இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
47
ஜாதகத்தில் ஒரு பாவம் எந்த ராசியில் அமைகிறதோ, அந்த ராசியின் உதயம் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மிதுனம், கும்பம் சீர்ஷோதய (தலையில் உதயமாவது) ராசி களாகும். மீனம் உபயோதய (இருபுறமும் உதயமாவது) ராசியாகும். மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம் பிருஷ்டோதய (பின்பகுதி யில் உதயமாவது) ராசிகளாகும்.
சீர்ஷோதயத்தில் இருக்கக்கூடிய கிரகமானது தசையின் ஆரம் பத்தில் பலனைக் கொடுக்கும். பிருஷ்டோதயத்தில் இருக்கக் கூடிய கிரகம் தசையின் பிற்பகுதி யில் பலனைக் கொடுக்கும். உபயோதயதில் இருக்கக்கூடிய கிரகம் தசையின் நடுவில் பலனைக் கொடுக்கும். பொதுவாக, கல்வியைத் தரும் நான்காம் பாவாதிபதி சீர்ஷோதய ராசியிலும், செல்வாக்கைத் தரும் பத்தாம் பாவாதிபதி உபயோதய ராசியிலும், மாரகத்தைத் தரும் பன்னிரண்டாம் பாவாதிபதி பிருஷ்டோதய ராசியிலும் அமைவது நன்மை தருமென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""திருத்தலீச்வரரே! வேத சாத்திரங்களைக் கற்ற பண்டிதர்களுக்கும், ஞான மார்க்கத்தினால் முக்தி கைவல்யமாவதில்லை. இறையருளை உணர்ந்து முக்தி நிலையைப் பெறும் உபாயம் எதுவோ?'' என அன்னை சிவயோக நாயகி, திருக்கானூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு செம்மேனிநாதரைப் பணிந்து கேட்டாள்.
கரும்பேஸ்வரர் உரைத்தது- ""மனம் உடலையும், உயிர் மனதையும் இயக்குகின்றன என்பதை மனிதனறிவான். உயிரை இயக்கு வது யாரென அறியமாட்டான். மனிதனை விட உயரமானது மரமென்றும், மரத்தை விட உயரமானது மலையென்றும், மலையை விட உயரமானது வானமென்றும் அறிவான். வானத்தைவிட உயரமானது எதுவென்பது அறிவுக்கெட்டாது. பாம்பினைக் கண்டு மனிதன் அஞ்சுவான். பருந்தின் நிழலைக்கண்டாலே பாம்பிற்கு மரணபயம் உண்டாகும். வேடனைக் கண்டால் பருந்துக்கும் பயம் உண்டாகும். இதுபோலவே, சாத்திரம் கற்பவருக்கு சந்தேகமும் தெளிவும் மாறிமாறி சுழலும். அறிவெனும் ஆற்றின் சுழலில் அகப்பட்டவன் கரையேறுவதில்லை. சாத்திரங்கள் சத்துவ குணத்தைத் தரும். அந்த சத்துவ குணமும் மறைந்தால் "சாயுஜ்யம்' எனும் முடிவான முக்தியையடைவர்.''
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gandarava.jpg)
""விசுவநாரே! "நூபுரம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் சனியும், ஹஸ்தம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், சித்திரை மூன்றாம் பாதத்தில் புதனும், விசாகம் முதல் பாதத்தில் சூரியனும், அனுஷம் மூன்றாம் பாதத்தில் குருவும், பூராடம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், அவிட்டம் நான்காம் பாதத்தில் சந்திரனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விரிவாக விளக்க வேண்டும்'' என்று தில்லைத்தானம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீநெய்யாடியப் பரை அன்னை பாலாம்பிகை வினவினாள்.
அகத்தீசுவரர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் சடகோபன் எனும் பெயருடன், மதுரா நகரில் வாழ்ந்தான். இளம்வயதில் கல்வியில் தேர்ச்சியுற்று ஒரு ஜமீன்தாரிடம் கணக்கனாகப் பணியாற்றினான்.
அந்த ஊரில் வாழ்ந்த ஏழை விவசாயிகள், நிலங் களைப் பணயமாக வைத்து தங்கள் தேவை களுக்கான பணத்தை ஜமீன்தாரிடம் பெற்று வந்தனர். ஜமீன்தாருக்குத் தெரியாமல் கணக்கை மாற்றியெழுதி, ஏழைகளை வஞ்சித்து பெரும் செல்வம் சேர்த்தான். திருட்டுத் தனமாக சேர்த்த செல்வத்தை வெளிகாட்டமுடியாமல், தன்வீட்டு நிலவறையில் மறைத் தான். ஒருநாள் இரவில் வந்த தீவட்டிக் கொள்ளையர்களால் அவன்சேர்த்து வைத் திருந்த பெருந்தனம் அபகரிக் கப்பட்டது. செல்வம் பறிபோனது. பாவம் மட்டும் அவன் கணக்கில் சேர்ந்தது. மனம் நொந்து நோயுற்றான். அவன் உயிரை எம தூதர்கள் கொள்ளையடித்தனர். உடல் மட்டும் நிலவறைக்குப் போனது. அவன் பிறர் உயிரை உறிஞ்சி வாழ்ந்ததால் அட்டைக்குழி, அரணைக் குழி வழியாக இழுத்துச் செல்லப்பட்டு, "கிருமி போஜனம்' எனும் நரகத்தில் வீசப்பட்டான்.
சில காலம் கழித்து, சிருஷ்டி தேவர் அவன் தலையின் உச்சிக்குழியில் உயிரை நிரப்பி உலகிற்கு அனுப்பினர். தயாளன் என்று பெயரிடப்பட்டு, வாகையூரில் வாழ்ந்துவந்தான். இளம்வயதில் வந்த "முறை காய்ச்சலால்' வாதத் தின் சமநிலை தவறி, கையும் காலும் விளங் காமல் போயின. முற்பிறவியில் தர்மத்திற்குப் பிணக்காய் கணக்கெழுதி பிறரை ஏமாற்றிய தால் அவதியுறுகிறான். இதற்குப் பரிகாரமாக, பிறவி ஊனமுற்றோருக்கு அன்னதானமும் ஆடைதானமும் செய்தால் சுகம் பெறுவான்.''
(வளரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-02/gandarava-t.jpg)