இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

கிரக வக்ரமென்பது, கிரகங்கள் சூரியனைவிட்டு ஒரு குறிப்பிட்ட தூரம் விலகும்போது ஏற்படும் நிலை. விலகிப்போன கிரகம் மறுபடியும் சூரியனின் எல்லைக்குள் வருவதே வக்ர நிவர்த்தி. தந்தையைவிட்டுப் பிரிந்த மகன் மறுபடியும் மனம் திருந்தி தந்தையைச் சேர்வது போன்ற நிகழ்வு. சூரியனின் எல்லைக்கு வெளியே இருக்கும் கிரகம் தன் இயல்பான குணத்திலிருந்து மாறுபடும். கிரகத்தின் குணவிகாரமே வக்ரம் எனப்படுவது.

gandarvaஒரு வாள் பின்னால் சென்று முன்னால் நகரும்போது வேகமும் வலிமையும் பெறுவது போல், வக்ர நிவர்த்திக் காலத்தில் கிரக பலம் கூடும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கணிப்பு.

""சடையுடையானுமாய், விடையுடையானுமாயுள்ள வித்தகரே! பிராயம் பதினாறில் உம்மைப் பற்றியதால் மரணத்தை வென்ற மார்க்கண்டேயன்போல், பக்தர்கள் பலரும் உம்மை பக்தி செய்தும் காலனை வெல்லாமல் ஏன் இவ்வுலகை நீத்தார்?'' என அன்னை அபிராமி, திருக்கடையூரில் அருள்புரியும் காலசம்ஹார மூர்த்தியை அடிபணிந்து கேட்டாள்.

Advertisment

அதற்கு அமிர்தகடேஸ்வரர் உரைத்தது- ""கடலில் தவிப்போருக்கு மிதவையின் கயிறும் உயிரும் ஒன்றென ஆவதுபோல பசு, பதி, பாசம் எதுவென்றுணர்ந்து, வேறு பற்றின்றி எம்மைப் பற்றினால் யாமும் பற்றுவோம். பாசக்கயிறும் பயனற்றுப்போகும். சரணாகதியே பக்தியின் மேன்மை. மார்க்கண்டேய, நசிகேத சரிதம் கேட்போருக்கு எமபயம் விலகும்.''

""பிறைமதி சூடிய நிறைமதி நாதரே! "நிகுட்டம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், பூசம் நான்காம் பாதத்தில் சூரியனும், ஆயில்யம் முதல் பாதத்தில் சுக்கிரனும், ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், பூரம் நான்காம் பாதத்தில் புதனும், உத்திராடம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும் இருக்கப் பிறந்த இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் அருள்கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருஅன்னியூரில் அமர்ந்திருக்கும் அக்னீஸ்வரரை அன்னை பார்வதி வினவினாள்.

மேலை வானவர் வந்து வணங்கும் சோலைசூழ் அன்னியூரார் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் சாஞ்சி என்ற ஊரில் பிறந்து செல்வந்தனாக வாழ்ந்து வந்தான். தீய நட்பினால் சாத்திரங்களைப் பழித்தும், பண்டிதர்களை அவமதித்தும் வந்தான். ஒருமுறை நெடும்பயணம் சென்றபோது வண்டியின் அச்சுமுறிந்தது. விபத்தில் இறந்து நரகத்தை நோக்கி மீளாப்பயணமானான்.

Advertisment

சிலகாலம் கழித்து குருக்ஷேத்திரத்தில் ஒரு சத்திரிய குடும்பத்தில் பிறந்து, உத்தமன் என்ற பெயரில் வாழ்ந்தான். மனைவி, மக்களும், மற்ற உறவினரும் புறக்கணித்த நிலையில், தனிமையில் வாடுகிறான். முன்ஜென்ம வினையால் இப்பிறவியில் தன் குலதெய்வ வழிபாட்டை செய்யத்தவறி, "தெய்வம் நின்று கொல்லும்' என்பதை அறிய மறந்தான். "தேவகோபத்தின்' சாபம் நீக்கும் பரிகாரமாக, கன்றினை சுமக்கும் பசுவுக்குப் பூஜை செய்து உணவளிக்க வேண்டும். பெரியோரை அணுகித் தன் குலதெய்வத்தையறிந்து, அபராத காணிக்கை செலுத்தி வழிபட்டால் பிரிந்த உறவுகள் கூடும்.''

(வளரும்)

செல்: 63819 58636