னிதனின் மரபணு (ஜீன்) என்பது, மூதாதையர்களின் வம்சாவழியிலிருந்து பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் அடிப்படை செல்களில் ஒன்றாகும். மனித உடலின் எல்லா உறுப்புகளிலும் மரபணு செல்கள் பரவியிருக்கின்றன. மேலும் சூரியன் சார்ந்த ஆத்மா, சந்திரன் சார்ந்த மனித குணாதிசயங்கள், சனி சார்ந்த எலும்புகள், புதன் சார்ந்த நரம்பு மண்டலம், குரு சார்ந்த- மூளை சம்பந்தப்பட்ட எண்ணங்கள்- செயல்பட திடச்சிந்தனை போன்றவற்றை மரபணுக்கள்தான் தீர்மானம் செய்கின்றன. இத்தகைய பல்லாயிரக்கணக்கான செல்களின் கூட்டத்தினை, கிரகநிலைகள் எவ்வாறு மனிதனின் கர்மாவுடன் சம்பந்தப்பட்டு விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை மரபணு விஞ்ஞானத் தத்துவத்தின் (ஜெனிடிக் விஞ்ஞானம்) ஆதாரங்கள்மூலம் புரிந்துகொள்ளலாம்.

Advertisment

மனிதனின் மரபணு விஞ்ஞானம் மனிதனுடைய ஒவ்வொரு மரபணு (ஜீன்) செல்லும் 23 ஜோடி குரோமோசோம்களால் உருவம் பெற்றதாகும். பாலுணர்வு காரகத்துவமான சுக்கிரன் ஆணின் செல்லில் ஒரு வ குரோமோசோம், ஒரு ல குரோமோசோம் என்ற அமைப்பிலும், பெண்ணின் செல்லில் இரு ல குரோமோசோம் என்றவாறும் அமைந்துள்ளன. செயற்கைமுறை கருத்தரிப்பில் ஆண் ல அல்லது பெண் ல கருவைத் தேர்ந்தெடுத்து பெண்ணின் கருப்பையில் செலுத்தலாம். ஆனால் இயற்கைமுறையில் குழந்தை பிறக்கும்வரை பாலினம் அறியமுடிவதில்லை. டி.என்.ஏ என்று கூறப்படும் (டிஆக்சிரிபோ நியுக்ளிக் அமிலம்) தன்மை கொண்ட அணுக்கள் பரம்பரைத்தன்மையை வெளிப்படுத்தும் செல்களாகும். நவீனகால விஞ்ஞானத்தில் மனிதனின் மரபணு சோதனை அனைத்து நிலைகளிலும் பின்பற்றக்கூடியதாக உள்ளது.

23 ஜோடி கொண்ட ஆண்- பெண்ணின் 46 குரோமோசோம்களும் இணைந்து மீண்டும் புதிய 23 ஜோடி குரோமோசோம்கள் பெண்ணின் கருப்பையில் கருவாக உண்டாகிறது. இக்குரோமோசோம்களின் எண்ணிக்கையில் குறைவு (23 ஜோடிக்குக குறைவு) ஏற்படுமானால் பிறக்கும் சிசுவுக்கு மூளை வளர்ச்சிக் குறைவு, மனவளர்ச்சிக் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.

மேலும் சுக்கிரன் ஆதிக்கத்திற்குரிய பாலுணர்வு கொண்ட ல மற்றும் வ செல்களில் குறைபாடு காணப்படுமாயின் மூன்றாம் பாலினம் (திருநங்கை) தோன்றுவதற்கான சூழல் உருவாகும். சுக்கிரன் நீசம்பெற்று, புதன் மற்றும் 5-ஆம் வீட்டுக்கு தீய கிரகங்களின் கூட்டு ஏற்படுமாயின் மூன்றாம் பாலினம் உருவாகும். இத்தகைய பரம்பரைத் தன்மையுடைய மூதாதையர்களின் வம்சத்தோன்றல் எனக்கருதிதான், இறந்த மூதாதையர்களுக்கு அமாவாசை தர்ப்பணம், திதி, தானங்கள் மற்றும் சடங்குகள் செய்து ஆத்மாவை சாந்தியடையச் செய்கிறார்கள்.

கோத்திர ரீதியான சகோதரவழி மரபணுக்கள்

Advertisment

ஒருவரின் ஜனனகால ஜாதகக் குறிப்புகள் என்பது மரபணு சம்பந்தப்பட்ட விவரங்களின் தொகுப்புகளைவிட மேலானதாகும். ஜனனகால ஜாதகக் குறிப்புகளின்மூலம் ஒரு மனிதனின் முக்காலத்தையும் அறியலாம். கோத்திரம் என்பது ரிஷிகளின் வம்சாவழிகளில், அந்தந்த ரிஷிகளின் பெயர்கள் மூலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ரத்த சம்பந்த வகை காரகத்துவம் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவையாகும். எனவேதான் செவ்வாய் சகோதரகாரகன் என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் ரத்த மாதிரி வகைகள் (குரூப்) பண்டைய காலத்தில் ரிஷி வம்சத்தின் பெயர்கள்மூலம் அறியப்பட்டன. இவற்றில் ஒரே ரிஷியின் கோத்திர வம்சாவழியில் பிறந்தவர்கள் வரன் அமைத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், ஒரே மரபணு வம்சாவழியில் பிறந்த ஆண் மற்றும் பெண் சகோதரத்துவம் கொண்டவராவர். இக்கருத்தை மனதில் கொண்டுதான் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதில்லை. இக்காலத்தில் கோத்திர விதிமுறைகளை பலராலும் பின்பற்ற முடிவதில்லை.

கர்ப்பதானத்தின்மூலம் புதிதாகப் பிறக்கும் மரபுவழி செல்கள்

40 சம்ஸ்காரங்களில் கர்ப்பதானம் என்பது கணவன் மனைவியின் கரம் பற்றி, இல்லற தர்மத்தைப் பின்பற்றிச் செய்யவேண்டிய ஆத்மார்த்தமான முக்கிய கர்மாவாகும். எனவேதான் திருமணமானவுடன் "சாந்தி முகூர்த்தம்' என்று, பெரியவர்களின் ஆசியுடன் இச்சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சாந்தி முகூர்த்த கர்மாவானது, பெண்ணுக்கு மாதவிடாய் நின்ற நான்கு தினங்கள் கழித்து, நட்சத்திரப் பொருத்தம் (தாரபலன்) கூடிய சுபமுகூர்த்த லக்னம் குறித்துத் திருமணம் செய்வது உத்தமம். பெண்ணுக்கு மாதவிடாய் கழிந்து கர்ப்பப்பையில் சினை முட்டைகள் 10 முதல் 16 நாள் முழு வளர்ச்சியடைந்து காணப்படும் நிலையில், கணவனால் செய்யப்படும் கர்ப்பதானத்தால், பிறக்கும் குழந்தை எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பிறக்கும். கர்மாவைப் பற்றி இந்து தர்ம சாஸ்திரங்களில் பெரிதும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விதமான மாயை சுக்கிரன், மன்மத யோகத்தால் ஏற்படும் கிரியையாகும்.

brama

மரபணு வேதியியல்

Advertisment

ஒரே தந்தை- தாய்க்குப் பிறக்கும் இரு குழந்தைகளின் மனநிலைகள் வெவ்வேறாக உள்ளன. இரு குழந்தைகள் பிறக்கும் இடைவெளி நேரத்தில் தாய்- தந்தையருக்கு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களாலேயே இத்தகைய மரபணு வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மரபணு பெற்றோர்கள்

பெண்ணின் சினை முட்டைகளும், ஆணின் உயிரணுக்களும் கலந்து இயற்கைமுறையில் கரு உண்டாகாத நிலையில், திருமணமான ஆணின் விந்தணுக்களையும் பெண்ணின் சினை முட்டையையும் ஒன்றுசேர்த்து செயற்கை முறையில் புதிய கருவை (சந்ததிகளை) உருவாக்குகிறார்கள். இவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்பவர்களை மரபணு பெற்றோர்கள் என்கிறார்கள். இதற்கு சட்டரீதியான அங்கீகாரமும் வழங்கப்படுகிறது. கரு உருவாகக் காரணமான ஆண்- பெண்ணின் குணாதிசயங்களையே செயற்கைமுறையில் உருவான அக்குழந்தையிடமும் காணலாம். ஆண் ஜாதகத்தில் 5-ஆம் வீடும், பெண் ஜாதகத்தில் 4 மற்றும் 5-ஆம் வீடும் நீசம் பெறுமாயின், "மரபணு பெற்றோர்கள்' என்னும் வாய்ப்பு ஏற்படும். இதையே ஜெரா புத்திர யோகமென்பர்.

சூரியனின் ஆற்றல்

சூரியன் அனைத்து ஜீவராசிக்கும் பிராண சக்தியாவான். ஆத்மாவைப் புனிதமாக்கவும், தூயசக்தியைப் பெறவும் அனுதினமும் சூரியனை வழிபடவேண்டும். சூரிய ஒளியின் ஆற்றல்கொண்டு ஸ்தூல சரீரத்தின் உதவியுடன் ஆத்ம சாதனை என்னும் தவம் புரிந்தால்தான் ஆத்ம தத்துவத்தின் பேரின்ப ஞானத்தைப் பெறமுடியும். ஆத்மா சூட்சும சரீரத் தன்மையுடையது; வடிவம் கிடையாது. மனித உயிரானது, பெண் வயிற்றில் கரு உருவாகும்போதே அதன் பணியைத் தொடங்குகிறது. சூரியன் ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆத்மகாரகன், பித்ருகாரகன் என்னும் காரகத்துவங்களை வகிக்கிறான்.

சந்திரனின் ஆற்றல்

சந்திரன் குளிர்ந்த தன்மைகொண்ட- மென்மையான ஆற்றலை வெளிப்படுத்தும். மனதின் உறுதித்தன்மையை சந்திரன்தான் முடிவு செய்கிறது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சந்திரனால் ஏற்பட்ட பாதிப்புகள் ஜாதகத்தில் தெளிவாகத் தெரியும். மனித மனதானது வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் போன்ற வெவ்வேறு பகுதிகளில் விஷயங்களை மூளையின் உதவியால் பதிவு செய்துகொள்கிறது. மனதை ஒருமுகப்படுத்தும் (தியானம்) ஆற்றலின்மூலமே திடத்தன்மை பெற்று சரியான முடிவுகளை எடுக்கமுடியும். மனதானது மூளையின் இயக்கத்தினுள் பெரும் சக்தி பெற்றுள்ளது. சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மனோகாரகன், மாத்துருகாரகன் போன்ற காரகத்துவங்களை வகிக்கிறது.

செவ்வாய் தோஷம் சம்பந்தப்பட்ட மரபணு

மனிதனின் அனைத்துவித நோய்களுக்கும் மருத்துவர்கள் முதலில் மேற்கொள்வது ரத்தப் பரிசோதனையாகும். ஏனெனில், செவ்வாயின் காரகத்துவம் மனிதனுக்கு ரத்தத்தை இயக்கக்கூடிய ஆற்றலாக செயல்படுகிறது. எனவேதான் செவ்வாயின் அமைப்பைப் பொருத்து செவ்வாய் தோஷ ஜாதகம் என கூறப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக மனிதனின் ரத்தத்தில் ஒருவகை கிருமிகள் மிகுதியாக உள்ளதைக் குறிக்கிறது.

இவ்வகைக் கிருமிகள் நோயை உண்டு பண்ணும் திறனுடையவையாகும். எனவே தான் தோஷமுள்ள ஜாதகத்தின்மூலம் தோஷமில்லாத ஜாதகத்திற்கு விஷக்கிருமிகளை பரப்புவதன்மூலம் நோய் பரப்பப்படுகிறது. செவ்வாய் தோஷமில்லா ஜாதகம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளபடியால், தோஷமுள்ள ஜாதகத்தின் விஷக்கிருமிகளால் தாக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. ஆண், பெண் சங்கமத்தின்மூலம் இக்கிருமிகள் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குப் பரிமாற்றம் அடைகின்றன. எனவேதான் தோஷமுள்ள ஜாதகத்திற்கு தோஷமுள்ள ஜாதகத்தையும், தோஷமில்லா ஜாதகத்திற்கு தோஷமில்லா ஜாதகத்தையும் இணைக்க வேண்டும்.

ஜனன கால ஜாதகத்தில் ஜென்ம லக்னம், ராசி போன்றவற்றிலிருந்து செவ்வாய் 2, 4, 7, 8, 12-ஆம் வீடுகளில் நின்றால் செவ்வாய் தோஷமாகும். 4, 8-ஆம் வீடுகளில் செவ்வாய் நின்றால் முழு தோஷமாகும். பெண்ணின் ஜாதகத்தில் 4-ல் செவ்வாய் சுகஸ்தானத்தில் அமையப்பெற்றுள்ளபடியால், பெருவாரியான பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கருப்பை சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட்டு, மகப்பேறு காலங்களில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 4-ல் பகை வீடு, தசா புக்திகள் போன்ற காலகட்டங்களில் சந்ததியின்மை போன்றவை ஏற்படும். பெண்ணின் ஜாதகத்தில் 8-ஆம் வீடு மாங்கல்ய ஸ்தானமாகும். 8-ஆம் வீட்டில் அமையும் செவ்வாய் களத்திர தோஷத்தை ஏற்படுத்தி கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவார். விரோதத் தன்மைகொண்ட தசாபுக்தி நடைபெறும் கட்டங்களில் உயிர்ச்சேதம் ஏற்படும். செவ்வாய் ரத்தம் சம்பந்தப்பட்ட தொடர்புடையதால், முக்கியத்துவம் வாய்ந்த சகோதர காரகன் என்னும் காரகத்துவத்தை வகிக்கிறார்.

புதனின் நரம்பு மண்டல மரபணு

மென்மையான புதன், மனிதனின் நரம்பு மண்டலத்தை இயக்கும் பேராற்றல் பெற்றுள்ளது. புதனின் ஆற்றல் கல்விக்கான ஞானஒளியை ஏற்றச்செய்து, மனிதனின் மனம் மற்றும் உள்ளத்தை பண்படுத்தச் செய்கிறது.

மேலும், எத்தகைய சச்சரவுக்கும் புதனின் பங்களிப்பின்றி சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை. புதன் ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வித்தியாகாரகன் என்னும் காரகத்துவத்தை வகிக்கிறார்.

சுக்கிரன் பாலின மரபணு

23 ஜோடி குரோமோசோம்களால் உருவம் பெறப்பட்ட நுண்ணுயிர் ஒன்றாகும்.

இவற்றில் இரு (வ மற்றும் ல) குறியீடு குரோ மோசோம்கள் ஆண் பாலினமாகவும், ல ல குறியீடு குரோமோசோம்கள் பெண் பாலினமாகவும் அறியப்படுகின்றன. கரு உருவாகும் முறையில், வளர்ச்சிபெறாத பாலின குரோமோசோம்களின் குறைபாடுகளால்தான் திருநங்கை என்கிற மூன்றாவது வகையான பாலினம் உருவாகிறது. இத்தகைய குறைபாடுகள் பரம்பரைத் தன்மையுடன் கூடிய டி.என்.ஏ. செல்களின் மூலம்தான் ஏற்படுகின்றன. மனிதனுடைய காம உணர்வு சக்தி தூண்டப்படுவது, சுக்கிரன் ஆற்றலில் அமைந்த ராசி வீட்டின் தன்மையைப் பொருத்ததாகும். முறையான காம உணர்வுகள் சுக்கிரன் அமைந்த ராசி வீடு, பார்வை மற்றும் தசை புக்திகளைப் பொருத்ததாகும். சுக்கிரன் கணவன் மற்றும் மனைவி சம்பந்தப்பட்ட தொடர்புடையதால், ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த களத்திரகாரகன் என்கிற காரகத்துவத்தை வகிக்கிறார்.

புத்திர சந்ததிக்கு குரு பகவான்

மனித உடல் இயக்கத்தின் சக்தி வாய்ந்த முதன்மை உறுப்பான மூளையில் அமைந்துள்ள பல்லாயிரம் நியூரான்களின் மின்காந்த ஆற்றலை இயக்க, குரு பகவானின் அருள் கட்டுப்படுத்தி இயக்க வைக்கிறது. புத்திர சந்ததிக்கு வழிவகுக்கும் குரு பகவான் பரம்பரைத் தன்மையுடைய டி.என்.ஏ. செல்களின் திறனை உறுதிப்படுத்தி புத்திர சந்ததிக்கு வழிவகுக்கிறார். கோட்சாரப்படி பெண்ணுக்கு குரு பலம் உடைய நாட்களில் திருமணம் செய்து வைப்பதால் விரைவில் புத்திர சந்ததி ஏற்படும். குரு பலம் என்பது கோட்சாரப்படி குரு பகவான் 2, 5, 7, 9, 11 ராசி வீடுகளில் சஞ்சாரம் செய்யும் காலகட்டமாகும். குரு பகவான் சந்ததிக்கு வழிவகுப்பதால், ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த புத்திரகாரகன் என்கிற காரகத்துவத்தை வகிக்கிறார்.

சனி பகவானின் கர்மவினை மரபணு

மனிதனின் மறுபக்கத்தை உரசிப்பார்க்கும் தன்மையுடையவர், கர்மவினைகளின் சாராம்சங்களை (பாவம் மற்றும் புண்ணியம்) எடைபோடக்கூடிய வலிமை படைத்தவர் சனி பகவான். மனித வாழ்க்கையில் தீயகர்மாக்களை பிராயச்சித்தங்கள்மூலம் நிவர்த்திபெறச் செய்கிறார். ஆயுள் விருத்தி தந்து மனிதனின் கடின உழைப்புக்கான பலனைத் தருபவர் சனி பகவான்தான். பிராயச்சித்தங்களின்மூலம் தீர்க்கப்படாத கர்மவினைகள் பின்வரும் சந்ததியினரைத் தாக்கும். எனவேதான், பரம்பரைத் தன்மையுடைய டி.என்.ஏ. செல்களின் தாக்கம் கர்மவினைகளையும் சுமந்து சென்று, புதிதாக உருவாகும் கருவுக்கும் பல தலைமுறைகளின் பித்ரு தோஷங்களையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் ஆயுள் சம்பந்தப்பட்டவற்றுக்கு சனி பகவான் வழிவகுப்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுள்காரகன் மற்றும் கர்மகாரகன் என்கிற காரகத்துவத்தை வகிக்கிறார்.

பஞ்சமகா புருஷ யோகமும், மரபணுக்கலவையும்

ஐந்து கிரகங்களால் ஏற்படும் பஞ்சமகா புருஷ யோகங்களான- புதனால் ஏற்படும் பத்ர யோகம், குரு பகவானால் ஏற்படும் ஹம்ச யோகம், சனி பகவானால் ஏற்படும் சசயோகம், செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம் மற்றும் சுக்கிரனால் ஏற்படும் மாளவிய யோகம் போன்றவற்றின் யோகங்களின் ஜனனகால ஜாதகத்தில் ஏற்பட்ட கலவையே மரபணுக் கூட்டமைப்புத் தன்மையின் தத்துவமாகும். குரு, சனி, சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் போன்ற கிரகங்கள் வீற்றிருக்கும் ராசி வீடுகளின் தத்துவ சித்தாந்தமே ஒரு ஜாதகரின் மரபணுவின் கலவையாகும்.

சூரியன், சந்திரன் சம்பந்தப்பட்டவையாக உள்ள ஆத்மா, மனம் அருவத் தன்மையுடையவை. இவை கருப்பையில் கரு உருவாகும் நேரத்தில் கூடவே தோன்றுகின்றன. ராகு- கேது சாயா கிரகங்களாதலால் மரபணுவின் தாக்கம் குறைவேயாகும்.

மனிதனின் மரபுத்தன்மை மரபணு சோதனைமூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் மனிதனின் ஆயுள், குணாதிசயம், கல்வி, முன்னேற்றம் போன்ற எண்ணற்ற காரகத்துவங்களை ஜனனகால ஜாதக கிரகநிலைகளுடன் கூடிய தசை, புக்திகள் மற்றும் அந்தரங்களின் தன்மைகளைக்கொண்டே நிர்ணயம் செய்யலாம். நவீனகால விஞ்ஞானம் மரபுத்தன்மை கொள்கைகளைதான் பின்பற்றிச் செல்கிறது. பாரம்பரிய முறையில் மரபணு சோதனைகளின் தேவைகளுக்கு எளியமுறையில் ஆதிகாலத்திலிருந்தே ஜோதிடம்தான் இன்றுவரை விடை காண்கிறது.

செல்: 98401 96422