Advertisment

கடவுள் காமம் ஜோதிடம்! - அஸ்ட்ரோ பாபு (5)

/idhalgal/balajothidam/god-lust-astrology-astro-babu-5

ரு உயிர் ஜனித்து முதல் சுவாசம் எடுக்கும் நேரமே, கடவுள் தன்மையான பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்தும். அந்த முதல் சுவாசமே லக்னம்.

Advertisment

இந்த முதல் சுவாசம் எடுத்தவுடனே படைத்தல் முடிந்து காத்தலில் தன்னை அந்த உயிர் புகுத்திக்கொள்ளும்.

அப்படி புகுத்திக்கொண்ட உயிர், காலம் என்ற வட்டத்திற்குள் வந்து, அது நடத்தும் காத்தல் தொழில்தான் ஜோதிடப் பலன்கள் என்பன.

அவை உருவானவிதம், உருவான மூலம் இவற்றைக்கொண்டு அது செயல்படுதலைத் தீர்மானிக்கும் கணிதம்தான் ஜோதிடமும் பலனும்.

Advertisment

ஒரு பொருள் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அந்த உருவாக்கத்தின் தன்மை தானே உருவாக்கப்பட்ட அப் பொருளுக்குள்ளும் இருக்கும்?

அப்படியான உற்பத்தியின் மூலப்பொருளான பிரபஞ்ச சக்தியும், உருவான நம்முள்தானே இருக்குமென்று தேடிய விளைவுகளில் கண்டறிந்த விஷயங்களும், சூட்சுமங்களும் ஏராளம், ஏராளம். அதை விவரித்தால் மிகமிக விரிவாகும். அதனால் அதைச் சுருக்கி, நம் முன்னோர் கண்டெடுத்த, அதில் நான் உணர்ந்த, புரிந்துகொண்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

பிரபஞ்சத் தன்மை மனிதனாகிய நம்முள் ஏழுவிதமான தன்மைகளைக் கொண்டு தன் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஜோதிடத்தில், நம் மூலமான ஆணாகிய சிவனை சூரியனாகக்கொண்டு, பெண்ணாகிய சக்தி

ரு உயிர் ஜனித்து முதல் சுவாசம் எடுக்கும் நேரமே, கடவுள் தன்மையான பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்தும். அந்த முதல் சுவாசமே லக்னம்.

Advertisment

இந்த முதல் சுவாசம் எடுத்தவுடனே படைத்தல் முடிந்து காத்தலில் தன்னை அந்த உயிர் புகுத்திக்கொள்ளும்.

அப்படி புகுத்திக்கொண்ட உயிர், காலம் என்ற வட்டத்திற்குள் வந்து, அது நடத்தும் காத்தல் தொழில்தான் ஜோதிடப் பலன்கள் என்பன.

அவை உருவானவிதம், உருவான மூலம் இவற்றைக்கொண்டு அது செயல்படுதலைத் தீர்மானிக்கும் கணிதம்தான் ஜோதிடமும் பலனும்.

Advertisment

ஒரு பொருள் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அந்த உருவாக்கத்தின் தன்மை தானே உருவாக்கப்பட்ட அப் பொருளுக்குள்ளும் இருக்கும்?

அப்படியான உற்பத்தியின் மூலப்பொருளான பிரபஞ்ச சக்தியும், உருவான நம்முள்தானே இருக்குமென்று தேடிய விளைவுகளில் கண்டறிந்த விஷயங்களும், சூட்சுமங்களும் ஏராளம், ஏராளம். அதை விவரித்தால் மிகமிக விரிவாகும். அதனால் அதைச் சுருக்கி, நம் முன்னோர் கண்டெடுத்த, அதில் நான் உணர்ந்த, புரிந்துகொண்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

பிரபஞ்சத் தன்மை மனிதனாகிய நம்முள் ஏழுவிதமான தன்மைகளைக் கொண்டு தன் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஜோதிடத்தில், நம் மூலமான ஆணாகிய சிவனை சூரியனாகக்கொண்டு, பெண்ணாகிய சக்தியை சந்திரனாகக்கொண்டு, நாம் வாழ்கிற பூமியில் தன் சக்தியைப் பிரதிபலிக்கிற ஐந்து கோள்களை ஐந்து சக்திகளாக்கி, ராகு- கேது என்ற சந்திரனின் அதிதீவிர மாற்றுத் தன்மைகளையும் கணக்கில்கொண்டு ஏழு மையங்களை நிறுவி இயற்கை நம்முள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

gg

அந்த மையங்கள்தான் சக்கரங்கள் என்று சொல்லப்படுகிற மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம். இந்த ஏழு மையங்களில் ஆணாகிய சிவத்தன்மையும் பெண்ணாகிய சக்தித் தன்மையும் கலந்தே இருக்கின்றன.

இந்த ஆதார மையங்கள்தான் ஜாதகக் கட்டத்தில் பாவகங்களாகக் கணக்கெடுக்கப்பட்டு ஜோதிடத்தில் சொல்லபட்டிருக்கிறது.

பிரபஞ்சத் தொடர்பான முதல் மூச்சு எடுக்கும் நேரத்தில் எந்த சக்கரம் இயங்கத் துவங்குகிறதோ அது முதல் பாவகமாக சொல்லப்பட்டு, அடுத்த பாவகங்களின் தன்மைகள் தீர்மானிக்கப் படுகின்றன.

ஜாதகக் கட்டத்தில் 1-லிருந்து 7-ஆம் பாவம்வரை நம்மைச் சார்ந்தும், 7-லிருந்து 12-ஆம் பாவம்வரை நம் முன்னிலையான நம் எதிர்ப்புறத்தைச் சார்ந்தும் இருக்கும்.

மூலாதரத்திலிருந்து மேல்நோக்கிச் செல்லும் ஏழு நிலைகள் (ஆரோகணம்), மேல் நிலையிலிருந்து மூலாதரம் வரும் ஏழு நிலைகள் (அவரோகணம்) என 12 பாவங்களாக (1-லிருந்து 7 பாவம், மீண்டும் 7-லிருந்து 1-ஆம் பாவம்) பிரித்துக் கணக்கிட்டுள்ளனர் நம் கோவணாண்டிகள்.

நம் உடம்பு செயல்படும் இடமென்பது இடுப்பிலிருந்து தலைவரையுள்ள பகுதியே. இப்பகுதி இயங்குவதற்கு உதவுவனவே கைகளும் கால்களும்.

இந்த உடம்பை செயல்படுத்துகிற ஏழு மையங்களுக்குள் திட்டமிடல், செயல்படல் என்ற இரண்டு செயல்திறன்கள் உள்ளன.

திட்டமிடல் என்பது தலைசார்ந்த பகுதி, செயல்படல் என்பது தலைக்குக் கீழிருக்கும் உடல் சார்ந்த பகுதி. இந்த இரண்டையும் இணைக்கும் சக்தி மையம் கழுத்து என்கின்ற விசுக்தி ஆதார மையம். இதுதான் திட்டமிடலை உடம்புக்குத் தெரிவித்து, செயல்பாடுகள் நடைபெறத் துணையிருந்து, அந்த செயல்பாட்டின் பயன்களை திட்டமிடலுக்கு மறுபடி தெரிவிக்கிற ரேடார் அமைப்பு.

இந்த சக்தி மையங்களான சக்கரங்கள், நம் சூரிய குடும்பத்தில் இயங்கும் கோள்களின் தன்மையால்தான் தீர்மானிக்கப்பட்டுள்ளன; பிரபஞ்சம் இயங்குகின்ற மூலத்தின் தன்மையே தன்னுள்ளும் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்த மூத்தோர் உரைத்த விஷயங்களில் நிறைய இருக்கின்றன.

ஆதலால் நாம் செயல்படும் தன்மைகளும் இந்த கோள்களின் குணநலன்களைதான் கொண்டிருக்கிறது. இதை உறுதிபடத் தெரிந்துகொண்ட சான்றோர்; அந்தந்த கோள்களின் தன்மைகளைப் பட்டியலிட்டது தான் கிரகத் தன்மைகளான காரகங்கள்!

