"கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்.'
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. அதில் சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அந்தவகையில் ஆடி போய் ஆவணி வந்தால் நன்மைகள் கூடிவரும் என்பது அனைவரின் நம்பிக்கை.
தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் மிகச்சிறப்பான மாதமாகக் கருதப்படு கிறது. ஆவணி ஸ்திர மாதம். ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக இருப்பார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்க்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும்போது செய்யும் வழிபாடுகள் சிறப்பான பலனைத் தரும். அதனால் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் அவதரித்த விநாயகரை வழிபட்டால் ஆன்ம ஞானம் பெருகும்.
விநாயகருக்குரிய விரதங்களுள் மிக விசேஷமான விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு ஆவணி மாதம் 16-ஆம் தேதி (2-9-2019), திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.
திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றிகிட்டும்; பிறப்பு தோஷம் நீங்கும். ஒவ்வொரு திதிக்கும் சில தெய்வ வழிபாடுகள் பலன் தரும்.
அதன்படி சதுர்த்தி திதியில் செய்யும் விநாயகர் வழிபாடு, உலக மக்கள் அனை வரையும் பல பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கச் செய்யும். கர்ம வினையின் பயனாக வரும் எல்லா விதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைப் பெற விநாயகர் வழிபாடு செய்யவேண்டும்.
இந்திய மக்கள் அனைவராலும் விரும்பி வழிபடப்படுபவர் விநாயகர். எளிமையான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதைப் பிடித்துவைத்தாலும் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அறுகம்புல், எருக்கு போன்ற பூக்களால் அர்ச்சனை செய்
"கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்.'
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. அதில் சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அந்தவகையில் ஆடி போய் ஆவணி வந்தால் நன்மைகள் கூடிவரும் என்பது அனைவரின் நம்பிக்கை.
தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் மிகச்சிறப்பான மாதமாகக் கருதப்படு கிறது. ஆவணி ஸ்திர மாதம். ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக இருப்பார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்க்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும்போது செய்யும் வழிபாடுகள் சிறப்பான பலனைத் தரும். அதனால் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் அவதரித்த விநாயகரை வழிபட்டால் ஆன்ம ஞானம் பெருகும்.
விநாயகருக்குரிய விரதங்களுள் மிக விசேஷமான விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு ஆவணி மாதம் 16-ஆம் தேதி (2-9-2019), திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.
திதியைப் பிடித்தால் விதியை வெல்லலாம் அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றிகிட்டும்; பிறப்பு தோஷம் நீங்கும். ஒவ்வொரு திதிக்கும் சில தெய்வ வழிபாடுகள் பலன் தரும்.
அதன்படி சதுர்த்தி திதியில் செய்யும் விநாயகர் வழிபாடு, உலக மக்கள் அனை வரையும் பல பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கச் செய்யும். கர்ம வினையின் பயனாக வரும் எல்லா விதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைப் பெற விநாயகர் வழிபாடு செய்யவேண்டும்.
இந்திய மக்கள் அனைவராலும் விரும்பி வழிபடப்படுபவர் விநாயகர். எளிமையான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதைப் பிடித்துவைத்தாலும் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அறுகம்புல், எருக்கு போன்ற பூக்களால் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர். குளக்கரை, அரசமரத்தடி, தெருமுனை என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந் திருக்கிறார் விநாயகர்.
பரந்த இவ்வுலகில் நல்லவற்றை மட்டுமே கூர்ந்து நோக்கவேண்டும் என்பதை உணர்த்துவது விநாயகரின் கூரிய சிறிய கண்கள். செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விநாயகரின் முறம்போன்ற செவிகள் குறிக்கின்றன. விநாயகரின் ஐந்து கரங்களும் ஐந்தொழில் களைக் குறிக்கின்றன. விநாயகரின் கையிலுள்ள பாசம் படைத்தலைக் குறிக்கிறது.
தந்தத்துடன்கூடிய தும்பிக்கை காத்தலைக் குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித் தலைக் குறிக்கிறது. மோதகம் ஏந்திய கை மறைத்தலைக் குறிக்கிறது. உயர்த்திய கை அருளலைக் குறிக்கிறது. விநாயகரின் பெரிய வயிறு எல்லா உயிர்களும், உலகங் களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.
விநாயகர் மகாபாரதத்தை எழுதுவதற்கு தந்தத்தை ஒடித்ததால், தந்தம் ஞானத்தைக் குறிக்கின்றது. விநாயகரின் பெரிய திருவடி கள் நல்லனவற்றைச் செய்வதன்மூலம் இறை வனை அடையலாம் என்பதைக் குறிக் கின்றன. ஆக, விநாயகரின் திருவுருவம் வெளித் தோற்றத்தைவிட, அறிவுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற உண்மையை உணர்த்து கிறது.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம் தான் களிமண் பிள்ளையார். விநாயகப் பெருமானின் கல் விக்ரகத்திற்கு சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் தான், கோவிலுக்குச் செல்லும்போது முதலில் அவரை வணங்குகிறோம். நாடி சிந்தாந் தத்தைக் குறிக்கும்வகையில்தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும், இடம்புரி யாகவும் நமது முன்னோர்கள் அமைத்திருக் கிறார்கள்.
