Advertisment

கடவுள் காமம் ஜோதிடம்! - அஸ்ட்ரோ பாபு (3)

/idhalgal/balajothidam/god-lust-astrology-astro-babu-3

காமம் இயற்கை யுடன் இணைந்து, இயற்கையின் மூலமான இருப்பையும், இயக்கத் தையும் இயக்கி, படைத்தல் என்ற தொழிலை சீராகச் செய்துகொண் டிருக்கிறது இப்பிரபஞ்சத்தில்.

ஆக, காமம் இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துதான் இருக்கிறது.

Advertisment

இருப்பு என்பதொரு தன்னிலை; இயக்கம் என்பதொரு தன்னிலை. இந்த இரு தன்னிலைகளும் சலனப் படுகிறபொழுது ஈர்ப்பு ஏற்பட்டு படைத்தல் நிகழ்கிறது. இருப்பை சிவனாகவும், இயக்கத்தை சக்தி யாகவும், அதை ஆண்- பெண் என்று வடிவமாக்கிக் கொடுத்திருக்கி றார்கள். இயற்கை தன் மூன்று தொழில்களை இந்த இரண்டின் மூலமாகத்தானே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று நிலைகளிலும், நாம் உணர்கிறோமோ இல்லையோ காமம் நிகழ்ந்துகொண்டுதான இருக்கிறது.

இயற்கைத் தன்மையான இருப்பு என்ற ஒன்றுமில்லா நிலையை நம் முன்னோர்கள் சிவம் என்றனர்.

அதேபோல் இயக்கம் என்ற இயங்குகின்ற நிலையை சக்தி என்றனர்.

Advertisment

இந்த இரண்டு சொற்களுக்கும் ஏராளமான விளக்கங்களை நம் முன்னோர்கள் கொடுத்திருந்தாலும், நான் உணர்ந்தது இரண்டு தன்னிலை என்ற தன்மையை மட்டுமே.

படைத்தல் என்பது ஒன்றை உருவாக்குதல். ஆணும் பெண்ணும்- சிவனாகிய, இருப்பாகிய, ஒன்றுமில்லா தன்மையும்; சக்தியாகிய, இயக்கமென்ற இயங்குகின்ற தன்மையும் சலனப்பட்டு காமுற்று இணைந்து ஒருநிலையில் சந்தித்து ஒன்றை உருவாக்குவது.

காத்தல் என்பது, உருவாகிய ஒன்றை இந்த இயற்கை தன்னை ஐந்து வழிமுறைகளின் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்)மூலம் நிலைநிறுத்திக்கொள்வது.

அழித்தல் என்பது உருவாகிய, காக்கப்பட்ட ஒன்று மீண்டும் இயற்கையில் இணைகிற விஷயம். இதுதான். இதுமட்டும்தான் இந்த இயற்கை நமக்கு வழங்கிய ஒன்று. இருப்பும், இயக்கமும் சலனப்பட்டு காமுற்று இயங்கி, ஒன்றை உருவாக்குதல் படைத்தல்; அதேபோ

காமம் இயற்கை யுடன் இணைந்து, இயற்கையின் மூலமான இருப்பையும், இயக்கத் தையும் இயக்கி, படைத்தல் என்ற தொழிலை சீராகச் செய்துகொண் டிருக்கிறது இப்பிரபஞ்சத்தில்.

ஆக, காமம் இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துதான் இருக்கிறது.

Advertisment

இருப்பு என்பதொரு தன்னிலை; இயக்கம் என்பதொரு தன்னிலை. இந்த இரு தன்னிலைகளும் சலனப் படுகிறபொழுது ஈர்ப்பு ஏற்பட்டு படைத்தல் நிகழ்கிறது. இருப்பை சிவனாகவும், இயக்கத்தை சக்தி யாகவும், அதை ஆண்- பெண் என்று வடிவமாக்கிக் கொடுத்திருக்கி றார்கள். இயற்கை தன் மூன்று தொழில்களை இந்த இரண்டின் மூலமாகத்தானே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று நிலைகளிலும், நாம் உணர்கிறோமோ இல்லையோ காமம் நிகழ்ந்துகொண்டுதான இருக்கிறது.

இயற்கைத் தன்மையான இருப்பு என்ற ஒன்றுமில்லா நிலையை நம் முன்னோர்கள் சிவம் என்றனர்.

அதேபோல் இயக்கம் என்ற இயங்குகின்ற நிலையை சக்தி என்றனர்.

Advertisment

இந்த இரண்டு சொற்களுக்கும் ஏராளமான விளக்கங்களை நம் முன்னோர்கள் கொடுத்திருந்தாலும், நான் உணர்ந்தது இரண்டு தன்னிலை என்ற தன்மையை மட்டுமே.

படைத்தல் என்பது ஒன்றை உருவாக்குதல். ஆணும் பெண்ணும்- சிவனாகிய, இருப்பாகிய, ஒன்றுமில்லா தன்மையும்; சக்தியாகிய, இயக்கமென்ற இயங்குகின்ற தன்மையும் சலனப்பட்டு காமுற்று இணைந்து ஒருநிலையில் சந்தித்து ஒன்றை உருவாக்குவது.

காத்தல் என்பது, உருவாகிய ஒன்றை இந்த இயற்கை தன்னை ஐந்து வழிமுறைகளின் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்)மூலம் நிலைநிறுத்திக்கொள்வது.

அழித்தல் என்பது உருவாகிய, காக்கப்பட்ட ஒன்று மீண்டும் இயற்கையில் இணைகிற விஷயம். இதுதான். இதுமட்டும்தான் இந்த இயற்கை நமக்கு வழங்கிய ஒன்று. இருப்பும், இயக்கமும் சலனப்பட்டு காமுற்று இயங்கி, ஒன்றை உருவாக்குதல் படைத்தல்; அதேபோல் உருவாக்கிய ஒன்றிலிருந்து பிரிந்து, இயற்கை நிலையான இருப்பையையும், இயக்கத்தையும் நோக்கிப் பயணப்பட்டு முடிவது அழித்தல்.

இந்த இரண்டு நிலைகளில், காமத்தில்தான் தன்னிலை களான இருப்பு சிவன், இயக்கம் சக்தி ஆகியவற்றின் தொடர்பிலிருக்கிறோம்.

படைத்தலின் காமத்தில்தான் காலம், உணர்வுகள் என்ற உருவமில்லாத, சுட்டிக்காட்ட முடியாத, உணர்த்தமுடியாத மாயையில் சிக்கி, தன்னிலையான இயற்கையைவிட்டு விலகி நிற்கிறோம்.

gg

பூமியில் நாம் ஜனித்தவுடனே காலம் தொடங்கிவிடுகிறது. இயற்கையாகிய பிரபஞ்சத் தன்மைகளான சூரிய, சந்திர கோள்களின் சக்தி நடனம் நடைபெறத் துவங்கிவிடும். அந்த நடனத்தின் பிரிவுகளான உணர்வுகளுக்குள்ளும் நாம் பயணப் பட்டேதான் காத்தலைக் கடந்து அழித்தலுக்குள் நுழைந்து சிவன்- சக்தியை அடையவேண்டும்.

இந்த உணர்வுகள் ஆசை, கோபம், பொறாமை, அடைதல் என்ற பிரிவுகளுக்குள்ளே "நான்' என்ற விஷத்தை உருவாக்கி, அந்த சுவைக்கு நம்மை அடிமையாக்கி, அந்த சுவையாகிய விஷத்தை உட்கொள்ள உட்கொள்ள, அது படைத்தலின் மூலத்தை மறைத்துவிடுகிறது.

இந்த "நான்' என்ற விஷச் சுவையை விலக்க, உணர்வுகளைத் தவிர்த்து, காலம் என்ற அத்தன்மையைக் கடந்து மூலத்தை அடையத்தான் இத்தனை பிரயத்தனம்- காத்தலில்.

அழித்தல், காமத்தில் நர்த்தனமாடிய உணர்வுகளும் தந்த "நான்' என்னும் விஷச் சுவையும், காலமும் முடிவிற்கு வந்து மூலத்தை நோக்கிப் பயணப்படுகிற நேரம், மூலத்தின் அடையாளங்களைத் தேட முற்படும்- ஒடுங்குவதற்கு.

மனிதர்களாகிய நாம் பூமிக்குள் வந்தவுடனே காலம் நம்மைத் தத்தெடுத்துக்கொள்கிறது. அதில்தான் உணர்வுகள் பிறக்கின்றன. ஆசை தன் தோகையை விரிக்கிறது.

