இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

24

ர்ம சாத்திரத்தில் சொல்லப்படும் வர்மப் புள்ளிகள்போல், ஒவ்வொரு ஜாதகத்திலும் 108 பாதங்களிலுள்ள ஒரு குறிப்பிட்ட பாகை, உச்ச கட்ட நிகழ்வுகளைத்தரும் புள்ளியாக அமைகிறது. இதில் படுவர்மம் பன்னிரண்டுபோல் அதிமுக்கிய பாகைகளும், தொடுவர்மம் தொன்னூற்றாறுபோல் முக்கிய பாகைகளும் அமையும்.

sivanஇந்தப் புள்ளிகளை கோட்சாரத்தில் கிரகங்களும், ஜாதகரின் தசாபுக்தியும் கடக்கும்போது வாழ்வில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. திருமணம், புத்திர பாக்கியம், எதிர்பாராத புகழ், வருமானம், தீராநோய், மாரகம் போன்றவற்றை அதிமுக்கிய பாகைகளைக் கடக்கும் ஜீவனுள்ள கிரகமே தோற்றுவிக்கும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்தோட்டம்.

Advertisment

""பிரணவ ரூபமாகிய பிராண நாதரே! ஜீவர்களின் அகங்காரத்தை அழிக்கும் ஓங்காரத்தின் பெருமைதனை அறிவில் எளியோரும் அறிதல் வேண்டி, தாங்கள் விளக்கியருள வேண்டும்'' என அன்னை வளைக்கை நாயகி, திருவைகாவூரில் அருள்புரியும் வில்வவனநாதரைப் பணிந்துகேட்டாள்.

அதற்கு வில்வவனநாதர் உரைத்தது- ""இந்த பிரபஞ்சம் "ஓம்' எனும் பிரணவ சப்தத்தில் உருவாகி, முடிவில் அதிலேயே ஒடுங்கும். சகல தேவதா சக்திகளும் பிரம்மத்தின் அங்கங்களாவதால், பிரணவ உச்சாடனமே பிரம்ம உபாசனையாகப் போற்றப்படுகிறது. குரு உபதேசம் பெற்று, மூலாதாரமாகிய நாகலோகம் தொடங்கி, சகஸ்ரராமாகிய சத்யலோகம்வரை பிரணவத்துடன் சஞ்சரிப்பவனே பிரம்மத்தை அடைகிறான்.''

""வடமூலநாதரே! "வக்ஷஸ்வஸ்திகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், ஹஸ்தம் மூன்றாம் பாதத்தில் குருவும், கேட்டை மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், மூலம் நான்காம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, திருவோணம் முதல் பாதத்தில் சனியும், அவிட்டம் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், பரணி இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருப்பழுவூர் திருத்தலத்தில் அருள்புரியும் ஆலந்துறையாரிடம் அன்னை அருந்தவ நாயகி வினவினாள்.

Advertisment

யோகவனத்தில் வீற்றிருக்கும் வடமூலேஸ்வரர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகி முற்பிறவியில் முறையற்ற உறவில் ஈன்ற தன் குழந்தையை, ஊர்க்கோடியில் எவருக்கும் தெரியாமல் அனாதையாய் விட்டுச்சென்றாள். பின்பு தன் தீய பழக்கங்களால் நோயுற்று, இறந்து எமனூர் சென்றாள். நரகத்தின் துன்பங்களை அனுபவித்துவிட்டு, கூர்ஜர தேசத்தில் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தாள். அம்பிகா என்று பெயரிடப்பட்டு, செல்வச் செழிப்புடன் வளர்ந்து, தன் மனதுக்கு இனியவரையே கணவராய் ஏற்றாள். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறின்றி மலடி என்ற பெயருடன் வாழ்கிறாள். முன்ஜென்ம வினையால் வாடுகிறாள். இதற்குப் பரிகாரமாக, குலகுருவின் வழிகாட்டுதலின்படி ஹோமங்களையும் பூஜைகளையும் செய்தபின், ஒரு ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்றால், மலடி என்று பெயர் மறைந்து அவள் மடியில் மழலை தவழும்.''

(வளரும்)

செல்: 63819 58636