மூளையின் இடது, வலது பாகங்கள்தான் மனித உடலின் அத்தனை செயல்களுக்கும் காரணம். இடப்பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம். வலது பக்க மூளை செயல்படும்பொழுது இடது நாசித் துவாரத்தில் சுவாசம் வரும். அதேபோல இடது பக்க மூளை இயங்கும்பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.
விநாயகரை வணங்கும்போது விநாயகரின் துதிக்கை எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் நமது வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் நமது இடது நாசியிலும் சுவாசம் வருவதைக் காணலாம். "வெளியே இருக்கும் நான்தான் உன்னுள் ளேயும் இருக்கிறேன்' என விநாயகர் கூறும் விஷயமிது.
வலது நாசியின்வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின்வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் வைத்துள்ளார்கள். இந்த இரண்டு சுவாசங் களுக்கும் தனித்தனிப் பண்புகளும், வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)
வலது நாசியின்வழியாக சுவாசம் நடை பெறும்போது உடலின் வெப்ப நிலை சற்றே உயரும். உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகிற பிராணன் என்பதால் உடல் சுறுசுறுப்படைந்து, சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரித்து மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இயங்கும்.
இடது நாசிக் காற்று (சந்திர கலை)
சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்று உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. இடது நாசிவழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்பநிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அதனால்தான் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தி திதியைப் பிரணவ மந்திரத்தின் நாளாக, பிரணவ ரூபனின் நாளாகக் கொண்டாடு கிறோம்.
விநாயகர் சதுர்த்தி விரத முறைகள்
அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாகக் குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும்.
வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி, இரண்டு வாழைக்கன்றுகளையும் கட்ட வேண்டும்.
பூஜையறையை சுத்தம்செய்து ஒரு மனையை வைத்துக் கோலமிட்டு, அதன்மேல் ஒரு தலைவாழை இலையை வைக்கவேண்டும். இலையின் நுனி வடக்குப் பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின்மேல் பச்சரிசியைப் பரப்பிவைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்கவேண்டும். உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பிள்ளையாருக்கு கொழுக்கட்டையுடன் (மோதகம்) எள்ளுருண்டை, பாயசம், வடை, பால், தேன், வெல்லம், முந்திரி, அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு என அவரவர் வசதிக்கேற்ப நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் வைக்கலாம்.
பூஜையின்போது மண் அகலில் தீபமேற்றவேண்டும். அதன்பிறகு எருக்கம்பூ மாலை, அறுகம்புல், சாமந்தி, மல்லிப் பூக்களால் அலங்காரம்செய்து, 21 வகை இலைகளால் அஷ்டோத்திரம் படித்து அர்ச்சனை செய்யலாம். விநாயகர் பாடல்கள், விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிறகு கற்பூர ஆராதனைசெய்து விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை பட்டினியாக இருந்து அனுஷ்டிப்பது சிறப்பு.
சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரித்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
பிள்ளையாரை கிணற்றிலோ, ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி;
விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி- மேற்கொள்ளும் விரதத்தை ஆத்மார்த்தமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விரதத்தால் தீரும் பிரச்சினைகள்
ஜனன ஜாதகத்தில் கேது- சந்திரன் சாரம், சந்திரன்- கேது சாரம், சந்திரன் வீட்டில் கேது, சந்திரன்- கேது சேர்க்கை, சந்திரனுக்கு அடுத்த வீட்டில் கேது, திரிகோணம் மற்றும் கோட்சாரக் கேது, சந்திரன் தொடர்பால் பிரச் சினைகளை சந்திப்பவர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி அன்று செய்யும் விநாயகர் வழிபாடு அதிக நன்மை செய்யும்.
செவ்வாய், ராகு- கேது சேர்க்கை, ராகு- கேது தோஷம், செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமணத்தடை அகலும்.
கடன், நோய், பகை தீர்க்கும் ருணவிமோசன கணபதி மந்திரம் சொல்லி வணங்க, தீராத கடன் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
"ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட் ஸ்வாஹா.'
கிழக்கு முகமாக அமர்ந்து குத்துவிளக்கேற்றி, 108 முறை இந்த மந்திரத்தை ஜெபித்து, விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு, அந்த குங்குமத்தை அணிந்துவர விரைவில் மந்திர சித்தியாகும். விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பித்து 90 நாட்களுக்கு குறைந்தது 108 முறை ஜெபித்துவரவும். 90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம்செய்து கொள்ளவும்.
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் கவசம், காரிய சித்திமாலை துதியை மூன்று வேளைகள்- அதாவது காலை, மதியம், மாலை என பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, சனி தசையால் பாதிப்படைபவர்கள் விநாயகரின் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி, விநாயகர் சதுர்த்தியன்று பூஜையில்வைத்து வணங்கிவந் தால் நன்மைகள் தேடிவரும். இந்த விரதத்தால் உள்ளம் மேன்மை அடையும்; உடல் ஆரோக்கியம் சீராகும். எல்லா வளங்களும் நிறையும்.
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ!
செல்: 98652 20406