2
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
கந்தர்வ நாடி நூலில் கூறப்படும் பாவ காரகம், கிரக காரகங்களும் சற்றே வேறுபடுவதால், அவற்றை அறிந்தால் மட்டுமே நம் முயற்சி முழுமை பெறும். கந்தர்வ நாடியில் கிரக காரகங்களை, சிறப்புக் காரகங்கள், பொதுக்காரகங்கள் என்ற இரு பிரிவுகளாகக் காணமுடிகிறது.
சிறப்பு கிரக காரகங்கள்- தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகள்.
தன காரகர்கள்- சந்திரனும் சுக்கிரனும்
சந்திரன் தன் நட்சத்திரம் இருக்கும் ரிஷப ராசியில் உச்சம்பெறுவதால் முதல் தரம். ரிஷப ராசி காலபுருஷனின் இரண்டாமிடமாகவும் (தன ஸ்தானம்), சந்திரனின் சொந்த வீடாகிய கடகத்திற்கு பதினோறாமிடமாகவும் (லாப ஸ்
2
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
கந்தர்வ நாடி நூலில் கூறப்படும் பாவ காரகம், கிரக காரகங்களும் சற்றே வேறுபடுவதால், அவற்றை அறிந்தால் மட்டுமே நம் முயற்சி முழுமை பெறும். கந்தர்வ நாடியில் கிரக காரகங்களை, சிறப்புக் காரகங்கள், பொதுக்காரகங்கள் என்ற இரு பிரிவுகளாகக் காணமுடிகிறது.
சிறப்பு கிரக காரகங்கள்- தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகள்.
தன காரகர்கள்- சந்திரனும் சுக்கிரனும்
சந்திரன் தன் நட்சத்திரம் இருக்கும் ரிஷப ராசியில் உச்சம்பெறுவதால் முதல் தரம். ரிஷப ராசி காலபுருஷனின் இரண்டாமிடமாகவும் (தன ஸ்தானம்), சந்திரனின் சொந்த வீடாகிய கடகத்திற்கு பதினோறாமிடமாகவும் (லாப ஸ்தானம்) இருப்பதால் சந்திரனே முதன்மையான தன காரகர். நாணயம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றின் மதிப்பு தினமும் மாறிவருவதால் தினமும் தன் அளவில் மாறும் சந்திரனே தன காரகர்.
சுக்கிரன், தன் இரவு வீடாகிய ரிஷபத்திற்குப் பதினோறாம் ராசியாகவும், பகல் வீடாகிய துலாத்திற்கு ஆறாம் ராசியாகவும் உள்ள மீனத்தில் உச்சம். பொதுவாக ஆறு மற்றும் பதினோறாம் வீடு என்பது போட்டியில் வெற்றி, அதனால் பெறும் தன லாபம்.
(மீனம் காலபுருஷனின் 12-ஆம் ராசி- முதலீடு, பங்குச் சந்தை. இதனால் சுக்கிரன் இரண்டாம் தர தன காரகர்).
புத்திர மற்றும் ஊழ்வினைக் காரகர் குரு
குரு, தன் பகல் வீடாகிய தனுசுக்கு எட்டாம் வீடாகவும் தன் இரவு வீடாகிய மீனத்திற்கு ஐந்தாம் வீடாகவும் உள்ள கடகத்தில் உச்சம். எட்டாமிடம் முன்ஜென்ம வினையையும், ஐந்தாமிடம் புத்திர சந்தான பாக்கியத்தையும் குறிக்கும்.
வித்யா, மாதா காரகன் புதன்
புதன், தன் பகல் வீடாகிய மிதுனத்திற்கு நான்காமிடத்திலும், இரவு வீடாகிய கன்னியிலும் உச்சம் பெறுகிறார். ஒன்றாம் பாவம்- சுய சிந்தனை; நான்காம் பாவம்- கல்வி, தாய். கன்னி ராசி வித்யா ஸ்தானமாக இருப்பதாலேயே அந்த ராசியில் சூரியன் வரும் புரட்டாசி மாத தசமி (விஜய தசமி) கல்வி தொடங்க ஏற்ற நாளாகத் தேர்வு செய்யப்படுகிறது.
அதிகாரம் மற்றும் இளைய சகோதர காரகன் செவ்வாய்
செவ்வாய், தன் பகல் வீடாகிய மேஷத்திற்கு பத்தாம் பாவமும், இரவு வீடாகிய விருச்சிகத்திற்கு மூன்றாம் பாவமுமாக அமையும் மகரத்தில் உச்சம். மூன்றாம் பாவம் இளைய சகோதரத்தையும், பத்தாம் பாவம் அதிகாரம், அகங்காரம், ஆளுமை போன்றவற்றையும் குறிக்கும்.
தொழில் மற்றும் பாக்கிய காரகன் சனி
சனி, தன் இரவு வீடாகிய மகரத்திலிருந்து பத்தாம் பாவமும், தன் பகல் வீடாகிய கும்பத்திலிருந்து ஒன்பதாம் வீடாகிய துலா ராசியில் உச்சம். பத்தாம் பாவம் ஜீவனத்தையும், ஒன்பதாம் பாவம் பாக்கியம், சூழ்நிலையையும் குறிக்கும்.
பிதா காரகன் சூரியன்
தன் வீட்டிற்கு ஒன்பதாம் ராசியில் (தந்தை) உச்சம். பொதுவாக ஒருவர் தான் தொழில் (காரகம்) செய்யும் இடத்தில் மட்டுமே அதிகார உச்சம் பெறுவார் என்ற நியதிப்படி, மேற்கூறிய சிறப்புக் காரகங்களின் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவே உள்ளன.
காலபுருஷனின் ஆண் ராசியாகிய மேஷத்திற்கு களத்திர பாவமாக (ஏழாம் பாவம்) அமையும் துலா ராசியின் அதிபதி சுக்கிரன் ஒரு பெண் கிரகம் என்பதால், ஆண்களுக்கு களத்திர காரகன் சுக்கிரன். பெண் ராசியாகிய ரிஷபத்திற்கு களத்திர பாவாதிபதி விருச்சிகச் செவ்வாய் என்பதால், பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்.
பொது காரகங்கள்
சூரியன்- தலைமை; சந்திரன்- பொது நிர்வாகி; புதன்- ஆலோசகர்; குரு- நீதி நிர்வாகி; சுக்கிரன்- நிதி நிர்வாகி. செவ்வாய்- பாதுகாப்பு; சனி- செயலின் பலனைக் கொடுப்பவர் அல்லது தண்டனையை நிறைவேற்றுபவர்.
(வளரும்)
செல்: 63819 58636