபம் முழுவதும் அடையமுடியாது. நண்பர்கள், மூத்த சகோதரர், குழந்தை களால் லாபம் அடை வார். ஏதாவது குறை ஏற்பட்டு மன சஞ்சலத் தைக் கொடுக்கும். தொழில் லாபத்தில் சமபலனே கிடைக்கும். ஆரம்பகாலத்தில் தொழிலில் லாபத்தைத் தராமல், பிற்காலத்தில் அதிர்ஷ்டம், யோகத் தைத் தரும். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால் லாபம், புகழ் உண்டு.
நல்ல குடும்பம் அமை யும். பாதிப்பிருந்தால் தார தோஷத்தைத் தந்துவிடும். இளைய தாரம் சிலருக்கு சகல சௌபாக்கியத் தையும் தந்துவிடும். தன் சுய சம்பாத்தி யத்தில் வீடு, வாகனம், தனம், கௌரவம் பெற்று நல்ல வாழ்க்கையை அடைவார்.
தெய்வீக வழிபாடு நிறைந்து காணப் படுவார். பிறருக்கு உதவும் எண்ணம் உண்டு. தான காரியங்கள் செய்து புகழடை வார். ஆட்சி, உச்சம்பெற்றால் ராஜயோகப் பலன் கிடைக்கும். துலா லக்னக் காரருக்கு பதினொன்றாமதிபதி சூரியன் பதினொன்றில் ஆட்சிபெற்று பலம் பெறுவது ஜாதகருக்கு பெரும் நஷ்டம் தரும். சிலருக்கு தன் தசையில் கண்டத்தைக்கூட தந்துவிடும். பாவ கிரகத்தால் பாதிக்கப்பட்ட பதினொன்றாமதிபதி நற்பலன்களைச் செய்யாது.
பன்னிரண்டு
பதினொன்றுக்குடைய லாபாபதி கிரகம் பன்னிரண்டில் இருந்தால் விரயம் பல உண்டாகும். கடன்தொல்லை, பொருள் விரயம் ஏற்படும். எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டம்! கடன் வாங்கித்தொழில் செய்ய நேரும். எவ்வளவு சம்பாதித்தாலும், லாபம் ஏதாவதொரு வகையில் விரயமாகிக் கொண்டே இருக்கும். மூத்த சகோதர ஸ்தானம் விரயாதிபதி வீட்டில் நிற்பது, சகோதரரால் நஷ்டத்தையே தரும். சகோதரர் ஏதாவது பிரச்சினை, கடனால் அவதிப்பட்டு அவமானமடைவார். நண்பர்களால் கஷ்டம், நண்பர்கள் இல்லாத சூழலும் உண்டாகும். அரசாங் கத்தால் தொல்லை, நஷ்டமே அடைவார்.
சுபகிரகப் பார்வை பெற்று நல்லநிலையில் இருந்தால் கடல்கடந்து போகும் யோகமுண்டு. பிறந்த ஊரைவிட்டு வெளியூர், வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிப்பார். வாழ்வின் அனைத்து சுகத்தையும் மறைமுகமாக அனுபவிப்பார். அன்னிய தேசவாசமே நிறைய லாபத்தைத் தந்துவிடும். பல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார். பாவகிரகப் பார்வை, சம்பந்தம் எங்கு சென்றாலும் நஷ்டத்தையே தேடித்தரும். எங்கு சென்றாலும் நல்ல உணவு, சொகுசுக்குக் குறைவிருக்காது. என்னதான் சம்பாதித்தாலும் அமைதிக் குறைவிருக்கும். தேவையற்ற விரயங்களைக் கடந்தே லாபம் பெறமுடியும்.
பரிகாரம்
தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கிரகப் பலன்களைவிட பதினொன்றாமிடத்தைப் பொருத்து தொழில் செய்தால் லாபத்துடன் வெற்றிபெறலாம். பதினொன்றாமிட ஸ்தானத் தில் இருக்கும் கிரகம், பதினொன்றாமதிபதி நின்ற இடத்தில் நன்மை செய்யும் எந்த கிரகம் வலுக்குறைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சாந்திசெய்வது நினைத்த லாபத்தை வழங்கும். சுய ஜாதகத்தில் நடக்கும் தசைக்குரிய கிரகத்தின் நிலையைப் பொருத்தே பலன்கள் நடக்கும் என்பதால், நடக்கும் தசை அறிந்து எந்த சுபகாரியத்தையும் தொடங்க வேண்டும்.
செல்: 96003 53748