தினொன்றாமிடம் ஒரு மனிதனுக்கு லாப ஸ்தானமாகிறது. ஜாதகரின் மூத்த சகோதரத்தைப் பற்றியும், இளைய தாரத்தால் உண்டாகும் லாபம் மற்றும் வாக்கு நிலையையும் தெரிந்துகொள்ளலாம். தொழில் ஸ்தானத்தைவிட லாப ஸ்தானத் தில் இருக்கும் கிரகநிலையைப் பொருத்த தொழிலைச் செய்தால்தான் லாபத்தைப் பெறமுடியும். பதினொன் றாமிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டுக் குடையவர்கள், பாதகாதிபதி, மாரகாதிபதி கிரகங்கள் அமர்வது நன்மை தராது. சுபகிரக சம்பந்தம் தீமைகளைக் குறைத்து நன்மையும், பாவகிரக சம்பந்தம் நன்மையைக் குறைத்து தீமையுமே தரும். சுய ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் வலுத்தன்மையைப் பொருத்தே லாபப் பலன்களின் நிலை இருக்கும்.

சூரியன்

தலைமை கிரகமான சூரியன் பதி னொன்றில் இருந்தால் தலைமைப்பதவி தேடிவரும். எதிலும் தலைமையாக இருந்து லாபத்தை அடைவார். தந்தைகாரக கிரகமான சூரியன் இருப்பதால் தந்தைவழி லாபம், தந்தையால் லாபம் பெறுவார். நல்ல அந்தஸ்து, புகழ், பணம் அனைத்தும் லாபகரமாக இருக்கும். தைரியசாலி. வாக்கு கொடுத்தால் காப்பாற்றும் நம்பகத்தன்மை கொண்டவர். வாக்குவாதம் செய்யக்கூடியவர். தலைசிறந்த நிர்வாகி என பெயரெடுப்பார். பொதுவாக பதினொன்றில் சூரியன் நின்றால் அனைத்து தோஷங்களும் தன்னால் விலகிப்போகும். துலா லக்னத்திற்கு மட்டும் சூரியன் பாதகாதிபதி- அந்த இடத்தில் வலுப்பெறும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும். வேறு யாருக்கும் தீமையைத் தராது.நோய் தீருதல்,அரசாங்க நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சூரியன் பலவீனமானால் அரசாங்க வேலை, உதவியின்றி அரசாங்க கீழ்நிலைப் பதவியில் இருக்கநேரும். சுபப்பலன்கள் குறையும். சுபகிரகப் பார்வைகள் மற்றும் சூரியனின் நிலையைப் பொருத்துதான்பலன்கள் உண்டாகும்.

bb

Advertisment

சந்திரன்

தாயால் யோகம் பெறுவர். பெண்களால் லாபம், பெண்கள் விரும்பக்கூடிய பொருட்களால் லாபமடைவர். வெளிநாட்டுப் பொருட்களை வாங்கிவிற்பது, ஆடம்பரப் பொருட்களால் லாபம் வரும். கடல், கடல் சார்ந்த வணிகம், கடல்கடந்து போகும் யோகத்தைப் பெறுவர். உறவினரால் லாபம் பெறுவர். சந்திரன் போன்று அண்ணாந்து பார்க்கக்கூடிய தொழிலான சினிமா மற்றும் கலைத்துறையில் பிரபல யோகத்தை அடைவர். தியேட்டர், கல்யாண மண்டபத்தால் நல்ல பணவரவு கிடைக்கும். வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் லாபம் பெறுவர். தேய்பிறைச் சந்திரனாகி, பாவ கிரகத்தால் பாதிக்கப்பட்டால், மனமே வீழ்ச்சிக்குக் காரண மாக இருக்கும். போட்டி போடாமல், பொறாமை கொண்டு லாபத்தைத் தவறவிடுவர். தாயாரால் அவமானம், தீங்கு உண்டாகும் அல்லது தாயாரை இழக்க நேரும்.

செவ்வாய்

பதினொன்றாமிடம் மூத்த சகோதரத்தைக் குறிக்கும் இடமாகும். அங்கு சகோதர காரக கிரகமான செவ்வாய் இருப்பது மூத்த சகோதரத்திற்கு தோஷம்தான். அதேவேளையில் குரு பார்வை லாபத்தைத் தரும். குருமங்கள யோகத்தால் மூத்த சகோதர உறவு நல்ல முறையில் இருக் கும்.பதினொன்றாமிடம் வலுப் பெற்றாலே மூத்த சகோதரர்கள் நல்லநிலையில் இருப்பர்.மூத்த சகோதரர்களால் லாபம் கிடைக்கும். நிலத்திற்குரிய செவ்வாய் வலுப்பெற்று சுப பலமானால் வீடு, நிலம் நல்லமுறையில் அமையும். அதன்மூலம் தனலாபம் பெறுவர். தைரியமாக இருப்பர். தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கவராக இருப்பர். செவ்வாய்- சனியால் பார்க்கப்பட்டால் வீண் பிரச்சினைகளால் லாபத்தைப் பெறமுடியாமல் தவிப்பர். பலம் குறைந்த செவ்வாய் பாவகிரக சம்பந்தம் பெற்றால் நிலப் பிரச்சினையால் அவதிப் படுவர். மூத்த சகோதரர்களால் நில சம்பந்தப்பட்ட வகையில் வம்பு வழக்கை சந்திக்க நேரும். பிடிவாத குணத்தால் லாபத்தை இழப்பர்.

புதன்

பதினொன்றிலுள்ள புதன் பல கலைகளைக் கற்றுத் தரும். பல சோதனைகள் சிறு வயதில் ஏற்படும். வாழ்வின் முதல் பாதியில் பயம், கஷ்டம், நஷ்டம் என சொல்லமுடியாத சோதனைகள், வேதனைகள் பெறுவதுதான் வரம். ஏனென்றால் தாங்கக்கூடிய வயதில் நடந்தால்தான், தாங்கமுடியாத கடைசிக் காலத்தில் சுகமாக இருக்கமுடியும். ஆரம்ப காலத்தில் ஏமாற்றம், அவமானம் பெற்றவரால்தான் உயரமுடியும். தாங்கமுடியாத வேதனை, வலி கடந்து வாழ்க்கையை வெறுத்தவரால்தான் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மையை அறியமுடியும். அனுபவங்களைக்கொண்டு வாழ்வார். பட்டதைப் பிறருக்கு சொல்வதால் ஞானியாகவும், சிறந்த எழுத்தாளராகவும் பதினொன்றாமிட புதன் புகழ் தருவார். பலவித துன்பத்தையும், பலவித சுக, போக, சந்தோஷத்தையும் தருவார். ஆசிரியர், ஜோதிடர், பலதொழில் ஆலோசகர் என உபதேசம் செய்யும் தொழில்கள் லாபத்தைத் தரும். நாணயம் நல்வழி காட்டும். சுபகிரக சம்பந்தமானது புகழ், செல்வம், செல்வாக்கைக் கொடுக்கும்.

குரு

பதினொன்றில் குரு நிற்பதால் பிறருக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற குணம் இயற்கையிலேயே உண்டு. தனக்கு இல்லையென்றபோதும், பிறரிடம் பிறருக்காகயாசகம்கேட்டுப் பெற்று, கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நல்ல உள்ளம்கொண்ட வள்ளலாக வாழவைக்கும். லாபகரமான விஷயம் தானாகத் தேடிவரும். தான தருமங்கள் செய்வதால், அதனைச் செய்வதற்காகவே வரவு வரும். சுயநலவாதியாக மாறும்போது வரவு குறைந்து விடும். கொடுப்பதை நிறுத்தினால் கிடைப்பதும் நின்றுபோகும். மனிதர்கள் அனைவரும் சமம் என மனிதம் நிறைந்தவராக செயல்படுவர். நினைத்தது நடக்கும். நினைத்ததை முடிப்பார். எந்தத் தொழில் செய்தாலும் லாபம் பெறுவார். தொழில்நேர்மை கொண்டவர். குரு தங்கத்தைக் குறிக்கும் கிரகமென்பதால் தங்கநகையால் லாபம் உண்டாகும். பொன்னா பரணம் இவர்களைத் தேடிவரும். சுபகிரகச் சேர்க்கை சுபப்பலனை வாரிவழங்கும். மறைவிட அதிபதியாகவோ ஏதாவதொரு வகையில் பலம்குறைந்து காணப்பட்டால் குணக்கேட்டையும்,தீய பலன்களையும் தரும்.

சுக்கிரன்

சுக்கிரன் என்றாலே கலை. பதினொன் றில் சுக்கிரன் இருந்து சுபவலுப் பெற்றால் ஏதாவதொரு கலைத்துறையில் பெயர், புகழ், பணம், அந்தஸ்து, செல்வாக் கைப் பெறுவர். கலைத்துறையில் வெற்றி பெற்றபெரும்பாலானவர்களுக்கு இவ்வாறு கிரக அமைப்பிருக்கும். திரைப்படத்துறையில் நடிப்பு, இசைத்துறையில் சாதனையாளராக வலம்வருவர். வாகன வசதியுடன் ஆடம்பர வாழ்க்கையையே விரும்புவர். சுகவாசியாக வாழ்வதற்கான முயற்சியிலேயே இருப்பர். லட்சியத்தை அடைவர். நல்ல நண்பர்களின் உதவிகள்கிடைக்கும். இஷ்டப்பட்ட தொழிலில் இஷ்டப்படி வாழ்ந்து முன்னேற்றம் பெறுவர். நகைமேல் பிரியம் கொண்டவர். சிலர் நகைக்கடைத் தொழில்செய்து லாபம்பெறுவர். பதினொன்றில் சுக்கிரன் சுகபோகத்தை நிச்சயம் தருவார். சுபவலுப் பெற்றால் நீடித்த புகழையும், பாவ வலுப் பெற்றால் நீசத்தொழிலையும் அதனால் அவமானம், நஷ்டத்தையும் தந்துவிடுவார். கலையார்வத்தாலும், சிற்றின்ப ஆசைகளாலும்வாழ்க்கை யைத் தொலைத்தவர்களும் இதில் நிறைய வுண்டு. சுக்கிரன் கொடுக்கும்போதே சேமித்து வைத்துக்கொள்வது நன்மை தரும்.

சனி

லாப ஸ்தானத்தில் தொழில்காரகனான சனி நிற்பது, உழைப்பால் உயர்ந்துநிற்க வழிவகை செய்யும். சுறுசுறுப்பாக செயல்படுவர். தொழிலில் நிரந்தரத் தன்மையை விரும்புவர். அரசாங்க அடிமைத் தொழிலுக்கு விரும்பிச் செல்வர். எதிலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுவர். நிதானமாக செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர். சுபகிரக வலுப்பெற்றால் செய்தொழிலில் லாபம் பெற்று சிறப்பான அந்தஸ்து, புகழ், உயர்பதவி அடைவர். அனைத்து சுகபோகங்களில் நாட்டம் கொண்டவர். இரும்பு, பாதுகாப்புத் தொழிலுக்குச் சென்று வெற்றிவாகை சூடுவர். சனி பலம்பெற்றால் மக்கள் பாதுகாப்புத் தொழிலுக்குச் செல்வர். போலீஸ், இராணுவம், மருத்துவம் போன்ற தொழில்களை விரும்பி, அதில் தங்களை அர்ப்பணித்துக்கொள்வர். பாவகிரக சம்பந்தம் மந்த புத்தியையும், சோம்பேறித் தனத்தையும் தந்து, திறமை இருந்தும் முன்னேறவிடாமல் செய்துவிடும். இளமையில் துன்பப்பட்டு முதுமையில் சுகமாக இருப்பர்.

ராகு

பதினொன்றாமிட ராகு பலவித சுகபோகங்களை அள்ளித்தருவார். பெண்களால் ஏதாவதொரு வகையில் நன்மையடைவார். பலவித அனுபவம் பெற்றவர். வேற்றுமொழி, இனத்தவரால் யோகத்தை அடைவார். ஆசை அதிகம் கொண்டவர். தன் ஆசைக்காக நினைத் ததை சாதிக்க என்ன வேண்டுமானா லும் செய்யக்கூடியவர். சமுதாய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாதவர். துணிந்து எந்த காரியத்திலும் இறங்குவர். யாரிடம் எப்படிப் பேசவேண்டுமோ அப்படிப் பேசி காரியத்தை நிறைவேற்றும் ஆற்றல்மிக்கவர். எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர். தெரிந்துகொண்டதை சரியான நேரத்தில் உபயோகித்து வெற்றிபெறுவர். பழங்கால மருத்துவம், பழைமைத் தொழிலில்களில் ஈடுபட்டு வெற்றிபெறுவர். கொடுக்கல்- வாங்கலில்கூட புரோக்கர் தொழில் செய்து லாபம் ஈட்டக்கூடியவர். சுபவலு அதிக லாபத்தைத் தன் தசையில் செய்யும். பாவத்தன்மை பெற்றால் கொடுக்கும்போது பாதுகாக்காமல் விட்டு பரதேசியாகிவிடுவர். வெளிநாட்டு வாழ்க்கை வெற்றி தராது. குடும்பம் பலவித போராட்டத்தை சந்திக்கும். அனைத்தும் இருந்தும் அனுபவிக்கவிடாமல் செய்துவிடும்.

கேது

கேது என்றாலே கெடுத்துக் கொடுப்பார் என்பதுபோல், ஆரம்பகால வாழ்க்கை பலவித இன்னல்களைத் தரும். ஆரம்பத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு துன்ப துயரங்களைத் தந்துவிடும். கேது பதினொன்றில் இருப்பது கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதைக் குறிக்கும். கஷ்டப்பட்டு முன்னேறியவருக்குதான் வாழ்வின் உண்மை புரியும். வெற்றிபெற்று மேலே வந்தபிறகு வெற்றியைத் தக்கவைக்கும் திறமையால் நிரந்தரப் புகழ், பணம் பெறுவர். படிப்படியாக அடிபட்டு மேலே வருவதால் பொறுமை, நிதானம் கொண்டவராக சகலமும் அறிந்து செயல்படுவார். பிறர் அறியமுடியாதவற்றை அறிந்து அதற்கான தீர்வைத் தரும் மருத்துவராகவும், மனவளக் கலை நிபுணராகவும் இருப்பார். நம்பிக்கைக்குரிய நல்ல மனிதராகப் புகழ்பெறுவார். பிறருக்காக வாழ்ந்து பிறரின் துயரங்களைத் தீர்க்கும் கடும்பணிகளைச் செய்து வல்லவராக வலம்வருவார். பதினொன்றாமிட கேது வேற்றுமொழி நாடுகளிலும் புகழ்தரும். சுபகிரகப் பார்வை இருந்தால் புகழுடன் கோடீஸ்வர யோகத்தைத் தரும். பாவகிரகத் தொடர்புகள் போராட்டமான வாழ்க்கையே தரும்.

பரிகாரம்

பதினொன்றாமிடத்தில் நின்ற கிரகம் வலுக் குறைந்திருந்தால், அந்த கிரகத்திற்குரிய வலுவை பலப்படுத்தவேண்டும். அந்தந்த கிரகக் கோவில்களுக்குச் சென்று அதற் குரிய ஹோரைகளில் அபிஷேகம், அர்ச்சனைகள் செய்துகொள்வது நல்ல பலனைத் தரும்.

பதினொன்றாமிட தசா காலங்களில், வருடமொருமுறை அன்னதானம் வழங்குவது சிறப்பு. அன்னதானம் என்பது பசித்தவருக்கு உணவு தருதல். உடை இல்லாதவருக்கு உடை தருதல் நல்ல பலனைத் தரும். குலதெய்வத்தை தவறாமல் வணங்குவது நற்பலனை அதிகமாக்கும்.

செல்: 96003 53748