ருவரது ஜாதகத்தில் நான்காம் பாவம் மற்றும் அந்த பாவாதிபதியின் வலிமைக்கேற்பவே அவருக்கு சுக வாழ்வு அமையும். சுக ஸ்தானமாகிய நான்காம் பாவம் கல்வி, தாய், இருப்பிடம், ஆடம்பரம், நறுமணத் திரவியம், ஆபரணங்கள், வீடு, வாகனம் போன்றவற்றைக் குறிக்கும்..

சந்திரனுக்கு நான்காமிடத்தைக் கொண்டு தாயைப் பற்றியும், சுக்கிரனுக்கு நான்காமிடத்தைக் கொண்டு வாகன யோகத்தையும், பூமிக்காரகனாகிய செவ்வாயின் நான்காமிடத்தைக்கொண்டு வீடுவாங்கும் யோகத்தையும் கணக்கிடவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""நித்தியசுந்தரரே! பிரும்மத்தின் ரூபகுண விசேஷங்களை அறியாத அறிவில் எளியோருக்கு ரூபமாகவும், அரூபமாகவும் விளங்கும் தாங்களே அதனை விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை அழகம்மை, வஜ்ர ஸ்தம் பநாதரை திருமழபாடி (அரியலூர்) எனும் திருத்தலத்தில் பணிந்துகேட்டாள்.

ss

Advertisment

பிரும்மபுரீஸ்வரர் உரைத்தது- ""பஞ்ச பூதத்தின் மாயையைக் கடந்த ஞானமே பிரும்மத்தை உணரமுடியும். கல்லில் செதுக்கப்பட்ட யானையை சிலர் கல்லாகப் பார்ப்பதும், வேறுசிலர் யானையாக நோக்குவதும் அவரவர் மனோவிகாரமே. கல்லைக் காண்பவருக்கு யானை அரூபம், யானையைப் பார்ப் பவருக்கு கல்லே அரூபம். மனமே ஐந்து கருவிகளையும் இயக்குகிறது. விழித்திருக் கும்போது மனதை உணர்வதில்லை. ஸ்வப்னத்தில் (கனவில்) பஞ்சேந் திரியங்கள் மறைந்துபோகின்றன. காயமற்றதே ஆகாயம் என்றாலும், காயமும் ஆகாயத்தில் அடங்கும். எல்லா வண்ணங்களும்கூடியே ஆதவனின் தூயவெண்ணொளி உண்டாவதுபோல், சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஒன்று கூடியதே நிர்குண பிரும்மம். அதில் எல்லாமும் இருக்கிறதென்றாலும், எதுவுமில்லை என்பதே சத்திய ஞானமாகு.'' ""வாகீஸ்வரரே! தலசங்கட்டிதம் எனும் தாண்டவத்தின் லயமாகிய அவிட்ட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், அஸ்வினி நான்காம் பாதத்தில் செவ்வாயும், மகம் முதல் பாதத்தில் சனியும், சித்திரை முதல் பாதத்தில் சந்திரனும், அனுஷம் முதல் பாதத்தில் குருவும், பூராடம் மூன்றாம் பாதத்தில் சூரியனும், திருவோணம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந் திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலûத் தாங்கள் விளக்கவேண்டும்'' என திருஇன்னாம்பர் (கும்ப கோணம்) எனும் திருத் தலத்தில் அருள்புரியும் திருஎழுத்தறிநாதரை அன்னை சுகந்த குந்தளாம் பிகை வேண்டிப்பணிந் தாள்.

வெள்ளிமலைநாதர் உரைத்தது- ""காதம்பரீயே! இந்த ஜாதகன் குன்னியூர் எனும் ஊரில் பிறந்து பிரகஸ்பதி என்ற பெயர் பெற்றான். அவன் இளம்வயதிலேயே, பல சாத்திரங்களைக் கற்றறிந்து பண்டிதனானான்.

தான் வாழ்ந்த ஊரின் தலைவனாக உருவெடுத் தான். குலத்தின் பெயரால் உண்ணும் நீரை, உலவும் சாலையைப் பிரித்தான். அந்த ஊரைத் தீண்டா மைத் தீண்டியது. தீயர் தேன்கூட்டைக் கலைப்பது போல, ஒரு தாய் மக்களாகக் கூடிவாழ்ந்தவர் களைப் பிறப்பால் பிரித்தான். போரிடும் உலகிற் குப் புதுப்பாதை காட்டினான். அன்பில்லாத ஊரில் அமைதி விடைபெற்றது. "ஒருவர், நற்குணத் தால் மட்டுமே நற்கதியைடைய முடியுமேயல் லாமல், குலத்தால் அல்ல' என்பதையறிய மறந்தான். காலக் குதிரைக்குக் கடிவாளம் ஏது? காலச் சுழற்சியில் நோயும் மரணமும் அவனைத் தேடிவந்தன. கற்ற கல்வியும், பெற்ற செல்வமும், உற்ற உறவும் உடன்வரவில்லை. தனியேகொண்ட கூட்டை விட்டது உயிர். நெடுங்காடு ஏகினான். அவன் கூத்தாடி, கொண்டாடியக் குலப் பெருமை சவஞ்சுடு வோன் கரங் களில் சமரசமானது. உடலைவிட்ட உயிர் ஞானவெட்டியானைத் தேடி புலம்பெயர்ந்தது.

Advertisment

அங்குஷ்டப் பரிமாணமேயுள்ள (கட்டை விரல்) வாயு வடிவிலான ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு இழுத்துச்சென்றனர். அவன் செய்த பாவத்திற்கு தண்டனையாக கோரம் என்னும் நரகத்தில் பலகாலம் துன்புற்றபின், ஆசை உடலில் உயிரைப்பூட்டி மண்ணுலகம் சென்றான்.

மாங்குளம் எனும் ஊரில் ஒரு வேடுவர் குடியில் பிறந்து, இளம்வயதில் பெற்றோரை இழந்து, அநாதையானான். ஊராரும் ஒதுக்கிய தால். ஊருக்கு வெளியே குடிலமைத்து வாழுகிறான்.

*வஜ்ர ஸூசிகா உபநிடதத்தின் வழிநின்று, குலபேதம் காட்டாது வாழ்ந்திருந்தால், இந்த கதி நேர்ந்திருக்காது. புனித யாத்திரை செல் வோருக்குப் பணிவிடை செய்தால், பாவம் விலகிக் கரையேற வழியுண்டாகும்'.'

* வெவ்வேறு குலம் என அழைக்கப்படும் அத்தனை மனிதர்களுக்கும் ஐம்பூதங்களாலான உடல்கள் ஒரேவடிவாக உள்ளன. மூப்பு, மரணம் முதலிய உடல் தர்மங்கள் சமமாகவே காணப்படு கின்றன. குலப்பெருமை மோட்சத்தைத் தருவதில்லை. நற்கருமமே நற்கதியை நல்கும்.

(வஜ்ர ஸூசிகா உபநிடதம்--சாமவேதம்).

(வளரும்)

செல்: 63819 58636

_____________

நாடி ரகசியம்

1. அவிட்ட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதனுடன் சுக்கிரனின் சேர்க்கை ஏற்பட்டால், ஜாதகருக்கு இளம்வயதிலேயே திருமண வாய்ப்பு போட்டிபோட்டுக்கொண்டு தேடிவரும்.. 2. அவிட்ட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும் சந்திரனும் சேர்ந்து அமையப்பெற்றால், பாத்ரபத (புரட்டாசி) மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தியில், வெள்ளிக்கிழமை, பரணி நட்சத்திரம் கூடினால், மாரகத்திற்கு ஒப்பான கண்டம் உண்டாகும்.

3. அவிட்ட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் செவ்வாயும், அனுஷம் முதல் பாதத்தில் சனியும் அமைந்தால், ஜாதகருக்கு மூளை, நரம்பு தொடர்பான நோய்கள் உண்டாகும்.

கேள்வி: ஒரு ஜாதகத்தைக்கொண்டுப் பலனறியும்போது, அந்த ஜாதகரின் ஜனனம் பகல்நேர ஜனனமா? இரவுநேர ஜனனமா எனப் பகுத்தாராய வேண்டியதன் அவசியத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: பொதுவாக, நிலம் ஐந்திணைகளாகப் பகுக்கப்படுவதுபோல, ஒவ்வொரு ராசியும் பஞ்சபூதத் தத்துவங் களின் அடிப்படையில் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்படவேண்டும். பகலில் ஆகாயம் 0-6, காற்று 6-12, நெருப்பு 12-18, நீர் 18-24, நிலம் 24-30 பாகைகளாகவும், இரவுநேர ஜனனத்தில் இதேவரிசை தலைகீழாகவும் அமையும். இதை அடிப்படையாகக்கொண்டால் மட்டுமே கிரகம் மற்றும் பாவத்தின் தன்மையை அறியமுடியும். உதாரணத்திற்கு, நெருப்புக் கிரகமாகிய செவ்வாய் பஞ்சபூதத் தொகுப்பில் நீருக்கான பகுப்பில் இடம்பெற்றால், வலிமை குறையும். நீர் ராசியாகிய கடகத்தில் செவ்வாய் நீசமடைவதை ஒப்பீடாகக் கொள்ளலாம். பகலில் கூகையை (ஆந்தை) காக்கை வெல்லும் என்பதுபோல், பகலில் வலிமையுள்ள கிரகங்களையும், இரவில் பலமுள்ள கிரகங்களையும் அறியவேண்டியது அவசியமாகிறது. கிரகக் காரகங்களிலும் இரவு, பகல் பேதம் ஏற்படுவதால், ஜனன காலம் இரவா, பகலா என்பதையறிந்தே பலனறியவேண்டும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.