இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
85
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தில் வக்ரகதியில் அமையும் கிரகம், தான் தரவேண்டிய பலனுக்கு எதிர்மறையான பலன்களையே தரும். வக்ரகதியில் இயங்கும் சுப கிரகங்கள் அசுபப் பலன்களையும், அசுப கிரகங்கள் சுபப் பலன்களையும் தரும். உதாரணத்திற்கு, புத்திர காரகனாகிய குரு வக்ரகதியிலிலிருந்தால் புத்திர பாக்கியத்தைக் கெடுக்கும். குருவின் வீட்டின் பாதக ஸ்தானாதி பதியாகிய புதன் வக்ரகதி யிலிலிருந்தால் புத்திர பாக் கியத்தைக் கொடுக்கும். லக்னத்திற்கு இரண்டா மிடத்தில் ஆட்சிபெற்ற வக்ர குரு இருந்தால், தனலாபம் தராமல் மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தருவார். கோட்சாரத்திலும் ஒரு கிரகம் நேர்கதியில் சஞ்சரிக்கும்போது தரும் பலனை, வக்ரகதி சஞ்சாரத்தில் எதிர்மறையாகவே தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""அக்னீஸ்வரே! தாய்முகம் கண்ட சேய் பசியாறுதல்போல, தியானத்தில் குருமுகம் காணும் சாதகரின் முயற்சிதனை எளியோரும் உணருமாறு தாங்கள் விளக்கியருளவேண்டுகிறன்'' என அன்னை அகிலாண்டேஸ்வரி கிளியனூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு அகஸ் தீஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
வேதியன் உரைத்தது- ""காற்றிலாடும் சுடர் ஒளி தராது. ஆற்றிலாடும் ஓடம் கரை சேராது. யோகம் பயில்வோர் அசையா தேகத்தை, அசையா மனதோடு இருத்தி, அகோசரி, சாம்பவி முத்திரைகளை பாவிப்பர். பேதைப் பெண்டிர் அம்மானை நினைந்து அம்மானையாடுதல்போல, உடலை, மனதை, உயிரையும் வாசியில் கூட்டி, நாசிதனை தாளும் சிரமும் ஒருமுகமாய் நோக்குவார் குருமுகம் காண்பார்.''
""அமிர்தகடேஸ்வரரே! "கண்டஸூசி' எனும் தாண்டவத்தின் லயமாகிய அனுஷ நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், மூலம் முதல் பாதத்தில் சந்திரனும், மிருகசிரீடம் மூன்றாம் பாதத்தில் சனியும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் முதல் பாதத்தில் குருவும், ஹஸ்தம் நான்காம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, ஸ்வாதி நான்காம் பாதத்தில் புதன் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று பெருங்களத்தூர் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ காரணீஸ்வரரை அன்னை காருண்யாம்பிகை வேண்டிப் பணிந்தாள்.
கோந்தலநாதர் உரைத்தது- ""கோமதியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் காளிதாசன் எனும் பெயருடன் வேழனூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் இளம்வயதுமுதலே கட்டுக்கடங்காத காளையாய், காமமும் குரோதமும் கொண்டு மதநீர் ஒழுகும் யானைபோல் அலைந்தான். காமத்தின் மதத்தால் உத்தம குணமுள்ள பத்தினிகளைத் தன் இச்சைக்கு உட்படுத்தினான். செல்வமும் செல்வாக்கும் அவனுக்கு உறுதுணையானது கற்பெனும் பெருந்தீயின் வலிலிமையறியாது, கைப்பொருள் கொண்டு மெய்பொருள் (தேக சுகம்) கவர்ந்தான். அவன் செய்த பாவத்தை தர்மதேவதை கருத்தில் கொண்டாள்.
அவன் இளமையின் வசந்தகாலம் விடை பெற்றது. முதுமையின் வெம்மையில் அவனுடல் காய்ந்த சருகானது. இறந்தான்; நரகத்திற்கு இடம் பெயர்ந்தான். "வஜ்ர கண்டகம்' எனும் நரகத்தில், பலகாலம் வாடினான். உடலெனும் புத்தாடைஉடுத்தி, புலன்வழி காணும் பூவுலகம் சென்றான். பருவூர் என்ற ஊரில் வாழ்ந்தான். உரிய பருவத்தில் திருமணச்சடங்கில் நாயகனானான். திருமண வாழ்வில் மணமக்கள் இருவர் மனமும் இணைவதற்கு முன்பே, அவன் வாழ்க்கைத் துணையாள் மன நோயுற்றாள். இல்வாழ்வின் சுகங்கள் இல்லாமல் போயின. முற்பிறவியில் அளவிலா காமத்தால் பெற்ற கற்புடை மாதரின் சாபமே அவன் வாழ்வை சீர்கு லைத்தது. *கீசகன்போல் பிறன்மனை நோக்கியதால் அவதியுறுகிறான். இதற்குப் பரிகாரமாக, குமாரிகளை தெய்வமாய் வரித்து, உபசரணை செய்து பூஜித்தால் வாழ்க் கைத்துணைவியின் மனநோய் நீங்கும்.
*கீசகன்- பாண்டவரின் மனைவியாகிய திரௌபதிமேல் கொண்ட முறையற்ற காமத்தால் உயிரிழந்தான்.
-மகாபாரதம்.
(வளரும்)
செல்: 63819 58636
__________
நாடி ரகசியம்
1. அனுஷ நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் குருவும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதகர் அதீத வீரமும் புகழும் பெறுவார்.
2. அனுஷ நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சந்திரனும், புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற ஜாதகருக்கு மணவாழ்க்கை மகிழ்வு தராது.
3. அனுஷ நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதன், சனி, செவ்வாய் கூடி அமைந்தால், ஜாதகர் முறையற்ற தொழில் செய்து செல்வம் பெறுவார்.
கேள்வி: கிரக, பாவ சேர்க்கைகளே வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் என்றாலும், முதன்மையான பாவத்தையும், கிரகத்தையும் "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: "எண் சாண் உடலுக்கு சிரசே (தலை) பிரதானம்' என்பதுபோல, லக்ன பாவமே எல்லா நிகழ்வுகளிலும் தலையாய பங்குவகிக்கிறது. லக்ன பாவத்தோடு, மற்ற பாவங்கள் தொடர்புகொண்டு ஏற்படுத்தும் விளைவுகளே வாழ்வின் நிகழ்வுகள். கிரகங்களில் சூரியனே முதன்மையானவர். அதனா லேயே சூட்சும கிரக எந்திரத்தில் "பிந்து ஸ்தானம்' எனப்படும் மத்தியப் பகுதியில் நடுநாயகராக விளங்கு கிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையிலிலிருந்தால் அனைத்து தோஷங்களும் சூரியனைக்கண்ட பனிபோல நீங்கும். பொதுவாக, சூரியன் உச்சத்திலிலிருக்கும் சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் தங்கள் குலப்பெருமையை மீட்டெடுப்பார்கள். இரண்டாம் பாவத்தில் சூரியனிருந்தால் வெற்றிமேல் வெற்றி குவியும். அதனாலேயே சூரிய உதய லக்னத்திற்குமுன் துயிலெழுந்து, நம் அன்றாடப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். விழிப்பதும் உறங்குவதும் ஜனன- மரணம்போல் நிகழ்வதால், ஒரு நாளில் நாம் விழித்தெழும் லக்னமே அந்த நாளின் வெற்றியை நிர்ணயிக்கிறது. ஒரு ஜாதகத்தில் ராஜகிரகமாகிய சூரியனின் நிலையைக்கொண்டே அந்த ஜாதகரின் செல்வம், செல்வாக்கு, ராஜயோகங்களைத் தீர்மானிக்கமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.