Advertisment

கந்தர்வ நாடி! -20

/idhalgal/balajothidam/gandharva-nadi-lalgudi-gopalakrishnan

துவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ஜோதிடத்தின் பல பிரிவுகளில் நாடி ஜோதிடம் மிக முக்கியமானது.

மனிதர்களின் பெருவிரல் ரேகை தனித்தன்மையுடைது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதுபோல், விதியும் வெவ்வேறுவிதமாக உள்ளது. ஆக, பெருவிரல் ரேகை கொண்டு விதி நிர்ணயம் என்பது தர்க்கரீதியாக ஒப்புக்கொள்ளலாம்.

Advertisment

இன்றைக்கு உலாவரும் நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளின் நம்பகத்தன்மையில் சந்தேகம் வந்ததால், நாடி ஜோதிடக்கலையை சீரமைக்கவேண்டிய கட்டாயமுள்ளது.

sivan

இமயமலை அமர்நாத் குகையில், பார்வதி தேவி சிவபெருமானிடம் மனிதப்பிறவிகளின் கர்மப்பலன், விதிப்பயன் பற்றி அறிய விரும்பினார். அப்போது உமாபதி, முன்வினைப் பயனால் ஏற்படும் ஜனனம், வாழ்க்கை, ஜாதகத்தில் கோள்களின் அமைப்பு, நோய்கள், பிற துன்பங்கள், அது நீங்க பரிகாரங்களை விளக்கினார். இதை மறைந்திருந்து கேட்ட கந்தர்வ ஜோடிகள் தண்டிக்கப்பட்டனர்.

Advertisment

சிவனால் அருளிச் செய்யப்பட்ட நாடியே கந்தர்வ நாடி. இந்த நாடியானது ஓலைச்சுவடி வடிவில் இல்லாமல், குருமுகமாக உபதேசிக்கப்பட்டு, வட இந்தியாவில் சில ஜ

துவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ஜோதிடத்தின் பல பிரிவுகளில் நாடி ஜோதிடம் மிக முக்கியமானது.

மனிதர்களின் பெருவிரல் ரேகை தனித்தன்மையுடைது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதுபோல், விதியும் வெவ்வேறுவிதமாக உள்ளது. ஆக, பெருவிரல் ரேகை கொண்டு விதி நிர்ணயம் என்பது தர்க்கரீதியாக ஒப்புக்கொள்ளலாம்.

Advertisment

இன்றைக்கு உலாவரும் நாடி ஜோதிட ஓலைச்சுவடிகளின் நம்பகத்தன்மையில் சந்தேகம் வந்ததால், நாடி ஜோதிடக்கலையை சீரமைக்கவேண்டிய கட்டாயமுள்ளது.

sivan

இமயமலை அமர்நாத் குகையில், பார்வதி தேவி சிவபெருமானிடம் மனிதப்பிறவிகளின் கர்மப்பலன், விதிப்பயன் பற்றி அறிய விரும்பினார். அப்போது உமாபதி, முன்வினைப் பயனால் ஏற்படும் ஜனனம், வாழ்க்கை, ஜாதகத்தில் கோள்களின் அமைப்பு, நோய்கள், பிற துன்பங்கள், அது நீங்க பரிகாரங்களை விளக்கினார். இதை மறைந்திருந்து கேட்ட கந்தர்வ ஜோடிகள் தண்டிக்கப்பட்டனர்.

Advertisment

சிவனால் அருளிச் செய்யப்பட்ட நாடியே கந்தர்வ நாடி. இந்த நாடியானது ஓலைச்சுவடி வடிவில் இல்லாமல், குருமுகமாக உபதேசிக்கப்பட்டு, வட இந்தியாவில் சில ஜோதிட ஆசிரியர்களிடம் மட்டும் புழக்கத்தில் உள்ளது.

காலத்தாலும், கவனக்குறைவாலும் நாம் இழந்துவிட்ட நாடிஜோதிட ரகசியங்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த நாடி பல பாகங்களாக சிதறுண்டு கிடக்கிறது. அதில் ஒரு பாகம் "கர்ம விபாகம்' (முன்வினை மற்றும் பரிகாரம்) என்ற வடமொழி நூல் வடிவில் உள்ளது.

அரும்பாடுபட்டு தேடியதில் அந்த நாடி நூலின் சில சூத்திரங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. இந்நூலின் இறை வணக்கம் என்ற பகுதி கிடைக்கவில்லை.

கடவுளாலேயே உபதேசிக்கப்பட்டது என்பதாலேயே கடவுள் வாழ்த்து என்ற பகுதி இடம்பெறவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

இந்நூலின் தியான சுலோகம், "சப்த ரிஷிகளே காலத்தையும், கிரக சாரத்தையும் நிர்ணயிப்பதாகவும், அவர்களை மனதால் தியானம் செய்தால் மட்டுமே மறைபொருளை உணரமுடியும்' என்றும் தொடங்குகிறது.

கந்தர்வ நாடி நூலின் சிறப்புமருத்துவநாடிபோல் ஜோதிட நாடியையும் 72,000 வகை நாடிகளாக- பிறவிகளாக வேறுபடுத்துகிறது. (மருத்துவ நாடிக்கும் ஜோதிட நாடிக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் தெரிந்தாலும், இவை வேதவிஞ்ஞானம் என்ற சரீரத்தின் இரண்டு பாகங்கள்.)

ஜோதிடத்திலும் மருத்துவ நாடி அடிப்படையில் நட்சத்திரங்கள் பிரிக்கப்படுகின்றன.

பார்சுவ நாடி (அ) வாத நாடி: திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

மத்தியா நாடி (அ) பித்த நாடி: பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

சமான நாடி (அ) சிலேத்தும நாடி: கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

வாத நாடி நட்சத்திரங்கள்: 1-ஆம் பாதம்- சர்ப்ப நாடி; 2-ஆம் பாதம்- மீன் நாடி; 3-ஆம் பாதம்- அட்டை நாடி; 4-ஆம் பாதம்- டோலா (தூளி) நாடி.

பித்த நாடி நட்சத்திரங்கள்: 1-ஆம் பாதம்- மண்டூக நாடி; 2-ஆம் பாதம்- காக நாடி; 3-ஆம் பாதம்- கிளி நாடி; 4-ஆம் பாதம்- மீன்கொத்திப் பறவை நாடி.

சிலேத்தும நாடி நட்சத்திரங்கள்: 1-ஆம் பாதம்- மயில் நாடி; 2-ஆம் பாதம்- ஹம்ச நாடி; 3-ஆம் பாதம்- கஜ நாடி; 4-ஆம் பாதம்- குக்குட நாடி.

இதனால்தான் சித்தர்கள் மருத்துவத்தையும், ஜோதிடத்தையும் ஒன்றாகவே வளர்த்தார்கள். சித்த மருத்துவர்கள் ஜோதிடம் அறிந்தவர்களாகவும், ஜோதிடர்கள் மருத்துவம் தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். மருத்துவ நாடியையும், ஜோதிட நாடியையும் ஒப்புநோக்கினால் இரண்டும் 72,000 என்ற எண்ணிக்கையில் உள்ளன. மருத்துவ நாடி, ஜோதிட நாடிகள் 72,000 புள்ளிகள், பல கோணங்கள், பல கேந்திரங்கள், பல அம்சங்கள் கொண்டவை.

நமது மூச்சுக்காற்று ஒரு நாளைக்கு 21,600. லக்னம் ஒரு நாளைக்கு 21,600 கலைகளைச் சுற்றிவரும். (360 பாகை ஷ் 60 கலை=21,600 கலைகள்). இது தவிர பஞ்சபூதத் தத்துவம் (கிரகங்கள் - கிரகஷேத்திரங்கள்) உள்ளது.

உத்தம நாடிகளான இடகலை (சந்திரன்), பிங்கலை (சூரியன்), சுழுமுனை (லக்னம்).

இதுதவிர "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு' என்ற அடிப்படையிலும், மருத்துவ நாடிக்கும் ஜோதிட நாடிக்கும் அடிப்படை சூத்திரம் ஒன்றே என்பது புலனாகிறது.

இந்த நூல் பாவங்களைப் பகுதியாகவும் (இயற்கை- பிரகிருதி), கிரக சம்பந்தங்களை விகுதியாகவும் (மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவையாகவும்) (விக்ருதி) கையாள்கிறது.

கிரகங்களின் காரகங்களும், பாவ காரகங்களும் தற்கால ஜோதிடத்திலிருந்து மாறுபட்டாலும், அதில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் நடைமுறைக்கு ஒத்துவருவதாகவே உள்ளன. (காலபுருஷ தத்துவம்).

மற்ற நாடி நூல்களில் காணப்படும் ராகு- கேது பற்றிய விவரங்கள் இந்நூலில் இல்லை. ராகு- கேது கிரகங்கள் ஆதிகாலத்தில் நுல்களில் இல்லை என்பதும், அது இடைச்செருகல் என்பதும், விஷ்ணு புராண காலத்தில் ஸ்வர்பானு என்னும் அசுரன் ராகு- கேதுவானான் என்பதும் நன்கு கற்றறிந்த ஜோதிடர்களுக்குத் தெரிந்த உண்மை.

உபய ராசிகளையே யோக ஸ்தானங்களாக காட்டுகிறது. ஜாதகருக்கு உபய ராசிகள் எந்த பாவமாக அமைகிறதோ, அந்த பாவகாரகத்தை அனுபவிக்கவே அவர் பிறவி எடுத்ததாக விளக்குகிறது.

நாடியம்சமும் (1/150), நவாம்சமுமே (1/9) முக்கிய அம்சங்களாக ஆய்வு செய்யப்படுகின்றன.

தசாபுக்திக் கணிதம் காலச்சக்கர தசைமுறையில் உள்ளது.

காரக லக்னமே பலன் நிர்ணயத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது.

நட்சத்திரங்களையும், ராசிகளையும் நாடிகளாகவே உருவகப்படுத்துகிறது.

எல்லா நிகழ்வுகளும் விதி, மதி, கதி (லக்னம், சந்திரன், சூரியன்) தொடர்பாகவே நோக்கப்படுகின்றன.

அந்த ரகசியங்களையெல்லாம் அடுத்துவரும் இதழ்களில் அறிவோம்.

(வளரும்)

செல்: 63819 58636

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe