Advertisment

வேண்டியதை விரைந்து தரும் விநாயகர் வழிபாடு! -பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/ganesha-worship-gives-what-needed-quickly-b-balajiganesh

ந்த பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு உடனடி யாகத் தீர்வுதரும் தெய்வம் விநாயகர்தான். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு, சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம். செய்யும் வேலையில் திருப்தி இல்லை கைநிறைய வருமானம் இல்லை என்பவர்களும் இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம்.

Advertisment

vv

செய்யும் தொழிலில் விருப்ப மில்லாமல் மனக் கசப்போடு செய

ந்த பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு உடனடி யாகத் தீர்வுதரும் தெய்வம் விநாயகர்தான். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு, சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம். செய்யும் வேலையில் திருப்தி இல்லை கைநிறைய வருமானம் இல்லை என்பவர்களும் இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம்.

Advertisment

vv

செய்யும் தொழிலில் விருப்ப மில்லாமல் மனக் கசப்போடு செய்பவர்கள் இந்தப் பரிகாரத்தைச் செய்தால், தொழிலில் ஆர்வம் ஏற்படும். மனநிம்மதியோடு, திருப்தியோடு தொழிலை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

கற்பூரவள்ளி இலை என்ற சொல்வார்கள். இந்த இலை கடைகளில் விற்காது. நிறைய வீடுகளில் தொட்டியில் வைத்து வளர்ப்பார்கள், அல்லது தோட்டங்களில் அதுவே தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். சளிக்குக்கூட கற்பூரவள்ளி இலை சிறந்தது என்று சொல்வார்கள்.

கற்பூரவள்ளிச் செடியிலிருந்து 21 இலைகளைப் பறித்து தண்ணீரில் கழுவி, ஒரு மஞ்சள்நிற நூலால் மாலையாகக் கட்டி விநாயகருக்கு போட்டு, விளக்கேற்றி வழிபாடு செய்தால் வேலை, தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உடனே சரியாகும் என்பது நம்பிக்கை. ஒரே ஒரு புதன்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் போதும். வேண்டுதல் நிறைவேறும். இந்த மாலையைக் கட்டி அரச மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருக்குக்கூட நம் கையாலேயே போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலை கிடைக்கவில்லை என்றால், 21 செவ்வாழைப் பழங்களை வாங்கி, அதை கொஞ்சம் தடிமனான கயிறால் மாலைபோல கட்டி பிள்ளை யாருக்கு செலுத்துவதன் மூலமும் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து 21 வாரம் புதன்கிழமை களில், பிள்ளையாருக்கு அணிவித்து விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

விநாயகர் மிகமிக எளிமையான வர். தூய்மையான மனதோடு, உண்மையான பக்தியோடு அவர் முன்பாக நின்று மூன்று தோப்புக் கரணம் போட்டு, பிரச்சினைகளைச் சொல்லி வேண்டுதல் வைத்தாலே அதை நிறைவேற்றிக் கொடுப்பார். அதிலும் மேற்சொன்ன இரண்டு பரிகாரங்களைச் செய்து வேண்டுதல் வைக்க, விரைவில் பலன்தரும் என்பதை சொல்லவே வேண்டாம்.

செல்: 98425 50844

-

bala151124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe