Advertisment

நன்மையில் தீமை - தீமையில் நன்மை விளைவதேன்?

/idhalgal/balajothidam/good-goodness-it-better-evil

ஜோதிடம் என்பது மகா சமுத்திரம் போன்றது. இந்தக் கலை முழுவதுமே மனிதனின் எதிர்காலம், தற்கால நிகழ்வுகள், அவனது பாதுகாப்புகள் என மனித முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு அமைந்துள்ளது.

Advertisment

ஜாதகப்பலனறிய முனையும்போது, ஒரு பாவம், அதன் அதிபதி, அதன் காரகர் ஆகியோரின் நிலையை நன்கு ஆராய்ந்து பின் நிர்ணயம் செய்ய வேண்டும்.

பாவம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஒன்றாம் பாவம் அல்லது லக்ன பாவம், இரண்டாம் பாவம் என 12 பாவங்கள் ராசிக்கட்டத்தில் உள்ளன. இவற்றின் அதிபதிகள், பாவாதிபதிகள்.

சரி; பாவத்தின் காரகர் என்பது யார்? இது தனி. பாவாதிபதி வேறு; பாவ காரகர் வேறு.

உத்தரகாலாம்ருதம் "பாவத்தின் காரகர்' என்று தெளிவாக உரைக்கிறது.

பாவத்தின் காரகர்

லக்ன பாவம்- சூரியன்.

2-ஆம் பாவம்- குரு.

3-ஆம் பாவம்- செவ்வாய்.

4-ஆம் பாவம்- சந்திரன்.

5-ஆம் பாவம்- குரு.

6-ஆம் பாவம்- செவ்வாய்.

7-ஆம் பாவம்- சுக்கிரன்.

8-ஆம் பாவம்- சனி.

9-ஆம் பாவம்- சூரியன்.

10-ஆம் பாவம்- சனி, குரு.

11-ஆம் பாவம்- குரு.

12-ஆம் பாவம்- சனி.

இவையல்லாது, தனகாரகர், புத்திரகாரகர்- குரு.

சகோதர காரகர், பூமிகாரகர்- செவ்வாய்.

மாதுர் காரகர் (தாய்)- சந்திரன்.

வீடு, மனை, வாகனம், களத்திரம், போகம், இன்ப காரகர்- சுக்கிரன்.

ஆயுள்காரகர்- சனி.

பிதுர்காரகர்- சூரியன்.v ஞானகாரகர்- கேது.

வித்தை, அம்மான் காரகர்- புதன்.

இவ்வாறு உத்தரகாலாம்ருதம் கூறுகிறது.

Advertisment

பாவம், பாவாதிபதி நன்றாக இருந்தால் அந்த நிகழ்வு நன்றாக அமையும். இதில் பாவக காரகரின் பங்கென்ன?

திருமணமென்றால் சுக்கிரனின் நிலையும், குழந்தைகள் என்றால் குருவின் நிலையும் என காரகர் நிலை கணக்கில் கொள்வதுண்டுதான். பிறப்பு ஜாதகத்தைப் பொருத்தவரை இவ்வாறு பலன் கூறுவது நடைமுறை வழக்கம்.

எனில், பிறப்பு ஜாதகமும், காரக அதிபதியும், கோட்சார நிலையில் எந்தப் புள்ளியில் இணைந்து எவ்வாறு பலன் தருவர்?

அதற்கும் ஒரு விதி கூறப்பட்டுள்ளது. ஒரு பாவாதிபதி, ஜனன காலத்தில் எந்த நட்சத்திரம், எத்தனையாவது பாதத்தில் இருந்தாரோ, அந்த நட்சத்திரம், அந்த பாதத்தில் அந்த பாவ காரகர், கோட்சாரத்தில் செல்லும்போது அந்த பாவப்பலன் நடைபெறும்.

நல்ல பாவாதிபதியும், அதன் காரகமும் கடக்கும் போது நல்ல பலன்களின் மேன்மையும் பயனுள்ள பலன்களும், கெட்ட பாவாதிப

ஜோதிடம் என்பது மகா சமுத்திரம் போன்றது. இந்தக் கலை முழுவதுமே மனிதனின் எதிர்காலம், தற்கால நிகழ்வுகள், அவனது பாதுகாப்புகள் என மனித முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு அமைந்துள்ளது.

Advertisment

ஜாதகப்பலனறிய முனையும்போது, ஒரு பாவம், அதன் அதிபதி, அதன் காரகர் ஆகியோரின் நிலையை நன்கு ஆராய்ந்து பின் நிர்ணயம் செய்ய வேண்டும்.

பாவம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஒன்றாம் பாவம் அல்லது லக்ன பாவம், இரண்டாம் பாவம் என 12 பாவங்கள் ராசிக்கட்டத்தில் உள்ளன. இவற்றின் அதிபதிகள், பாவாதிபதிகள்.

சரி; பாவத்தின் காரகர் என்பது யார்? இது தனி. பாவாதிபதி வேறு; பாவ காரகர் வேறு.

உத்தரகாலாம்ருதம் "பாவத்தின் காரகர்' என்று தெளிவாக உரைக்கிறது.

பாவத்தின் காரகர்

லக்ன பாவம்- சூரியன்.

2-ஆம் பாவம்- குரு.

3-ஆம் பாவம்- செவ்வாய்.

4-ஆம் பாவம்- சந்திரன்.

5-ஆம் பாவம்- குரு.

6-ஆம் பாவம்- செவ்வாய்.

7-ஆம் பாவம்- சுக்கிரன்.

8-ஆம் பாவம்- சனி.

9-ஆம் பாவம்- சூரியன்.

10-ஆம் பாவம்- சனி, குரு.

11-ஆம் பாவம்- குரு.

12-ஆம் பாவம்- சனி.

இவையல்லாது, தனகாரகர், புத்திரகாரகர்- குரு.

சகோதர காரகர், பூமிகாரகர்- செவ்வாய்.

மாதுர் காரகர் (தாய்)- சந்திரன்.

வீடு, மனை, வாகனம், களத்திரம், போகம், இன்ப காரகர்- சுக்கிரன்.

ஆயுள்காரகர்- சனி.

பிதுர்காரகர்- சூரியன்.v ஞானகாரகர்- கேது.

வித்தை, அம்மான் காரகர்- புதன்.

இவ்வாறு உத்தரகாலாம்ருதம் கூறுகிறது.

Advertisment

பாவம், பாவாதிபதி நன்றாக இருந்தால் அந்த நிகழ்வு நன்றாக அமையும். இதில் பாவக காரகரின் பங்கென்ன?

திருமணமென்றால் சுக்கிரனின் நிலையும், குழந்தைகள் என்றால் குருவின் நிலையும் என காரகர் நிலை கணக்கில் கொள்வதுண்டுதான். பிறப்பு ஜாதகத்தைப் பொருத்தவரை இவ்வாறு பலன் கூறுவது நடைமுறை வழக்கம்.

எனில், பிறப்பு ஜாதகமும், காரக அதிபதியும், கோட்சார நிலையில் எந்தப் புள்ளியில் இணைந்து எவ்வாறு பலன் தருவர்?

அதற்கும் ஒரு விதி கூறப்பட்டுள்ளது. ஒரு பாவாதிபதி, ஜனன காலத்தில் எந்த நட்சத்திரம், எத்தனையாவது பாதத்தில் இருந்தாரோ, அந்த நட்சத்திரம், அந்த பாதத்தில் அந்த பாவ காரகர், கோட்சாரத்தில் செல்லும்போது அந்த பாவப்பலன் நடைபெறும்.

நல்ல பாவாதிபதியும், அதன் காரகமும் கடக்கும் போது நல்ல பலன்களின் மேன்மையும் பயனுள்ள பலன்களும், கெட்ட பாவாதிபதி, அதன் காரகர் கோட்சார பாதத்தில் சந்திக்கும்போது பயனில்லா பலன்களும் நடக்கும்.

கோட்சாரத்தில் பாவக கிரகம் வக்ரம், அஸ்தமனம் அடைந்திருந்தால் பாவப்பலன் மாறுபாடாக நடக்கும்.

கோட்சாரத்தில் பாவக கிரகம் உச்சமானால், மிக நல்ல பலன் கிடைக்கும்.

கோட்சாரத்தில் பாவக கிரகம், உச்சமாகி வக்ரமானால் மிகக்கெடுதலான பலன் ஏற்படும்.

1-ஆம் வீடு- லக்ன பாவம்

லக்ன பாவத்தின் காரகர் சூரியன். உங்கள் பிறந்த ஜாதகத்தில் லக்னாதிபதி எந்த நட்சத்திரம், எத்தனையாவது பாதத்தில் உள்ளார் என பார்த்துக்கொள்ளுங்கள். கோட்சாரத்தில் சூரியன் அதே நட்சத்திரம். அதே பாதத்தில் கடக்கும்போது அனைத்து விஷயத்திலும் ஒரு உற்சாகம், மேன்மை, சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, பலம், பிறரிடம் மரியாதை ஏற்படுத்தும்விதமாக சம்பவங்கள், விவேகமான செயல்கள் என- ஒரு மனிதனை மேன்மையாக, தனிப்பட்ட விதமாக வெளிப்படுத்தும்படி செயல்கள் நடக்கும். இந்த காலத்தில் எல்லாராலும் பாராட்டுப் பெறுவார்கள். புத்திசாலி ஜாதகர்கள் இந்த காலகட்டப் புகழையும், மேன்மையையும் நன்றாகக் கையாண்டு, எதிர்கால வாழ்வை வளமாக்கிக் கொள்வார்கள்.

2-ஆம் வீடு

2-ஆமிடத்தின் காரகர் குரு. 2-ஆமிடம் வாக்கு, தன ஸ்தானம். பிறந்த ஜாதகத்தில் இரண்டாமிட அதிபதி என்ன நட்சத்திரம், என்ன சாரம் வாங்கி அமர்ந்துள்ளார் என பார்த்துக்கொள்ளவேண்டும். அதே நட்சத்திர சாரத்தில் குரு சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது, வாக்கு வண்மையால் அசையும் சொத்துகளின் வரவு அதிகமாகும். வருமானவழியை ஸ்திரப்படுத்திக்கொள்வார்கள். மேலும் வாழ்வுக் கடமைகளை சரிவர நிறைவேற்ற ஒரு உத்வேகம், ஒரு முன்னேற்றம், ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு கைவரப்பெறும். ஒரு மனிதனுக்கு வாக்கு ஒழுக்கமானால் வாழ்வும் ஒழுங்காகும்தானே?

sivan

3-ஆம் வீடு

3-ஆமிட பாவக காரகர் செவ்வாய். 3-ஆமிடம் என்றாலே சகோதரம், வீரம், புகழ், பிறரிடம் தொடர்பு கொள்ளல் என பொதுவாகக் குறிக்கும்.

பிறந்த ஜாதகத்தில் 3-ஆமிட அதிபதி என்ன நட்சத்திரம், என்ன சாரம் வாங்கி அமர்ந்துள்ளார் என கவனிக்கவும். அதே நட்சத்திர சாரத்தில் செவ்வாய் சென்று கொண்டிருக்கும்போது, சகோதரர்மூலம் பெரும் உதவிகள் கிடைக்கும். சகோதரர் மட்டுமல்ல; பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், தெரிந்தவர்- தெரியாதவர் என எல்லாரும் உதவுவார்கள். அதாவது பழகும் ஆட்களின் தொடர்பெல்லைகள் மிக விரிவடையும். ஒரு திறமையான வியாபாரி, இத்தன்மையான விரிவடைந்த தொடர்பெல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தனது தொழிலை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வார். சின்னச்சின்ன பயணங்களும் அதிகரிக்கும்.

4-ஆம் வீடு

4-ஆம் வீட்டின் காரகர் சந்திரன். 4-ஆம் வீடு என்பது வீடு, மனை, வாகனம் எனும் அசையா சொத்துகளைக் குறிக்கும். பிறந்த ஜாதகத்தில் 4-ஆம் வீட்டு அதிபதி எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளார் என அறியவும். அதே நட்சத்திர சாரத்தில் சந்திரன் செல்லும்போது, வீடு, வாகனம் சம்பந்தமான நிகழ்வுகள் நடக்கும். சந்திரன் அதிவேக கிரகம். எப்படியும் மாதத்தில் ஒரு நாளாவது பிறந்த ஜாதக 4-ஆம் வீட்டு பாதசாரத்தில் சஞ்சரித்துதான் ஆகவேண்டும். அதனால்தானோ என்னவோ, வீட்டிலும் சரி; வாகனத்திலும் சரி- அவ்வப்போது மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது போலும்.

5-ஆம் வீடு

5-ஆம் வீட்டு பாவக காரகர் குரு. 5-ஆம் வீடு என்பது முக்கியமாக குழந்தைகள் பற்றிக் கூறுவது. மேலும் புத்திசாலித்தனத்தைப் புரியும்படி உரைக்கும் வீடு. உங்கள் பிறந்த ஜாதகத்தில் 5-ஆம் வீட்டு அதிபதியின் நட்சத்திரம் மற்றும் அதன் சாரத்தை அவதானிக்கவும்.

அதே நட்சத்திர சாரத்தில் குரு பயணிக்கும் போது குழந்தைகளால் நன்மை கிடைக்கும். சிலர் நீண்டநாளாக குழந்தை வரம் வேண்டியிருந்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் நிலை உருவாகும். சிலருக்கு எதிர்பாராத வருமானம்- அதாவது புத்திக் கொள்முதல் வருமானம் தேடிவரும். புதுப்புது ஐடியாக்கள் தோன்றி, சுற்றியுள்ளவர்களை அதிரச் செய்வார்கள்.

6-ஆம் வீடு

6-ஆம் வீட்டின் காரக கிரகம் செவ்வாய். 6-ஆம் வீடு என்பது ருண, ரோக ஸ்தானம்.

உங்கள் பிறந்த ஜாதகத்தில் 6-ஆம் வீட்டு அதிபதியின் நட்சத்திரம் மற்றும் அதன் சாரத்தைக் கண்டறியவும். அதே நட்சத்திர சாரத்தில் செவ்வாய் சென்றுகொண்டிருந்தால், அந்த பாவகச் செயலை விருத்தி செய்வார். இதன்மூலம் நோய் பாதிப்பு, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி என தாக்கும். ஏதோ கொஞ்சம் வலிக்கிறது- ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் சோதனை செய்து வருவோம் என செல்வார்கள்.

அங்கோ, "இந்த நிமிஷம் ஒரு ஆபரேஷன் பண்ணினாத்தான் ஆச்சு' என திடீர் அறுவை சிகிச்சை நடக்கும். இதற்கெல்லாம் காரணம், தசா புக்திகளும், மேற்கண்ட அமைப்பும் ஒன்றுகூடுவதால்தான்.

7-ஆம் வீடு

7-ஆம் வீட்டின் காரக கிரகம் சுக்கிரன்.

7-ஆம் வீடு என்பது முக்கியமாக திருமணத்தைக் குறிப்பது. உங்கள் பிறப்பு ஜாதகத்தின் 7-ஆம் வீட்டு அதிபதி எந்த நட்சத்திரம், எந்த சாரம் வாங்கி இருக்கிறார் என கவனிக்கவும்.

அதே நட்சத்திர சாரத்தில் சுக்கிரன் வரும்போது திருமணம் நிச்சயம் நடக்கும். 7-ஆம் வீடு என்பது கூட்டாளிகள் ஸ்தானம், வியாபார ஸ்தானம். எனவே 7-ஆம் வீட்டு காரக கிரகம் சுக்கிரன் அதே தன்மையுடைய அதிபதி இருக்கும் சாரத்தில் செல்லும்போது, நிறைய ஜாதகர்கள் புது வியாபாரம் தொடங்குவதும், தொழிலை விரிவுபடுத்துவதும் நடக்கும். இந்த நேரத்தில் பெண்கள் நலன் சம்பந்தமான தொழில் அல்லது பெண்களாகச் சேர்ந்து கூட்டாகத் தொடங்கும் தொழில் பரிமளிக்கும்.

8-ஆம் வீடு

8-ஆம் வீட்டின் காரகர் சனி. பிறப்பு ஜாதகத்தில் 8-ஆம் அதிபதி எந்த நட்சத்திரம், எந்த பாதத்தில் இருக்கிறார் என பார்க்கவும். அதே நட்சத்திர பாதத்தில் கோட்சார சனி சஞ்சரிக்கும்போது, எந்த விஷயமும் முழுமை பெறாமல் நடக்கும். அதுபோல எந்த சேதிகள் தேடிவந்தாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. மறைவு ஸ்தானாதிபதியின் சாரத்தில், மறைவு ஸ்தான காரக அதிபதி சஞ்சரிக்கும்போது நடக்கும் நிகழ்வுகளின் பலனை நிராகரித்துவிடுகிறார்.

9-ஆம் வீடு

9-ஆம் வீட்டின் காரகர் சூரியன். பிறந்த ஜாதகத்தில் 9-ஆம் அதிபதியின் நட்சத்திரம், அவரின் சாரத்தைக் கண்டுபிடிக்கவும்.

அதே நட்சத்திர சாரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தால், நிச்சயம் அதிர்ஷ்ட நிகழ்வுகள் நடக்கும். அது தந்தை அல்லது அரசுப் பதவிகள், அரசியல் மேன்மைகள் என ஏதோ ஒருவிதத்தில் வாழ்வில் ஒரு மேன்மையான உயர்வு உண்டாகும்.

10-ஆம் வீடு

10-ஆம் வீட்டின் காரகர் சனி, குரு என இரு கிரகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. எப்போதும் சனி ஒரு தொழில்காரகர்தான். கூடவே குருவையும் குறிப்பிட்டுள்ளனர். பிறந்த ஜாதகத்தில் 10-ஆம் அதிபதியின் நட்சத்திரம் மற்றும் அதன் சாரம் பற்றி அறியவும். கோட்சாரத்தில் அதே சாரத்தில் சனி அல்லது குரு சஞ்சரிக்கும்போது தொழில் மேன்மை, மாற்றங்கள் கண்டிப்பாக உண்டாகும்.

பொதுவாக, கோட்சாரம் பற்றி ஒரு கருத்துண்டு. குரு இருக்கும் ராசியை கோட்சார சனி கடக்கும்போது வேலை கிடைக்கும் என்பர். பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசியை குரு கடக்கும்போது வேலை மாறும் என்பர்.

11-ஆம் வீடு

11-ஆம் வீட்டின் காரக அதிபதி குரு. பிறந்த ஜாதகத்தில், 11-ஆம் வீட்டின் அதிபதி வாங்கிய நட்சத்திரம், அதன் சாரம் கவனிக்க வேண்டும். அதே சாரத்தில் குரு கோட்சாரத்தில் பயணப்படும்போது அளப்பரிய லாபமும், லாபமான பயணங்களும், நிறைய நண்பர்களின் அறிமுகமும், ஆசைகள் நிறைவேறுதலும் நடக்கும். ஒரு அரசியல்வாதி இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களைத் தன்னுடைய எதிர்காலப் பயனாக்கிக்கொள்வார். இதன்மூலம் தன்னுடைய எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுவார்.

12-ஆம் வீடு

12-ஆம் வீட்டின் காரகர் சனி. ஜாதகத்தில் 12-ஆம் அதிபதி அமைந்த நட்சத்திரம், நின்ற சாரம் இவற்றைக் கண்டுபிடியுங்கள்.

அதே நட்சத்திர சாரத்தில் அதன் காரகர் சனி பயணிக்கும்போது ஜாதகரின் நிலை சற்றே கேள்விக்குறியாகும். எல்லா நிகழ்வுகளும் மந்த நிலையடைந்துவிடும். சுறுசுறுப்பு இராது.

மேற்கண்ட காரக தத்துவப்படி, சூரியன் லக்னம், 9-ஆமிட காரகராகக் கூறப்பட்டுள்ளார்.

குரு, 2-ஆமிடம், 5-ஆமிடம், 10-ஆமிடம், 11-ஆமிட காரகராகக் குறிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய், 3-ஆமிடம், 6-ஆமிட காரகராகச் சொல்லப்பட்டுள்ளார்.

சந்திரன் 4-ஆமிட காரகராகக் குறிக்கப்பட்டுள்ளார்.

சுக்கிரன் 7-ஆமிட காரகராக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

சனி, 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிட காரகராகக் காட்டப்பட்டுள்ளார்.

புதன் கல்விகாரகர். கேது ஞானக்காரகர்.

இதன்படி ஒரு பிறந்த ஜாதகத்தின் இருப்பில், அதன் காரக கிரகம் கடக்கும்போது நல்ல பாவத்துக்கு நற்பலனையும், கெட்ட பாவகத்துக்கு மாறுபாடான பலனையும் கொடுக்கிறார்.

சில இடங்களில், சில சமயங்களில் கீழ்க்காணும் பேச்சுக்களைக் கேட்பதுண்டு.

"ஜோசியர் அப்படி நடக்கும்- இப்படி நடக்கும்- ஓஹோன்னு இருக்கும் என்றார். ஒன்னுத்தையும் காணோம்' என்பர்.

சிலரோ, "ஜோசியர் உனக்கு நேரம் சரியில்லை என்றார். ஆனால் நல்லாத்தான் நடக்குது. இந்த ஜோசியரும், வானிலைக்காரர்களும் சொன்னால் எதிர்ப்பதமாக நடக்கிறது' என்பர்.

ஆயினும் சில கிரக நகர்வுகள், தான் செல்லும் பாதையின் பொருட்டு சில நிகழ்வுகளை மாறுதலாக, தன்னிச்சையாகச் செய்துவிடுகிறார்கள்.

இதனால்தான் கெட்ட நேரங்களில் நல்லதும், நல்ல நேரங்களில் சில பின்னடைவுகளும் நடக்கின்றன.

இது இறைவனின் விருப்பப்படி, கிரகங்களின் நகர்வுகள் கொடுக்கும் வினையாற்றல் அல்லவா?

செல்: 94449 61845

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe