"பத்தரை மாற்றுத் தங்கம்'- இன்றும் பேச்சு வழக்கில் கிராமங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியம் இது. ஒரு மனிதனின் புகழை நிர்ணயம் செய்ய உபயோகிக்கப்படுவது. தங்கத்திலே ஒரு குறையிருந் தாலும் தரத்தினில் குறையாததுபோல், "கௌவரத்தில், அந்தஸ்தில் மாசுபடாதவர்' என்று கூற, பத்தரை மாற்றுத் தங்கம் என்ற வாசகம் பயன்படுவதை அனுபவத்தில் காணமுடியும்.
ஒரு தனிமனிதனின் அந்தஸ்தை நிர்ணயம் செய்வதில் தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. தங்கம் அணிவதால் சமூக அந்தஸ்து உயரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறையாற்றலை உடலில் அதிகரிக்கச் செய்யும்.
அரசன்முதல் ஆண்டிவரை தங்கத்தின்மேல் மோகம் வைக்காதவர்களே இல்லை. கடுகளவு தங்கமாவது நிச்சயம் நம்மிடம் இருக்கவேண்டுமென்பது இந்தியர் களின்- அதுவும் தமிழர்களின் விருப்பம்.
ஏனெனில் தங்கமானது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எத்தனை விதமான ஆபரணங்கள் வந்தாலும் தங்கத்தின்மீதான மதிப்பும் மோகமும் மக்களிடம் குறையப்போவதில்லை.
தனி மனித செல்வநிலையை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம்.
நாட்டின் பணவீக்கம் மற்றும் உயர்வுக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தைப் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக சாமானியர்கள் மட்டு மல்லாமல், பங்குச்சந்தை முதலீட்டா
"பத்தரை மாற்றுத் தங்கம்'- இன்றும் பேச்சு வழக்கில் கிராமங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியம் இது. ஒரு மனிதனின் புகழை நிர்ணயம் செய்ய உபயோகிக்கப்படுவது. தங்கத்திலே ஒரு குறையிருந் தாலும் தரத்தினில் குறையாததுபோல், "கௌவரத்தில், அந்தஸ்தில் மாசுபடாதவர்' என்று கூற, பத்தரை மாற்றுத் தங்கம் என்ற வாசகம் பயன்படுவதை அனுபவத்தில் காணமுடியும்.
ஒரு தனிமனிதனின் அந்தஸ்தை நிர்ணயம் செய்வதில் தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. தங்கம் அணிவதால் சமூக அந்தஸ்து உயரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறையாற்றலை உடலில் அதிகரிக்கச் செய்யும்.
அரசன்முதல் ஆண்டிவரை தங்கத்தின்மேல் மோகம் வைக்காதவர்களே இல்லை. கடுகளவு தங்கமாவது நிச்சயம் நம்மிடம் இருக்கவேண்டுமென்பது இந்தியர் களின்- அதுவும் தமிழர்களின் விருப்பம்.
ஏனெனில் தங்கமானது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எத்தனை விதமான ஆபரணங்கள் வந்தாலும் தங்கத்தின்மீதான மதிப்பும் மோகமும் மக்களிடம் குறையப்போவதில்லை.
தனி மனித செல்வநிலையை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம்.
நாட்டின் பணவீக்கம் மற்றும் உயர்வுக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தைப் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக சாமானியர்கள் மட்டு மல்லாமல், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.
எத்தனையோவிதமான ஆடம்பரப் பொருட்களை வீட்டில் வாங்கிக் குவித்தாலும், ஒரு குண்டுமணி தங்கத்தை வாங்கும்போது இருக்கும் மகிழ்சிக்கு அளவு கிடையாது. தங்கத்தின்மீதான இந்த மோகத்திற்குக் காரணம், பிற பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படும். ஆனால் தங்கம் மட்டுமே பல தலைமுறைக்கும் நீடித்து நிலைத்து நிற்கும். மேலும் பிற பொருட்களின் பணமதிப்பு குறுகிய காலத்தில் குறைந்துவிடும் அல்லது பயன்படாது. ஆனால் தங்கத்தில் செய்யும் பண முதலீட்டு மதிப்பு குறையாமல் இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்த பணத்தை எப்பொழுது வேண்டுமானா லும் திரும்பவும் மாற்றிக்கொள்ளமுடியும். எதிர்பாராத செலவை சமாளிப்பதற்காக பணத்தைத் தங்கமாக மாற்றி வைத்துக் கொள்வது இந்தியர்களின் வழக்கம். பராம்பரியம்மிக்க இந்தியக் குடும்பங்களில் முன்னோர்களின் சொத்தைப் பங்கிடும்போது, பரம்பரை நகைகளையும் பங்கிடும் வழக்கம் இன்றும் உள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல; தங்களின் குல, இஷ்டதெய்வத்தையும் தங்க நகையால் அலங்காரம்செய்து வழிபடும் வழக்கம் இந்தியர்களிடம் உள்ளது.
திருப்பதி வேங்கடாசலபதி, திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி மற்றும் ஐயப்ப சுவாமி போன்ற பிரபலமான கடவுள்களுக்கு கோடிக்கணக்கில் தங்க நகை உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. உலக நாடுகளில் இந்தியர் களிடமே அதிக தங்கநகைப் பயன்பாடு, தங்க சேமிப்பு உள்ளதை யாரும் மறுக்கமுடியாது.
ஜோதிடமும் தங்கமும்
ஜோதிடரீதியாக குரு என்று சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதி. பொன்னவன் என்ற பெயரும் இவருக்குண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால், அவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்றிருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும்.
ஜென்ம லக்னத்திலிருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், ஐந்தாம் வீட்டிலுள்ள கிரகம் இரண்டாம் வீட்டு அதிபதியின் பார்வை பெற்றாலும் அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தா லும் தங்க ஆபரணம் அதிகம் சேர்ந்து வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேலும், ஆபரணம் மற்றும் கழுத்தைக் குறிப்பது மூன்றாமிடமாகும். ஜாதகத்தில் மூன்றில் குரு மற்றும் சுக்கிரன் இருப்பவர்களுக்கும் கழுத்தில் தங்க நகைகள் அணியும் யோகம் அமையும். சந்திரனும் புதனும் சுப பலத் துடன் மூன்றில் நின்றால் தங்கம் அதிகம் சேரும் யோகமுண்டு.
கோட்சாரமும் குருவும்
சமீபகாலமாக நாட்டில் நிலவிவரும் வன்முறைச் சம்பவங்களில் நகைக் கொள்ளைகள் அதிகமாகப் பேசப்பட்டுவருகிறதன. கோட்சாரத்தில் காலபுருஷ ஒன்பதாம் அதிபதியான குரு பகவான் நீசம், ராகுவுடன் திரிகோண சம்பந்தம் இருப்பதால், நகைக் கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுதியாக இருக்கிறது. குரு என்றால் யானை. அதிக அளவிலான யானைகள் இறந்துபோவதற்கும் இதுவே காரணம்.
இத்தகைய மதிப்பு பெற்ற தங்கம் சிலருக்கு தேவைக்கு அதிகமாகக் குவிந்துவிடுகிறது. ஒரு பிரிவினருக்கு இருந்தும் பயன்படாமல், அடமானத் திலிருந்து மீட்கமுடியாத சூழல் நிலவும். வெகுசிலருக்கு குண்டுமணி தங்கம்கூட தங்காது. மேலே கூறிய அனைத் துப் பிரச்சினைகளுக்கும் குருவே காரணம். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் அதிகரித்துத் தங்கநகை சேரவும், அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கவும், நகைகள் அடமானத்திற்குப் போகாமல் இருக்கவும் எளிய பரிகார முறைகள் இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக நகை வாங்கும் யோகத்தை அதிகரிக்க...
ராகு- கேதுவின் நட்சத்திர நாட்களிலும், அமாவாசை திதியிலும், ராகுகாலம், எமகண்ட நேரத்திலும் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அட்சய திரிதியையன்று தங்கம் வாங்கி னால் மட்டும்தான் தங்கம் சேரும் என்ப தில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத் திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரை யில் தங்கநகை வாங்கினாலும் அதிகம் வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளிக்கிழமைகளில் பரணி, பூரம், பூராட நட்சத்திரம் சேர்ந்துவரும் நாட்களில், புதன், சுக்கிர ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும்.
தங்கம் வாங்கச் செல்லும் நாளில் குளிகை நேரத்தைப் பயன்படுத்தினால் மேலும்மேலும் தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
புதிதாக வாங்கும் தங்க நகைகளை குல, இஷ்டதெய்வத்தின் பாதங்களில் வைத்து வழிபட்டபிறகு வீட்டு பீரோவில் வைத்தால் தங்கம் தங்கும்.
வியாழக்கிழமை மாலை 5.00 மணிமுதல் 6.00 மணிவரை லட்சுமி குபேரரை துளசி மற்றும் தாமரை மலர்களால் அர்சித்து வழிபட தங்கம் குவியும்.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல் கொடுப் பதோ அடகு வைப்பதோ கூடாது.
வீட்டில் உள்ள நகைகள் அடமானத்திற் குச் செல்லாமல் இருக்கவும், அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கவும் அன்னை மகாலட் சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் வழிபாடு மிகவும் அவசியம்.
மகாவிஷ்ணுவின் பாதங்களிலிருந்து எடுக்கப்பட்ட துளசியில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும். பெருமாள் கோவிலுக் குச் சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து, மகாவிஷ்ணுவின் பாதங்களிலுள்ள துளசியை வாங்கி நகை வைக்கும் பெட்டி யில் தொடர்ந்து வைத்துவர, வாழ்க்கையில் பொன், பொருள் சேர்க்கை அதிகமாகும். வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்னின் திருமணத்திற்காக நகைசேர்க்க முடியாத வர்கள்கூட இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
அன்னை மகாலட்சுமி கைகளிலிருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து, நெல்லிக்காய் படைத்து, தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் படித்துவர, தங்கம் எப்போதும் தங்கும்.
தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. தங்கத்துக்கு தெய்வீகத் தன்மை அதிகம். தங்கநகை அணிவதால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும்.
அதானால்தான் நம் முன்னோர்கள் தாலியைத் தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள்.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களில் தங்கமும் ஒன்று. அதனால்தான் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும். தங்க ஆபரணங்கள் உடலுக்குப் புனிதத் தன்மையைத் தரும். தங்கம் மகாலட்சுமியின் அம்சம் என்பதால், தங்கத்தை இடுப்புக்குக் கீழே அணியாமல், கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணியவேண்டும்.
தங்கத்தை முறையாக பயபக்தியோடு பயன் படுத்தினால், தங்கமும் தங்கும்; மகாலட்சுமியும் அனைவரின் இல்லத்திலும் தங்குவாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
செல்: 98652 20406