"தான்' என்ற தன்மை தலையெடுத்து சுயம் (நான்) பிறந்து, தன், தனது என்று உருவெடுத்து, உறவுகள் என இன்றைக்கு உலகம் இப்படி மாற்றிவிட்டது. ஆனால் இயற்கைக்கும், மேலே கூறப்பட்ட விஷயங்களுக்கும் சம்பந்தமில்லை.

இயற்கை படைத்தலில் தொடங்கி, காத்தலில் தன்னை நிலைநிறுத்தி மற்றொன்றை உருவாக்கி, அழித்தலில் தன்னை இயற்கையோடு இணைத்துக் கொள்ளும்.

படைப்பை மனிதன் தன் சுயநலத்திற்கு இன்றைக்கு வளைத்துக் கொண்டாலும், இன்றும் ஆணுக்கு (சிவத் திற்கு) படைத்தலுக்குக் காரணாமாய் இருக்கிற விந்து சுரத்தலும், சக்திக்கு சுரோணிதம் சுரத்தலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கி றது. அதை எந்த மனிதனாலும் நிறுத்த முடிவதில்லையே. அவை இயற்கையின் ஏற்பாடு.

அதேபோல் காத்தலில் சுவாசமும், உணவும் தொடர்ந்துகொண்டேதான் இருக்க வேண்டும், காலம் என்ற வயது கடத்தலும், இயற்கை தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. இவற்றை நாம் எதுவும் செய்துவிட முடியாது.

இந்த இயற்கை விஷயங்களில் மனிதன் மாற்றத்தைச் செய்ய எத்தனித்தபொழுதுதான் இன்றைக்கு இத்தனை நோய்கள், உடல், மனப் பிரச்சினை, போராட்டம், குணநலன்களில் மாற்றம் என்று இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டிருக்கிறது.

இயற்கைத் தன்மையான ஆண்- பெண் என்ற வடிவம்பெற்ற சிவனும் சக்தியும் காமுற்று, படைத்தலில் தன்னைப் புகுத்திக் கொள்ளும்பொழுது நிகழ்கிற நிகழ்வு இயற்கை நடத்துகிற நர்த்தனம்தானே. அந்த நர்த்தனத்தை நாம் உணர்ந்தால் இயற்கையான சிவனையும் சக்தியையும் நாம் உணர முடியும்தானே.

மாற்றுவழியில் சொன்னால், சிவனும் சக்தியும் ஆடும் நர்த்தனம்தானே கலவி! சிவன்- சக்தி இரண்டும் இணைதலை. இன்னும் சற்று இலகுவாக சிந்திக்கிறபொழுது, படைத்தல் எப்பொழுதெல்லாம் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் இயற்கை என்ற கடவுள் தன்மையில் இருந்தால்தானே சாத்தியம்.

சிவனும் சக்தியும் ஈர்ப்பு, சலனம் என்ற இயற்கையின் தூண்டுதலால் இணைந்து படைத்தலை உருவாக்குகிறபொழுது, இந்த இயற்கை அந்த படைத்தல் நேர்த்தியாக இருக்க வேண்டுமென்று, சிவனாகிய ஆணுக்குள்ளும், சக்தியாகிய பெண்ணுக்குள்ளும் படைத்த லுக்கு உண்டான சில நேர்த்தியான சூட்சுமங் களை உள்ளடக்கியே வைத்திருக்கிறது. அது என்ன? பெண்ணுக்கு மட்டும் ஏன் கருப்பை? அந்த கருப்பையை தினமும் பாதுகாக்கிற விஷயம், அதனுள் படைத்தலை உருவாக்குகிற தன்மைக்கு மூலபொருலான கருமுட்டை!

சிவம் என்பது இருப்பு என்பதை முன்னரே விளக்கியிருந்தாலும், சிவம் என்பது அசைவற்ற இருப்பே. சக்தி என்ற இயக்கத்தின் துணை யுடனேதான் சிவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.

ஒன்று உருவாக இருப்பும் இயக்கமும் தேவைதானே. ஆனால் உருவாகிய ஒன்று வளர சும்மா இருக்கிற இருப்பு எங்கனம் பயன் படும்? . இருப்பு தன் பங்களிப்பை இயக்கத் தோடு இணைகின்றபொழுது வழங்குவதோடு சரி.

இருப்பு வழங்கிய விஷயத்தை இயக்க மாகிய சக்தி, தன் இயக்கத் தன்மையில் இயக்கி படைத்தலை முழுமையடையச் செய்து காத்தலுக்குத் தள்ளிவிடுகிறது.

இந்த சக்தியின் படைத்தல் இயக்கத்திற்கு தான். இயற்கை கர்ப்பப்பையை, இயக்கமான பெண்ணிற்குக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அந்த கர்ப்பப்பையைப் பாதுகாத்தும் வருகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் 27 நாட்களுக்கு ஒருமுறை இயல்பாய் நடைபெறும். இது என்ன கணக்கு? இதுவும் கடவுள் என்ற இயற்கையின் விளையாட்டுதான். இதன் உள்ளும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற தத்துவமே வேலைசெய்கிறது.

காமம் என்பதை வெகு இலகுவாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். காமம் அசிங்கம், பேசத் தகுந்ததன்று என்ற தீண்டாமை நிலையில் வைத்திருக்கிறோம்.

ஆனால் இந்த காமம் நடைபெற இயற்கை என்ற கடவுள் எத்தனை நாடகங்களை நடத்துகிறார் என்று ஆழ்ந்து பார்க்கும் பொழுது ஆண்- பெண் இணைவு என்பதைக் கடந்து இருப்பையும், இயக்கத்தையும் உணர்ந்து பிரம்மித்து, அதற்குள்ளே அடங்கச் செய்துவிடும்.

இந்த ஆண்- பெண் தன்மைகளைப் படைத்தலுக்கு ஏற்றதாக்கும் செயலையும், பிரபஞ்ச சக்தியின் இணைவுகளான கோள் களின் பங்களிப்பையும், மிகப் பெரியதாகவே இயற்கை பயன்படுத்துகிறது.

நம் சூரிய குடும்பத்தில் சூரியன் மட்டுமே நடுவிலிருந்து, மற்ற கோள்கள் தன்னைச் சுற்றிக் கொண்டு ஒரு சீரான பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன. அந்த கோள்களின் தன்மை கள், அதன் குணநலன்களின் கலவை பிரபஞ்ச சக்தியாகப் பரிணமித்தி ருக்கிறது.

இருப்பாகிய சூரியனின் நகர்வும், இயக்கமாகிய சந்திரனின் அசைவும், சக்தியாகிய பெண்ணினுள் இருக்கும் உற்பத்தி சாலையான கருப்பையை பேணுவதில் தன பங்கை வழங்கியிருக்கின்றன.

பூமியின் நகர்வு சூரியனின் பாதையில் தினமும் 1 டிகிரி. சந்திரனின் நகர்வு பூமி வட்டத்தில் தோராயமாக ஒருநாள். இந்த இரண்டும் ஒன்பது கோள்களின் ஒன்பது விதமான தன்மையை பூமியிலிருக்கும் உயிர்களிலும் ஒன்பதுவிதமான சக்தியை வழங்குகின்றன என்பதே சூட்சுமம்.

அப்படி இந்த ஒன்பதுவிதமான தன்மை கள், பெண்ணின் கருப்பையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் உருவாகி படைத்த லில் ஒன்பது, காத்தலில் ஒன்பது, அழித்த லில் ஒன்பது- ஆக 27 தன்மைகளில் (28-ஆம் நாள் மாதவிடாய்) தன் ஆர்ப் பாட்டத்தை நடத்திதான் சக்தியாகிய பெண்ணைப் படைத்தலில் பங்கெடுக்க வைக்கிறது.

முதல் ஒன்பது நகர்வு பெண்ணினுள் படைத்தலின் கரு முட்டை உற்பத்தி;

அடுத்த ஒன்பது நகர்வு கருமுட்டை காத்தலில் உருப்பெற்றிருத்தல்;

அடுத்த ஒன்பது நகர்வு அழித்தலில் கருமுட்டை பலமிழந்து அழிதல்.

பின் அது உதிரமாகி (மாதவிடாய்) பெண்ணுள்ளிருந்து வெளியேறி இயற்கை யோடு கலந்துவிடல்.

உடல் மாற்றங்கள், மனம், குண பேதங்கள் என முதல் ஒன்பது நகர்வான ஒன்பது நாட்களுக்குப்பிறகு கருமுட்டை முழுமை யடைந்து, கரு முட்டை தன்னை வெளியேற்ற பெண்ணிற்குத் தரும் சமிக்ஞை சலனம்.

அந்த சலனம்தான் காமம்!

(இன்னும் வரும்)

செல்: 73394 44035

bala041024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe