Advertisment

மிதுன லக்னமும் அஷ்டமச் சனியும் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/gemini-lucknow-and-ashtama-saturn-prasanna-astrologer-i-anandi

ரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து நன்மை- தீமைகளில் நவ கிரகங்களின் பங்கு அளப்பரியது. கிரகப் பெயர்ச்சிகள் மாதம் ஒருமுறை, ஆண்டுக்கொருமுறை என அவ்வப்போது நிகழ்ந்துகொண்டே இருந்தாலும், சனிப்பெயர்ச்சிக்கு அனைவரும் அதிகம் பயப்படுகின்றார்கள். சனி கிரகம் ஒரு ராசியைக் கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ராசிச் சக்கரத்தை ஒரு சுற்று சுற்றிவர தோராயமாக 30 ஆண்டுகள் ஆகின்றன. அதனால் பெரியவர்கள் பேச்சுவழக்கில் "முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை; முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை' என்பார்கள். அதாவது 30 வருடம் எந்தத் துன்பமும் இல்லாது வாழ்ந்த மனிதருமில்லை; 30 வருடமும் இன்பமாக வாழ்ந்தவரும் இல்லை என்பதே பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைந்தபட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால், 30 வருடகாலம் சனி பகவானின் பிடியில் மனிதர்களின் வாழ்க்கை இருக்கும்.

Advertisment

அஷ்டமச் சனி

அஷ்டமத்துச் சனி என்றால், ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோட்சார சனி சஞ்சாரம் செய்வதாகும். அஷ்டமச் சனிக் காலத்தில் அறிவு வேலைசெய்யாது. அஷ்டமச்சனி காலகட்டங்களில் மனரீதியாக மிகக்கடுமையான அழுத்தம் ஏற்படும். சிலருக்கு பில்லி, சூனியம் வைக்கப்பட்டதைப் போன்ற எதிர்மறையான உணர்விருக்கும். இதனால் நல்லவன் கெட்டவனாகும் அளவுக்கு அறிவு தலைகீழாக மாறும். மூளைமங்கி மது, மாது, சூது, கொலை, கொள்ளை என ஒருவர் வாழ்க்கையே தலைகீழாக மாறும். உணர்ச்சி மட்டும் வேலைசெய்யும். வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். தொழில், வேலையிழப்பு, ஜாம

ரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து நன்மை- தீமைகளில் நவ கிரகங்களின் பங்கு அளப்பரியது. கிரகப் பெயர்ச்சிகள் மாதம் ஒருமுறை, ஆண்டுக்கொருமுறை என அவ்வப்போது நிகழ்ந்துகொண்டே இருந்தாலும், சனிப்பெயர்ச்சிக்கு அனைவரும் அதிகம் பயப்படுகின்றார்கள். சனி கிரகம் ஒரு ராசியைக் கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ராசிச் சக்கரத்தை ஒரு சுற்று சுற்றிவர தோராயமாக 30 ஆண்டுகள் ஆகின்றன. அதனால் பெரியவர்கள் பேச்சுவழக்கில் "முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை; முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை' என்பார்கள். அதாவது 30 வருடம் எந்தத் துன்பமும் இல்லாது வாழ்ந்த மனிதருமில்லை; 30 வருடமும் இன்பமாக வாழ்ந்தவரும் இல்லை என்பதே பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைந்தபட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால், 30 வருடகாலம் சனி பகவானின் பிடியில் மனிதர்களின் வாழ்க்கை இருக்கும்.

Advertisment

அஷ்டமச் சனி

அஷ்டமத்துச் சனி என்றால், ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோட்சார சனி சஞ்சாரம் செய்வதாகும். அஷ்டமச் சனிக் காலத்தில் அறிவு வேலைசெய்யாது. அஷ்டமச்சனி காலகட்டங்களில் மனரீதியாக மிகக்கடுமையான அழுத்தம் ஏற்படும். சிலருக்கு பில்லி, சூனியம் வைக்கப்பட்டதைப் போன்ற எதிர்மறையான உணர்விருக்கும். இதனால் நல்லவன் கெட்டவனாகும் அளவுக்கு அறிவு தலைகீழாக மாறும். மூளைமங்கி மது, மாது, சூது, கொலை, கொள்ளை என ஒருவர் வாழ்க்கையே தலைகீழாக மாறும். உணர்ச்சி மட்டும் வேலைசெய்யும். வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். தொழில், வேலையிழப்பு, ஜாமின் பிரச்சினை, குடும்பத்தைவிட்டுப் பிரிதல், வம்பு, வழக்கு என பலவிதமான அசௌகரியங்கள் உண்டாகும்.

Advertisment

அஷ்டமச் சனியினால் ஏற்படும் விளைவுகள்

அஷ்டமச்சனி மனித வாழ்வில் சோதனை மிகுந்த காலம். பொதுவாக அஷ்மச்சனியன் காலத்தில் உடல்நலம் குறையும். வைத்தியச் செலவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒரு நோய்க்கு வைத்தியம் செய்து சீர் செய்யும்முன் அடுத்த நோய் வந்துவிடும். தொழில், உத்தியோகத்தில் கைவைத்து பொருளாதார நெருக்கடியை மிகுதிப்படுத் தும். சாமனியர்களையும் நிலைதடுமாற வைக்கும். அஷ்டமாதிபதி தசை நடக்கும் போது தவறான ஜாமின், கடன் பிரச்சினையை ஏற்படுத்தும்.

சொல்லாலும் செயலாலும் ஒன்றமுடியாது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத சூழல் ஏற்படும். புதிய வம்பு, வழக்குகள், அவமானம் கதவைத் தட்டும். எப்பொழுதோ போடப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வரும். பூர்வீக சொத்து, தொழில் வழக்குகள் உருவாகலாம். அதனால் அவமானம், தலைமறைவு வாழ்க்கை ஏற்படலாம். வருமான வரி, விற்பனை வரி தொடர்பான ஆவணங்களை முறையாக வைத்திருக்கவேண்டும். ஃபைனான்ஸ் நிறுவனம், சீட்டு நடத்துபவர்கள், கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை தோன்றும்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும். ஆனால் அவை அவர்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும். பயணத்தில் பொருளிழப்பு, திருட்டுபோதல் ஏற்படும்.

மிதுன லக்னமும் அஷ்டமச் சனியும்

பொதுவாக வருட கிரகங்களின் பெயர்ச்சிகள் அனைத்தும் ராசியை அடிப்படையாகக்கொண்டே பலன் பார்க்கப்படும். மனிதன் சந்திக்கும் அனைத்து வினைகளையும் உடலே அனுபவிக்கிறது என்பதால், உடல் காரகனாகிய சந்திரனுக்கு முக்கியதுவம் கொடுத்துப் பலன் பேசப் படுகிறது. ஒருவரின் சுய ஜாதகரீதியான பலனை நிர்ணயிப்பதில் லக்னம், தசாபுக்தி, லக்னரீதியான கோட்சார கிரகங்களின் நிலைப்பாடு மிக முக்கியம். தற்போது மிதுன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் கோட்சார சனி ஆட்சிபலம் பெறுகிறார். எட்டாமிடம் விபத்து, கண்டம், அவமானம், தீடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றைப் பற்றிக் கூறுமிடம். எட்டாமிடம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம்; பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம். இந்த லக்னத்திற்கு சனி 8, 9-ஆமதிபதி. அதாவது அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. அஷ்டமாதிபதி பலன்களைச் செய்யும்பொழுது முழுக்க முழுக்க கர்மப் பலனைதான் அனுபவிக்க நேரிடும். பெரிய யோகத்தை எதிர்பார்க்க இயலாது.

mi

மிதுன லக்னமும் சனி தசையும்

புதனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால், சனி பகவான் மிதுனத்திற்குத் தீங்கு செய்யமாட்டார் என்று பொதுவாக சிலர் பலன் கூறுகின்றனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிதுன லக்னத்தினர் அனுபவித்துவரும் இன்னல் கள் அளப்பரியது. குறிப்பாக சனி தசை நடப்பவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் சொல்லிமாளாது. சனி மகாதசை ஒரு மனிதனுடைய வாழ்நாளில் 19 ஆண்டுகள் நடக்கும். சனியின் நோக்கம் மனித வாழ்வை செம்மைப்படுத்தி வாழும் கலையைக் கற்றுக் கொடுப்பதாகும். எந்த லக்னமாக இருந்தாலும் சனி தசைக் காலங்களில் வெகு சிலரே நன்மை பெறுவார்கள். ஆதிபத்தியரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்தின் அடிப்படையிலும் சுப வலுப்பெற்றால் மட்டுமே சுபப் பலனுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதுவும் கோட்சாரத்தில் சனி சுப வலுப்பெறும் காலங்களில் மட்டுமே ஓரளவேனும் சுபப் பலனை எதிர்பார்க்கமுடியும். 2022-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து மிதுன லக்னம், சனி தசை நடப்பவர்கள் ஜோதிட உதவியை நாடுகிறார்கள். கோட்சார சனி லக்னத்திற்கு 8-ல், 6, 11-ஆமதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பலர் வேலையின்மை, வேலையில் கடுமையான மன அழுத்தம், உயரதிகாரிகளால் தொல்லை, சக பணியாளர்களின் ஒத்துழைப்பின்மை, வியாபாரம் செய்வோருக்கு தொழில் மந்தம், வாடிக்கையாளர்கள் வேறிடத்திற்குச் செல்வது, தன்னிடம் தொழில் கற்றவரே, தனக்கெதிரில் கடை போடுவது, குறைந்த சம்பளம்- நிறைய வேலை பார்க்கக்கூடிய அமைப்பு போன்றவற்றையெல்லாம் மிதுன லக்னத்தினர் கடந்து வந்துகொண்டி ருக்கிறார்கள்.

தொழில், வேலை இழப்பு, தீராதநோய், கடன், வழக்கு, சொத்து விவகாரத்திற்காக ஜோதிடரை சந்திக்கி றார்கள். 17-1-2023-ல் சனி கும்பத்திற்கு பெயர்ச்சியானா லும், 15-3-2023 அன்று அவிட்ட நட்சத்திரத் தைக் கடக்கும்வரை மிதுன லக்னத்திற்கு கோட்சார சனியால் பாதிப்பிருக்கும். மேலும் மிதுன லக்னத் திற்கு சனி அஷ்டமாதிபத்திய தோஷத்தை சற்று மிகைப்படுத்தலாகவும், பாக்கியாதிபதி வேலையை குறைவாகவும் செய்வார்.

இந்த காலகட்டத்தில் கடன் வாங்காமல், புதிய தொழில் துவங்காமல், வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. சேமிப் பென்பது இவருடைய தசா காலத்தில் எட்டாக் கனியாகவே இருக்கும். லக்னாதிபதி யுடன் நட்பு வலுவிலோ அல்லது லக்னாதிபதி பார்வையிலோ இருக்கும்பொழுது பெரிதாக இவர்களுக்கு கெடுதல் செய்யாவிட்டாலும், பெரிய நன்மைகளையும் செய்யமாட்டார். சனி தசை யோகத்தைச் செய்யவேண்டுமென்றால், குருவினால் மட்டுமே சனியை சுபத்துவப் படுத்த முடியும். குரு பார்த்த சனி என்பதால் தீங்கு செய்யமாட்டாரே தவிர, நன்மைகள் என்பது அவரவர் கர்மப் பலன்களைப் பொருத்தே அமையும். கடந்த இரண்டு ஆண்டு களில் அஷ்டமச் சனியால் பாதிக்கப்பட்ட மிதுன ராசியினரைவிட மிதுன லக்னத்தினரே அதிகம். அதேபோல் திருமண பந்தத்ததில் அதிக விவாகரத்து பெற்றவர்களும், திருமணத் தடையை சந்திப்பவர்களும் இவர்களே.

எனவே பொது வான கருத்தை வைத்துப் பலன்கூறா மல் சீர்தூக்கிப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும்.

தொலைக்காட்சி யில் ராசிபலன் சொல்லும் ஜோதிடர் ஒருவர், "சுக்கிர தசை நடக்கும் மிதுன ராசியினருக்கு அஷ்ட மச்சனிக் காலத்தில் திருமணம் நடத்தி னால் பாதிப்பு வராது' என்று கூறுகிறார்.

மிருகசீரிட நட்சத்தி ரம், மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 80 வயதில்தான் சுக்கிர தசை வரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு குறைந்தது 76 வயதிற்குப்பிறகுதான் சுக்கிர தசை வரும். புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு 60 வயதிற்குப்பிறகே சுக்கிர தசை வரும் வாய்ப்புள்ளது. எனவே சாத்திய மில்லாத பொதுப்பலனைக் கூறுவது தவறு.

பொதுவாக எந்த கிரகத்தின் கோட்சார மாக இருந்தாலும் லக்னரீதியாக அஷ்டம ஸ்தானத்தில் தசா புக்தியோடு சம்பந்தம் பெறும்போது அசுப விளைவுகளைத் தருமென்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. ஆயிரம் திறமைகள் இருந்தாலும், காலநேர சூழ்நிலையை அனுசரித்துச் சென்றால்தான் சவாலை சாதனையாக்கி, சரித்திரம் படைக்கமுடியும்.

பரிகாரம்

துப்புரவுத் தொழிலாளிகளுக்கு உணவு, ஆடை தானம் தரவேண்டும். சனிக் கிழமைகளில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் வழிபாடு செய்ய மனநிம்மதி வரும். சனிக்கிழமை வன்னி மரத்தை வலம்வர வேண்டும். தினமும் திருக்கோளறு பதிகம் பாராயணம் மன மகிழ்வைத் தரும்.

செல்: 98652 20406

bala220422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe