இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

80

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ட்டைக் குடத்தில் நீர் தங்காததுபோல, ஒருசில ஜாதகருக்கு ஜனன காலத்தில் அமைந்த விசேஷ யோகங்கள், சில காரணங்களால் பங்கமடைந்து, ஜாதகர் யோகப் பலன்களை அடையமுடியாமல் போகும். "எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்' என்று சொல்வதுபோல, லட்சக்கணக்கான விதைகளில் ஒரு விதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா ஜாதகருக்கும், ஜாதக அமைப்பில் ஏதாவது ஒரு யோகம் காணப்படும். ஆனாலும் எல்லாரும் மன்னர்களாவதில்லை. லக்னமும் லக்னாதிபதியும் வலுப்பெறாமல் போனாலும், யோக காரகன் சூரியன், சந்திரனுக்கு கேந்திரத்தில் அமையாமல் போனாலும் யோக பங்கம் உண்டாகும். பொதுவாக லக்னத்திற்கு 1, 4, 7, 10 -ஆம் பாவங்கள் (கேந்திரம்) சாதகமாக அமையாமல் போனால், நான்கு கால்களும் பழுதடைந்த நாற்காலிலியில் அமர்ந்தவர் வீழ்வதுபோல, ராஜ யோகங்களும் உதிர்ந்துபோகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

sss

""பரமேஸ்வரரே! செல்வமே இன்பத்தையும், வறுமை துன்பத்தையும் தரும் என்றெண்ணும் மடமாந்தரின் ஐயம் தெளிவுற உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை நித்திய கல்யாணி கடையம் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு வில்வாரண்யேஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.

ஓங்காரேஸ்வரர் உரைத்தது- ""பிறப்பில் கொண்டுவர முடியாததும், இறப்பில் கொண்டுசெல்ல முடியாததுமான செல்வம் இன்ப- துன்பங்களுக்குக் காரணமாகாது. செல்வந்தன் கொள்ளையர்களை எண்ணி அச்சமுறுகிறான். வறியவனோ நாளை வரப்போகும் பசியை நினைத்துக் கவலை கொள் கிறான். அச்சமும், அதனால் வரும் கவலையுமே தோல்வியை யும் துன்பத்தையும் தரும். "எதுவும் தன்னிடமில்லை' என்று ஏங்கும் செல்வந்தனே வறியவன். "எதுவும் தன்னுடைய தில்லை' என்று உணரும் வறியவனே உண்மையில் செல்வந்தன்.''

Advertisment

""ஜகத்குருவே! "விவர்திதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், உத்தி ராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், ரேவதி நான்காம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, அஸ்வினி முதல் பாதத்தில் சுக்கிரனும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சனியும், கார்த்திகை நான்காம் பாதத்தில் செவ்வாயும், ரோகிணி முதல் பாதத்தில் சந்திரனும் அமரும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருமாணிக்குழி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ வாமனபுரீஸ்வரரை அன்னை மாணிக்க வல்லிலி வேண்டிப் பணிந்தாள்.

கங்காதரர் உரைத்தது- ""லலிதாம் பிகையே! இந்த ஜாதகி முற்பிற வியில் பாலகங்கா என்னும் பெயருடன், திருக்கண்டிகை என்ற ஊரில் வாழ்ந்துவந்தாள். அவள் நல்லொழுக்கம் அற்றவளாய், கண்டதே காட்சி கொண்டதே கோலமென காமுகியாய் வாழ்ந்தாள். மணக்கோலம் காண்பதற்கு முன்னே தாய்க்கோலம் பூண்டாள். உடல் இன்பத்தைப் பெற்றது; உயிர் பாவத்தைச் சுமந்தது. இளமையின் மோகத்தில், இன்பத் தள்ளாட்டத்தில் தகாத உறவினால் பலமுறை கருவுற்றாள். தான் செய்வது பாவம் என்றறிந்தும், எவரும் அறியாது பல உயிர்களைக் கருவில் கொன் றாள். கங்காதேவி, தனக்கும் சாந்தனுவுக்கும் பிறந்த குழந்தைகளைக் கொன்றதுபோல, பாலகங்காவும் தன் குழந்தைகளைக் கருவிலேயே கிள்ளியெறிந்தாள். ஊருக்கும் உறவுக்கும் தெரிவிக்க பெயருக்காக ஒரு திருமணம் நடந்தேறியது. காலங்கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. முதுமையில் மரணம் தழுவியது. "வஜ்ர கண்டகம்' எனும் நரகத்தில் பலகாலம் துன்புற்று பூமிக்கு இறங்கினாள். திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிறந்து, ரோகிணி என்று பெயரிடப்பட்டாள். இளமையில் நோய்வாய்ப் பட்டு, உடல் முழுவதும் புண்ணானது. ரோகிணி ரோகமுற்றாள். முற்பிறவியில், தோல் போர்த்திய எலும்பைப் பொன்னுடலாக எண்ணிச் செய்த தவறால் இந்தப் பிறவியில் புண்ணுடலைப் பெற்றாள். வருந்துகிறாள்.

*அஸ்வத்தாமன்போல, கருவில் உள்ள சிசுவைக்கொன்று, சிசு ஹர்த்தி சாபத்தைப் பெற்றதால் நேர்ந்த கதியிது. இப்பிறவியில் அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தால் நோய் நீங்கி சுகம் பெறலாம்.

*அஸ்வத்தாமன்- அபிமன்யுவின் குழந்தையைக் கருவில் கொன்று பெற்ற சாபத்தால், முக்தி பெறாமல் முகத்தில் புண்கொண்டு அலைபவர்.

-மகாபாரதம்.

(வளரும்)

செல்: 63819 58636

நாடி ரகசியம்

1. விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சந்திரனும் லக்னமும் சேர்ந்திருக்க, ஜாதகர் சர்வ வல்லமையுடன் எதிரிகளை வெல்வார்.

2. விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும், அனுஷ நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சனியும் அமைந்த ஜாதகர் செய்தொழிலிலில் சிகரத்தின் உச்சியை அடைவார்.

3. விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும், புனர்பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதகருக்கு கண்பார்வையில் பழுதுண்டாகும்.

கேள்வி: ஒரு ஜாதகத்தில் பாதகம், சாதகம் செய்யும் கிரகங்களைக் கண்டறிந்து, கஷ்டம் நீங்க வழிபடவேண்டிய இஷ்ட தெய்வத்தையும், அணியவேண்டிய ராசிக்கல்லையும் தேர்ந்தெடுக்கும் முறையை "கந்தர்வ நாடி' யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: ஜாதகத்தில் பரிகாரங்களை நவாம்ச சக்கரத்தைக்கொண்டே தீர்மானிக்க வேண்டும். ராசி சக்கரத்தைக்கொண்டு முடிவுசெய்தால், சில நேரங்களில் விபரீத எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். உதாரணத்திற்கு, அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சந்திரனும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும் அமையும் ஜாதகத்தின் நவாம்சத்தில், சந்திரன் மேஷத்திலும், செவ்வாய் கடகத்திலும் இடம்பெறும். நவாம்சத்தில் சந்திரனுக்கு நான்காம் இடம், சந்திரனுக்கு 64-ஆவது நவாம்சமாகும். பொதுவாக 64-ஆவது நவாம்சமும், அதில் இடம்பெறும் கிரகமும் கெடுதலே செய்யும். அவ்வாறிருக்க, அந்த ஜாதகர் மேஷ ராசிக்கு உரித்தான பவழம் அணிவதால் கெடுபலன்கள் கூடும். பாதகத்திற்குப் பாதகமாக அமைவதே சாதகம். நவாம்சத்தில் சந்திரனுக்கு நான்காம் வீட்டிற்கு, நான்காம் வீடாகும் ஏழாம் வீடே சாதகமான பலன்களைத்தரும். அந்த வீட்டிற்கான தெய்வத்தை வழிபடுவதும், நவரத்தினத்தை அணிவதுமே நன்மை தருமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.