Advertisment

கடவுள் காமம் ஜோதிடம்! - அஸ்ட்ரோ பாபு

/idhalgal/balajothidam/god-lust-astrology-astro-babu

டவுள் என்ற வார்த்தைக்குப் பல்வேறு அர்த்தங்களும், விளக்கங்களும் புராண- இதிகாச- வேதங்களில் சொல்லப்பட்டி ருந்தாலும், கடவுள் தன்மையை நான் உணர்ந்த விதத்தில், என்னால் முடிந்தவரை விவரிக்க முயல்கிறேன்.

Advertisment

ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும் பல்வேறுவிதமாக கடவுளை விவரித்திருந்தாலும், கடவுள் ஒன்றுதான் என்பதை அவர்களும் தங்கள் கூற்றினுள் தெளிவுற உணர்த்திச் சென்றிருக்கின்றனர். அந்த ஒன்றை, ஒன்றினுள் ஒன்றாக இருக்கிற தன்மையை இங்கே எழுதுகிறேன்.

கடவுளை உணர்வதே நிலையான இன்பம் என்ற முன்னோர்களின் கூற்றில், இரண்டுவித தன்மைகளை இன்பத்தில் கொடுத்துச் சென்றுள்ளனர்.

கடவுளை உணர்வது பேரின்பம்; மற்றதெல்லாம் சிற்றின்பம் எனலாம்.

ss

Advertisment

ஆனால் நாளைடைவில் சிற்றின்பம் என்ற வார்த்தையை தாம்பத்திய உறவுக்குக் கொடுத்துவிட்டனர். இருந்தபோதிலும் கடவுள் தன்மையை இரண்டு இன்பத்திலும் உணரமுடியும். ஆனால் பேரின்பத்தில் கடவுள் தன்மையில் தொடர்ந்து நிலைத்திருக்கமுடியும். சிற்றின்பத்தில் கடவுள் தன்மையைத் தொட்டுணர மட்டுமே முடியும். இந்த இரண்டு இன்பங்களுக் கும் கால அளவுதான் வேறுபாடு.

இந்த கடவுள் தன்மையை உணர்வதற்கான ஜோதிட அமைப்புகள் எவ்வாறிருக்கும்? அந்த அமைப்புகள் நம்முள் எவ்வாறு செயல்பட்டுக் கடவுள் தன்மையில் இருக்கவைக்கும்? அது பேரின்பமோ, சிற்றின்பமா? தெய்வத் தன்மையை உணர்தல் என்பதே பெரிய பாக்கியமல்லவா? மிகப்பெரிய கடும் சுமையான விஷயத்தைக் கையிலெடுத்திருக் கிறேன். என் குரு நாகாவையும், சத்குரு கசவனம்பட்டி மௌன குருவும், அப்பன் அம்பலத்தானும் துணை நிற்க க

டவுள் என்ற வார்த்தைக்குப் பல்வேறு அர்த்தங்களும், விளக்கங்களும் புராண- இதிகாச- வேதங்களில் சொல்லப்பட்டி ருந்தாலும், கடவுள் தன்மையை நான் உணர்ந்த விதத்தில், என்னால் முடிந்தவரை விவரிக்க முயல்கிறேன்.

Advertisment

ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும் பல்வேறுவிதமாக கடவுளை விவரித்திருந்தாலும், கடவுள் ஒன்றுதான் என்பதை அவர்களும் தங்கள் கூற்றினுள் தெளிவுற உணர்த்திச் சென்றிருக்கின்றனர். அந்த ஒன்றை, ஒன்றினுள் ஒன்றாக இருக்கிற தன்மையை இங்கே எழுதுகிறேன்.

கடவுளை உணர்வதே நிலையான இன்பம் என்ற முன்னோர்களின் கூற்றில், இரண்டுவித தன்மைகளை இன்பத்தில் கொடுத்துச் சென்றுள்ளனர்.

கடவுளை உணர்வது பேரின்பம்; மற்றதெல்லாம் சிற்றின்பம் எனலாம்.

ss

Advertisment

ஆனால் நாளைடைவில் சிற்றின்பம் என்ற வார்த்தையை தாம்பத்திய உறவுக்குக் கொடுத்துவிட்டனர். இருந்தபோதிலும் கடவுள் தன்மையை இரண்டு இன்பத்திலும் உணரமுடியும். ஆனால் பேரின்பத்தில் கடவுள் தன்மையில் தொடர்ந்து நிலைத்திருக்கமுடியும். சிற்றின்பத்தில் கடவுள் தன்மையைத் தொட்டுணர மட்டுமே முடியும். இந்த இரண்டு இன்பங்களுக் கும் கால அளவுதான் வேறுபாடு.

இந்த கடவுள் தன்மையை உணர்வதற்கான ஜோதிட அமைப்புகள் எவ்வாறிருக்கும்? அந்த அமைப்புகள் நம்முள் எவ்வாறு செயல்பட்டுக் கடவுள் தன்மையில் இருக்கவைக்கும்? அது பேரின்பமோ, சிற்றின்பமா? தெய்வத் தன்மையை உணர்தல் என்பதே பெரிய பாக்கியமல்லவா? மிகப்பெரிய கடும் சுமையான விஷயத்தைக் கையிலெடுத்திருக் கிறேன். என் குரு நாகாவையும், சத்குரு கசவனம்பட்டி மௌன குருவும், அப்பன் அம்பலத்தானும் துணை நிற்க கைகூப்பி வணங்கி வேண்டித் தொடர்கிறேன்.

தலைப்பிலிருக்கும் மூன்று தன்மைகளுக்கும், சிறு விளக்கம் அளித்துவிட்டு இம்மூன்றும் ஒருங்கே செயல்படும் விதங்களுக்குப் படிப்படி யாக வருகிறேன்.

கடவுள்

கடவுள் என்ற வார்த்தைக்கு இயற்கை என்ற ஒற்றைச் சொல் லைத்தான் என் அனுபவமாகக் கொண்டிருக்கிறேன்.

கடவுள் என்பதற்குப் பலவேறு விதமான வடிவங்களை நம் முன்னோர் கள் சித்தரித்திருக்கிறார்கள். அவை யனைத்தும் பிரபஞ்ச சக்தி செயல் படும் விதமாகத்தான் இருக்கிறது.

பொதுவாக கடவுள் என்பது இயற்கை என்றாலும் இந்த இயற்கை என்பது இருப்பது. இருப்பைத்தான் இயற்கையென்று சொல்கிறோம்.

இயற்கை- இருப்பு இவற்றுக்கு விளக்கங்களோ வியாக்கியானங் களோ எதுவுமில்லைதானே? "எதுவுமற்ற' என்றுகூட கொள்ளலாம் அல்லவா.

இயற்கை- இருப்பு என்றால் இருப்பது; அவ்வளவுதான்.

அதற்குமேல் விளக்கங்கள் இல்லை. அந்த எதுவுமற்ற இருப்பாகிய இயற்கையே கடவுள். இந்த இருப்பு இயற்கைதான் பிரபஞ்சம்.

அப்படியெனில் இந்த பிரபஞ்சம் எங்கே இருக்கிறது? மனித னாகிய நமக்கு எதிரே இருக்கும் அனைத்துமே பிரபஞ்சம்தான்.

அறிவியல்ரீதியாக விடைகாண முயன்றால்... அதற்கு நாம், நாம் இருக்குமிடம், அதன் சூழ்நிலை, அந்த சூழ்நிலை இயங் கும் விதம், அந்த இயக்கம் வெளிபடுத்துகிற தன்மை, அந்த தன்மையின் விளைவுகள் என தொடர்ந்துகொண்டே போகலாம்.

நாம் இருக்கும் இடமாகிய பூமி, பூமி இருக்கின்ற சூரிய குடும்பம், அந்த குடும்பத்தில் இருக்கின்ற ஒன்பது கிரகம், அதில் இரண்டு நிழல் தன்மைகள்... இத்தனை விஷயங்களும் ஒரு குறிப்பிட்ட சட்டத் திட்டத்திற்கு உட்பட்டு, ஒரு சீரான பாதையில் சீரான இடைவெளியில் தானும் இயங்கிக்கொண்டே சூரியனையும் சுற்றிவருகின்றன என்பது நாமறிந்ததே.

ஈர்ப்பு விசை, விலக்கு விசை ஆகிய இரண்டும் உற்பத்தி செய்யும் காந்தசக்தி, அதன் பிறப்பான மின்சக்தி, மின்சக்தியின் உற்பத்தி என ஒரு கலவை சூரிய குடும்ப இருப்பிடத்தில் செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இத்தனை செயல்களும் நடைபெறும் இடம் அந்தரம் எனும் வெற்றுவெளி. இவை மட்டுமல்லாமல் இந்த நம் சூரிய குடும்பம் போல பலநூறு சூரிய குடும்பங்களும், பால்வெளி மண்டலங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் வெட்டவெளியில்தான் சீரான இயக்கத்தில் இருக்கின்றன.

இத்தனை விஷயங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆதாரமான "இருப்பு' என்கின்ற இடம்தான் கடவுள் என நான் உணர்ந்தேன். உணர, உணர, தெளியத் தெளிய, பிரம்மாண்டம் விரிய விரிய, யோசிக்கிற, ஆராய்கிற நான் இல்லாமலே இருப்புக்குள் அடங்கினேன் என்பதே உண்மை.

மேலே உரைத்த இயற்கை, இருப்பு போன்றவற்றின் வெவ்வேறான உணர்த்தல்களுக்குக் காரணமாய் இருக்கும் இருப்பு உண்மை என்கிறபோது, உரைக்கப்பட்ட விஷயங்களும் உண்மையாகத்தானே இருக்கமுடியும். அந்த வெவ்வேறான உணர்தலுக்கு வடிவம் கொடுத்துதான் இத்தனைக் கடவுள்கள் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த இயற்கை இருப்பானது இருப்பாகவே இருந்திருந்தால் எவ்விதப் பயனும் இல்லை. இந்த இருப்பு செயல்படத் துவங்க, இயக்கம் என்ற தன்மையும் உருவாயிற்று. இதைத்தான் "சலனத்திலிருந்து பிறந்தவை, வானமண்டலத்தில் அல்லது பிரபஞ்சத்தில் சூரியனும், மற்ற கோள்களும்' என்பார் முன்னோர்.

ஒரு விளைவு ஏற்படின் அல்லது தேவைப் படின் இரண்டு உண்மைகள் தேவைதானே! விளைவுக்கு மூலமாகிய பொருளும், அந்தப் பொருள் இயங்கினாலும்தானே உற்பத்தி.

அப்படியாயின் பொருள் என்பதை இருப்பு- செயல் செய்யத் தூண்டுவதை இயக்கம் என கொள்ளலாம்தானே. இருப்பைப்போலவே இயக்கமும் இயற்கையே. பிரபஞ்சம் இருப்பு எனில் அதன் சலனம் இயக்கம். பிரபஞ்சம் வெறும் இருப்பாக இருப்பின், பயன்களான படைத்தல் எங்ஙனம் நிகழும்?

படைத்தல் என்பது இருப்பு, இயக்கம் இரண்டும் இணைதலால் உண்டாகும் விளைவே. மேலே குறிப்பிட்டுள்ள சட்ட திட்ட விதிகளுக்குள் சுழற்சியும், சுழற்சியின் விளைவும், விசை சக்திகளும் நடைபெறு கின்றன. ஆதலால் இருப்பும் இயற்கை; இயக்கமும் இயற்கை.

இந்த இருப்பு, இயக்கம் இணைந்து செயல்படும்போது உருவாகும் விளைவு அல்லது பயன்தான் படைப்பு.

நாம் வாழும் பூமியில் இருப்பும் இயக்கமும் மூன்றுவித கட்டமைப்பில் தன் விளைவை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன.

அவை, படைத்தல், படைத்ததைக் காத்தல், பின் அவற்றை அழித்தல், மீண்டும் படைப்பு என ஒரு சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அப்படியெனில் இருப்பு, இயக்கம் அதன் விளைவான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற பயனைத் தருகிறபொழுது, இருப்பும், இயக்கமும் இந்த மூன்று விளைவுகளைத் தருவதற்கு ஒரு பாதையின் மூலமாகப் பயணிக் கின்றன. அந்தப் பாதை இம்முன்று விளைவு களுக்கு அடிப்படையாக இருக்கவேண்டும் தானே?

அந்த அடிப்படைதான் இருப்பாகிய பூமி இயக்கத்துடன் இணைந்து படைத்தலில் ஈடுபட நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துவிதமான படிகளில் தன் இயக்கத்தை இயக்கி, இந்த மூன்று விஷயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

அதாவது, இருப்பாகிய பூமி, இயக்கத் துடன் சேர்ந்து மேற்சொன்ன ஐந்து விதிகளின் வழியே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற வினையை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக் கிறது எனலாம். இந்த மூன்று நிலைகளிலும் ஆதாரமான இருப்பும், இயக்கமும் தன்னை நிலை நிறுத்தியே செயல்படுகிறதென்பது முக்கியம்.

இருப்பு, இயக்கம் இவ்விரண்டும் படைத்த லில் ஆண் மற்றும் பெண் தன்மையாக- காத்தலில் உருவம் மற்றும் வளர்ச்சியாக- அழித்தலில் முடிவு மற்றும் துவக்கமாக- தன் இரு படித்தன்மைகளைக் கொண்டே தான் இந்த சுழற்சியை நடத்திக்கொண்டி ருக்கிறது. மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் அடிப்படை சூத்திரங்கலான ஐந்து தன்மை களும் (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்) இணைந்தேதான் சுழற்சியை சுழற்றிக் கொண்டிருக்கிறது.

ஆதியில் இந்த ஐந்து தன்மைகளைதான் மனிதன் கடவுள்களாகவே வழிபட்டு வந்திருக்கிறான். பின்னர் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் அவை மாறுபட்டு இந்த ஐந்து தன்மைகளின் செயல்பாடுகளும் தன்மைகளும் வடிவங்களாக உருவாக்கப்பட்டன.

இவ்வாறு இயற்கை, இயக்கம் என்ற தன்மை படைத்தல், காத்தல், அழித்தல் என்ற இயக்க விளைவை ஐந்துவிதமான தன்மையின் அடிப்படையில் நிகழ்த்திக்கொண்டே இருந்தபொழுது, இவற்றினுள் மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டே இருந்தன.

அந்த மாற்றங்கள்தான் பரிணாம வளர்ச்சி யாக வெளிப்பட்டது. அந்த வளர்ச்சியில்தான் தேடுதல் என்ற புதிய விஷயம் வெளிப்பட்டு, அதை அறிவாக உணரப்பட்டு, தேடுதல் தன் பயணத்தைத் தொடங்கியது.

அந்த பயணம்தான் என்னை இதை எழுதவும் செய்கிறது. இந்த தேடுதலின் அறிவை அடுத்த இதழில் தொடர்கிறேன்.

(இன்னும் வரும்)

செல்: 73394 44035

bala200924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe