தென்ன கேள்வி?

திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஆண்- பெண்ணுக்கும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும்.

ஆனால் எதார்த்தம் அப்படி இல்லையே. முப்பது வயது கடந்தும் திருமண மாகாத பெண்களும், நாற்பதை நெருங்கியும் கல்யாண ஏக்கத் தோடு திரியும் ஆண்களும் இன்று சர்வ சாதாரம்.

இத்தனைக்கும் இன்று தகவல் தொடர்பு பெருகியிருக்கிறது. திருமணத் தகவல் மையங் களும் புற்றீசல்போல் முளைத் திருக்கின்றன. இருந்தும் திருமணம் என்பது சிலருக்கு எட்டாக்கனியாகவும், சிலருக்கு கைக்கெட்டி வாய்க் கெட்டாமல், பெண்- ஆண் சம்மதம் தெரிவித்து, பெற்றோர் ஒப்புதல் இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் தடைப்படுவதும்; இன்னும் சிலருக்கு நிச்சய தார்த்தம் வரை வந்து நின்று போவதும்; அரிதாக சிலருக்கு, திருமணத்தன்றே பெண்ணோ ஆணோ திருமணத்தை மறுத்து திருமணமே நின்றுபோவதும் என்று பல காரணங்களால் திருமணம் தடைப்படுவதைப் பார்க்கிறோம்.

Advertisment

ஏனிந்த நிலை? இதற்கென்ன தீர்வு? தடைகள் ஏற்படக் காரணமான கிரக அமைப்புகள் எவை என்ற கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரையில் காண்போம்.

திருமணம் நடப்பதற்கு ஆண்- பெண் இருவரின் ஜாதகத் திலும் முதலில் ஆராயப்பட வேண்டியது லக்னத்திலிருந்து எண்ணவரும் ஏழாம் பாவமே. இதை களத்திர ஸ்தானம் என்பார்கள். இந்த பாவம் சுபருடைய வீடாக இருந்து, பாவமும் நன்கு அமைந்து- அதாவது பாவர்கள் இந்த பாவத்திலில்லாமல், பாவர் பார்வை பெறாமலிருப்பது, சுபர் இருப்பது, சுபர்களின் பார்வையைப் பெற்றிருப்பது போன்ற நிலையில் ஏழாம் பாவம் இருக்குமானால், திருமணம் உரிய காலத்தில் எந்தக் குறையு மில்லாமல் நல்லவிதமாக நடைபெறும்.

ஏழாம் பாவம் நன்றாக அமைவதோடு, ஏழாம் பாவத்தின் அதிபதியும் நன்றாக- அதாவது பாவகிரகம் மற்றும் பகை கிரகத்தின் சேர்க்கையோ, எந்த வகையிலும் சம்பந்தமோ இல்லாமலும்; சுபர் சேர்க்கை, பார்வை, சம்பந்தம் எவ்விதத்திலாவது பெற்றிருப்பது, துர்ஸ்தானங்களில் இல்லாமல், அவற்றின் அதிபதிகளின் சேர்க் கையோ, பார்வையோ வேறெந்தவித சம்பந்தமும் இல்லாமலிருப்பது அவசியம்.

Advertisment

இந்த நிலை ஒருவரது ஜாதகத்தில் காணப் படுமானால் ஜாதகர்- ஜாதகிக்கு உரிய காலத்தில் தடையோ, தாமதமோ இல்லாமல் திருமணம் நடக்குமென பொதுவாகக் கூறலாம்.

ஏழாம் பாவம் மற்றும் அதன் அதிபதியின் நிலையைப்போலவே, ஐந்தாமிடம் என்னும் பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் அதன் அதிபதியின் நிலையும் ஒருவரது திருமணம் உரிய காலத்தில் நடக்கவும், மாறாக தாமதமாவதற்கும் காரணங் களாக அமைந்துவிடுகின்றன. எடுத்து வைத்தாலும், கொடுத்துவைக்கவேண்டும் என்பார்கள். எதைக் கொடுத்து வைத் திருக்க வேண்டும்? புண்ணியத்தை! எந்த வொரு ஆசை நிறைவேறவேண்டுமானாலும் பூர்வபுண்ணியம் இருந்தால்தான் அது சாத்தியம். இவ்வாறே, இரண்டாம் வீடு எனப்படும் குடும்ப ஸ்தானமும் அதன் அதிபதியும் பரிசீலிக்கப்பட வேண்டியவையே. இதேபோல் களத்திரகாரகன் எனப்படும் வாழ்க்கைத்துணையை வகுத்தளிக்கும் கிரகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது ஆண்களுக்கு களத்திர காரகனாக அமைவது சுக்கிரன். பெண்ணுக்கு குரு பகவான் களத்திரகாரகனாக அமைகிறார். இவர்கள் நிலையும் ஆராயப்பட வேண்டியது அவசியம். இவர்கள் நீசமோ, வக்ரமோ பெறாமல் எந்த வகையிலும் வலுக்குறையாமல் இருந்தால் ஜாதகர்- ஜாதகிக்கு திருமணம் உரிய காலத்தில் எந்த குறையு மில்லாமல் நடைபெறுமென்று கூறுலாம். மாறாக, ஒருவரது ஜாதகத்தில் இவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் திருமணம் தாமதமாவதோடு, ஒருவேளை நடந்தாலும் மணவாழ்க்கையில் குழப்பங்களும், சிக்கல்களும் தோன்றி, ஜாதகர்- ஜாதகியை நிம்மதியிழக்கச் செய்யுமென்று கூறலாம்.

nnn

இதேபோல், பாவகிரகங்களான சனி, சூரியன், செவ்வாய், ராகு- கேது ஆகியோரின் பங்கும் திருமணம் நடைபெறுவதில் முக்கிய பங்குவகிக்கின்றன. உதாரணமாக, களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவத்தில் சனி பகவானோ, ராகு அல்லது கேதுவோ இருப்பது, சூரியன் மற்றும் செவ்வாய் சேர்ந்திருப்பது, சனி மற்றும் செவ்வாய் இணைந்து ஏழாமிடத்தைப் பார்ப்பது போன்ற கிரக அமைப்புகள் ஒருவரது ஜாதகத்தில் காணப்படுமானால், அவரது திருமணம் தடைகளை சந்திக்குமென்று கூறலாம். மேலும், சர்ப்ப கிரகங்கள் என்னும் ராகு- கேது இருவரும் இரண்டாமிடம் என்னும் குடும்ப ஸ்தானத்தில் அமர்வதும், அங்காரகன் என்னும் குஜ பகவானும், கர்மகாரகனாகிய சனி பகவானும் இணைந்து இவர்களின் பார்வை இரண்டாமிடத்தின்மீது பதிந்தாலும், ஜாதகருக்குத் திருமணம் நடைபெறுவது தள்ளிப்போகும். அப்படியே நடந் தாலும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி யில்லாமல், ஏன்தான் திருமணம் நடந் ததோ என்று நினைக்கும்படி இருக்கும். சுபர் பார்வை இருந்தால், சண்டைக்கு நடுவில் சமாதானக்கொடி பறக்கும். திருமண பந்தம் முறியாது என்றாலும், எலியும் தவளையும் காலைக் கட்டிக்கொண்டதுபோல், ஏறுக்கு மாறாக ஏட்டிக்குப் போட்டியாக வாழ்க் கைச் சக்கரம் சுழலும்.

திருமணம் தாமதமாவதற்கு வேறுசில கிரக அமைப்புகளும் காரணமாகின்றன. உதாரணமாக, குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவத்தில் நீசம்பெற்ற கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலை காணப்படுமானால், அந்த ஜாதகர்- ஜாதகிக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் எனலாம்.

இதேபோல ஏழாம் பாவாதிபதி எனப்படும் களத்திர ஸ்தானாதிபதி நீசம் பெற்றுக் காணப்பட்டால் அவர்கள் ஆணாக இருந்தால் மனைவி அமைவதும், பெண்ணாக இருந்தால் கணவன் அமை வதும் தாமதமாகும் என்று உறுதியாகக் கூறலாம். ஏழாம் பாவத்தில் கிரகங்கள் வக்ரநிலையில் சஞ்சரித்தாலும் திருமணம் தாமதமாகும்.

மேலும், தனகாரகன், புத்திரகாரகன் எனப்படும் குருவோ, அசுர குருவாம் சுக்கிரனோ அல்லது அனலி எனப்படும் சூரியனோ லக்னத்தில் இருக்க, கர்ம காரகனாகிய சனி பகவான் விரய ஸ்தானம் எனப்படும் பன்னிரண்டாம் பாவத்தில் வீற்றிருக்கும் நிலை காணப்பட்டாலும் திருமணம் தாமதமாகும்.

லக்னாதிபதி- மூன்றாமிடம் என்னும் சகாய ஸ்தானம், ஆறாமிடமாகிய ருண, ரோக, சத்ரு ஸ்தானம், பன்னிரண்டாமிடம் என்னும் அயன, சயன, போக, சுக ஸ்தானம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதமாகவே நடக்கும். தாமதத்திற்கு பெரும்பாலும் ஜாதகர்- ஜாதகியே காரணமாக இருப் பதையும் காணமுடிகிறது.

கர்மகாரகனாகிய சனி பகவான் இரண்டு, ஏழு அல்லது பதினொன்று ஆகிய இடங்களில் அமர்ந்து காணப்பட்டாலும் திருமணம் தாமதமாகும் எனலாம். இதேபோல் ஒருவரது ஜென்ம லக்னம், சந்திரா லக்னம் எனப்படும் ஜென்ம ராசி ஆகியவற்றை சனி பகவான் பார்த்தாலும், திருமணம் தாமதமாகும் வாய்ப்புண்டு. ஜென்ம லக்னத்தின் அதிபதியாக அமைந்த கிரகம் லக்னத்திலிருந்து எண்ணவரும் மூன்றாமிடம், ஆறாமிடம், எட்டாமிடம், பன்னிரண்டாமிடம் ஆகியவற்றில் ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்திருந்தாலும் திருமணம் எளிதில் நடைபெறாது.

எல்லாத் தகுதியும் இருந்தும் திருமணம் தடைப்படுகிறது என்று சிலரும், குரு பலன் கூடிவந்தும் திருமணம் தடையாகிறதே என்று சிலரும், தசாபுக்தி அனுகூலமாக இருக்கிறது- இந்த தேதியில் நடந்துவிடுமென்று கூறினார்களே- நடக்கவில்லையே என்று சிலரும் வேதனைப்படுவதைக் காணமுடி கிறது.

"அள்ளாமல் குறையாது; இல்லாமல் புகையாது' என்பார்கள். அதுபோல திருமணம் தாமதமாவதற்கு ஜாதகர்- ஜாதகியின் முற்பிறவி சார்ந்த பிரச்சினைகளும் தடையாக இருக்கலாம். கணவன்- மனைவியை நிம்மதியில்லாமல் நடத்தி, அவர்கள் வேதனையில் வாழ்வை முடித்துக்கொண்டிருந்தால், உயிர்பிரியும் தருணம் அந்த ஆன்மாவின் வேதனையே சாபம்! இதுவே களத்திர சாபமாகி, இப்பிறவியில் திருமணம் நடைபெறுவதில் தாமதத்தையும், அப்படியே நடந்தாலும் திருமண வாழ்க்கையில் அதிருப்தியையும் தரும். சிலருக்கு கணவன்- மனைவியால் இல்லற சுகமே கிடைக்காமல் போவதையும் பார்க்கமுடிகிறது.

இதேபோல் நீத்தார் கடன் சரிவரச் செய்யாமல், பெரியவர்கள் உயிருடன் இருக்கும்போதும் அவர்களை சரிவரச் கவனிக்காமல் உதாசீனப்படுத்தியதோடு, அவர்கள் இறப்புக்கும் முற்பிறவியில் காரணமாக இருந்தவர்களுக்கு "பித்ருசாபம்' ஏற்படும். இதுவும் திருமணத்தடைக்குக் காரணமாவதுண்டு.

மேலும் அந்நிய ஸ்த்ரீமேல் மோகம் கொண்டு, அவர்கள் வாழ்க்கையைக் கலைத்து, இறப்புக்குக் காரணமாகி இருந்தவர்களுக்கு "ஸ்த்ரீ சாபம்' ஏற்படும். இதுவும் ஒரு காரணமாக மணவாழ்க்கை அமைவதில் தடையை ஏற்படுத்தும்.

அப்படியே அமைந்தாலும் திடீர் பிரிவு, விவாகரத்து போன்றவை ஏற்படும்.

மேற்கூறிய பிரச்சினைகளைக் கண்டறிந்து, உரிய பரிகாரங்களாக நிவர்த்தி ஹோமங்கள், பீடா பரிகார ஹோமங்கள் ஆகியவற்றைச் செய்வது, விவாஹப்பிராப்த ஹோமம் மற்றும் ரட்சாதாரணம் பெற்று உரிய மந்திரோபதேசம் மற்றும் விக்ன நிவ்ருத்தி யந்திரம் பெற்று பூஜித்து வருவதன் மூலம் திருமணம் விரைவில் நடக்க வழிபிறக்கும்.

செல்: 95660 27065