இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
44
இரு நபர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, இருவருக்கும் தொடர் புள்ள விஷயமே கருத்துப்பரிமாற்றத்தில் இடம்பெறும். தச்சரைக் காணும்போது மரச்சாமான்கள் பற்றியும், தையல்காரரை சந்திக்கும்போது உடைபற்றிப் பேசுவதுமே இயல்பாகும். நோக்கமே நோக்குதலின் காரணமாவதால், கிரகங்களின் பாவகாரகமே கிரகப் பார்வைகளின் பலனாக அமையும்.
பொதுவாக, கிரகங்களின் இயல்பு குணகார கங்களே, கிரகப் பார்வையின் பலனாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கிரகங்களின் குணம், அவற்றின் இருப் பிடத்திற்கேற்ப மாறும். ஒருவர், தன் எஜமா னரிடம் பழகும்போது ஒருவிதப் போக்கையும், தன்னிடம் பணியாற்றுபவர்களிடம் வேறு விதமான போக்கையும் கையாள்வதுபோல, கிரகங்களின் குணம், அவற்றின் இருப்பிடத் திற்கேற்ப மாறும். செவ்வாயும் சனியும் பார்வை பரிவர்த்தனை பெற்றால், வாழ்க் கையில் பூகம்பம் போன்ற விளைவுகளை உண்டாக்கி, தீயபலன் களே நிகழும் என்று சொல்வது வழக்கம். எல்லா கிரகங் களுக்கும் ஏழாம் பார்வை உண்டு.
மேஷ லக்னக் காரருக்கு கடகத் தில் சனியும், மகரத்தில் செவ் வாயுமிருந் தால் ஏழாம் பார் வையின் பரிவர்த்தனை உண்டாகும். இதன் பலன் ஜாதகர் பாதுகாப்புத்துறையில், அதிகாரமான பதவியில் இருப்பார் என்பதே. இதன் காரணம் பத்தாமதிபதியாகிய சனி ஏழாம் பார்வையால் லக்னாதிபதியைப் பார்ப்பதும், லக்னாதிபதியாகிய செவ்வாய் உச்சத்தில் நின்று பத்தாமதிபதியைப் பார்ப்பதும் நல்ல அதிகாரமான பதவியைத்தரும். போர்முனையில் வாழ்க்கை அமையும் என்பதற்கும், வாழ்க்கையே போராட்டமாயிருக்கும் என்பதற்கும் அதிக வேறுபாடு உள்ளது என்பதே உண்மை. பாவகாரகத்தையும் கருத்தில் கொண்டு, கிரகப் பார்வை பலனைத் தீர்மானிப்பதே "கந்தர்வ
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
44
இரு நபர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, இருவருக்கும் தொடர் புள்ள விஷயமே கருத்துப்பரிமாற்றத்தில் இடம்பெறும். தச்சரைக் காணும்போது மரச்சாமான்கள் பற்றியும், தையல்காரரை சந்திக்கும்போது உடைபற்றிப் பேசுவதுமே இயல்பாகும். நோக்கமே நோக்குதலின் காரணமாவதால், கிரகங்களின் பாவகாரகமே கிரகப் பார்வைகளின் பலனாக அமையும்.
பொதுவாக, கிரகங்களின் இயல்பு குணகார கங்களே, கிரகப் பார்வையின் பலனாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கிரகங்களின் குணம், அவற்றின் இருப் பிடத்திற்கேற்ப மாறும். ஒருவர், தன் எஜமா னரிடம் பழகும்போது ஒருவிதப் போக்கையும், தன்னிடம் பணியாற்றுபவர்களிடம் வேறு விதமான போக்கையும் கையாள்வதுபோல, கிரகங்களின் குணம், அவற்றின் இருப்பிடத் திற்கேற்ப மாறும். செவ்வாயும் சனியும் பார்வை பரிவர்த்தனை பெற்றால், வாழ்க் கையில் பூகம்பம் போன்ற விளைவுகளை உண்டாக்கி, தீயபலன் களே நிகழும் என்று சொல்வது வழக்கம். எல்லா கிரகங் களுக்கும் ஏழாம் பார்வை உண்டு.
மேஷ லக்னக் காரருக்கு கடகத் தில் சனியும், மகரத்தில் செவ் வாயுமிருந் தால் ஏழாம் பார் வையின் பரிவர்த்தனை உண்டாகும். இதன் பலன் ஜாதகர் பாதுகாப்புத்துறையில், அதிகாரமான பதவியில் இருப்பார் என்பதே. இதன் காரணம் பத்தாமதிபதியாகிய சனி ஏழாம் பார்வையால் லக்னாதிபதியைப் பார்ப்பதும், லக்னாதிபதியாகிய செவ்வாய் உச்சத்தில் நின்று பத்தாமதிபதியைப் பார்ப்பதும் நல்ல அதிகாரமான பதவியைத்தரும். போர்முனையில் வாழ்க்கை அமையும் என்பதற்கும், வாழ்க்கையே போராட்டமாயிருக்கும் என்பதற்கும் அதிக வேறுபாடு உள்ளது என்பதே உண்மை. பாவகாரகத்தையும் கருத்தில் கொண்டு, கிரகப் பார்வை பலனைத் தீர்மானிப்பதே "கந்தர்வ நாடி'யின் சிறப்பு.
""தத்துவ வித்தகரே, மனிதர்கள் சாஸ்தி ரங்களைக் கற்பதாலும் அனுபவங்களைப் பெறுவதாலும் அறிவு உண்டாகிறது. இவ்விரண்டில், எதனால் மனிதர்கள் உயர்வு பெறுவர்?'' என அன்னை சுந்தராம்பிகை, திருமழபாடி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு வைத்தியநாதரை வேண்டிக் கேட்டாள்.
வஜ்ரதம்பநாதர் உரைத்தது- ""மழைமேகத்தை அனுபவத்தால் அறிய முடியாத வேளாளன், விதை நெல்லை இழப்பான். அவனுக்கு அனுபவமே கல்வி; இயற்கையே குருகுலம். அனுபவம் மட்டுமே அறிவாகாது. மரணத்திற்குப்பின் ஜீவனின் பயணம்பற்றி அறிய சாஸ்திரங்களால் வரும் அறிவே பயன் தரும். அன்பை அறிவு அனுபவிக்காது. ஆபத்தை அனுபவம் உணர்த்தாது. மரத்தை வெட்டுவதால் கோடாரிக்காம்பு கிடைக்கும்; கோடாரிக்காம்பின் உதவியால் மரம் வெட்டுப்படும். அனுபவத் தால் அறிவும், அறிவால் அனுபவமும் மேன்மையடையும். ஞானவேள்வியில் பெரும் அழல் (நெருப்பு) வளர, சாஸ்திர அறிவெனும் நெய்யும், அனுபவமெனும் காற்றும் தேவை. கற்ற அறிவும், பெற்ற அனுபவமும் ஒன்றிணைந்தால் மட்டுமே பூரண ஞானம் உருவாகும்.''
""கங்காதரரே! "லலிதம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், உத்திரம் முதல் பாதத்தில் குருவும், மூலம் முதல் பாதத்தில் சந்திரனும், அவிட்டம் மூன்றாம் பாதத்தில் சனியும், சதயம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், அஸ்வினி நான்காம் பாதத்தில் புதனும், கிருத்திகை நான்காம் பாதத்தில் சூரியனும், ரோகிணி மூன் றாம் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விரிவாக விளக்க வேண்டும்'' என்று திருமாந் துறை எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஆம்ரவனேஸ்வரரை அன்னை பாலாம்பிகை வினவினாள்.
முல்லைவனநாதர் உரைத்தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் சரவணன் எனும் பெயருடன் காவிரிப் பூம்பட்டிணத் தில் வாழ்ந்தான். இளம்வயதில் தீய நட்பினால் மரங்களில் ஏறி பறவைக் கூடுகளை அழித்தும், சிறு பறவைக்குஞ்சு களைக் களவாடியும் வந்தான். தன் கூட்டையும் குஞ்சுகளையும் காணாது தாய்ப்பறவைகள் எழுப்பிய கூக்குரலுக்கு, தர்மதேவதை செவிமடுத்தது. சிரவணர்கள் அவன் செய்த பாவத்தைப் படியெடுத்தனர். ஒருநாள் அவன் மரமேறி கால்தவறி விழுந்து மாண்டான். மரமேறச் சென்றவன் நரகத்தில் வீழ்ந்தான். நரகத்தின் நரகலில் வதைபட்ட அவன் ஜீவன், நல்வழிதேடி பூவுலகம் சென்றது. ஒரு வைசிய குடும்பத்தில் பிறவி யெடுத்தான். ஒரு மங்கள நாளில், குணவதி யாளை மணமுடித்தான். மக்கட்செல்வ மும் பெற்றான். காலம் உருண்டது. ஒரு கார்காலத்து நாளில் வானம் இருண்டது. அவன் எதிர்காலத்தின் முன் அறிவிப்பாய், பெருமழையால் அவன் ஊரை வெள்ளம் சூழ்ந்தது. அவன் குடும்பமே வெள்ளத்தில் கரைந்து காணாமல் போனது. இவன் மட்டும் தப்பிப்பிழைத்தான்- துன்பத்தை அனுபவிக்க! தனிமைப்படுத்தப்பட்டான். முன்ஜென்ம வினையால் அவதியுறு கிறான். பறவைக்கூட்டைக் கலைப்பவருக்கும், குடும்பத்தைப் பிரிப்பவருக்கும் பரிகாரமே இல்லை என்று அறிவாயாக.''
(வளரும்)
________________
செல்: 63819 58636 நாடி ரகசியம்
1. பகலில் பிறந்தவருக்கு செவ்வாய் லக்னம் அல்லது எட்டாம் பாவத்திலிருந்து, ஐந்தாம் பாவத்தில் சூரியனுமிருக்க, புத்திர பாக்கியம் தாமதப்படும்.
2. லக்னத்தில் சனியும், குரு எட்டாம் பாவத்திலும், செவ்வாய் பன்னிரண்டாம் பாவத்திலுமிருந்து, ஐந்தாம் பாவாதிபதியும் நீசமானால், காலம் தாழ்ந்து குழந்தை பிறக்கும்.
3. சந்திரன் பதினோராம் பாவத்தில், இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்களுடன் கூடியிருந்து, ஐந்தாம் பாவத்தில் வலிமையிழந்த குரு அமர்ந்தால் புத்திர பாக்கியம் தடைப்படும்.
கேள்வி: ஜோதிடத்தின்மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளதா? நம் பாரத நாட்டின் பாரம்பரிய ஜோதிடமுறைக்கும், பிற நாட்டின் ஜோதிட அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா?
பதில்: உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்குமே தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும், இனிவரும் காலத்தை அறிந்துகொள்வதில் ஆர்வமும் உண்டு. ஆதிப்பழங்குடி களாகிய மாயன்களின் காலந்தொட்டே வானியல் சார்ந்த ஜோதிடத்தின்மீது மனிதர்களுக்கு இருந்த நம்பிக்கை, தொன்மவியல் ஆய்வுகளால் புலனாகிறது. நம்முடைய பாரம்பரிய ஜோதிடமுறைக்கும், பிறநாட்டின் ஜோதிடமுறைக்கும் வேறுபாடு இருப்பதுபோல் தோன்றினாலும் அடிப்படைக்கோட்பாடு ஒன்றே. நாம் பன்னிரண்டு ராசிகளை மாதங்களாகக் கணக்கிடுவதுபோல, சீன ஜோதிடத்தில் பன்னிரண்டு வருடங்களாகக் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு விலங்கின் பெயரிடப்படுகிறது. அந்த பன்னிரண்டு வருடங்களும், பஞ்சபூதத் தத்துவத்தின் அடிப்படையில் அறுபது வருடங்களில் பூர்த்தியாகிறது. தமிழ் ஆண்டுகளின் எண்ணிக்கையும் அறுபது. பண்டைய எகிப்தியர்கள் ஜோதிடத்தில் திரேக்காண சக்கரத்தைப் பயன்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது. "பகல் வெல்லும் கூகை' என்று தொடங்கும் குறளில், பஞ்சபட்சி சாஸ்திரத்தின்மூலம் "காலம் அறிதல்' எனும் கருத்தை பகுத்தறிவாளராகிய திருவள்ளுவர் கோடிட்டுக் காட்டுகிறார். தமிழரின் சங்க இலக்கியங்களிலும், மேலை நாட்டின் நாடக இலக்கியமாகிய "மக்பெத்' எனும் ஷேக்ஸ்பியரின் கைவண்ணத்திலும் "வரும்முன் உரைத்தல்' என்ற ஜோதிட நம்பிக்கை வெளிப்படுகிறது. "கந்தர்வ நாடி'யில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகைமுறைக் கணிதமும், அதிலுள்ள உச்ச உணர்வுப் புள்ளிகளும்(High sensitive points) அரபு ஜோதிடத்திலும் கையாளப்படுவது வியப்புக்குரியதே.
_____________
ராகு- கேதுப் பெயர்ச்சி யாகம்!
குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியைப்போலவே ராகு- கேதுப்பெயர்ச்சியும் முக்கியமானதாக இருக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி 13-2-2019 அன்று கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.
அடுத்த ஒன்றரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கேற்ப சுபப் பலன்களையும், அசுபப் பலன்களையும் தருவார்கள்.
ராகு- கேதுப் பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகு- கேது யாகமும், சிறப்பு அபிஷேகமும் 13-2-2019 புதன்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெறவுள்ளன.
75-க்கும் மேற்பட்ட தெய்வ சந்நிதிகள்கொண்ட தன்வந்திரி பீடத்தில் ஏக சரீர ராகு- கேது சந்நிதி சிறப்பான ஒன்று.
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும்; ராகு தசை, ராகு புக்தி, கேது தசை, கேது புக்தி, நடப்பவர்களும் ராகு- கேது பெயர்ச்சியன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
இந்த யாகத்தில் கலந்துகொள்வதால் பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபடலாம். குடும்ப சுபிட்சம் பெருகும்.
குறிப்பு: 9-3-2019 சனிக்கிழமை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ராகு- கேதுப் பெயர்ச்சி யாகம் காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274.
அலைபேசி: 94433 30203.
Email : danvantripeedam@gmail.com