Advertisment

சுக்கிரனின் பெருமைகள்! -அம்சி கோ. விவேகானந்தன்

/idhalgal/balajothidam/glories-venus-amsi-ko-vivekananda

பொதுவாக ஒருவர் நன்றாக வாழ்கின்றார் என்றால் அவருக்கு என்ன சுக்கிர தசை நடக்கின்றது எனக்கூறுவது வழக்கமாக உள்ளது. ஆக, சுக்கிரன் தசை ஒருவருக்கு நன்மையான பலனைத் தருகின்றது என்பது பொதுவான கருத்தாக விளங்குகின்றது. நாம் தற்போது ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறும் சுக்கிரனைக் குறித்த சில தகவல்களை இங்கே காணலாம்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் இரண்டாம் வீட்டில், பகைவீடு மற்றும் நீச வீடு இல்லா மல் அமர்ந்திருப்பது, பகைவர்களை வென்ற மன்னனாக விளங்கும் ராஜயோகம் என்று நூல்கள் சொல்கின்றன. அவ்வண்ணமே மற்ற எந்த லக்னத்திற்கும் அஷ்டமாதிபதி லக்னத் தில் அமர்ந்தால் நலன் களைத் தருவதில்லை. ஆனால் மீன லக்னத் திற்கு மட்டும், மீன லக்னத் தில் பிறந்து, லக்ன நவாம்சகமும் மீனத்தில் அமர அங்கே சுக்கிரன் அமர்ந்திருந்தால், அதுவும் ராஜயோகத்தை தரும் அமைப்பாக நூல்கள் சொல்கின்றன.

Advertisment

dd

சந்திரன் மட்

சந்திரன் மட்டுமல்ல சுக்கிரனும்கூட கேமத் ரும யோகம் என்று சொல்லக்கூடிய தரித்திர யோகத்தைத் தரும் தன்மையைக் கொண்ட வர். பொதுவாக கேமத் ரும யோகம் என்றால் சந்திரனுக்கு இரண்டு பக்கமும் எந்த கிரகங் களும் இல்லாமல் இருப்பதுதான் நாம் கேமத்ரும யோகம் என்று நினைத்துக்கொண்டிருக் கின்றோம். அது மட்டுமல்ல; எண்ணற்ற கேமத்ரும யோகங்கள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் சுக்கிரனும் சனியும் ஒன்றாக இணைந்திருப்பது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வண்ணம் ஜாதகத் தில் அமைந்திருக்க நீசம் பெற்றிருப்பது பகை கிரக வர்க்கங்களை பெற்றிருப்பது அல்லது பாவ கிரகங்களுடைய வர்க்கங்களை பெற்றிருந்தால் இதுவும் கேமத்ரும யோகமாகும். இத்தகைய அமைப்பு ஒருவர் மன்னர் குலத்தில் பிறந்தாலும்கூட அவருக்கு யோகம் இல்லாமல் துயர் கூறுகின்ற ஒரு அமைப்பாக சாஸ்திரம் சொல்கின்றது.

Advertisment

இத்தகைய அமைப்பைபெற்ற ஜாதகர் சுக்கிரன் மற்றும் சனிக்கு கிரக சாந்தி செய்துகொள்வதால் தரித்திரத்தை விலக்கி ஐஸ்வரியத்தை பெறலாம். ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் புதனும் ஒன்றாக இணைந்து ஒன்று, நான்கு, ஏழு, பத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகத்தில் அமைந்த மற்ற தோஷங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகுவதாக வீமகவி என்ற நூல் சொல்கின்றது. சுக்கிரன் அம்பாள், லட்சுமி, அன்னபூர்ணேஸ்வரி, யட்சிணி தேவதை மற்றும் பிள்ளையாரைக் குறிக்கின்ற கிரகமாகும். முகூர்த்த சாஸ்திரங்கள் முகூர்த்த லக்னத்திற்கு சுக்கிரன் தனது பார்வையைத் தருவது நலமல்ல என்று சொல்கின்றன. எனவே எந்த முகூர்த்தத்திற்கும் முகூர்த்த லக்னத்திற்கு ஏழில் சுக்கிரன் இருப்பதை சாஸ்திரங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

சுக்கிரன் களத்திர காரகன் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் சுக்கிரன் பகல் நேரத்தில் நமது அன்னையைக் குறிக்கின்ற கோளும் இரவில் தாயின் சகோதரியைக் குறிக்கும் கிரகமும் ஆகும். ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரனும் ஆறில் சுக்கிரனும் அமர்ந்தால் அவருக்கு ஒரே மகன் மட்டுமே குழந்தையாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஜாதக அலங்காரம் நூல் சொல்கின்றது. ஒரு ஜாதகத்தில் உபசய ராசி என்று சொல்லக்கூடிய மூன்று, ஆறு, பத்து, பதினொன்றில் சுக்கிரனோ அல்லது ஏழாம் வீடோனோ அமர்ந்திருந்தால் திருமணத்திற்குபின் அவர் வாழ்வில் ஏற்றத்தை பெறும் அமைப்பைக் கொண்டவராக இருப்பர் என்று சொல்லப்பட்டுள்ளது.

அவ்வாறே சுக்கிரன் சர ராசியில் அமர்ந்து சுக்கிரனுக்கு இரு பக்கத்திலும் பாவ கிரகம் இருக்கவும், சுக்கிரன் சனியின் பார்வை அல்லது சேர்க்கையைப் பெறவும் அவர் இனம் மதம் கடந்த திருமணத்தை செய்துகொள்வதாகவும் பிரசன்னமார்க்க நூல் போன்ற நூல்கள் கூறுகின்றன. சுக்கிரன் புதன் யுவர் லாப ஸ்தானத்தில் அமரவும் குரு ஆட்சி, உச்சத்தில் இருக்கவும் பிறந்தவர் மாடி வீடு, தோட்டம், மனை செல்வங்களோடு சிறப்புற வாழ்வார் என்று வீமகவி சொல்கின்றது.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றாலே அவர் வழக்கறிஞராக யோகம் இருப்பதாக ஜாதக தத்துவ நூல் கூறுகின்றது. எப்படி என்றாலும் வாழ கவிஞர் ஆவதற்கும் சுக்கிரனுக்கும் சம்பந்தம் இருப்பதனை ஜாதக அலங்கார நூலும் ஒத்துக்கொள்கின்றது. ஒரு ஜாதகத்தில் குரு சுக்கிரன் லக்னத் திற்கு இரண்டாம் வீட்டோன் இவர் உச்சம் மற்றும் மூலத்திரிகோணத்தில் அமர்ந்து பாவ கிரகத்தினுடைய சேர்க்கைப் பெறாதபோது சிறந்த வழக்கறிஞராக பணியாற்றும் யோகத்தைப் பெற்றவர் என்று ஜாதக அலங்கார நூல் சொல்கின்றது. ஒரு ஜாதகத்தில் நான்கில் சுக்கிரனும் சூரியனும் இணைந்திருப்பதுகூட ராஜ யோகம்தான். இப்படி சுக்கிரனை குறித்து நூல்கள் சொல்லப்பட்ட கருத்தை தொகுத்து எழுதிக்கொண்டே செல்லலாம். அது நிறைவடையாத கதையாக சென்றுகொண்டே இருக்கும்.

செல்: 94438 08596

bala201224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe