இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

பொதுவாக, திருமணப்பொருத்தம் பார்க்கும்பொழுது யோனிப் பொருத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்தப் பொருத்ததைக் கணக்கில்கொள்ளாததே முக்கிய காரணமாகிறது. இதுதவிர, மணமக் களின் பன்னிரண்டாம் பாவப் பொருத் தத்தையும் ஆராய்தல் அவசியம். கன்னி, ரிஷப லக்னக்காரர்களுக்கு 12-ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், எப்பொழுதும் திருப்தியின்மை ஏற்படும். சயன சுகத்தை விளக்கும் பன்னிரண்டாம் பாவத்தின் நட்பு, தொடர்பு, குணதோஷங்களைப் பரிசீலனை செய்தே திருமணப் பொருத்தத்தைப் பார்க்கவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""கயிலாயபதியே! மாயையில் சிக்கி மனம் தடுமாறி, மோகத்திலும் ரோகத்திலும் வாழ்வை இழக்கும் வீணர்கள், தன்னிலை யறிந்து ஞானம் பெற்றிடத் தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை அஞ்சநாச்சியம்மன் அகத்தீசு வரரை திருமுக்கூடலூர் (கரூர்) எனும் திருத்தலத்தில் பணிந்து கேட்டாள்.

திரிநேத்திரன் உரைத்தது- ""குளிர்காலத்தில் இதமளிக்கும் தீயின் வெம்மை கோடையில் துன்பத்தையே தரும். அறுசுவை உணவும் காலமாற்றத்தால் அருவறுக்கத்தக்கதாக மாறுகிறது. மேகத்தில் தோன்றிமறையும் சித்திரங்களைப் போன்றவையே மோகங்கள். அழகும் சுகமும் மனதின் கற்பனையே.

Advertisment

தன் நிழலை தானே துரத்தி மகிழும் உன்மத்தனைப்போல், (மதிமயக்க முற்றவன்) தான் காணும் தோற்றங்கள் யாவும் தன் மனமே என்றறியாது, தன்னைத்தானே காமுறுபவன் அறிவீனன்.

gg

வடிவங்களும், வார்த்தைகளும் வெவ்வேறானவை என்னும் ஞானமின்றி, வார்த்தைகளால் வடிவங்களைத் தேடுகிறான். இரவும் பகலுமாக, உறக்கமும் விழிப்புமாக, ஜனனமும் மரணமும் மாறிவரும் என்றுணர்தலே ஞானத்தின் முதல் நிலை. ஊரும் சதமல்ல; பெயரும் சதமல்ல; உற்றாரும் சதமல்ல என்னும் புரிதலே மாயப்பிறப்பினை அறுக்கும் வாள்.

Advertisment

முக்தியடையும் நாளே அறுவடைத் திருநாள்.''

""மாசிலாமணியே! நிவேசம் எனும் தாண்டவத்தின் லயமாகிய சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்க, ஸ்வாதி முதல் பாதத்தில் புதனும், அனுஷம் நான்காம் பாதத்தில் சந்திரனும், உத்திராடம் முதல் பாதத்தில் குருவும், திருவோணம் முதல் பாதத்தில் சனியும்

அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என கோட்டைமேடு (கோவை) எனும் திருத்தலத்தில் அருள் புரியும் சங்கமேஸ்வரரை அன்னை அகிலாண் டேஸ்வரி வேண்டிப் பணிந்தாள்.

பட்டீஸ்வரர் உரைத் தது- ""சின்மயியே! இந்த ஜாதகன் ஜெயபுரி என்ற சமஸ்தானத்தின் அரசக் குடும்பத்தில் பிறந்து, வீரசிம்மன் என்ற பெயர் பெற்றான். உரிய பருவத்தில் மன்னராக முடிசூடப் பட்டான்.பெயருக்கேற்றாற்போல, வீரத்தின் விளைநிலமாக விளங்கினான் என்றாலும், விவேகம் மறந்தான். அண்டை ஊர்களுக்குச் சென்று, ஏழைக்குடியானவர்கள் வளர்த்து வந்த கால்நடைகளைக் கவர்ந்தான். தன் சமஸ்தானத்தில் வாழ்ந்த மக்களைத் துன்புறுத்திப் பொருளீட்டினான். ஆடல் மகளிர், அவன் அரசவையில் ஆடிக் கொண்டிந்தபொழுது, அவன் நாட்டு மக்கள் பசியால் வாடிக்கொண்டிருந்தனர்.

கொடுங்கோல் அரசன் வாழுகிற நாட்டை விடக் கடும்புலி வாழுகிற காடு நன்மை உடையது என்று புலம்பிய மக்களோடு, தர்மதேவதையும் நாட்டை விட்டு அகன்றாள்.

அரசன் எனும் அந்த ஆநிரைக் கள்வன் கருநாகம் தீண்டியதால் இருள் உலகம் போனான். கொடுங்கோன்மை செலுத்தி நின்ற மூர்க்கமுள்ள அரசன் ஆழ்நரகில் மூழ்கினான். வைதரணி என்ற நரகத்தில் நெடுங்காலம் துன்புற்றபின், தேகத் தால் பெற்ற கர்மம் அழிந்திடல் வேண்டி, கர்மத்தால் தேகம் உண்டானது வாதவூர் என்ற ஊரில் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தான். இளம்வயதிலிருந்தே கடும் நோயால் சுகமிழந்து வாடுகிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதால் ஊழ்வினையுருத்து வந்தூட்டியது. *சோமகாந்தன் என்ற மன்னனைப்போல் அறம் தவறியதால் சூளைநோயால் அவதியுறுகிறான். இதற்கு, திருவதிகைத் திருத்தலத்தில், ஐப்பசி மாத முழுநிலவு நாளில் பைராகிகளுக்கு அன்னதானம் செய்தால் நோய் நீங்கும்.''

*சோமகாந்தன் என்ற அரசன் முற்பிற வியில் மிகுந்த பாவங்கள்செய்து செல்வம் சேர்த்ததால் கடுமையான ரோகம் ஏற்பட்டது. (விநாயகர் புராணம்).

(வளரும்)

செல்: 63819 58636

______________

நாடி ரகசியம்

1. சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும் சனியும் சேர்ந்திருக்க, ஜாதகர் அரசுத்துறையில் பெரும் பதவிகளைப் பெறுவார்.

2. சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும் லக்னமும் சேர்ந்திருக்க, சூரியன் மக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும் அமையப்பெற்றால், ஜாதகருக்குக் கடுமையான பாலாரிஷ்டம் உண்டு.

3. சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்க, லக்னம் மிருகசிரீடம் இரண்டாம் பாதத்தில் அமைந்தால், ஜாதகருக்கு தூர தேசத்தில் விபத்தால் மரணம் சம்பவிக்கும்.

கேள்வி: ஒரு லக்னத்தின் கால அளவு இரண்டு மணி நேரமாகவும், ஒரு முகூர்த்தத்தின் கால அளவு இரண்டு நாழிகை நேரமாகவும், ஜாமம் என்பது ஆறு நாழிகைகளாகவும் பகுக்கப்பட்டதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: உயிரியல் கடிகாரம் (biological clock) மற்றும் பிரபஞ்ச கால அளவின் (Ultradian rhythm) ஒத்திசைவைக்கொண்டே ஜோதிடக் கால அளவுகள் வரையறுக்கப்பட்டன. உடல் உறுப்பு இயக்கத்தின் தாளகதியும், மூச்சின் இடகலை, பிங்கலையை லக்னத்துடன் தொடர்புப்படுத்தியும், (ஈண்ழ்ஸ்ரீஹக்ண்ஹய் ழ்ட்ஹ்ற்ட்ம்) மனதின் காலச்சுழற்சி (மப்ற்ழ்ஹக்ண்ஹய் ழ்ட்ஹ்ற்ட்ம்) முகூர்த்தம் என்ற கால அளவாலும் குறிக்கப்பட்டது. அதனா லேயே, தியானத்திற்குப் பிரும்ம முகூர்த்தம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு நாளின் ஒவ்வொரு முகூர்த்தத்திலும் செய்யவேண்டியவை வரையறுக்கப்பட்டுள்ளன. வாசியோக சாதனைக்காகப் பஞ்ச பட்சிகளாகிய பஞ்சபூத செயல்பாடுகளை அறியவே ஜாமம் என்ற கணக்கீடு உருவாக்கப்பட்டது. துடி நூல்களில் பயன்படும் இமைப்பொழுது, பிரச்சன்ன ஆருடத்தின் அங்கங்களாகிய ஹோரை, நாழிகை, ஒரு விநாடியில் அறுபதில் ஒரு பகுதியான தற்பரை, லிப்தம், விலிப்தம் ஆகிய வெவ்வேறு கால அளவுகள் ஜோதிடப் பயன்பாட்டுக்காக ஏற்பட்ட உபகரணங்கள் என்பதே‘"கந்தர்வ நாடி'யின் கருத்து.