Advertisment

கந்தர்வ நாடி! 45 - லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/gandharva-nadi-lalgudi-gopalakrishnan-24

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

45

ரு ஜாதகரின் கொடுப்பினைப் பலன் களும், தசாபுக்திக் கணிதமும் அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டு மென்றாலும், கிரகங்களின் கோட்சார நகர்வு களையும் பொருத்திப்பார்த்தால் மட்டுமே துல்லியமான காலக்கணிதத்தை வரை யறுக்க முடியும். ஜாதகரின் ஆண்டுப் பலன், மாதப்பலன், தினப்பலன்களை அறிந்தால் மட்டுமே காலக் கணிதம் முழுமை பெறும். ஜென்ம நட்சத்திர நாளில், ஜனன ஜாத கத்தில் சூரிய னிருக்கும் பாகையை லக்னப் பாகையாகக்கொண்டு, பிற கிரகங்களின் அன்றைய கோட்சார நிலையைக் கணக் கிடுவது ஆண்டுப் பலன். அதுபோலவே பிரதிமாதமும் ஜனன காலத்தில் சந்தி ரனிருக்கும் பாகையை லக்னப் பாகை யாகக்கொண்டு மாதப்பலனையும், ஜனன லக்னப் பாகையால் தினப்பலன்களையும் அறியலாம். இதுபோலவே, நடப

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

45

ரு ஜாதகரின் கொடுப்பினைப் பலன் களும், தசாபுக்திக் கணிதமும் அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டு மென்றாலும், கிரகங்களின் கோட்சார நகர்வு களையும் பொருத்திப்பார்த்தால் மட்டுமே துல்லியமான காலக்கணிதத்தை வரை யறுக்க முடியும். ஜாதகரின் ஆண்டுப் பலன், மாதப்பலன், தினப்பலன்களை அறிந்தால் மட்டுமே காலக் கணிதம் முழுமை பெறும். ஜென்ம நட்சத்திர நாளில், ஜனன ஜாத கத்தில் சூரிய னிருக்கும் பாகையை லக்னப் பாகையாகக்கொண்டு, பிற கிரகங்களின் அன்றைய கோட்சார நிலையைக் கணக் கிடுவது ஆண்டுப் பலன். அதுபோலவே பிரதிமாதமும் ஜனன காலத்தில் சந்தி ரனிருக்கும் பாகையை லக்னப் பாகை யாகக்கொண்டு மாதப்பலனையும், ஜனன லக்னப் பாகையால் தினப்பலன்களையும் அறியலாம். இதுபோலவே, நடப்பு தசா- புக்தி- அந்தரநாதர்களுக்கிடையே உள்ள தற்காலத்தொடர்பும் பலன்களைக் கூட்டு மென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

sivaan

""வாகீஸ்வரரே! ஒருவர் இறந்தபின், அவர் புத்திரரால் செய்யப்படும் தானதர்மங் களுக்கும், அவர் வாழும்போதே செய்யும் தானதர்மங்களுக்கும் வேறுபாடுகள் உண்டா?'' என அன்னை இட்சுவாணி, திருப்புறம் பியம் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு சாட்சிநாதேசுவரரை வேண்டிக் கேட்டாள்.

லிங்கோத்பவர் உரைத்தது- ""புத்திரரால் செய்யப்படும் தானங்கள், இறந்தவர் களின் ஜீவன் "புத்' எனும் நரகத் தையடையாமல் இருக்க வும், பிரேத சரீரம், பிண்ட சரீரமாக மாறவும், மேலுலகப் பயணத்தில் உணவும் நீரும் கிடைத்து, வழியில் வரும் தடைகள் நீங்கவுமே பயன் தரும். ஒருவர் வாழும்போது செய்யும் தான தர்மங்கள் மட்டுமே சொர்க்க, நரகத்தையும், வீடுபேறு எனும் விதேக முக்தியையும் தரும். தானம் தரும் பொருளைவிட, தானம் தருபவரின் தகுதியே பிரதானம். தானம் கொடுப்பதற்குமுன் சிந்திக்காமலும், கொடைக்குப் பின்னும் பயன் கருதாது இருப்பதுமே சிறந்த தானம்.

தானத்தின் பலனையும் தியாகம் செய்பவரே அமரராவார்.''

""கடைமுடிநாதரே! "தண்டபக்ஷம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூச நட்சத் திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், கேட்டை முதல் பாதத்தில் குருவும், கேட்டை மூன்றாம் பாதத்தில் புதனும், பூராடம் முதல் பாதத்தில் சூரியனும், பூராடம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், சதயம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், ரேவதி முதல் பாதத்தில் சனியும், திருவாதிரை நான்காம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விரிவாக விளக்க வேண்டும்'' என்று திருப்பாற்றுறை எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஆதி மூலேஸ்வரரை, அன்னை நித்யகல்யாணி வினவினாள்.

திருமேனியழகர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் வீரசேனன் எனும் பெயருடன், ரிஷிவந்தியம் எனும் ஊரில் வாழ்ந்தான். இளம்வயதில், மதநீர் ஒழுகும் ஆண் யானையைப்போல், காம மதம்பிடித்து அலைந்தான். அவ்வமயம், தன்னை நம்பிப் பயணம் வந்த குருபத்தினியின் கற்பை, தீய எண்ணம் கொண்டு களவாடினான். குருவின் சாபமும், பத்தினியின் சாபமும் அவன் செய்த பாவத்திற்கு வலுசேர்த்தன. தன் தவறுக்கு வருந்தாமல், பெரும் காமம் கொண்டு பொருந்தா காமத்தால் வாழ்விழந்தான். இந்திரன்போல் காமத்தீயால் உடல் வெந்து, கண்ணாயிரமாய் புண்களைக் கொண்டான். பனிக்குடம் உடைந்து வந்தவன் உயிர் நீர்க்குடம் உடைத்தான். நித்திரை யில் நரகத்திற்கு யாத்திரை போனான். தாமிஸ்ரம், வஜ்ர கண்டகம் எனும் இரு நரகத்திலும் நெடுநாள் அல்லலுற்றான். விதியின் கட்டளையால் பூலோகம் சென்றான். ஒரு வேளாண் குடும்பத்தில் பிறவியெடுத்தான். இளமையில் இல்லத்திற்கு இனியாளை மணந்து, ஆணும் பெண்ணுமாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றான். அவன் வாழ்ந்த ஊரில் கொள்ளை நோய் வந்தது. குழந்தைகள் பேச்சிழந்தன. பெற்றவர் செய்த பாவம் பிள்ளை களைத் தாக்கியது. முற்பிறவியின் வினைப்பய னால் குருவின் சாபமும், பத்தினியின் வேதனையும் இரட்டைப் பிறவிகளாயின. இதற்குப் பரிகார மாக அவன் இல்லத்தின் தலைவி ஆஷாட மாதத்து (ஆனி மாதம்) நவராத்திரியில் வரும் வெள்ளிக்கிழமையில் சுவாஸினி பூஜை செய்த பின், அவன் சிரத்தையுடன் ஆடி மாதத்து முழு நிலவில் குரு பூஜை செய்தால் சாபம் நீங்கும்.''

(வளரும்)

செல்: 63819 58636

bala220219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe