Advertisment

கடவுள் காமம் ஜோதிடம்! - அஸ்ட்ரோ பாபு (9)

/idhalgal/balajothidam/god-lust-astrology-astro-babu-9

டவுளையும் காமத்தையும் கடந்து, "நமசிவாய' என்கிற ஐந்து உணர்வு நிலைகளுக்குள் பயணித்து, இந்த உணர்வு நிலைகளை உணர் வதற்கான கர்மக் கட்டமைப்பு கிரக நிலைகள் யாருக்கு இருக்கிறதென்ப தைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நான் கடந்த பாகங்களில் ஒரு வார்த்தையை, முக்கியமாக எல்லா உணர்வு நிலைகளை விவரிக்கும்பொழுதும் பயன் படுத்தி இருக்கிறேன். "விழிப்புணர்வு' என்பதே அது. அந்த விழிப்புணர்வில் இருந்தால்தான் காமத்தில் கடவுளைக் காணமுடியும்.

ஆக, காமம் என்ற உணர்வு நிலையின் உந்துநிலைக்கு நம் கட்டமைப்பு இடம்தர வேண்டும்.

காமத்தை எல்லாராலும் பாராட்ட இயலுமா அல்லது சிலாகிக்க தான் முடியுமா அல்லது உணர்ந்து அனுபவிக்க முடியுமா? காமம் என்ற தூண்டல் நிலைக்கு ரசனை நிலை மிக முக்கியம். நல்ல உடலமைப்பு. தோரணை, நல்ல வாசம், சுத்தம், கவனித்தல், தேவை என பல்வேறு உள்கட்டமைப்புகளைக் கொண்டதுதான் காமம். இந்த கட்டமைப்புகளைக்கொண்ட ரசனையில்தான் காமத்தின் உள்ளாழத்தில் செல்லமுடியும். இல்லையேல் அக்காமம் வெறும் இனப்பெருக்கத் தூண்டுதலாய்தான் முடியும்.

Advertisment

gd

இந்த ரசனை, கற்பனை, சிந்தனை என்ற நிலையிலிருந்து காமத்தை அனுபவிக்கிறபொழுது காமத்தின் முதல் நிலையான ருத்ரன், அடுத்த நிலை யான அர்த்தநாரி என்ற உணர்வு நிலையை முழுமையாக அனுபவிக்க இயலும். இந்த இரண்டும் முழுமை பெறுகிறபொழுது நடராஜர் என்கிற இ

டவுளையும் காமத்தையும் கடந்து, "நமசிவாய' என்கிற ஐந்து உணர்வு நிலைகளுக்குள் பயணித்து, இந்த உணர்வு நிலைகளை உணர் வதற்கான கர்மக் கட்டமைப்பு கிரக நிலைகள் யாருக்கு இருக்கிறதென்ப தைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நான் கடந்த பாகங்களில் ஒரு வார்த்தையை, முக்கியமாக எல்லா உணர்வு நிலைகளை விவரிக்கும்பொழுதும் பயன் படுத்தி இருக்கிறேன். "விழிப்புணர்வு' என்பதே அது. அந்த விழிப்புணர்வில் இருந்தால்தான் காமத்தில் கடவுளைக் காணமுடியும்.

ஆக, காமம் என்ற உணர்வு நிலையின் உந்துநிலைக்கு நம் கட்டமைப்பு இடம்தர வேண்டும்.

காமத்தை எல்லாராலும் பாராட்ட இயலுமா அல்லது சிலாகிக்க தான் முடியுமா அல்லது உணர்ந்து அனுபவிக்க முடியுமா? காமம் என்ற தூண்டல் நிலைக்கு ரசனை நிலை மிக முக்கியம். நல்ல உடலமைப்பு. தோரணை, நல்ல வாசம், சுத்தம், கவனித்தல், தேவை என பல்வேறு உள்கட்டமைப்புகளைக் கொண்டதுதான் காமம். இந்த கட்டமைப்புகளைக்கொண்ட ரசனையில்தான் காமத்தின் உள்ளாழத்தில் செல்லமுடியும். இல்லையேல் அக்காமம் வெறும் இனப்பெருக்கத் தூண்டுதலாய்தான் முடியும்.

Advertisment

gd

இந்த ரசனை, கற்பனை, சிந்தனை என்ற நிலையிலிருந்து காமத்தை அனுபவிக்கிறபொழுது காமத்தின் முதல் நிலையான ருத்ரன், அடுத்த நிலை யான அர்த்தநாரி என்ற உணர்வு நிலையை முழுமையாக அனுபவிக்க இயலும். இந்த இரண்டும் முழுமை பெறுகிறபொழுது நடராஜர் என்கிற இயக்க நாட்டியம் முழுத் தன்மை யோடு, அந்த ஆண்- பெண் இருவரின் தன்னிலைக்குத் தகுந்தாற்போல் இயங்கி காலபைரவருக்குள் தள்ளும். காலபைரவர் காலம்கடந்த நிலை, நடராஜரின் இயக்க நாட்டியத்தின் முடிவுநிலை. காலம்கடந்த நிலையை உணர அதீத விழிப்புணர்வு இருக்கவேண்டும். உற்பத்தி நிலையில், அந்த உற்பத்திக்கான விதைத்தலில், விழிப்புணர்வோடு இருப்பது ஆணுக்கு அவ்வளவு எளிதானதல்ல. அதே போல் பூமியான பெண்ணுக்கும் அது எளிதல்ல.

விதைத்தல் முடிந்தவுடன் சதாசிவம் என்ற நிலையை வேண்டுமானால் எல்லாராலும் உணரப்படலாம். ஆனால் விதைத்தல் நடைபெறும்பொழுது ஆண், உணர்வு நிலையில் இருந்துகொண்டே காலம்கடந்த காலபைரவ நிலைக்குள் பயணிப்பான்.

அதேபோல் உணர்வு நிலையைக் கடந்து பூமியை இளக்கமாக்கித் தருவாள் பெண்.

அந்த நிலையில் பைரவி நிலைப்பாட்டில் இருப்பாள்.

Advertisment

அப்போது இந்த இருவரும் உணர்வு நிலையில்தான் இருப்பார்கள். ஆனால் அதை அவர்களால் உணர்தல் இயலாது. நடராஜரின் நாட்டியத்தில் லயித்த நிலை யில், உணர்வு நிலை மறந்து இறைநிலை யான, பிரபஞ்ச நிலையான, காலம் கடந்த நிலைக்கு அந்த நடராஜரின் நாட்டியம் தள்ளி விட்டுவிடும்.

மேலும் பெண் தன்னை நெகிழ் வாக்கி விதையைப் பெற்று, இயக்கத்தை அதனுள் செலுத்தி உருப்பெற முனைப் பாக இருக்கக்கூடிய நிலையில், காலத்தை உணர்தல் நிலையைக் கடந்திருப்பாள்.

ஆனால் விதைக்கும் ஆணும், விதைக்கப்படு கிற பூமியாகிய பெண்ணும் உணர்வு நிலை யில்- அதாவது தன்னிலையில் இருந்து கொண்டு இந்த அனுபவத்தைப் பெறுவார் களாயின், காலபைரவ நிலையைத் தன் னுள்ளே ஆணும் பெண்ணும் தனித்தனியே உணரமுடியும். அது அவ்வளவு எளிதானதல்ல என்றபொழுதும் கவனித்தல் என்ற சிறு தியானப் பயிற்சிமூலம் சாத்தியமே.

அதற்கு ஆணின் கட்டமைப்பும் வழிவிட வேண்டும்; பெண்ணின் கட்டமைப்பும் வழிவிட வேண்டும். கட்டமைப்பு என்பது அவர்களின் படைப்புத் தன்னிலையே.

அந்த படைப்புத் தன்னிலை யாருக்கு வலுவாக உள்ளதோ- கவனித்தல் என்ற நிலைப்பாடு அதிகமாக இருக்கிறதோ அவர்களால்தான் இந்த நிலையை உணரமுடியும்.

மனிதர்களின் கட்டமைப்பின் வரைபடமே ஜாதகம். ஜாதகத்தின் மூலமே ஜோதிடம். ஆக, ஆண்- பெண் இருவரும் எவ்வித கட்டமைப்பில்- அதாவது ஜாதக அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை வைத்து இந்த உணர்தல் நிலையை அவர்கள் பெறமுடியுமா என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள இயலும்.

ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அந்த நபரின் குணாதிசயம், செயல்பாடுகள், அவரின் சிந்தனை, ரசனை, உணர்வு நிலைகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு மனிதனுடைய மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் நம் முதுகுத்தண்டு வழியாக செயல்படும் ஏழு நிலைகளில் பொதிந்திருக்கிறது. அந்த நிலைகளை கடவுள் தன்மை பற்றிய பாகத்தில் ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன்.

இந்த செயல்பாடுகள்தான் "பாவம்' என்ற அடைமொழியில் ஜோதிடத்தில் கையாளப்பட்டு வருகிறது.

கிரகங்களின் செயல்பாடுகள், கிரகங் களால் நிகழும் வேதியியல் மாற்றங்கள், அம் மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளை ஒப்பிட்டு, மனிதனின் செயல்பாடுகளை அதற்குள் பொருத்தி சொல்லியதுதான் "கிரக காரகங்கள்'.

ஆக ஒரு மனிதனின் புரிதல், உணர்தல், வெளிப்படுத்துதல், அவன் எங்கனம், எப்படி, என்ன என்பது போன்ற அனைத்துமே பாவ அடைப்புகளுக்குள் கொண்டுவந்து, அந்த பாவ நிலைப்பாடுகளில், அம்மனிதன் பிறக்கும்பொழுது அமைகின்ற கிரக நிலைப்பாடுகளை வைத்து மேற்கூறிய செயல்நிலைமைகளைக் கணித்ததுதான் ஜாதகம்.

உதாரணமாக, ஒரு மனிதனின் சந்தோஷ நிலைப்பாடுகளை அவனுடைய சுத்தம், ரசனை, போற்றுதல் போன்ற விஷயங்களை சுக்கிரன் கிரக காரகம் வெளிப்படுத்தும். இந்த தன்மைகளை அம் மனிதனின் ஜாதகத்தில் 5-ஆம் பாவம் சொல்லும். பொதுவாகவே திருமணத்திற்கோ அல்லது காதலுக்கோ மேற்கூறிய குணாதிசயங்கள் அத்தியாவசியமானதுதானே?, இதேபோல் பணம், செல்வம், சொத்து, உழைப்பு, நிர்வாகத்திறன், வீரியம், நுண்ணறிவு, அறிவுத்திறன், பிறரிடத்தில் நடந்துகொள்ளும் முறை என்று ஒன்பது கிரக காரகங்களையும் பிரித்திருக்கிறார்கள். இதில் ஏழு கிரகங்களும் இரண்டு காந்த சக்திகளும் (ராகு- கேது) அடக்கம்.

ஜோதிடமும் ஜாதகமும் மேற்கூறியது போல் பல்வேறு நிலைகளைக் கொண்டி ருந்தாலும், நம் தலைப்புக்குத் தகுந்த, இறைநிலையை காமத்தில் உணர எந்த கிரக பாவ நிலைப்பாடுகளை ஒரு மனிதன் கொண்டிருக்கவேண்டும் என்பதே ஒரு ஆண்- பெண் இணைதளில் மிக முக்கியமாக ஒன்றாக அனைவராலும் சொல்லப்படுகிற விஷயம். நம் இயக்க நிலைப்பாட்டிற்குப் பொறுப்பெடுக்கும் சந்திரன் என்ற கிரக நிலையான மனமே பிரதானம்.

அதேபோல் காம நிலைப்பாடுகளுக்குள் ஆண்- பெண் இருவரையும் உள்ளிழுக்கிற தன்மை காதலே; அதாவது ஈர்ப்பு.

அந்த ஈர்ப்பு என்கின்ற நிலைப்பாடு புற, அக செயல்பாடுகள், தோரணை, தோற்றம், நடை, உடை, பாவனை மற்றும் சந்தோஷத் தன்மைகள் அனைத்தும் அடங்கியதே.

இது ஆண்- பெண் இருவருக்குமே பொருந்தும்.

அதை சொல்கிறவர்தான் சுக்கிரன்.

இந்த நிலைப்பாடுகளில் செயல்திறன், உடல் கட்டமைப்பு, ரத்த ஓட்டம், ரத்த வீரியம், ரத்த வலிமை போன்ற தன்மைகளும் மிக முக்கியமே.

இதில் பெண்களைப் பொருத்தவரையில் தீர்க்க நிலைப்பாடுகள் அப்பெண்ணின் கர்ப்பப்பையில்தான் பொதிந்திருக்கிறது பெண்ணின் கர்ப்ப வலிமை நிலைப்பாட்டைப் பொருத்துதான் அப்பெண்ணின் அனைத்து நிலைகளும் அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் இந்த கர்ப்ப வலிமையைதான் மிக ஆழமாக உணர்ந்து, அதற்கான தன்மை களைப் பெண்களிடத்தில் புகுத்திச் சென்றிருக்கிறார்கள். நம் சித்தர்க‌ள். இந்த கர்ப்ப வலிமைதான் தமிழர்களை உலக அளவில் இன்றும் உன்னதமாக வைத்திருக்கிறது என்பதை பலரும் அறியாததே வருத்தம்.

(இன்னும் வரும்)

செல்: 73394 44035

bala151124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe