பதினொன்றாமிடம் என்பது மூத்த சகோதரர், லாபம், இளைய மனைவி மட்டுமல்ல; சாஸ்திர அறிவு, ஆன்மிகம்,சேவை மனப் பான்மை, தாய்ப்பற்று, இடது காது, கணுக்கால், விவசாயம் ஆகியவற்றையும், நண்பர்கள் நிலைபற்றியும் அறிய லாம். ஜாதகத்தில் பதினொன்றில் அமர்ந்த கிரகம், பதினொன்றாம் அதிபதி ஆட்சி, உச்சம் பெறுதல், பதினொன்றைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் நிலைதான் பலன் களைத் தீர்மானிக்கும்.
மேலும் லக்னாதிபதி, லாபாதிபதி தொடர்பிருந்து 2, 9, 10-ஆம் அதிபதி கேந்திர, திரிகோணத்தில் இருந்தால் பெரும் வசதியுடன் வாழ்வார்கள். பதினொன்றில் சூரியன் இருந்தால் தந்தையாலும், சந்திரன் அமர்ந்தால் தாயாலும், செவ்வாய் இருந்தால் உடன் பிறப்பு களாலும், புதனால் தாய்மாமன், மாமனாலும், குருவால் புத்திரர் களாலும், சுக்கிரன் கணவன்- மனைவியாலும், சனி வேலைக்காரர் களாலும், ராகு- கேது நீசர்களாலும் (தீய வழியில்) லாபம் கிடைக்கும். பதினொன்றாம் அதிபதி ஒவ்வொரு இடத்திலும் தரும் பலன்கள் அவசிய மானது.
லக்னம்
லாபாதிபதி லக்னத்தில் இருந் தால் அதிர்ஷ்டமான பிறப்பு. வசதி யான குடும்பத்தில் பிறப்பார் அல்லது ஜாதகர் பிறந்தபின்பு குடும்பம் வசதிபெறும். நல்ல படிப்பாளி. யாருக்கு எப்படி மரியாதை செலுத்தவேண்டும்- யாரை எப்படி மகிழ்விக்கவேண்டும் என்பதை அறிந்து செயல் படுவார். எந்தத் தொழில் செய்தாலும் லாபகரமாக நடத்தும் திறனும், லாபகரமாக முடியும் அதிர்ஷ்டமும் பெற்றவர். மூத்த சகோதரர்களுக்கு நன்மையும், முன்னேற்றத்தையும் தரும். நண்பர்கள் புடைசூழ வலம்வருவார். பதினொன்றாமதிபதி லக்னத்தில் ஆட்சி, உச்சம் பெற்றால் கோடீஸ்வர யோகம் பெற்றவர். பதினொன்றாமதிபதி பாவகிரகத்துடன் சேர்ந்தாலோ, பார்க்கப்பட்டாலோ பலத்தைப் பொருத்து நல்ல பலன்கள் குறையும். முற்றிலும் பாதிக்கப்பட்டால் பலவித தொல்லைகளையே தரும்.
இரண்டு
பதினொன்றாமதிபதி வாக்கு ஸ்தானமான இரண்டில் அமர்ந்தால் ஆசிரியர், வழக்கறிஞர், இன்சூரன்ஸ் ஏஜென்ட், புரோகிதர்என பேச்சால் லாபம்பெறும் தொழில்களால் லாபத்தை அடைவார். ஃபைனான்ஸ், நிதி நிறுவனம், வட்டித் தொழில் ஆகியவற்றில் வாக்குவழி லாபம்பெறுவார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நேர்மை, வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றும். வாழ்க்கையின் அத்தனை சுகத்தையும் அனுபவித்து, நல்ல வருமானம் பெற்று குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்வார். கௌரவம் குறையாததொழில், வருமானம் பெறுவார். தொழி-ல் லாபம் பெற்று செல்வம், செல்வாக்கு, அதிகார பலத்தை அடைவார். பிறக்கும்போது எளியவராக இருந்தாலும், குடும்ப வாழ்க்கை அமைந்தபின் நல்லமுறையில் முன்னேற்றம் பெற்றுப் புகழடைவர். குடும்பத்தில் "நீ எதுக்கும் பிரயோஜனப்பட மாட்டாய்' என ஒதுக்குவர். ஆனால் அவரே முதன்மையான வாழ்க்கையை அடைந்து சகோதரர்களை வாழவைப்பார். உடன்பிறந்தோர், நண்பர்களால் ஆதாயம் அடைவார். பதினொன்றாமதிபதி பலமிழந்து பாவகிரக சம்பந்தப்பட்டால் பொய்பேசி பணம் சம்பாதிப்பார். வாய்ப்பேச்சால் வரும் லாபத்தை இழப்பார்.
மூன்று
பதினொன்றாமதிபதி மூன்றில் நின்றால் இளைய சகோதரர்களுக்கு லாபம் ஏற்படும். சகோதர வம்சத்தால் லாபமுண்டு. பணத்தின் மீது பற்றுக்கொண்டவர். குடும்பத்தைப்பற்றி சிலர் நினைக்கமாட்டார்கள். கலைகளில் ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக இசைத் துறையில் நாட்டமுண்டு. சுபபலம் பெற்றால் பிரபல யோகத்தை அடைவார். பாவபலம் பெற்றால் ஏதாவதொரு வகையில் பாதிப்பையே தரும். தீய பழக்கவழக்கங்களால் முன்னேற்றம் தடைப்படும். நண்பர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏமாற்றத் தையும் அவமானதையும் துரோகத்தையும் சந்திக்கவேண்டும். மூன்றாமிடம் முறையற்ற உறவுகளால் லாபம், சந்தோஷத்தைக் கொடுத்து துன்பத்தையும் தந்துவிடும். எதையும் யோசித்து நிதானமுடன் செயல்பட்டால் புகழ்பெறலாம்.
நான்கு
சுக ஸ்தானத்தில் பதினொன்றாம் அதிபதி நிற்பது அனைத்து சுகங்களை அனுபவிக்கும் யோகத்தைக் கொடுக்கும். சந்தோஷமான குடும்பம் மற்றும் எல்லா வகையிலும் பூரண பலம் பெறும். தனக்குக்கீழ் வேலையாட்கள் கொண்ட செல்வ- செல்வாக்குடன் இருப்பார். பூமி, கட்டடம், கல்வி நிறுவனம், கமிஷன் தொழில், வாகனங்களால் லாபத்தைப் பெறுவார். தாயார்மீது பாசம் நிறைந்தவராக வும் இருப்பார். தாயாரால் லாபமுண்டு. தெய்வீக நாட்டத்தைத் தரும். கோவில் புரனமைப்பு, கோவில் கட்டுவதற்கு நன்கொடை மற்றும் அன்னதானம் கொடுப்பதில் ஆர்வம் கொண்டவர். நிலம் சார்ந்த தொழிலால் லாபம் பெறுவார். எதிலும் நேர்வழியில் சென்று வெற்றிபெறவே விரும்புவார். குடும்பத்தில் தாய், தந்தைவழி சொந்தங்களின் ஆதரவைப் பெற்றிருப்பார். நான்காமிடத்தில் பதினொன்றா மதிபதி ஏதாவதொரு வகையில் பாதித்திருந் தால், வாழ்வின் சுகங்களை இழந்தவராய் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். சுகவாழ்வு கெடும். சுக ஸ்தானாதிபதிகள் பாதிக்கப்பட்டு சுபகிரகமாகி கெட்டால் கிடைக்கவேண்டிய சுகங்கள் அத்தனையையும் இழக்கநேரும்.
ஐந்து
பதினொன்றாமதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருந்தால் குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்கும். பெரிய பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்திருப்பார். எவ்வளவு தடை, போராட்டங்கள் ஏற்பட்டாலும் ஜாத கருக்குகடைசி நேரத்திலாவது யாராவது காப்பாற்றி வெற்றியைத் தேடித்தருவர். ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் ஞானம்பெற்று புகழ்பெறுவர். பிள்ளைகள் தந்தை செய்யும் தொழிலைச் செய்துமுன்னேற்ற மடைவர். பெரிய மனிதர் நட்பு, அரசாங்க ஆதரவு, அந்தஸ்து, செல்வாக்கு பெற்று உயர்வான நிலைக்குச் செல்வார். தெய்வீக அறிவு, சிந்தனை பிறருக்குப் பயன்படும்படி நடந்துகொள்வார். புதையல், லாட்டரியால் லாபமுண்டு. உடன்பிறந்தவர்களுக்கு உற்சாகம் தந்து முன்னேற்றுவார். சோதனைகளைக் கடந்து சமூக அந்தஸ்து பெற்று நல்லநிலையை அடைவார். பாவகிரக பாதிப்பு குலதெய்வத்தை வணங்கவிடாமல் செய்யும். புத்திர சந்தான தோஷத்தைத் தரும். லாபப் பணம் வீண்வழியில் செலவாகும் அல்லது யாரிடமாவது கொடுத்து ஏமாறுவார்.
ஆறு
லாப ஸ்தானாதிபதி ஆறில் இருந்தால், கிடைக்கும் வருமானம் அல்லது லாபப் பணம்கடனுக்கே போய்ச்சேரும். அடிக்கடி எதிரிகள் தொழிலை நடத்தவிடாமல் தடை, தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார் கள். கூட்டுத் தொழிலால் நன்மை இருக்காது. நண்பர் எதிரியாவார். நம்பிக்கை துரோகிகளால் லாபம் குறையும். செய்தொழி-ல் சேதமுண்டு. தொழில் ஸ்தானம் நன்றாக இருந்தால் லாபம் குறையும். தொழில் ஸ்தானமும், லாப ஸ்தானமும் கெட்டால் தொழில் பறிபோகும். அடிமைத் தொழில் ஓரளவு நன்மை தரும். தெய்வீக நாட்டம் குறையும். குலதெய்வம் தெரியாமல் இருக்கும் அல்லது குலதெய்வத் தைக் கும்பிட்டால் தொல்லைகள் அதிகமாகும். தேவையற்ற பிரச்சினை வரும். உடன்பிறந்த வர்களால், பங்காளிகளால் நீதிமன்றத்திற்குச் செல்ல நேரும். எதிரிகள் குலதெய்வத்திற்கு செய்வினை வைத்து, தெய்வத்தின் சக்தியைத் தடுத்திருப்பர்.பதினொன்றாமிட பாதகாதி பதி பலவீனமாகி, கெட்டவனாகிக் கெட்டால் யோகமே. பெரும் புகழோ கோடீஸ்வரராகவோ பாதகாதிபதி தசையில் மாறிவிடுவார். கெட்டது செய்யும் எந்த இடத்தின் அதிபதியாக இருந்தாலும் ஜாதகத்தில் கெட்டுப்போனால் விபரீத ராஜயோகமாகி தன் தசையில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையே செய்யும்.
ஏழு
பதினொன்றாமதிபதி ஏழாமிடத்தில் இருந்தால், வரும் வரனால் செல்வம், செல்வாக்கு, லாபம் பெறுவார். பணக்கார வரன் அல்லது வாழ்க்கைக்கு பக்கபலமான துணையே கிடைக்கப்பெறுவார். சிலருக்கு திருமணமானவுடனே பிரபல யோகம், செல்வம், செல்வாக்கு, லாபம் வந்துசேரும். அதிர்ஷ்டகரமான மனைவி அல்லது கணவன்தான் கிடைப்பார்கள். சந்தோஷகரமான இல்வாழ்க்கையை அடைந்து இன்புறுவார். சிலருக்குத் திருமணத் தி-ருந்து நல்லவையாக நடந்து, குழந்தை பிறந்த பின் அதிர்ஷ்டம் அதிகமாகி பெரிய முன்னேற் றத்தை அடைவர். தான் அனுபவிக்காத சந்தோஷத்தை குழந்தை பிறந்தது முதலே அனுபவிக்கும் நல்ல யோகத்தைத் தரும். தான் விரும்பியபடிநிலையான அசையா சொத்து, வாகனம் கிடைத்து சொகுசான வாழ்க்கைக் குச் செல்வார்கள். அரசாங்கத்தால் அதிர்ஷ்ட யோகம் பெற்று, செல்வாக்கு, அந்தஸ்து பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார். வெளிநாட்டுத் தொடர்பு, வெளிநாட்டுப் பயணங்கள் நன்மை தரும். பொதுப்பணி, அரசிய-ல் தன்னை ஈடுபடுத்திப் பெரும் வெற்றிகளை அடைந்து சுகம்பெறுவார். தெய்வீக வழிபாடு, சாஸ்திர ஆராய்ச்சி, ஆன்மிகப் பணிகளில் தன்னை அர்ப்பணிப்பார். ஏழாமிடத்தில் கிரகம் கெட்டிருந்தால் திருமணத் தால் பல இன்னல்களையும் தரும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும்.
எட்டு
பதினொன்றாமதிபதி அஷ்டமத்தில் மறைவது நல்லதல்ல. அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு யோசிக்காமல் கண்ட தொழில் செய்து கடன்பட்டு அவமானப்படுவார். சொல் புத்தியும், சொந்த புத்தியுமின்றி அல்லல்பட நேரும். தன்னிடமுள்ள சொத்துகள் அத்தனை யையும்இழந்து மனம் வாடுவார். தன்னுடைய அவசர முடிவால் பல குடும்பங்களை அவதிப் படுத்தும் நிலை வரும். கூட்டுத்தொழில் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும். குறுக்குவழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, பாதிவழியில் பரிதாபமாக நின்று அல்லல்படுவார். யாராவது ஒருவர் முறையாக வழிப்படுத்தினாலோ அல்லது அதிர்ஷ்டம் இருந்தாலோதான் சாதாரண வாழ்க்கை வாழமுடியும். இல்லை யென்றால் சதா தொல்லைகளையே சந்திப்பார். பேராசையும் பெருநஷ்டமுமே இவர் வாழ்வில் வரும். செல்வந்தர் வீட்டில் பிறந்தா லும் காலப்போக்கில் எல்லாம் இழப்பார். இவரது குடும்பத்தைத் தாங்கி நின்றவர் மரணமடைந்துவிட்டால் இவரால் எதையும் செய்யமுடியாமல் அல்லது செய்யத் தெரியாமல் செயல்பட்டு குடும்பமே கெட்டுப் போகும். முன்னெச்சரிக்கை இல்லாதவர். மூத்த சகோதரர்களால் நஷ்டத்தை அடைவார்.பதினொன்றாமதிபதி எட்டாமிடத் தில் கெட்டுப்போனால் திடீர் அதிர்ஷ்டம் கொடுத்து ஏமாற்றியவர்முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவார்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 96003 53748