இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
46
லால்குடி கோபாலகிருஷ்ணன்
தற்பறை, இமை, நொடி, மாத்திரை எனும் சிறிய கால அளவுகளுக்குள் ஓடும் நாடியைக் கணிப்பதால் மட்டுமே நாடி ஜோதிடத்தால் துல்லியமான பலனைக் கூறமுடிகிறது. ஒரு ராசியை நூற்றைம்பது பாகங்களாகப் பிரிப்பதே நாடியம்சம். இதில் சர ராசிகளில் ராசியின் துவக்கம் முதல் இறுதிவரையும், ஸ்திர ராசிகளில் ராசியின் இறுதிமுதல் துவக்கம்வரையும், உபய ராசிகளில் ராசி மத்திமத்தில் துவங்கி இறுதிவரை ஒரு பகுதியாகவும், ராசியின் ஆரம்பத்தில் துவங்கி மத்தியில் பூரண மாகும் மறுபகுதியாகவும் அமைகிறது. வசுதா நாடியம்சம் தொடங்கி பரமேஸ்வரி நாடியம்சம்வரை நூற்றைம்பது நாடியம்சங் களாகும். ஒரு பாகை ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. சரமும் (இயக்கம்) , அசரமும் (இயங்காமையும்) கூடியதே (அண்ட) சராசரம் என்பதாலும், சுவாசம் உள்ளவரை மட்டும
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
46
லால்குடி கோபாலகிருஷ்ணன்
தற்பறை, இமை, நொடி, மாத்திரை எனும் சிறிய கால அளவுகளுக்குள் ஓடும் நாடியைக் கணிப்பதால் மட்டுமே நாடி ஜோதிடத்தால் துல்லியமான பலனைக் கூறமுடிகிறது. ஒரு ராசியை நூற்றைம்பது பாகங்களாகப் பிரிப்பதே நாடியம்சம். இதில் சர ராசிகளில் ராசியின் துவக்கம் முதல் இறுதிவரையும், ஸ்திர ராசிகளில் ராசியின் இறுதிமுதல் துவக்கம்வரையும், உபய ராசிகளில் ராசி மத்திமத்தில் துவங்கி இறுதிவரை ஒரு பகுதியாகவும், ராசியின் ஆரம்பத்தில் துவங்கி மத்தியில் பூரண மாகும் மறுபகுதியாகவும் அமைகிறது. வசுதா நாடியம்சம் தொடங்கி பரமேஸ்வரி நாடியம்சம்வரை நூற்றைம்பது நாடியம்சங் களாகும். ஒரு பாகை ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. சரமும் (இயக்கம்) , அசரமும் (இயங்காமையும்) கூடியதே (அண்ட) சராசரம் என்பதாலும், சுவாசம் உள்ளவரை மட்டுமே உயிர் வாசம் செய்யும் என்பதாலும், முக்கியத்துவம் வாய்ந்த சர ஜோதிடத்திலும், மூச்சுக்காற்றோடு தொடர்பு கொண்ட பஞ்சபட்சி சாஸ்திரத்திலும், இதுபோன்று ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலபேதங்களை அறியும் நுட்பமான கணக்கீடுகள் உண்டு. நாடியம்ச முறையால் ஜாதகக் கணிதம் செய்வதே "கந்தர்வ நாடி'யின் சிறப்பு.
""தாயுமானவனரே! பாவ- புண்ணியங்கள் பற்றி பல சாஸ்திரங்கள் பறைசாற்றி னாலும், அறிவில் எளியோரால் அறியப் படுவதில்லை. மனிதர்கள் அனைவரும் உணருமாறு தாங்கள் உபதேசம் செய்தருள வேண்டும்'' என அன்னை சோதிமின் னம்மை, மேலக்கடம்பூர் எனும் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு அமிர்த கடேஸ்வரரை வணங்கிக் கேட்டாள்.
ஜகதீஸ்வரன் உரைத்தது- ""தன்னையே விரும்பாதவன் தன்னுயிரை மாய்த்துக் கொள்வான். தன்னை மட்டுமே விரும்புப வன் பாவம் செய்தவனாகிறான். தன்னைப் போலவே பிற உயிர்களையும் விரும்புபவன் புண்ணிய லோகத்தையடைவான். ஒவ் வொரு மனிதருக்கும் அவரவர் மனமே சாட்சியாய் நின்று பாவ- புண்ணியங் களைத் தீர்மானிக்கும்.''
""மணவழகரே! "புஜங்கத்ராஸ்த ரேசிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், அனுஷம் இரண்டாம் பாதத்தில் சனியும், மூலம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், பூராடம் மூன்றாம் பாதத்தில் புதனும், திருவோணம் முதல் பாதத்தில் சூரியனும், சதயம் முதல் பாதத்தில் குருவும், சதயம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், திருவாதிரை முதல் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் விரிவாக விளக்க வேண்டும்'' என்று சேங்கனூர் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் சத்யகிரீஸ்வரரை, அன்னை சகிதேவியம்மை வினவினாள்.
சாம்பசிவன் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் துருபதன் எனும் பெயருடன், பனையூர் எனும் ஊரில் வாழ்ந்தான். இளம் வயதில் தன் மூதாதையர் விட்டுச்சென்ற பனங் காட்டினைப் பராமரித்து வந்தான். பிறருக்கு உதவும் குணமில்லாத குடிகேடனாய் வாழ்ந் தான். மழை பொய்த்ததாலும், அவன் வாழ்ந்த ஊர் தேரி (நீர் தங்காத) நிலமாய் இருந்ததாலும், ஊரில் கடும் வறட்சி நிலவியது. ஊர்கூடி சுப பிரச்னம் (நீர் நிலையை அறிதல்) பார்த்தது. துருப தன் நிலத்தில் மட்டுமே நீரோட்டம் இருப்பது தெரிந்தது. தாகத்தில் தவித்த மக்கள் உறைகிணறு அமைத்து ஊருக்குத் தண்ணீர் தரவேண்டினர்.
ஸ்வானம் (நாய்) பெற்ற தெங்கம்பழமாய், உலோபி வீட்டு உறைகிணறு ஊருக்குப் பயனளிக் காமல் போனது. காலம் வளர்ந்ததால், துருப தனின் ஆயுள் குறைந்தது. அவனுக்கு சுவாசமும், பூவுலகின் வாசமும் முடிந்ததால், மரணத்தின் வாசல் திறந்தது. யமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி இழுத்துச்சென்றனர்.
உப்புக்காய்களை உண்ட குரங்கு தாகத்தால் தவிப்பதுபோல, அவன் பிண்ட சரீரம் "வைவஸ்வத' பட்டினத்தில் தாகத்தால் துன் புற்றது. முடிவில், "அக்கினி குண்டம்' எனும் நரகத்தில் நெருப்பில் வாசம் செய்தான். கவணிலிருந்து கிளம்பிய கல்லாய் பூவுலகம் மீண்டான். தன் ஜென்மவினையைத் தீர்க்க, சேர்தலை எனும் தலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான். இளம்பருவத்தில் ஒரு நாள், வயலில் வேலை செய்யும்போது ஜலமண்டலி எனும் விஷஜந்து தீண்டியது. விஷம் தலைக்கேறியதால் "நீர்ப்போக்கு' எனும் நோயுற்றான். மருத்துவர் தந்த ஈஸ்வர மூலிகையும் பயனற்றுப்போனது.
முற்பிறவியில் தவித்தவருக்கு தண்ணீர் தராமல் போனதால், அவன் தேகத்தில் நீர் தங்காமல் போனது. தாகத்திற்கு தண்ணீர் தராதவன் தேகம் சுகம் பெறாது. அவன் உடலில் உயிரும் தங்காது. தண்ணீரும் காற்றும் பொதுவானது. அதைத் தடுப்பதால் வரும் பாவத்திற்குப் பரிகாரமே கிடையாது.''
(வளரும்)
செல்: 63819 58636