ஒவ்வொரு கிரகமும் மனித உடலினுள் எந்த செயல்பாடுகளைச் செய்கிறதோ அவற்றைதான் ஜோதிடத்தில் கிரக காரகங்கள் அல்லது கிரகத் தன்மைகள் என கொண்டிருக்கிறார்கள்.

கோள்கள் தன் தன்மைகளான காரகங் களோடு, மனித உடம்பின் ஏழு ஆதார மையங்களில் அடைக்கப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறு மனித உடம்பின் செயல்களைப் பட்டியலிட்டதில், எந்த செயல்கள் எந்த கிரகங்களால் நடத்தப்படுகிறதோ அந்த செயல்களின் பொறுப்புகளை அந்த கிரகத் தன்மைகளாகக் கொண்டார்கள்.

சூரியன்- ஆன்மகாரகன்.

சந்திரன்- தாய்க்காரகன், மனோகாரகன்.

செவ்வாய்- ரத்தக்காரகன், சகோதர காரகன்.

புதன்- வித்யாகாரகன். நுண்ணறிவு.

குரு- புத்திரக்காரகன், தனகாரகன்.

சனி- கர்மாகாரகன், ஆயுட்காரகன்.

கேது- ஞானகாரகன், தாய்வழி உறவு.

ராகு- மோடசக்காரகன், தந்தைவழி பாட்டனார்.

இவ்வாறு கிரக காரகங்களைப் பிரித்துக் கணக்கிட்டு நம் செயல்பாடுகளைக் கண்டுபிடித்ததுதான் ஜோதிடம். இந்த செயல்பாடுகள் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படுமென்று கணக்கிட்டு உரைத்த விஷயம்தான் ஜோதிடப் பலன்.

ஜோதிடம் வேறு; ஜோதிடப் பலன் வேறு.

ஜோதிடம் உண்மையைக் கண்டறிவது; இயற்கையான பிரபஞ்சத் தன்மையை உணர்வது. இதன் செயல்பாடுகள் எவ்வாறிருக்கும் என்ற கணக்கீடுகளே ஜோதிடப் பலன்.

மேலும், ராகு- கேது இரண்டும் பூமிக்கு வெகு அருகே செயல்படுகிற தன்மை யினாலும், சூரிய பாதை, பூமி, சந்திரன் ஆகிய மூன்று சக்தி நிலைகள் சந்திக்கின்ற, சக்தி ஓட்டம் நிறைந்திருக்கின்ற இடமாதலாலும் அவற்றை முதன்மையாகக்கொண்டே இந்த ஏழு சக்தி மையங்கள் இயங்குகின்றன.

கேது முதல் மையமான மூலாதாரமாகவும், ராகு இறைநிலையான சகஸ்ராரமாகவும் இருந்து, இடையிலிருக்கும் ஐந்து மையங்கள் சுக்கிரன், புதன், குரு, சனி, செவ்வாய் என்ற ஐந்து கிரகங்களின் ஆதிக்கத்தில் தன் தொழிலை, இயற்கை தீர்மானித்தவாறு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த இயற்கை நம் உருவாக்கத்திலேயே தன் தன்மைகளை உட்புகுத்தி நம்முள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. இந்த நர்த்தனத்தைதான் நாம் "வாழ்க்கை' என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஏதோ நாம் தீர்மானித்த, நாம் கணக்கு போடுகிற, நாம் ஜெயித்த, "நாம், நாம், நாம்' என்று உரைத்துக்கொண்டிருக்கிறோமே- நாமா செய்கிறோம்? அனைத்தும் இயற்கை என்ற கடவுள் தன்மையின் செயல்பாடுகளே அன்றி வேறேதும் உண்டா?

இந்தத் தொடர் கட்டுரையின் நோக்கம் இயற்கையான பிரபஞ்சத் தன்மையான கடவுளை உணர்வதற்குதான்.

நான் உணர்ந்த கடவுள் நிலைகள் ஐந்து. அவை ருத்ரன்- காளி, அர்த்தநாரீஸ்வரர், நடராஜர்- ஈஸ்வரி, காலபைரவர்- பைரவி, சதாசிவன்- பார்வதி.

இந்த நிலைகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

(இன்னும் வரும்)

செல்: 73394 44035

bala181024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe