Advertisment

தீர்க்க முடியாத கவலைகள் தீர்க்கும் கணபதி வழிபாடு! -பொ. பாலாஜி கணேஷ்

/idhalgal/balajothidam/ganesha-worship-solves-intractable-worries-b-balaji-ganesh

வ்வளவு பெரிய கவலையாக இருந்தாலும் அதை சுலபமாக சரி செய்யக்கூடிய சக்தி அந்த இறைவனுக்கு உண்டு. அதிலும் கஷ்டங்களைப் போக்கும், விக்ணங்களை தீர்க்கும் இந்த விநாயகர் வழிபாட்டிற்கு எப்போதுமே ஒரு பவர் இருக்குங்க. நம்பிக்கையோடு விநாயகரை வழிபாடு செய்துபாருங்கள். முழு முதல் கடவுள் உங்களுக்கு முழுமையான சந்தோஷத்தை கொடுத்துவிடுவார்.

Advertisment

அந்த வரிசையில் தீராத கவலையை தீர்ப்பதற்கு விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து 11 நாட்கள் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ள போகின்றோம்.

Advertisment

கவலையை தீர்க்கும் கணபதி வழிபாடு

ஒரு வெற்றிலை எடுத்துக

வ்வளவு பெரிய கவலையாக இருந்தாலும் அதை சுலபமாக சரி செய்யக்கூடிய சக்தி அந்த இறைவனுக்கு உண்டு. அதிலும் கஷ்டங்களைப் போக்கும், விக்ணங்களை தீர்க்கும் இந்த விநாயகர் வழிபாட்டிற்கு எப்போதுமே ஒரு பவர் இருக்குங்க. நம்பிக்கையோடு விநாயகரை வழிபாடு செய்துபாருங்கள். முழு முதல் கடவுள் உங்களுக்கு முழுமையான சந்தோஷத்தை கொடுத்துவிடுவார்.

Advertisment

அந்த வரிசையில் தீராத கவலையை தீர்ப்பதற்கு விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து 11 நாட்கள் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ள போகின்றோம்.

Advertisment

கவலையை தீர்க்கும் கணபதி வழிபாடு

ஒரு வெற்றிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். மஞ்சள் பிள்ளையாருக்கு மேலே ஒரு அருகம்புல். இந்த வெற்றிலையின் மேல் ஒரு ரூபாய் நாணயம். இதை பூஜையறையில் தயார் செய்துவிட்டு, இந்த விநாயகருக்கு ஒரு மண் பகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபமேற்றவேண்டும்.

gg

குறிப்பாக இதை நீங்கள் செய்யக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்க வேண்டும். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். (காலை 5.30 மணிக்கு முன்பு இந்த பூஜையை நிறைவு செய்துகொள்வது சிறப்பு.) 11 நாட்களும் பூஜை அறையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மேல் சொன்னபடி தயார் செய்துவிட்டு, இந்த விளக்குக்குமுன்பு அமர்ந்து உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத ஒரே ஒரு கவலை என்ன, அதை நினைத்து அந்த கவலையை சரிசெய்து தரும்படி விநாயகரிடம் மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். பிரார்த்தனையில் எந்த குறையும் இருக்கக்கூடாது. பிரச்சினை சரியாகிவிடுமா என்ற சந்தேகம் ஒரு துளி அளவும் இருக்கக்கூடாது. விநாயகரை கும்பிட்டால் பிரச்சினை சரியாகும் என்று நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும்.

தொடர்ந்து பதினொன்றாவது நாள் இதை செய்யவேண்டும். ஒருநாள்கூட தடை ஏற்படக்கூடாது. அதற்கு ஏற்றது போல பிளான் செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு. சரி முதல்நாள் வழிபாட்டை முடித்துவிட்டோம். அடுத்த நாள் வழிபாட்டை எப்படிச் செய்வது. முதல் நாள் காலை பிடித்துவைத்த மஞ்சள் பிள்ளையாரையும் வெற்றிலையை மட்டும் எடுத்து, அன்று மாலை 6.00 மணிக்கு முன்பாக மஞ்சள் பிள்ளையாரை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். வெற்றிலையை செடிக்கொடிகள் இருக்கும் இடத்தில் கால்படாத இடத்தில் போட்டுவிடவேண்டும். அந்த ஒரு ரூபாய் மட்டும் உங்கவீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ளுங்கள்.

மறுநாள் காலை புதுவெற்றிலை, புதுமஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பிள்ளை யாருக்கு பக்கத்தில் வைத்து வழக்கம் போல வழிபாட்டை செய்யுங்கள். பதினொன்றாவது நாள் இந்த வழிபாட்டை முடித்துவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து விநாயகர் கோவில் உண்டியலில் செலுத்தவேண்டும்.

விநாயகருக்கு ஒரு சிதரு தேங்காய் உடைத்து கொழுக்கட்டை அல்லது மோதகம் பிரசாதமாக செய்து அர்ச்சனை செய்து கோவிலுக்கு சென்று உங்கள் பூஜையை நிறைவுசெய்து கொள்ளுங்கள். அந்த கொழுக்கட்டையை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுங்கள். இந்த 11 நாட்களுக்குள்ளாகவே உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் அந்த தீராத கவலை தீர்வதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.

செல்: 9842550844

bala171123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe