இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
சரம், ஸ்திரம், உபய ராசிகளில், ஜாதக தோஷப் பரிகாரங்களைத் தேர்ந்தெடுக்கவும் செயல்படுத்தவும் உபய ராசிகளே உபயோ கமாயிருக்கும். எல்லா இடையூறுகளையும் நீக்கும் உபாயம் (வழி முறை) உபய ராசிகளில் மட்டுமே உண்டு. ஒரு ராசிக்கு கேந்திரம் அல்லது கோணத்தில் அமையும் உபய ராசியே அந்த ராசிக்கு பரிகார ராசியாக அமையும்.
பரிகார ராசியின் அதிபதி, அதிலிருக்கும் கிரகம், அந்த ராசிக்குரிய நாள், அந்த நாளுக்கு பஞ்சாங்க சுத்தி பார்த்துப் பரிகாரம் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் வெற்றியடையும். இதுவே, "கந்தர்வ நாடி'யில் பரிகார காண்டத் தின் அடிப்படைக் கருத்து.
""உவமையிலாக் கலைஞானமே! ஜீவர்கள் (மனிதர்கள்) தங்கள் வாழ்வில் சாதனைகளைப் புரிய முயற்சி எடுக்கவேண்டியுள்ளது. முயற் சிக்கு ஆர்வமும், ஆர்வத்திற்கு ஆசையுமே ஆதாரமாகிறது. முக்தியில் ஆசையுள்ள முனிவர்களும், "ஆசையே அழிவுக்குக் காரணம்' என்று உபதேசி
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
சரம், ஸ்திரம், உபய ராசிகளில், ஜாதக தோஷப் பரிகாரங்களைத் தேர்ந்தெடுக்கவும் செயல்படுத்தவும் உபய ராசிகளே உபயோ கமாயிருக்கும். எல்லா இடையூறுகளையும் நீக்கும் உபாயம் (வழி முறை) உபய ராசிகளில் மட்டுமே உண்டு. ஒரு ராசிக்கு கேந்திரம் அல்லது கோணத்தில் அமையும் உபய ராசியே அந்த ராசிக்கு பரிகார ராசியாக அமையும்.
பரிகார ராசியின் அதிபதி, அதிலிருக்கும் கிரகம், அந்த ராசிக்குரிய நாள், அந்த நாளுக்கு பஞ்சாங்க சுத்தி பார்த்துப் பரிகாரம் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் வெற்றியடையும். இதுவே, "கந்தர்வ நாடி'யில் பரிகார காண்டத் தின் அடிப்படைக் கருத்து.
""உவமையிலாக் கலைஞானமே! ஜீவர்கள் (மனிதர்கள்) தங்கள் வாழ்வில் சாதனைகளைப் புரிய முயற்சி எடுக்கவேண்டியுள்ளது. முயற் சிக்கு ஆர்வமும், ஆர்வத்திற்கு ஆசையுமே ஆதாரமாகிறது. முக்தியில் ஆசையுள்ள முனிவர்களும், "ஆசையே அழிவுக்குக் காரணம்' என்று உபதேசிக்கிறார்கள். ஆசையை வேரறுக்க வேண்டியது அவசியமா?'' என அன்னை சதிதேவியம்மை, சேங்கனூரில் அருள்பாலிக்கும் சத்தியகிரீஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
அதற்கு சொக்கன் உரைத்தது- ""அவசிய முள்ளவன் ஒருவருக்கே அடிமை; ஆசையுள்ள வனோ ஆயிரம் பேருக்கு அடிமை.
பல இடங்களுக் கும் சென்று உணவைத் தேடிப் பெறவேண்டிய பறவை, ஒரே இடத்தில் வேட னால் குவிக்கப்பட்ட உணவுக்கு ஆசைப்பட்டு உயிரை இழக்கிறது. முயற்சியில்லாத ஆசை செரிக்காத உணவுபோல் விஷமாகும். ஊர்க் குருவி பருந்தாக மாற ஆசைப்படுவது குற்றமே.
தகுதியும் முயற்சியும் இல்லாதவனின் ஆசை ஆபத்தையே விளைவிக்கும்.'' ""பிறையும், புனலும், அரவும் படுசடைமேல் கொண்ட ஈசனே! "அலாதகம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய மிருகசீரிட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் குருவும், அனுஷம் முதல் பாதத்தில் சந்திரனும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் சனியும், உத்திராடம் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், அஸ்வினி நான்காம் பாதத்தில் சூரியனும், மிருகசீரிடம் முதல் பாதத்தில் சுக்கிரனும், மிருகசிரீடம் இரண்டாம் பாதத்தில் புதனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனை தாங்கள் தயைகூர்ந்து விளக்கவேண்டும்'' என்று தில்லை ஸ்தானம் எனும் திருத் தலத்தில் அருள்புரியும் நெய் யாடியப்பரிடம் அன்னை பாலாம்பிகை வினவினாள்.
கிருதபுரீஸ்வரர் உரைத் தது- ""தேவி! இந்த ஜாதகன் முன்ஜென்மத்தில், கயா நகரில் ஒரு வைதீக அந்தணக் குடும்பத்தில் பிறந்தான். கல்வியில் சிறப்புற்று, ஒரு குருகுலத் தில் ஆசிரியரானான். தன்னலமற்று, தன் கடமையைத் தவமென ஏற்று கல்விப் பணியாற் றினான். முதுமையில் உயிர் பிரிந்து, தேவ விமானத்தில் "வைவஸ்வத' நகரம் எனும் எமபுரியை அடைந்தான். அங்கு பன்னிரண்டு சிரவனர் களால் இந்த ஜீவன் செய்த நல்ல காரியங்கள் எடுத் துரைக்கப்பட்டு, அதன்பலனாய் சொர்க் கத்தைச் சென்றடைந்தான். சிலகாலம் கழித்து, அமராவதி பட்டணத்தில் பிறந்தான். முன் ஜென்ம நல்வினையால், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினான். தன் பேச்சாற்றலால் ஜனவசியம் செய்தான். பல்லாயிரம் மக்கள் அவனை குருவாகப் போற்றினர். தீய நட்பினால் பெரும் செல்வம் சேர்க்க எண்ணி துறவி வேடம் பூண்டு, கபட சந்நியாசியானான். பல அதர்ம காரியங்களைச் செய்தான். அவனை தர்ம தேவதை தண்டித்தாள். அந்த வேடதாரி தொழு நோய்க்கு ஆட்பட்டான். சீடர்கள் விழுந்து தொழுத அவன் கால்களை தொழுநோயால் இழந்தான். இப்பிறவி முழுவதும் துன்புற்ற பின்பு நரகம் செல்வான்.''
(வளரும்)
செல்: 63819 58636
______________
நாடி ரகசியம்
1. மீன லக்னக்காரர்களுக்கு ஆறாம் பாவத்தில் சூரியன் அமையப்பெற்றால் மனநோயும், இதய நோயும் தொல்லை தரும்.
2. பத்தாம் பாவத்தில் சூரியனும், பத்தாம் பாவாதிபதி மூன்றாம் பாவத்தில் சனியின் சேர்க்கையும் பெற்றால் நாடு புகழும் அறிஞராவார்.
3. துலா லக்னக்காரர்களுக்கு பதினோறாம் பாவத்தில் சூரியனிருக்க, அதிகாரமும், அந்தஸ்து முள்ள பதவி கிடைக்கும்.
கேள்வி: அன்னாபிஷேகத்தின் பலன் மற்றும் அதனால் தீரும் ஜாதக தோஷங்கள் எவை?
பதில்: உபநிடதங்கள் அன்னத்தையே பிரம்மம் என்று வர்ணிக்கின்றன. அன்னத்தால் மட்டுமே நம் உடல் நிலைபெறுவதால், நம் புறவுடல் "அன்னமய கோசம்' என்றே அழைக்கப்படுகிறது. எல்லா பொருட்களிலும் அன்னமே பிரதானமாகப் போற்றப்படு கிறது. உலகிலுள்ள சகல உயிர்களுக்கும் உணவளிக்கும் வள்ளலுக்கே (சிவன்), காசி அன்னபூரணி (பார்வதி) அன்னமிட்டதால் ஐப்பசி மாதப் பௌர்ணமியில் ஈசனின் லிங்க வடிவிற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தின் ஒருபாகம் நம் முன்னோர்களாகிய நீர்வாழ் உயிரினங்களுக்கும், மிகுதியுள்ளது பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தரப்படும். ஜாதகத்தில் ஆறாம் பாவம் அன்னத்தைக் குறிப்பதால் அன்னாபிஷேகத்தில் சிவனை தரிசனம் செய்தால் கடன், நோய், விரோதம் நம்மை விட்டு விலகும். ஜாதக தோஷங்களைப் போக்க ஒவ்வொரு பாவத்திற்கும் ஏற்ற ஆறு வகை பூஜை திரவியங்களை "கந்தர்வ நாடி' விரிவாக விளக்குகிறது.